Posts

Showing posts from September, 2021

நிஜம் 12

Image
  இஷ்டமில்லா நிஜம் நீ                 பகுதி 12 த்வனிக்கு தூங்க மருந்து கொடுத்து படுக்க வைத்த ஷாலினி அவள் நன்றாக உறங்குகிறாள், இனி மாலை போல் தான் அவள் மயக்கம் தெளியும் என்பதை உணர்ந்த பிறகு உடனே வருணை ஃபோனில் அழைத்தவள், "வருண் நா டாக்டர். ஷாலினி பேசுறேன்" என்று சொல்ல, வருணும், "ம்ம்ம் சொல்லு ஷாலு" என்று உரிமையோடு பேச, அவள் ஃபோனை கையால் முடியவள். "பாரு ஆரு இந்தக் கொரங்குக்குத் திமிர… என்னமோ அவன் பொண்டாட்டிய கூப்புற மாதிரி சொல்லு ஷாலுன்னு செல்லமா கேக்குறான்" என்று அவள் பல்லை கடித்தாள். "ஏய் ஷாலு விடுடி… இப்ப நமக்கு அவனோட ஹெல்ப் ரொம்ப முக்கியம். எதுவும் திட்டிகிட்டி வச்சிடாத, ப்ளீஸ் நமக்கு இருக்க ஒரே ஹோப் அவன் தான். பாத்து பேசுப்பா" என்க, ஷாலினி எல்லாம் "என் தலையெழுத்து, இதெல்லாம் கேட்கவேண்டி இருக்கு" என்று தலையில் அடித்துக்கொண்டவள், "வருண் எனக்கு ஒரு எமர்ஜன்ஸி. ப்ளீஸ் ஹெல்ப் பண்ண முடியுமா?" என்று கெஞ்சலாகக் கேட்டாள். "என்னாச்சு ஷாலு? எதும் ப்ராப்ளமா? நா என்ன செய்யணும்" என்று அவன் கேட்க, "நா உங்களுக்கு ஒரு அட்ரஸ் மெச...

நிஜம் 11

Image
  இஷ்டமில்லா நிஜம் நீ                   பகுதி 11 த்வனியை பார்த்துவிட்டு வெளியே வந்தவன் பின் வேகமாக ஓடிவந்த ஷாலினி, அது ஹாஸ்பிடல் என்பதால் அதிகம் சத்தமில்லாமல், "ஹலோ நில்லுங்க… நில்லுங்க" என்று கத்திக்கொண்டே வர, அது அவன் காதில் விழவில்லை போல, அவன் அதே வேகத்தோடு நடக்க, ஷாலினி கடுப்பில் "டேய் செவுட்டு முண்டம் நில்லுடா" என்று கொஞ்சம் சத்தமாகக் கத்திவிட, அவன் கால்களில் சடன் பிரேக் போட்டு நின்றதியவன், திரும்பி பார்த்து அங்கு அவனைத் தவிர யாரும் இல்லாததால் அவள் தன்னைத் தான் அழைத்தாள் என்பது தெரிந்தது, "ஏய் இப்ப நீ என்ன சொன்ன?" என்று முறைக்க, வேகமாக ஓடி வந்ததால் ஷாலினி அவன் முன் கைகாட்டி, "வெய்ட்" என்றபடி மூச்சு வாங்க நின்றவளை அவன் முளைத்துக் கொண்டிருந்தான். "ஏய்... உனக்கென்ன காது ஆவுட்டா என்ன? எத்தன தடவ உன்ன கூப்புறது?" என்று அவனை அவள் ஒருமையில் பேச, அவனும் அவளை ஏற இறங்க பார்த்தவன், "யாரு இவ…? என்ன திட்டுனதுக்குச் சாரி கூடக் கேக்காம… மறுபடியும் திட்டிடிருக்க? லூசா இவ...? ஒரு வேலை இது மெண்டல் ஹாஸ்பிடல?" என்று நினைத்தவன், "ஹலோ யார்...

