நிஜம் 4
இஷ்டமில்லா நிஜம் நீ - 4
த்வனி அமைதியாக நிற்க… சௌந்தர்யாவின் கோபம் தான் எல்லை கடந்து போனது.
"அடியேய் பேசுடி? அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே… இப்பவாது வாயத்தெறந்து பேசுடி.? ஏன்டி இப்டி பண்ண? உன் வாழ்க்கையில நீயே மண்ணள்ளிப் போட்டுட்டு நிக்குறியேடி? ஏன்டி இப்டி செஞ்ச?? ஏன்டி அவனை கல்யாணம் பண்ண? ஏன்டி இப்டி என் புள்ளை உயிரோட வெளையாடுற?" என்றவர் த்வனியை மீண்டும் மீண்டும் அறைய…
"என்னையும் மீறி எல்லாம் நடந்துடுச்சு. ஓடிப்போய் ஒளிஞ்சவளை, தேடிப்புடிச்சி உங்க பையன் அவன் தலையெழுத்த அவனே கெடுத்துக்கிட்டான். என்னால ஒன்னு செய்யமுடியல… ஐ வாஸ் கார்னர்டு" என்றவளை முறைத்த சௌந்தர்யா. "அவன் தாலிகடற வரை நீ என்னடி செஞ்சிட்டு இருந்த?? அவன்தான் மாப்ளனு தெரிஞ்ச உடனே அவன் கன்னத்துல நாலு அறவுட்டு கல்யாணத்தை நிறுத்த வேண்டியது தானடி. உங்க அண்ணா, அண்ணிக்கு தான் அவனை பத்தி தெரியாது. உனக்கு தெரியுமில்ல…!? உனக்கு நல்லா தெரியுமில்ல அவன பத்தி. ஹீஸ் அன்ஸ்டேபிள்… அன் பிரிடிக்டபுள், மெண்டலி ஹீ இஸ் நாட்" என்றவர் அதற்கு மேல் மகனை பற்றி பேசமுடியாமல் தழுதழுத்தவர். "அது ஏன்னும்னும் உனக்கு தெரியும்... அதோட எக்ஸ்ட்ரீமும் உனக்கு தெரியும். அவன் கோவத்தோட அளவை உன் கையில இருக்க இந்த எரிஞ்சு போன தழும்பு சொல்லுமேடி… அப்டி இருந்தும் ஏன்டி அவன் தாலி கட்டும் போது சும்மா இருந்தா? ஏன் அவனை தாலிகட்ட விட்ட?" என்று த்வனி தோளைப்பிடித்து உலுக்க…
"விக்ரம் தான் மாப்ளைனு தெரிஞ்சிருந்தா…?! இந்த தாலி என் கழுத்துல ஏறியிருக்கும்னா... நீங்க நெனைக்றீங்க?? ம்ம்ம்ம்ம்… சத்தியமா இல்ல. நா ஒரு நிமிஷம் ஒரே ஒரு நிமிஷம் என்ன மறந்திருந்த ஒரே செகண்ட்ல தாலிய கட்டிட்டான்" என்றவள் நடந்தது அனைத்தையும் சொல்ல, அவளை முறைத்த சௌந்தர்யா, "தாலி கட்னா என்ன? தாலி கட்டிட்ட தான் இப்ப என்னடி? அடுத்த நிமிஷமே, அத அறுத்து அவன் மூஞ்சிலயே அடிக்கவேண்டியது தானா… அத விட்டு அவன் கூட வீடு வரைக்கும் எதுக்குடி வந்த? அவனை சாகடிக்கவ? இல்ல அவனால நீ சாகவா? இதுல எது நடந்தாலும் காலம்பூர உக்காந்து அழப்போறது நா தானாடி. அவனுக்கு கல்யாணம்காட்சி இல்லாட்டியும் உசுரோட என் கண் முன்னால இருந்தாலே போதும்னு