Posts

Showing posts from February, 2026

கன்னத்தில் காதல் முத்தம் 15

  காதல் 15 இருவரும் எதுவும் பேசாமல் வீடு திரும்பி இருந்தனர். ஆராத்யா அமைதியாக அவள் அறைக்கு சென்று விட, அக்னிக்கு அடுத்து என்ன செய்வதென்று புரியாத நிலை. "அப்ப இவ மனசுல, நான் அந்த ஆதியை அசிங்கப்படுத்த தான் இவளை தூக்கிட்டு வந்தேன்னு தான் நினைக்குறாளா? இத்தனை நாள்ல ஒரு நிமிஷம், ஒரு நொடி கூட இவ என்னோட காதலை உணரவே இல்லையா?" என்று வாய்விட்டு புலம்பியவன் கைப்பேசி ஒலிக்க, அதை எடுத்து பார்த்தான். வழக்கம் போல் கௌதமும் ஷிவானியும் தான் 'கான்ஃபரன்ஸ் காலில்' அழைத்திருந்தனர். ஆராத்யா இருந்த அறையை ஒருமுறை எட்டிப்பார்த்து விட்டு, மேலே சென்று அழைப்பை ஏற்று, "ஹலோ" என்றான் இறங்கிய குரலில். "என்ன அக்னி, வாய்ஸ் டல்ல இருக்கு, எதும் ப்ராப்ளம்மா?" "ம்ம்ம்… ஆமா ஷிவானி, தியாக்கு உடம்பு சரியில்ல" என்றான். "ஏன் என்னாச்சு ஆராக்கு? இப்ப எப்டி இருக்க அவ? டாக்டர் கிட்ட கூட்டிபோனியா அவளை? டாக்டர் என்ன சொன்னாங்க?" என்று பதறியவள், "நான் உடனே அங்க கிளம்பி வரேன்" என்றாள் அவசரமாக. "ஏய்… ஏய்… நீ உடனே கிளம்பி வர்ல அளவு அவளுக்கு ஒன்னும் இல்ல, அவளுக்கு பீர...

கன்னத்தில் காதல் முத்தம் 14

 காதல் 14 ஆராத்யாவை அக்னி கடத்தி வந்து பதினைந்து நாட்கள் வேகமாக ஓடி இருந்தது. அக்னியை அடியோடு வெறுத்த ஆராத்யா, இந்த இரு வாரத்தில் தன் சிறுவயது நண்பன் தேவ்வை வெறுக்க முடியாது தவித்து தான் போனாள். அவனின் அவள் மீதான காதலும் அன்பும் அவளை ஆழிப்பேரலை போல் சுழன்று அடித்தது. அவளின் சின்ன சின்ன தேவைகளை கூட அவள் வாய் திறந்து சொல்லும் முன் அவள் முகத்தை பார்த்தே செய்து முடித்திருப்பான் அவன். அவனுடன் இருந்த இந்த நாட்களில் அவன் கொடுக்கும் கன்னத்து முத்தத்தை தவிர, அவனிடம் எந்த ஒரு தவறான நடவடிக்கையும் அவள் அவனிடம் இதுவரை கண்டதில்லை. அந்த முத்தம் கூட தனக்கு பிடித்த குழந்தையை பிடித்து வைத்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுப்பது போல் வெறும் அன்பு மட்டுமே தான் இருக்குமே தவிர எந்த கெட்ட எண்ணமும் இருக்காது. அவன் செயலில் என்ன… அவன் பார்வையில் கூட காமம் கலக்காது கண்ணியமாக இருக்க, அவனின் இந்த நடவடிக்கைகள் ஆராத்யாவின் மனதை சற்று அசைத்து தான் பார்த்தது. அதுவும் மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு அவளைத் தடுமாற செய்திருந்தது. அன்று காலை பத்து மணியாகியும் அறையை விட்டு வெளியே வராமல் இருந்தாள் ஆராத்யா. அவள் வருவ...

