கன்னத்தில் காதல் முத்தம் 10

 காதல் 10


அக்னி பேசிய வார்த்தைகளில் ஒரு நொடி பயந்து நின்ற ஆராத்யாவுக்கு சட்டென ஏதோ நினைவு வர, "ஏய் ஒரு நிமிஷம் நில்லுடா" என்றதும், அறை வாசல் வரை சென்றிருந்த அக்னி நின்று முகத்தை மட்டும் திருப்பி அவளைப் பார்த்து என்ன என்பது போல் புருவத்தை உயர்ந்த, அவள் தயங்கித் தயங்கி, "என்… என்னோட… என்னோட டிரஸை எல்லாம் யா… யாரு சேன்ஜ் பண்ணது?" என்று கேட்டவள் குரலில் அத்தனை நடுக்கம்.


அவள் கேள்வியில் முழுவதுமாகத் திரும்பி அவளை மேலிருந்து கீழ் வரை ரசனையாக ஒரு பார்வை பார்த்தவன், "இந்த வீட்ல நம்ம ரெண்டு பேரையும் தவிர வேற யாரும் இல்லைடி" என்றவன் இதழ்களில் மெல்லிய புன்னகை மலர, ஆரா அவனை முறைத்து பார்த்தவள்,


"நான் என்ன கேட்டுட்டு இருக்கேன் நீ என்னடா உளறிட்டு இருக்க?" என்றதும் அவளை நெருங்கி வந்து அவள் கன்னத்தை தன் இரு கைகளால் அழுத்தி பிடித்து, அவள் விழிகளை பார்த்து ரசித்தபடியே,


"நீ கேட்ட கேள்விக்கு தான்டி நான் பதில் சொல்லி இருக்கேன்" என்றவன் சட்டென அவள் கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தத்தை பதித்துவிட்டு அந்த அறையை விட்டு செல்ல, அவன் முத்தத்தில் திகைத்து நின்றவளுக்கு அப்போது தான் அவன் சொல்லிச் சென்ற வார்த்தைகள் புத்தியில் உறைக்க, 'அவனையும் என்னையும் தவிர இங்க வேற யாரும் இல்லைன்னா… அப்போ?' என்று யோசித்தவளுக்கு அடுத்த நொடி அதன் அர்த்தம் விளங்க, தலையை கையில் பிடித்தபடி அப்படியே தரையில் அமர்ந்து தன் கால்முட்டியில் முகத்தைப் புதைத்துக் கொண்டவளுக்கு உடலெல்லாம் நடுங்கிப் போனது.


தரையில் அமர்ந்தபடியே அழுது கொண்டிருந்தவள், "இன்னும் எவ்ளோ நேரம் இப்டியே அழுதுட்டு இருக்கப்போற நீ?" என்றவனின் குரலில் திடுக்கிட்டு எழுந்தவள், சுவரை ஒட்டிக்கொண்டு நின்றாள்.


அவளை நோக்கி அவன் ஓரடி எடுத்து வைக்க, "ஏய்… அங்கயே நில்லு. பக்கத்தில் வந்த… நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது, அடிச்சு மண்டைய உடச்சிடுவேன்" என்றவள் அங்கிருந்த பூஜாடியை கையில் எடுத்துக்கொள்ள,


தன் ரெண்டு கையையும் மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு அவளை ஆழ்ந்து பார்த்தவன், "நீ என்னை அடிச்சு, நான் செத்தா எனக்கு ஒன்னும் இல்ல, நான் செத்த அப்றம் நீதான் விதவையா நிக்கனும்… பரவாயில்லையா?" என்றவன் வார்த்தையில் அவனைத் தீயாக முறைத்தவள், "நீ செத்தா நான் ஏன்டா விதவையாகணும்? நீ எனக்கு தாலிகட்டன புருஷனா என்ன? என் புருஷன் என்னோட ஆதிமாமா, அவரு உயிரோட தான்டா இருக்காரு" என்று ஆக்ரோஷமாக சொல்ல ஒரு நிமிடம் அவளை உற்று பார்த்தவன், அவள் கையைப் பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு வந்து அந்த வீட்டின் பூஜை அறையில் இருந்த ஆராவின் இஷ்ட தெய்வமான அம்மனின் புகைப்படம் முன் நிறுத்தினான்.