இருந்தேனேடி… இப்ப அதுக்கும் நீ ஒலவச்சிட்டியே" என்றவர் த்வனியை கட்டிக்கொண்டு அழ, த்வனிக்கு அவரை எப்டி சமாதானப்படுத்துவது என்று புரியால் அழுத்தமாக கண்மூடி திறந்தவள். "நீங்க பயப்பட வேணாம். என்னால விக்ரமை எதிர்க்க முடியும். ஏன் எனக்கு ஆபத்துன்னு வந்த அவனை கொல்ற அளவுக்கு அவனை நா வெறுக்குறேன் தான். பட், ஆட் தி சேம் டைம்… என்னால தேவ்வை எதுவும் செய்யமுடியாது. ஏன்? அவன் மேல ஒரு சின்ன கீறல் கூட என்னால வராது. அது ஏன்னு உங்ளுக்கே தெரியும். என்னால விக்ரம்தேவ் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது." என்று தன் கழுத்தி இருந்த செயின் லாக்கெட்டை வெளியே எடுத்து அதன் தன் உள்ளங்கையில் அழுத்திபிடித்தவள். "இது சத்தியம்" என்று சொல்ல சௌந்தர்யாவுக்கு தெரியும் அவள் அந்த லாக்கெட் மீது சத்தியம் செய்தால் என்றாள் உயிரே போனாலும் அதை மீற மாட்டாள் என்று.
த்வனியை நிமிர்ந்து பார்த்த சௌந்தர்யாவின் கண்கள் கலங்கியிருக்க, அவர் கண்களை துடைத்துவிட்டவள் கன்னத்தை மெதுவாக தடவிய சௌந்தர்யா, "சாரிம்மா, எம் பையனுக்கு எதுவுமாகிடும்ற பயத்துல தான் உன்ன அடிச்சிடேன்" என்று தழுதழுத்த குரலில் சொல்ல, த்வனி சன்னமான சிரித்தவள். "நீங்க அடிக்கும் போதும் சரி, இவ்ளோ நேரம் என்னை திட்டும் போதும் சரி, என்னால விக்ரம்கு எதாவது ஆகிமோன்ற பயத்தவிட, அவனால எனக்கு ஏதாவது ஆகிமோன்ற கவலைதாம்மா அதிகமா இருந்தது. என்ன இருந்தாலும் நீங்க ஒரு அம்மா வாச்சே? அதான் எனக்கும் எதுவும் ஆகக்கூடாத்துனு பயப்படுறீங்க" என்றவளை பார்த்து விரக்தியாக சிரித்த சௌந்தர்யா, "ம்ம்ம் நா ஒரு நல்லா அம்மாவ இருந்திருந்த எம் பையன் ஏம்மா இப்டி இருக்கப்போறான். நா மட்டும் அவனுக்கு தேவையான நேரங்கள்ல அவனோட இருந்திருந்தா, இன்னைக்கு இந்த நெலமையே வந்திருக்கதேம்மா… பொண்டாட்டி, புள்ளைன்னு அவனும்... பேரன், பேத்தீங்கன்னு நானும் எவ்ளோ சந்தோஷமா வாழ்ந்திருப்போம். எல்லாம் போச்சேம்மா. அவனோட என் வம்சமே முடிப்போகுதே… என் வம்ச கொடியே அத்துபோச்சே த்வனி." என்று மருமகளை கட்டிக்கொண்டு மீண்டும் கதற… த்வனிக்கும் சௌந்தர்யாவின் இந்த நிலையை எண்ணி கண்கள் கலங்கினாலும், அடுத்த நிமிடம் விக்ரம் முகம் கண்முன் தோன்ற அவள் முகம் இறுகியது.