நிஜம் 10

Image
  இஷ்டமில்லா நிஜம்‌ நீ               பகுதி - 10 த்வனி மருந்து மயக்கத்தில் நல்ல உறக்கத்தில் இருக்க… அந்த ஹாஸ்பிடலில் வேலை செய்யும் டாக்டர் என்ற முறையில் ஷாலினி, விக்ரமை பார்க்க சென்றாள். அவன் மெடிக்கல் ரிப்போட்டை பார்த்தவள் முகம் வெகுவாக வெளிறி இருந்தது. விக்ரம் கைகளில் குத்தி இருந்த கண்ணாடி துண்டு அவன் கை நரம்புகளை அறுத்திருந்ததால் ரத்தம் அதிகமாக உடலில் இருந்து வெளியேறி இருந்தது. அது கூடவே உடலில் பல இடங்களில் கண்ணாடி துண்டு கிழித்த காயங்கள் ஆழமாக இருந்தது. அது பத்தாதென்று, அவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்க. அவன் உயிர் பிழைத்தால் அது மறுபிறவி என்று சொல்லும் அளவு அவன் நிலை இருக்க… ஷாலினி கூட த்வனியின் இப்போதைய நிலைக்கு விக்ரம் தான் காரணம் என்பதை ஒரு நிமிடம் மறந்து விக்ரம் சீக்கிரம் குணமாக வேண்டும் என்று கண்மூடி கணவுளை வேண்டிக்கொண்டாள். சௌந்தர்யா தவிப்போடு த்வனியை பார்த்திருக்க, த்வனியும் எங்கோ வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள். நடந்த சம்பவம் த்வனியை உடலாலும், மனதாலும் வெகுவாக பாதித்திருந்தது. ஆனால், அவள் கண்ணில் இதுவரை ஒரு சொட்டு கண்ணீர்...

நிஜம் 9

Image
  இஷ்டமில்லா நிஜம் நீ                  பகுதி 9 இரவு முடிந்து விடியல் தொடங்கும் நேரம். அதிகாலை நான்கு மணிக்கு குடிபோதையில் கண்ணு மண்ணு தெரியாமல் காரை ஓட்டியவன் கடவுளின் செயல் சரியாக அவன் வீட்டு வாசலில் வந்து நின்றான் விக்ரம். கொஞ்ச நேரம் கார் சீட்டில் சாய்ந்தபடி கண்மூடி அமர்ந்திருந்தவன். தன் ஃபோன் எடுத்து ஏதோ நம்பரை அழுத்த, அந்த பக்கம் அன்ஸ்வரிங் மெசினில் கேட்ட இனிமையான குரலை வழக்கம் போல் தன்னை மறந்து ரசித்தவன். மனதில் அடுத்த நிமிடம் த்வனி சொன்னது நினைவு வர. எரியும் நெருப்பாக மாறியது அவன் மனம். காரில் இருந்து தட்டு தடுமாறிய இறங்கி வீட்டுக்குள் நுழைந்தான் விக்ரம்.  த்வனி உதய்யிடம் தன்னை விக்ரமின் மனைவி என்று சொன்னதில் ஆத்திரத்தின் உச்சியில் இருந்தவன். அந்த நேரம் ஜெகன் ஃபோன் செய்து தன் மாமியார் வீட்டுக்கு செல்வதாக சொன்னவன். விஷ்ணுவை இரண்டு நாட்களுக்கு த்வனி பார்த்துக்கொள்வதாக சொன்னதைக் கேட்டவணுக்கு, அந்த நேரம் மூளையில் தோன்றியது ஒன்றே ஒன்று தான். இந்த உலகத்தில் எதன் மேலும் ஒட்டுதல் இல்லாமல் ஒதுங்கி நிற்கும் த்வனிக்கு விஷ்ணு என்றால் மட்...