அவள் என்ன ஏதென்று யோசிக்கும் முன் அவள் கழுத்தில் ஷிவானி கொடுத்த தாலிக்கொடியை அணிவித்தவன், அங்கிருந்த குங்குமத்தையும் எடுத்து அவள் நெற்றியிலும் வகிட்டிலும் வைத்துவிட்டு, "என்னைப் பொருத்தவரை எப்ப நீ " என்று தன் நெஞ்சில் கை வைத்துக் காட்டியவன், "இங்க வந்தியோ அப்பவோ நீ என் பொண்டாட்டின்றது முடிவாகிடுச்சு… இந்த தாலி, குங்குமம் எல்லாம், ஜஸ்ட் உனக்காவும், இந்த ஊருக்காகவும் தான்டி" என்றவன் கன்னத்தில் தன் ஐந்து விரல்களையும் அழுத்தி பதித்திருந்தாள் ஆராத்யா.


"பொறுக்கி ராஸ்கல் எவ்ளோ தைரியம் இருந்தா இப்டி செஞ்சிருப்பா? ஏன்டா உனக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லயாடா? கொஞ்சம் கூட யோசிக்காம நீ நெனச்சது நடக்கணும்னு இப்டி ஒரு பாவத்தை பண்ணியிருக்கீயே… நீ எல்லாம் ஒரு மனுஷனா?" என்று கத்தியபடி அவன் சட்டையை பிடித்தவள், "நான் சொன்னது உனக்கு ஏன்டா புரியல? படிச்சு படிச்சு சொன்னேனேடா, நான் கல்யாணமானவன்னு! நான் இன்னொருத்தன் பொண்டாட்டிடா, அது தெரிஞ்சும் ஏன்டா இப்டி பண்ண?" என்றவள் உடைந்து அழ, அவள் குரலில் இருந்த வலியை அக்னி உணர்ந்தாலும் இப்போது எதுவும் செய்யமுடியாத நிலையில் இருந்தவன், தன் சட்டையில் இருந்த அவள் கையைப் விடுவித்து,


"உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு தான்… ஐ அக்செப்ட் இட்…" என்றவனை அவள் நிமிர்ந்து பார்க்க, "நான் தான் உன் புருஷன்." என்று சொன்ன நொடி ஆராத்யா முகம் ஆத்திரத்தில் சிவந்துவிட, "யூ பிளடி ***" என்று வாய்க்கு வந்த படி அவனை கண்டபடி திட்டியவள், "நீ தாலி கட்டிட்டா நான் உன் பொண்டாட்டி ஆகிடுவேனாடா? என் விருப்பம் இல்லாம நீ கட்னதுக்கு பேரு தாலியே இல்ல…" என்றவள் கை அவள் மார்பில் இருந்த தாலிக்கொடியை பிடித்து கழுத்தில் இருந்த கழட்ட பார்க்க,


"ஏய்…" என்று அதட்டியபடியே அக்னி அவள் கையை இறுக்கமாகப் பிடிக்க, தன் முகத்திற்கு நேராக தொங்கிக் கொண்டிருந்த தாலிக்கொடியில் படித்த ஆராத்யாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது."அம்மா" என்று மெல்ல முணுமுணுத்தவள், மெல்ல நிமிர்ந்து அக்னியை பார்க்க, அக்னி கண்கள் கோவத்தில் சிவந்து இருந்தது.


"இந்… இந்த தாலி உ… உன்கிட்ட எப்டி வந்தது?" என்று அழுத்தமான குரலில் கேட்க, அக்னி அவள் கையில் தொங்கிக் கொண்டிருந்த தாலியை தன் கையில் எடுத்தவன், "இது உனக்காக உங்கம்மா செஞ்ச தாலி, இது அவங்களோட ஆசிர்வாதம், இதை வச்சு தானே உன்னோட கல்யாணம் நடக்கணும்கிறது உன்னோட ஆசை, அதான் உன்னை தூக்கும் போது இதையும் சேர்த்து தூக்கிட்டேன்." என்றவனை வெறித்துப் பார்த்த ஆராத்யாவுக்கு அப்போது கூட இதை கடைசியாக ஷிவானியிடம் கொடுத்ததும் அதை அவள் அக்னியிடம் கொடுத்திருப்பாளோ என்று துளி சந்தேகம் கூட வராமல் போனது அவள் தவறு தானோ!