கன்னத்தில் காதல் முத்தம் 13

 காதல் 13 அக்னியையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஆராத்யா, 'எவ்ளோ பெருசா வளர்ந்திட்டான்' என்று நினைத்த மறு நொடி, அவனை நெருங்கி வந்தவள், கண்ட இடத்தில் அவனை சரமாரியாக அடித்துக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் அவள் கைகளைத் தன் கை கொண்டு இறுக்கிப் பிடித்திருந்தான் அக்னி. "ஏன்டி இப்ப என்னை அடிக்கிற?" என்று கோவமாக கேட்க, அவள் புசு புசு என்று அனல் மூச்சு விட்டபடி, "உன்னை அடிக்காம வேற என்னடா செய்யமுடியும்? எப்பவோ சொன்னதை மனசுல வச்சிட்டு, பைத்தியம் மாதிரி இப்ப என்னை கடத்திட்டு வந்திருக்கீயே? உன்னை அடிக்காம பின்ன கற்பூர ஆரத்தி காட்டுவாங்களா?" என்றவள் கண்கள் கோவத்தில் சிவந்தது. "எப்ப சொன்னா என்னடி? நீ சொன்னது உண்மை தானே? அதான் உன்னை கல்யாணம் பண்ணேன்" என்றவன் கன்னத்தில் ஓங்கி ஒன்று வைத்தாள் அவள். "லூசு பயலே… அப்ப எனக்கு வெறும் பத்து வயசு டா… நான் சொன்ன வார்த்தையோட அர்த்தம் என்னனு புரியாம, அம்மா இல்லயேன்னு அழுதிட்டு இருந்த உன்னை சமாதானம் பண்ண, எப்பவும் உன் கூட இருக்கேன்னு சொன்னேன். அதுக்கு என்னை கடத்துவியா? அதுவும் எனக்கு கல்யாணம் ஆகாம இருந்த கூட பரவாயில்ல...

கன்னத்தில் காதல் முத்தம் 12

 காதல் 12 கடல் அலைகளின் நளின நடனத்தை பார்த்து ரசித்த அக்னியின் கொதித்துக் கொண்டிருந்த கோவம் பனித்துளியாய் குளிர்ந்துவிட, அடுத்து என்ன என்று யோசித்தவன், ஒரு முடிவோடு ஆராத்யா இருந்த அறைக்குச் சென்றான். கால் முட்டியில் முகம் புதைத்தபடி விசும்பிக் கொண்டிருந்த ஆராத்யாவின் குரல், தன்னை ஏதோ செய்வதை உணர்ந்த அக்னி, அவள் அருகில் போய் அமர, ஆராத்யா நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள். "ப்ளீஸ் என்னை விட்டுடு… எனக்காக கூட இல்ல, என் வாயித்துல இருக்க குழந்தைக்காகவாது, என்னை என் மாமாகிட்ட கொண்டு விட்டுடு ப்ளீஸ்." என்று அவனை நோக்கி கையெடுத்து கும்பிட்டு கதறி அழ, அவள் கண்ணீரை காணச் சகிக்காமல், "போதும்டி… அழுறதை நிறுத்து. இந்த மாதிரி நேரத்தில் அழுதா அது நம்ம குழந்தையை தான் பாதிக்கும்." என்றவன் வார்த்தையில் விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்த ஆரா, "இப்… இப்ப நீ என்ன சொன்ன?" என்று அதிர்ந்து கேட்க, "இந்த மாதிரி நேரத்தில் நீ அழுதா அது உன் வயித்தில் இருக்குற நம்ம புள்ளைக்கு நல்லது இல்லைனு சொன்னேன்டி என் ஆசைப் பொண்டாட்டி." என்று அவள் கன்னத்தை செல்லமாக தட்ட, ஆராத்யாவுக்க...

கன்னத்தில் காதல் முத்தம் 11

 காதல் 11 அக்னி கொடுத்த மருந்தின் தாக்கத்தில் காலை பத்துமணி வரை நல்ல உறக்கத்தில் இருந்த ஆராத்யாவுக்கு லேசாக தூக்கம் தெளிய கண்விழித்தவள், தலையைப் பிடித்துக் கொண்டு எழும்பப் பார்த்தவளால், உடலை இம்மியளவும் அசைய முடியாமல் போக நன்றாக கண்விழித்து பார்த்தவளுக்கு தூக்கிவாரிப் போட்டது, அவள் மேல் காலைப் போட்டுகொண்டு, அவள் வாயிற்றின் மேல் கைபோட்டு கட்டியணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்த அக்னியைப் பார்த்து. சட்டென அவனைத் தள்ளிவிட்டு எழுந்து கட்டிலின் ஓரம் வந்து நின்றவள், அவள் தள்ளிவிட்டதில் தூக்கம் கலைந்து கண்விழித்த அக்னியை தீயாக முறைத்துக் கொண்டு இருந்தாள். அவள் நின்ற கோலத்தை பார்த்து, "பச்ச்… ஏன்டி உனக்கு நார்மலாவே பாக்கத் தெரியாதா? எப்ப பாரு ஹாட் வாட்டர் கெட்டில் மாதிரி கொதிச்சிட்டே இருக்கீயே?" என்றபடி எழுந்து கட்டிலில் அமர்ந்தவனை தலையில், அவள் அங்கிருந்த மேசை விளக்கையெடுத்து அடிக்க பார்க்க, சட்டென சுதாரித்து அங்கிருந்து நகர்ந்து கட்டிலில் இருந்து கீழ இறங்கிய அவள் அருகில் வந்தவன், "ஏய்..." என்ற அதட்டலுடன் அவள் கையில் இருந்த மேசை விளக்கை பறித்துக் கொண்டு அவளை இழுத்துப் பிடித்து ...