நிஜம் 8

Image
              இஷ்டமில்லா   நிஜம் நீ               பகுதி 8 த்வனி தன் வேலையில் முழ்கியிருக்க. அந்த நேரம் அவள்‌ ஃபோன் மணி அடித்தது. ஃபோனை எடுத்துப் பார்த்தவள் முகத்தில் இயல்பாக ஒரு குறுநகை பரவ. ஃபோனை அட்டென் செய்தவள். "சொல்லு ஆஷூ" என்றதும். "த்வனி நீ ஃப்ரீய" என்று பதட்டமாக வந்த ஆஷாவின் குரலில் புருவம் சுருக்கி த்வனி. "என்னச்சு ஆஷூ? ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு. ஜெகன் எதாவது சொல்லிட்டானா?" "அதெல்லாம் இல்ல த்வனி. அப்பா ஃபோன் பண்ணாரு. அம்மாக்கு உடம்பு சரியில்லயாம்" என்று விசும்ப… "அத்தைக்கு என்னச்சு ஆஷூ பயப்படும்படி ஒன்னு இல்லயே?" "பெருச ஒன்னு இல்ல த்வனி. பிபி கொஞ்சம் அதிகமாகி மயங்கி விழுந்துட்டாங்கலாம்‌. அப்பா ரொம்ப பயந்துட்டாரு, அதான் ஃபோன் பண்ணாரு. நானும் உன் அண்ணாவும் அங்க போறோம். நீ கொஞ்சம் வினுவ ஸ்கூல்ல இருந்து பிக் பண்ணி உன் வீட்டுக்கு கூட்டிப் போய்டுடா. நாங்க நாளைக்கு இல்ல அதுக்கு மறுநாள் வந்துடுவோம். அதுவர வினுவ நீ கொஞ்சம் பாத்துக்குறீய?" "ஏய் லூசு அண்ணி‌. அது என்ன பாத்துக்குறீயான்னு கேள்வி. நா வர்ர வரை உ...

நிஜம் 7

Image
இஷ்டமில்லா நிஜம்‌ நீ‌ பகுதி 7 மூன்று நாட்கள் அமைதியாக கழிய, விக்ரமுக்கு த்வனியின் டென்ஷன் நிறைந்த வாடிய முகம் அதிக மகிழ்ச்சியை கொடுத்தது.    அன்று காலை டைனிங் டேபிளில் சௌந்தர்யாவுடன் அமர்ந்து அமைதியாக காலை உணவை சாப்பிட்டு கொண்டிருந்தவள் எதிரில் வந்து அமர்ந்த விக்ரம். "ம்க்கும்" என்று தொண்டையை செருமியவன். "யாரோ இன்னு மூனு நாளா அந்த கான்ட்ராக்ட் என் கைக்கு வரும்னு சவால் விட்டாங்களே?? உங்களுக்கு ஞாபகம் இருக்க?" என்று சௌந்தர்யாவிடம் கேட்டவன். "உன்னால ஒன்னு கிழிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும்டி." என்று நினைத்தவன் பார்வை முழுவதும் த்வனி மீதே இருக்க… த்வனி ஒரு நிமிடம் திரும்பி விக்ரமை மேலிருந்து கீழாக அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவள். அடுத்த நிமிடம் தட்டில் இருந்த வடையை காலி செய்துவிட்டு, "ஆன்ட்டி இன்னைக்கு லட்சுமி அம்மா சமையல் சூப்பர். அதுவும் மெதுவடை செம்ம.‌ இதோட ரெண்டாவது வடை உள்ள போகுது" என்றவள். "லட்சுமிம்மா நீங்க தினமும் இப்டியே சமச்சிட்டு இருந்தீங்க‌. இனிமே நா ஆபீஸ்கு போக என்னோட பைக் சரிப்படாது. லாரி தான் வாங்கணும்" என்று...