"எங்கம்மா தாலியை நீ எனக்கு கட்டிட்டா, நான் சென்டிமென்ட்டா லாக் ஆகி உன்னோட வாழ்ந்திடுவேன்னு நெனச்சு ப்ளான் பண்ணி தானாடா நீ இப்டி செஞ்ச?" என்றவள் மீண்டும் தன் கழுத்தில் இருந்த தாலியை இறுக்கிப் பிடித்தவள், "இப்ப எங்கம்மாவே உயிரோட இருந்திருந்தாலும் இதை தான்டா செஞ்சிருப்பாங்க" என்று அவள் தாலியை கழுத்தில் இருந்து கழட்டப் பார்த்த அடுத்த நொடி, தரையில் விழுந்து கிடந்தாள் அக்னி பளாரென்று விட்ட அறையில்.


"போனா போகுன்னு கொஞ்சம் விட்டா ரொம்ப ஓவரா போறியா நீ? ராஸ்கல் இன்னொரு முறை தாலில கைய வச்ச சாவடிச்சிடுவேன்" என்று கர்ஜித்தவனை முறைத்தப்படி எழுந்து அவன் முன் நின்றவள், "கொல்லுடா கொல்லு..‌‌. அப்டியாது உன்கிட்ட இருந்து எனக்கு விடுதலை கிடைக்கட்டும்." என்றவள் கன்னத்தை அவன் அழுத்திப் பிடித்ததில் அவளுக்கு தாடை எல்லாம் வலிக்க, வலியில் சுருங்கிய அவள் முகத்திற்கு அருகில் சென்று அவள் கண்களை ஆழ்ந்து பார்த்த அக்னி, "கொல்லுவேன்டி நிச்சயம் கொல்லுவேன்…" என்றவன் ஒரு கணம் நிறுத்தி, "ஆனா… உன்னை இல்ல. உன் புருஷனை கொல்லுவேன். இன்னொரு முறை தாலில உன் கைப் பட்டுச்சு. உன் கண்ணு முன்னாடியே உன் புருஷனை கொன்னுப் போட்டுவேன்" என்றவன் வார்த்தையில் அவள் பயத்தின் உச்சத்தில் நடுங்கி நிற்க, அவள் கன்னத்தில் இருந்து அவன் கையை எடுக்க, அவன் பிடித்திருந்த இடம் சிவந்து கன்றிப் போய் இருந்தது.


அது அவளுக்கு வலித்ததோ இல்லையோ, அக்னிக்கு உள்ளே ரணமாக வலிக்க, அழுத்தித் தலையைக் கோதிக்கொண்டு தன் கோவத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன் அவளைத் தாண்டிச் செல்ல, "ஆதிமாமாவை ஒன்… ஒன்னும் பண்ணிடாத, நா… நான் இந்த தாலியை கழட்டமாட்டேன்" என்றவள் வார்த்தையில் அப்டியே நின்றவன் மெல்ல திரும்பி அவளைப் உற்றுப் பார்த்தவன்,


"உன் புருஷன் வாழ்றதும் சாகுறதும் உன் கைல…" என்றவன் நிறுத்தி, "உன் கழுத்தில் தான்டி இருக்கு." என்றபடி விறுவிறு என்று அங்கிருந்து சென்றுவிட, ஆராத்யா அங்கிருந்த அவள் இஷ்ட தெய்வத்தின் முன் தொய்ந்து அமரந்தவள், உடைந்து கதறிவிட்டாள்.


அன்று முழுவதும் பூஜை அறையிலேயே அழுதபடி இருந்தவள், எப்போது தூங்கினாள் என்று அவளுக்கு தெரியவில்லை. லேசாக தூக்கம் கலைந்து கண்விழித்த போது கட்டிலில் படுத்திருப்பது அவளுக்கு புரிய, பூஜை அறையில் இருந்தவள், எப்படி இங்கு வந்தோம்? என்று யோசித்தவளுக்கு கிடைத்த விடை, அவளை மேலும் வேதனைப் படுத்தியது.


மெல்ல எழுந்து கட்டிலில் அமர்ந்தவள் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க, அங்கு உணவு தட்டோடு நின்றிருந்தான் அக்னிதேவ்.


