Posts

Showing posts from August, 2021

நிஜம் 6

Image
     இஷ்டமில்லா நிஜம் நீ                    பகுதி - 6 த்வனி தன் லாப்டாப் திரையில் தெரிந்த மெயிலை நூறாவது முறையாகப் படித்துப்  பார்த்துக்கொண்டிருக்க , ஜெகன் அவளைக் கண்டபடி திட்டிக்கொண்டிருந்தான். "என்னமோ பெருசா எல்லாத்தையும் நா பாத்துக்றேன்… நா பாத்துக்றேன்னு சொன்னீயே… இதுதான் நீ பிஸ்னஸை பாத்துக்குற லட்சணமா த்வனி. எவ்ளோ பெரிய கான்ட்ராக்ட். ஜஸ்ட் லைக் தட், நம்ம கைய விட்டு போய்டுச்சு. இந்த ஒரு கான்ட்ராக்ட் மட்டும் நமக்குக் கெடச்சிருந்த... கிட்டதட்ட பிப்டி க்ரோஸ் நமக்கு லாபம் கெடச்சிருக்கும். ஆன, இப்ப உன்னோட ஓவர் கான்ஃபிடன்ஸ்சால… கான்ட்ராக்ட் நம்ம கைய விட்டு போய்டுச்சு… இதுக்கு என்ன சொல்ற நீ??" என்ற ஜெகனை நிமிர்ந்து தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தவள். "தி இஸ் மை பிஸ்னஸ் மிஸ்டர். ஜெகன். இந்தப் பிஸ்னஸ் லாஸ்ல போனப்போ, நீங்க இத விக்க டிரை பண்ணீங்க. அப்பா ஆரம்பிச்ச பிஸ்னஸ் நம்ம காலத்துல வித்துட்டத இருக்கக் கூடாதுனு, இத நா கைல எடுத்தேன். அதுக்கும் நீங்க என்கிட்ட பணம் வாங்கிட்டீங்க மிஸ்டர். ஜெகன் மறந்து போச்ச… இது நம்ம ஃபேமிலி பிஸ...

நிஜம் 5

Image
               இஷ்டமில்லா நிஜம் நீ                                    பகுதி - 5 ஜெகன் குரலில் கேட்டு திரும்பிய‌ த்வனியை ஜெகன்‌ தன் அருகில் அழைக்க, அண்ணனையும், அவன் அருகில் கண்ணில் வெறுப்போடு இவளை பார்த்துக்கொண்டிருந்த விக்ரமையும் மாறி மாறி பார்த்தபடி அங்கு வந்தவள். "சொல்லு ஜெகன். என்ன பேசணும்" என்றவள் பார்வை முழுதும் விக்ரம் மீதே இருந்தது. "மாப்ள ஒரு சூப்பர் ஐடியா வச்சிருக்காரு த்வனி. அதுபடி செஞ்ச நமக்கு நெறய ப்ராபிட் வரும்." என்றவனை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தவள். "சரிரிரி... அத ஏன் நீ என்கிட்ட சொல்லிட்டு இருக்க…? இது உங்க பிஸ்னஸ், உங்க ஐடியா… இத நீ என்கிட்ட சொல்றன்னா…?! கண்டிப்பா உனக்கு என்கிட்ட இருந்து ஏதோ வேணும். அப்டி தானா…??"   "ஆமா த்வனி. நம்ம கிராமத்துல இருக்க நிலம் இருக்கு இல்ல? அங்க ஒரு பெரிய ரெசார்ட் கட்ட நாங்க ப்ளான் பண்ணி இருக்கோம். அந்த இடத்துல ரிசார்ட் கட்டுன நமக்கு வருஷா வருஷம் செம்ம லாபம் வரும் த்வனி" என்ற ஜெகன் கண்கள் பண...