விக்ரம் இரண்டு நாட்கள் அவனுடைய ப்ரைவேட் அறையை விட்டு வெளியேவே வரவில்லை. சாப்டு, தண்ணிகூட இல்லாமல் அடைந்து கிடந்தவனை நினைக்கும் போது வருத்தமாக இருந்தாலும், அந்த அறை கதவை தட்டும் தைரியம் அங்கு யாருக்கும் இல்லை. அந்த அறையில் அப்டி என்ன இருக்கிறது என்று கூட அங்கு யாருக்கும் தெரியாது. அவனை தவிர யாரும் அந்த அறைக்கு செல்ல அவன் தடைவிதித்திருந்தான். அவன் அந்த அறையில் இருக்கும்போது யாராவது அவனை தொந்தரவு செய்தால் அதன் விளைவு மிகவும் மோசமாக இருக்கும் என்று தெரிந்து அனைவரும் அவனே தானாக வெளியே வரட்டும் என்று அமைதியாக இருக்க… த்வனிக்கு சொல்லாமலே புரிந்தது அந்த அறையில் என்ன இருக்குமென்று. ஒன்றிரண்டு முறை அந்த அறையை சில நிமிடங்கள் வெறித்து பார்ப்பவள் கலங்கிய கண்களோடு நகர்ந்து விடுவாள்.
இரண்டு நாள் கழித்து ரூம்மை விட்டு வெளியே வந்த விக்ரமின் முகம் வீங்கி, கண்கள் ரத்த சிகப்பில் சிவந்திருந்தது. அதை பார்த்த சௌந்தர்யாவின் பெற்ற வயிறே பற்றி எரிந்தது. "இன்னும் எத்தனை வருஷம்டா உன்னை இப்டி பாக்குற தண்டனை எனக்கு. ஆசைய பெத்த ஒத்த புள்ளையை ஒழுங்க காப்பத்த தெரியுமா இப்டி விதிக்கு பலிகுடுத்துட்டு நிக்றேனே" என்று அவரின் பத்து மாதம் சுமந்த வயிறு பற்றியெறிய, விக்ரமுக்கோ சௌந்தர்யா அருகில் நின்றிந்த த்வனியை பார்க்க உடல் முழுவதும் சூளையில் எரியும் சிதையாய் தகித்தது. சிவந்த கண்களோடு அவன் அவளை நெருங்க, சௌந்தர்யா த்வனிக்கும் விக்ரமுக்கும் இடையில் வந்து நிற்க, விக்ரம் த்வனியையும், தாயையும் பார்த்தவன். உள்ளங்கையை இறுக்கி மூடி அருகில் இருந்த கண்ணாடியில் அவன் மொத்த கோவத்தையும் காட்ட, அது தூள் தூளாக சிதறியது.
அதன்பின் சௌந்தர்யா த்வனியை தன் கண் பார்வையிலேயே வைத்துக்கொள்ள, விக்ரமால் அவளை நெருங்க கூட முடியவில்லை. உண்மையில் விக்ரமிடமிருந்து அவர் த்வனியை காப்பாற்றவில்லை. த்வனியிடம் இருந்து விக்ரமை தான் அவர் பாதுகாத்திருந்தார். ஏனெனில் த்வனியின் பொறுமை எல்லை கடக்கும் போது, விக்ரம் உயிர் அவன் உடலில் இருக்காது. ஆனால். த்வனி அதை செய்யமாட்டாள் என்று சௌந்தர்யாவுக்கு நன்கு தெரிந்தாலும், காலம் எங்கு தன் கலாட்டாவை மீண்டும் இருவர் இடையிலும் காட்டிவிடுமோ என்ற பயத்தில் த்வனியும், விக்ரமும் ஒருவரை ஒருவர் பார்பதையே முடிந்தவரை தடுத்து வைத்தார் சௌந்தர்யா. (ம்ம்ம் காலம் இவங்க கல்யாணத்தை நடத்தி தன் கலாட்டாவை ஆரம்பிக்கல, என்னைக்கு இவங்க ஒருத்தரை ஒருத்தர் முதல் தடவ பாத்தாங்களோ அன்னைக்கே இவங்களுக்கு ஸ்கெட்ச் போட்டுடுச்சுன்னு இவங்களுக்கு யார் சொல்றது…)
விக்ரம் தான் ஆட்டத்தை ஆட டைம் பாத்து காத்திருக்க, த்வனி தன் ஆபிஸ்க்கு போக ஆரம்மிக்க, சௌந்தர்யாவும் தன் பிஸ்னஸை கவனிக்க தொடங்கி இருந்தார்.