அவனைப் பார்த்ததும் அவள் முகத்தை திருப்பிக் கொள்ள, அக்னி புருவம் உயர்த்தியவன், "ம்ஹும் மேடம் கோவமா இருக்கீங்க போல?!" என்று நக்கலாக கேட்டவன், உள்ளே வந்து அவள் அருகில் இருந்த மேசையில் தட்டை வைத்தவன், "இது ஜஸ்ட் ஸ்டார்டிங் தான் மிஸஸ். ஆராத்யா அக்னிதேவ். மெயின் பிக்சர்ரே இனிமே தானா இருக்கு, இதுக்கே முகத்தை திருப்பிட்டா எப்டி?" என்று நக்கலாக பேசியவனை முறைத்து பார்த்தவளுக்கு அவன் சொன்ன மிஸஸ். ஆராத்யா அக்னிதேவ் என்ற வார்த்தையில் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டியது போல் இருக்க, "ஹவ் டேர் யூ…" என்று பல்லைக்கடித்தவள், "டோன்ட் கால் மீ தட்" என்று சொல்ல, "என்னத்தைச் சொல்லக்கூடாதுன்னு சொல்றீங்க மிஸஸ். ஆராத்யா அக்னிதேவ்?" என்று மீண்டும் அதையே சொல்லி அவளை வெறுப்பேற்ற அவளுக்கே பொறுமை பறந்தது.


"டேய் யாருக்கு யார்ரா பொண்டாட்டி? மிஸஸ். அக்னிதேவ்வாமில்ல… இன்னொரு வாட்டி அப்டி சொன்ன, உன் வாயை புடிச்சு அப்டியே கிழிச்சிடுவேன் பாத்துக்க." என்று எகிறியவள், அவன் சட்டென அவள் அருகில் நெருங்கி வர, பயந்து கட்டிலின் ஓரத்தில் ஒடுங்கிக் கொண்டவள் முன் குனிந்து, அவள் ஆடைக்கு வெளியே இருந்த தாலியை எடுத்து அவள் முன் காட்டிய அக்னி, "நீதான்டி என் பொண்டாட்டி. சோ நீ இனிமே நீ மிஸஸ். ஆராத்யா அக்னிதேவ்…, இதை உன் மனசுல அழுத்தி பதியவச்சிக்க… புரிஞ்சிதா…?" என்று கேட்க, அவன் செயலில் மிரண்டு போய் இருந்தவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, "புரிஞ்சிதான்னு கேட்டேன்" என்று அவன் அடிக்குரலில் கர்ஜிக்க, முழுவதும் நடுங்கிப் போனவள், "புப்… புரிஞ்சிது" என்று பயந்தபடி சொல்ல, "ம்ம்ம் தட்ஸ் குட்." என்றவன், "வந்து இப்டி ஒழுங்கா உக்காரு" என்றதும் அவளும் வந்து கட்டிலின் நடுவில் அமர்ந்தாள்.


"இந்தா சாப்டு" என்று அவள் முன் உணவு தட்டை நீட்ட அவளோ முகத்தை திருப்பிக் கொண்டு, "எனக்கு வேணாம்" என்றாள் இறுகிய குரலில்…


"பச்… சும்மா பிடிவாதம் புடிக்காதடி… ஒழுங்கா டிபனை சாப்டு, இந்த டேப்லெட்டை போடு" என்று அவள் முன் மாத்திரையை நீட்ட, ஆராத்யா அவன் கையில் இருந்த மாத்திரையும் அவனையும் மாறிமாறி சந்தேகமா பார்க்க, அவள் பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட அக்னி,


"என்ன… உனக்கு மயக்க மாத்திரை கொடுத்து, நீ தூங்கினதும் உன்மேல பாஞ்சிடுவேன் பயமா இருக்க?' என்றவன் கேள்விக்கு அவள் 'ஆமாம்' என்று தலையை மேலும் கீழும் ஆட்ட, அக்னி இழுத்து மூச்சு விட்டவன்,


"நான் உன்னைத் தொடணும் நினச்சா அதுக்கு நீ மயக்கத்தில் இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லடி… எனக்கு நீ வேணும்னு இந்த நிமிஷம் தோணினா அதைத் தடுக்க உன்னால கூட முடியாதுடி, அது உனக்கே தெரியும்…" என்றவன் ஒரு நிமிடம் பொறுத்து, "உனக்கு ஃபீவர்ரா இருக்குடி… அதுக்கு தான் இந்த டேப்லெட்" என்றதும் தான் ஆராவுக்கே தன் உடம்பு அனலாய் கொதிப்பது அப்போது தான் உறைத்தது, இருந்தாலும் வீம்பை விடாமல், "எனக்கு காய்ச்சல் அடிச்சா உனக்கு என்னடா வந்தது? எனக்கு உன் டிபனும் வேணாம், டேப்லெட்டும் வேணாம். எல்லாத்தையும் எடுத்துட்டு வெளிய போடா." என்று கத்த, அக்னிக்கும் பொறுமை போய்விட்டது.