கன்னத்தில் காதல் முத்தம் 10

  காதல் 10 அக்னி பேசிய வார்த்தைகளில் ஒரு நொடி பயந்து நின்ற ஆராத்யாவுக்கு சட்டென ஏதோ நினைவு வர, "ஏய் ஒரு நிமிஷம் நில்லுடா" என்றதும், அறை வாசல் வரை சென்றிருந்த அக்னி நின்று முகத்தை மட்டும் திருப்பி அவளைப் பார்த்து என்ன என்பது போல் புருவத்தை உயர்ந்த, அவள் தயங்கித் தயங்கி, "என்… என்னோட… என்னோட டிரஸை எல்லாம் யா… யாரு சேன்ஜ் பண்ணது?" என்று கேட்டவள் குரலில் அத்தனை நடுக்கம். அவள் கேள்வியில் முழுவதுமாகத் திரும்பி அவளை மேலிருந்து கீழ் வரை ரசனையாக ஒரு பார்வை பார்த்தவன், "இந்த வீட்ல நம்ம ரெண்டு பேரையும் தவிர வேற யாரும் இல்லைடி" என்றவன் இதழ்களில் மெல்லிய புன்னகை மலர, ஆரா அவனை முறைத்து பார்த்தவள், "நான் என்ன கேட்டுட்டு இருக்கேன் நீ என்னடா உளறிட்டு இருக்க?" என்றதும் அவளை நெருங்கி வந்து அவள் கன்னத்தை தன் இரு கைகளால் அழுத்தி பிடித்து, அவள் விழிகளை பார்த்து ரசித்தபடியே, "நீ கேட்ட கேள்விக்கு தான்டி நான் பதில் சொல்லி இருக்கேன்" என்றவன் சட்டென அவள் கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தத்தை பதித்துவிட்டு அந்த அறையை விட்டு செல்ல, அவன் முத்தத்தில் திகைத்து நின்றவளுக்கு...

கன்னத்தில் காதல் முத்தம் 9

 காதல் 9 விடிந்தும் விடியாத அந்த காலைப்பொழுதில் ஆராத்யாவுக்கு நலங்கு வைக்க பல்லவி அந்த அறைக்குள் வர, அங்கு ஆராவின் படுக்கை வெறுமையாக இருந்தது. ஒருவேளை சீக்கிரம் எழுந்து விட்டாளோ? என்று நினைத்த பல்லவி, "ஆரா பாத்ரூம்ல இருக்கீயா?" என்று கேட்டபடி குளியலறை கதவில் கைவைக்க அது திறந்துகொண்டது. பல்லவி உடனே அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை எழுப்பி கேட்க, அவளுக்கும் ஒன்றும் தெரியவில்லை. பல்லவிக்கு சட்டென பதட்டம் தொற்றிக்கொள்ள, மண்டபம் முழுவதிலும் ஆராவை தேடிப் பார்த்தார் அவர். எங்கேயும் அவள் இல்லாமல் போக, அவரின் பதட்டத்தை பார்த்து மண்டபத்தில் இருந்த அனைவருக்கும் ஆரா காணமல் போன செய்தி தீப்போல் பரவத் தொடங்கி, அது தன்னவள் தனக்காக தேர்ந்தெடுத்த தன் பட்டுவேட்டி சட்டையை ஆசையோடு வருடிக் கொண்டிருந்த ஆதிஷ்வரன் காதிலும் வந்து விழுந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்துவிட, அந்த மண்டபமே கலவரமானது. அந்த இடமே வந்திருந்த விருந்தாளிகளின் சலசலப்பில் அதிர்ந்து கொண்டிருக்க, பல்லவி அடுத்து என்ன என்று தெரியாமல் கையை பிசைந்தபடி தவித்துக் கொண்டிருக்க, ஆதிஷ்வரன் தன்னிலை மறந்து சிலைபோல்...