Posts

Showing posts from January, 2022

நிஜம் 25

Image
  நிஜம் 25 "என்னம்மா சொல்றீங்க நீங்க.? இதெல்லாம் த்வனிய உங்ககிட்ட சொன்ன?" என்று வருண் கேட்க,  "இல்ல வருண். இவளாது சொல்றதாது. அப்படி சொல்றவளா இருந்தால், இதோ இவன் இவளுக்கு செஞ்ச கொடுமைக்கெல்லாம், என்னைக்கே நடந்த உண்மைய இவன்கிட்ட சொல்லி இருப்பாளே… அப்டி செஞ்சிருந்த இவன் செத்திருப்பான். இவளும் நிம்மதியா இருந்திருப்பாளே. செஞ்சாளா இவ… இல்லயே..." என்று தன் மடியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த த்வனியின் முகத்தை ஒரு நிமிடம் பார்த்து, இழுத்து மூச்சு விட்டு,  "லயா ஊரைவிட்டு போனாதை கேள்விப்பட்டப்பவே எனக்கு என்னமோ தப்பா தெரிஞ்சுது. ஏதோ பெரிய பிரச்சனை இருக்கும்ன்னு மனசுக்குள்ள ஒரு மணி அடிச்சிது. அப்ப விக்ரம் லயா பத்தி விசாரிச்சுட்டு இருந்தான். பட், லயா யூ.எஸ் போனான்றதை தவிர அவனுக்கு வேற ஒன்னும் தெரியால… சோ நான் அமெரிக்கால என்னோட பிஸ்னஸ் சர்க்கிள்ல விசாரிச்சேன். அதுலயும் எனக்கு எதுவும் பெருச தெரியல. அதனால் பிஸ்னஸ் விஷயம அமெரிக்கா போறேன்னு பொய் சொல்லிட்டு, நானே அங்க போய் விசாரிச்சேன். அப்ப தான்" என்றவர் கண்களில் கண்ணீர் பெருகியது. "அம்மா ப்ளீஸ் அழதீங்க… ப்ளீஸ்" என...

நிஜம் 24

Image
  நிஜம் 24 அனைவரும் அமெரிக்கா வந்தவுடனேயே‍, லயாவை தான் வேலை செய்யும் அதே ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து தன் கண்கானிப்பில் வைத்து பார்த்துக் கொண்டான் கதிர். த்வனி மிதமான சூட்டில் இருந்த வென்னீரில் டவலை முக்கி எடுத்து, லயாவின் உடல் முழுவதையும் துடைத்து விட்டுக் கொண்டிருக்க, லயா த்வனியையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.  லயாவின் தாயை கூட அவள்‌ அருகில் விடாமல் லயாவை தன்‌‌ கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் த்வனி. "த்வனி" என்று மெதுவாக லயா அழைக்க, த்வனி அவளை நிமிர்ந்து பார்த்து, "என்னடா எதும் வேணுமா, இல்ல தண்ணி சூடு அதிகமாக இருக்க?" என்று வாஞ்சையாக கேட்க, லயாவின்‌ கண்களில் ஒருவித கர்வம் தோன்றியது. கண்களால் த்வனியை தன் அருகில் வரும்படி சமிக்ஞை செய்ய, த்வனி அவள்‌ அருகில் சென்றாள். "நான் ரொம்ப லக்கி த்வனி. உன்னை மாதிரி ஒரு ஃப்ரண்ட் கிடைக்க… இந்த உலகத்தில் யாருக்குடி கிடைக்கும் உன்னை மாதிரி ஒரு ஃப்ரண்ட். என் அம்மா கூட சிலசமயம் எனக்கு செய்ய சங்கடப்பட்ட எல்லா வேலையும் நீ கொஞ்சம் கூட தயங்காம, அறுவெறுப்பு பாக்காம எனக்கு செய்ற. எப்படிடி உன்னால இதெல்லாம் முடியுத...