சட்டென எழுந்து தட்டில் இருந்த இட்லியை ஒரு துண்டு எடுத்து தன் வாயில் போட்டுக்கொண்டு அவள் அருகில் சென்றவன் அவன் பின்னங்கழுத்தை பிடித்து தன்னை நோக்கி இழுத்து, அவள் இதழில் தன் இதழைப் பொறுத்தி, தன் வாயில் இருந்த இட்லியை அவள் வாய்க்குள் கடத்திவிட்டு அவள் அதை முழுங்கும் வரை அவள் இதழை சிறை செய்து இருந்தவன், அவள் தொண்டைக்குள் உணவு இறங்கிய பிறகே அவள் இதழை விடுவித்திருந்தான்‌.


அவன் தந்த முத்தத்தில் சித்தம் கலங்கி நின்ற ஆராத்யா‌, கண்ணீர் வழியும் விழிகளோடு தன் இதழ்களை கைவைத்து மூடிக்கொண்டு கதறி அழ, அவளை நெருங்கி வந்த அக்னி, "என்னடி ஒழுங்கா நீயே சாப்டுறீயா? இல்ல மீதியையும் இப்டியே நானே ஊட்டி விடவா? எனக்கு ரெண்டும் ஓகே தான்." என்றவனை அதிர்ந்து பார்த்த ஆராத்யாவை பார்த்து லேசாக சிரித்தவன்,


"பேசாம மீதியை நானே ஊட்டி விடுறேன்டி…" என்று தட்டை கையில் எடுத்தது தான், அவன் கையில் இருந்த உணவு தட்டை வெடுக்கென்று பிடிங்கிக் கொண்டவள், மடமடவென இட்லியை எடுத்து வாயில் அடைத்துக் கொண்டாள்.


"ஏய்… ஏய் பாத்துடி… சிக்கிக்கபோகுது… நான் உன்னை வச்சு எக்கச்சக்க ப்ளான்லாம் போட்டிருக்கேன், நீ பாட்டுக்கு இட்லியை தின்னுட்டு எமலோகம் போய்டாதா…" என்று சொல்லி சிரிக்க, "உன்னோட இருக்கிறதைவிட, எமலோகம் எவ்ளோ மேல்" என்ற அவள் பதிலில், "என்ன நடந்தாலும் உனக்கு வாய் மட்டும் குறையவே மாட்டேங்குதுடி…" என்றவன் அவள் சாப்பிட்டு முடித்ததும் அவளுக்கு மாத்திரை கொடுக்க, வேண்டாம் என்று சொன்னால், எங்கு அவன் மீண்டும் முத்தமிட்டு விடுவானோ? என்ற பயத்தில் அதை வாங்கி தானே விழுங்கிவிட, "ஜஸ்ட் மிஸ்" என்ற அக்னி, அவள் சாப்பிட்ட தட்டை எடுத்துக் கொண்டு, அந்த அறையின் விளக்குகளை அணைத்து விட்டு, "குட் நைட்" என்றவனை, அவள் தீயாக முறைத்து பார்த்துக்கொண்டு இருக்க, "ஒழுங்கா தூங்குறியா? இல்ல நான் பக்கத்தில் வந்து படுத்து, தாலாட்டு பாடி, தட்டிக் கொடுத்து தூங்க வைக்கவா?" என்றதும் பதறிய ஆரா, போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட, அவளைப் பார்த்து சிரித்தபடி அந்த அறையை விட்டு வெளியே வந்தவன் ஷிவானிக்கும், கௌதமிற்கும் கைபேசியில் அழைத்து ஆராவைப் பற்றி சொன்னவன், 'ஆதிஷ்வரன் என்ன செய்துக்கொண்டு இருக்கிறான்?' என்பதையும் கேட்டுத் தெரிந்து கொண்டான்.


ஆராத்யா நிலை இப்படி இருக்க, ஆதியோ தன்னை விட்டு பிரிந்த தன் உயிரைத் தேடி ஊண் உறக்கமின்றி தெருத்தெருவாக அலைந்து திரிந்து கொண்டிருந்தான்.