த்வனி கேபினில் அவள் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தனர் ஆருஷியும், ஷாலினியும்.
"இந்த மாதவன் இப்டி பண்ணுவான்னு சத்தியமா என்னால யோசிக்க கூட முடியல த்வனி. எவ்ளோ விசாரிச்சு அவனை a to z அலசி ஆரஞ்சு அப்றம் தானா நீ ஒகே சொன்னா?? அப்டி இருக்கும் போது ஏப்டி த்வனி இது நடந்தது? எங்க நம்ம சறுக்குனோம்னு புரியலயே!?" என்று ஷாலினி புலம்ப…
"ஆமா த்வனி எனக்கும் இதுவே தான் மண்டையில ஓடிட்டு இருக்கு, எங்க? எதை? நம்ம மாதவன் மேட்டர்ல மிஸ் பண்ணோம். அவர் நல்லவர்னு 100% தெரிஞ்ச பிறகு தானா நம்ம மூவ் பண்ணோம். எப்டி இதெல்லாம் நடந்துச்சுனு ஒரு குழப்பம்னா...? எப்பவும் ஃபோன் பண்ணி உன்னை அலர்ட் பண்ற அந்த ஃபோன் பார்ட்டி ஏன் இந்த முறை உனக்கு கால் பண்ணி மாதவன் பத்தி சொல்லல அது ஒரு பக்கம் மண்டைக்குள்ள நண்டு பிராண்டுற மாதிரி பிராண்டுது" என்ற ஆருஷியை பார்த்து விரக்தி சிரித்த த்வனி, "இந்தவாட்டி ஃபோன் வராததுக்கு காரணம் இருக்கு ஆரு! பிகாஸ்... மாதவன் நல்லவரு… அதான் அவன் ஃபோன் பண்ணல" என்ற த்வனியை புரியாமல் பார்த்த தோழிகள், "என்னடி சொல்ற நீ. கல்யாணம் அன்னைக்கு உன்னை அம்போன்னு விட்டு ஓடுனவனை போய் நல்லவன்னு சொல்ற? என்னச்சு உனக்கு?"
"உனக்கு நெனவு இருக்க ஷாலு…? நா ஒருதடவ சொன்னேன். எனக்கு ஃபோன் பண்றவனுக்கு ரெண்டே ரெண்டு இண்டென்ஷன் தான் இருக்க முடியும். ஒன்னு தப்பான ஒருத்தன் கூட என் மேரேஜ் நடக்கக்கூடாது… அதர்வைஸ் எனக்கு மேரேஜே நடக்கக் கூடாது… இது ரெண்டுல ஒரு ரீசன் தான் இருக்கமுடியும்னு சொன்னேன் இல்ல. இப்ப தெரிஞ்சு போச்சுடி அவனோட ரியல் இன்டென்ஷன்" என்ற த்வனியை விழி விரிய பார்த்த தோழிகள்… "யூ மீன்… அப்ப அவன் உனக்கு எதிரிய?" என்று அதிர்ச்சியாக கேட்க… த்வனியின் தலை மட்டும் "ஆமாம்" என்பது போல் ஆட,
"அப்ப மிஸ்டர். மாதவன்?" என்ற ஆருஷிக்கு, "அவரா ஓடிப்போகல ஆரு" என்ற த்வனியின் பதில் என்ன நடந்திருக்கும் என்று ஆரு, ஷாலுவுக்கு உணர்த்த… "யாருடி அவன்? எதுக்குடி இப்டி செஞ்சான்? உனக்கு மேரேஜ் நடந்த அவனுக்கு எங்க வலிக்குதாம்?" என்ற கேள்விக்கு த்வனி அமைதியாக இருக்க…