நிஜம் 23

Image
  நிஜம் 23 விக்ரமும் வருணும் கடைசியாக லேடிஸ் ஹாஸ்டலில் லயா மற்றும் த்வனியிடம் திட்டு வாங்கிகொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியே ஓடி இருக்க, த்வனி அங்கிருந்த டேபிளில் கைகளால் முகத்தை முழுதாக மூடியபடி அமர்ந்திருந்தாள். லயா மெதுவாக த்வனி அருகில் சென்று அவள் தோளில் கைவைத்து அழுத்த, த்வனி நிமிர்ந்து லயாவை பார்க்க, அவளை நேருக்கு நேர் பார்க்கமுடியாது தலைகுனிந்த லயா, த்வனி அருகில் அமர்ந்து, "சாரிடா… அந்த லூசு இப்டி செய்யும்னு நான் சத்தியமா நெனைக்கவே இல்ல, டிவில சின்ன தம்பி படம் பாத்திருக்கும் போல, அதான் எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம்னு தாலி தூக்கிட்டு வந்திடுச்சு" என்றவளை த்வனி முறைத்தாள். "ஏய் ப்ளீஸ்பா அப்படி பாக்காத, அவனுக்கு எங்க நான் அவன் மேல உண்மையாகவே கோவமா இருக்கேனோன்னு பயம். அதான் கிறுக்கு மாதிரி இப்டி பண்ணிட்டான். மத்தபடி ஹிஸ் சோ ஸ்வீட்." என்று கெஞ்சிய லயாவை பார்க்காமல் த்வனி முகத்தை திருப்பிக்கொள்ள, லயாவின் கண்களில் இருந்த வைகை டாம் உடைந்து கன்னத்தில் இறங்கிவர, "நா தான் சாரி சொல்றேனில்ல" என்று விசும்ப, அவள் குரலில் தெரிந்த மாற்றத்தில் த்வனி திரும...

நிஜம் 22

Image
  நிஜம் 22 அனைவரும் கவலையில் கலங்கி இருக்க, அந்த நேரம் அங்கு வந்த விக்ரமை பார்த்த ஆஷாவுக்குப் பக்கென்று இருந்தது. 'அய்யோ கடவுளே இந்த நேரத்துல இந்த மனுஷன் இங்க என்ன பண்றாரு? இப்ப மட்டும் த்வனி இவரைப் பாத்தா… அவ்ளோ தான், என்ன பண்ணுவானே தெரியதே' என்று உள்ளுக்குள் உதறி நிற்க, "என்ன ஆஷா மேடம் வீட்டு வந்தவங்களை இப்படி வெளிய நிக்க வச்சு வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க? நான் உங்க புருஷனோட ஃப்ரண்ட், அதோட உங்க நாத்தனாருக்கு புருஷன் வேற, மரியாதைக்குக் கூட உள்ள வாங்கனு கூப்புட மாட்டிங்களா?" என்று கேட்டவனை ஒரு பார்வையும், யாரு வந்ததென்று கதவு பக்கம் பார்த்துக் கொண்டிருந்த த்வனியை ஒரு பார்வையும் மாறிமாறி பார்த்த ஆஷாவுக்குத் தலை சுற்றியது. "ம்ம்ம் நீங்க உள்ளவான்னு சொல்லாம இருந்தாலும் நாங்க வருவோம்" என்ற விக்ரம், "வா வருண்" என்று சொல்லி விட்டு உள்ளே செல்ல, வருணை பார்த்த ஆஷா, 'என்னாச்சு?' என்று கண்களாலேயே கேட்க, வருண் இதழ் பிதுங்கி 'எனக்கு ஒன்னும் தெரியாது' என்று சைகை செய்தான். விக்ரம் உள்ளே வந்ததைப் பார்த்த த்வனி தட்டுத்தடுமாறி எழுந்து நின்றவள், ...