நிஜம் 4

Image
  இஷ்டமில்லா நிஜம் நீ - 4 த்வனி அமைதியாக நிற்க… சௌந்தர்யாவின் கோபம் தான் எல்லை கடந்து போனது.  "அடியேய் பேசுடி? அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே… இப்பவாது வாயத்தெறந்து பேசுடி.? ஏன்டி இப்டி பண்ண? உன் வாழ்க்கையில நீயே மண்ணள்ளிப் போட்டுட்டு நிக்குறியேடி? ஏன்டி இப்டி செஞ்ச?? ஏன்டி அவனை கல்யாணம் பண்ண? ஏன்டி இப்டி என் புள்ளை உயிரோட வெளையாடுற?" என்றவர் த்வனியை மீண்டும் மீண்டும் அறைய… "என்னையும் மீறி எல்லாம் நடந்துடுச்சு. ஓடிப்போய் ஒளிஞ்சவளை, தேடிப்புடிச்சி உங்க பையன் அவன் தலையெழுத்த அவனே கெடுத்துக்கிட்டான். என்னால ஒன்னு செய்யமுடியல… ஐ வாஸ் கார்னர்டு" என்றவளை முறைத்த சௌந்தர்யா. "அவன் தாலிகடற வரை நீ என்னடி செஞ்சிட்டு இருந்த?? அவன்தான் மாப்ளனு தெரிஞ்ச உடனே அவன் கன்னத்துல நாலு அறவுட்டு கல்யாணத்தை நிறுத்த வேண்டியது தானடி. உங்க அண்ணா, அண்ணிக்கு தான் அவனை பத்தி தெரியாது. உனக்கு தெரியுமில்ல…!? உனக்கு நல்லா தெரியுமில்ல அவன பத்தி. ஹீஸ் அன்ஸ்டேபிள்… அன் பிரிடிக்டபுள், மெண்டலி ஹீ இஸ் நாட்" என்றவர் அதற்கு மேல் மகனை பற்றி பேசமுடியாமல் தழுதழுத்தவர். "அது ஏன்னும்னும் உனக்கு தெ...

நிஜம் 3

Image
  இஷ்டமில்லா நிஜம் நீ                                பகுதி - 3 திருமணம் நடந்த சூழ்நிலை திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் ஒருமாதிரி இறுக்கமான மனநிலையை கொடுக்க, அதற்கு மேல் அந்த ஊரில் இருக்க விரும்பாமல் அன்று மாலையிலேயே அனைவரும்‌ அவரவர் ஊருக்கு கிளம்பிவிட, ஆஷா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் விக்ரம், த்வனியை தன்னோடு தனியாக அழைத்துச் செல்வதிலேயே பிடிவாதமாக இருக்க, வேறு வழியில்லாமல் த்வனியை விக்ரமுடன் தனியாக அனுப்பி வைத்தனர் ஜெகனும், ஆஷாவும்… விக்ரம் காரை வேகமாக ஓட்ட, த்வனி சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் தன் ஹெட்செட்டில் பாட்டு கேட்டபடி கண்மூடி அமர்ந்திருந்தவள் விழித்திரையில், அவள் விக்ரமை முதல் முதலில் சந்தித்த நாள் கண்முன் நிழலாடியது…  த்வனியை  அடியோடு விக்ரமை வெறுக்க வைத்த அதே காலம். விக்ரம் தேவ்வாக மாறியிருந்த சிலநேரங்களில் அவனை மனதார மதிக்கவும் வைத்தது. ஆனால் அந்த நல்லெண்ணத்தில் அவனே மண்ணள்ளிப் போட்டுக் கொள்ள, அந்த நேரம் காலம் விரித்துவைத்த வலையில் சரியாக விழுந்தனர் த்வனியும், விக்ரமும். த்வனி, வி...

நிஜம் 2

Image
  இஷ்டமில்லா நிஜம் நீ பகுதி - 2 த்வனி, மாதவனின் திருமணத்தைக் கிராமத்தில் இருக்கும் தங்கள் குலதெய்வம் கோவிலில் நடந்த ஏற்பாடு செய்திருந்தான் ஜெகன். அதோடு திருமணம் முடிந்தவுடனேயே சொத்தை பிரிக்க நினைத்து, அதற்குத் தேவையான பத்திரங்களைத் தாயர் செய்து, வக்கீலையும் கிராமத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருப்பதைச் சொல்ல, த்வனி தன் அவதர் அண்ணனின் திட்டத்தை நினைத்து உணர்ச்சியற்று சிரிக்க, ஜெகன் மனைவி ஆஷாவோ "ஓ மை காட் கருப்புசாமி… இதெல்லாம் என்ன மெட்டீரியல்னே தெரியலயேப்பா" என்று தலையில் அடித்துக்கொண்டே த்வனியை பார்க்க, "விடு ஆஷு... இதெல்லாம் நமக்குப் பழகுனது தானே, அப்டியே தொடச்சி தூக்கிப்போட்டுட்டு போய்டணும். நீ போய் ஊருக்கு கெளம்புற வழிய பாரு" என்றவள் தன் அறைக்குச் சென்றாள். த்வனி குடும்பமும், இன்னும் சில நெருங்கிய சொந்தங்கள், மற்றும் தோழிகள் அனைவரும் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கிராமத்திற்கு வந்து அங்குள்ள அவர்கள் வீட்டில் தங்கிவிட, மாதவன் குடும்பமும், இன்னும் சில உறவினர்களும் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு தான் ஊர் வந்து சேர்ந்தனர். அவர்களைக் கோவில் அரு...