"அவன் பிளான் பண்ணி மாதவனை கடத்தி வச்சான். ஆன, என்ன யூஸ் அன்னைக்கே விக்ரம் அண்ணா உன்னை கல்யாணம் பண்ணி அவனோட எண்ணத்துல ஆசிட் உத்தி அழிச்சிட்டாரே… இனிமே அந்த ஃபோன் நாய் என்ன பண்ணுதுன்னு பாக்கலாம்… இனிமே அந்த பரதேசி ஃபோன் பண்ணட்டும். அப்றம் இருக்கு அந்த நாய்க்கு செருப்படி" என்று கருவிய ஆருவை பார்த்து சிரித்த த்வனி. "இனிமே அவன்கிட்ட இருந்து ஃபோன் வராது" என்று சொல்ல,
"அதெப்படி த்வனி அவ்ளோ கான்ஃபிடன்ட சொல்ற? அப்ப அவனுக்கு உனக்கும் விக்ரம் அண்ணாக்கும் மேரேஜ் நடந்த மேட்டர் தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறீய?" என்றதற்கு 'இல்லை' என்று தலையாட்டிய த்வனி, "அவனுக்கு இனிமே எனக்கிட்ட சொல்ல ஒன்னு இல்ல… அப்டியே எதாவது இருந்தாலும் அதை நா வீட்டுக்கு போனதும் என் காது ஜவவு கிழியுற அளுவுக்கு கத்தி கத்தி சொல்லுவான். அதான் தாலிகட்டி அவனோட ராவுகாலத்த அவனே பாகத்துல வச்சிக்கிட்டானே" என்ற த்வனி முகம் கோவத்தில் சிவக்க, தோழிகள் இருவரும் த்வனி சொன்னதை நம்பமுடியாமல் திகைத்து நின்றனர்.
"த்வனி நீ… நீ சொல்றது??? அப்டின்னா விக்ரம் தான் அந்த ஃபோன் ஆளா?" என்ற ஆருவின் வார்த்தையில் இதுவரை இருந்த விக்ரமின் அண்ணன் என்ற பட்டம் காற்றில் பறந்திருந்தது.
த்வனி கல்யாண நாள் தொட்டு இன்றுவரை நடந்த அனைத்தையும் தோழிகளிடம் சொல்ல, இருவர் மனதிலும் உதித்த கேள்வி ஒன்றே ஒன்று தான்… 'வொய்' "ஏன் த்வனி விக்ரம் உன்னை பழிவாங்கணும்? என்ன ரீசன்? அப்டி நீ என்ன செஞ்ச?" என்ற கேள்விக்கு த்வனியின் பதில் வெறும் மௌனம் தான்.
"ஸ்பீக் அப் த்வனி… எங்களுக்கு உன்னை சின்ன வயசுல இருந்து தெரியும் தான். பட், நீ உன்னோட ஸ்கூல் டைம்ல பெங்களூர் ஹாஸ்டல் ஜாயின் பண்ணிட்ட… காலேஜ் கூட நீ எங்ககூட படிக்கல… நாங்களும் எங்க ஹையர் ஸ்டடீஸ்காக பாரின் போயிட்டோம். பட், இருந்தாலும் நாங்க சின்ன வயசுல இருந்து உன்னை பாத்திருக்கோம். நீ தப்பு பண்ற ஆள் இல்ல… அதுவும் உன்னை கொல்ற அளவுக்கெல்லாம். இட்ஸ் இம்பாசிபிள்டி!... என்னடி ஆச்சு? அப்டி நாங்க இல்லாத இத்தனை வருஷத்துல என்ன ஏழவுடி நடந்துச்சு. இதுக்கெல்லாம் யார்டி காரணம்?" என்று தோழிகள் இருவரும் கேள்விமேல் கேள்வி கேட்ட… த்வனி இழுத்து மூச்சு விட்டவள். "விதி…" என்றவள் எங்கே வெறிக்க...
இனி த்வனியிடம் இருந்து தங்கள் கேள்விக்கு பதில் கிடைக்காது என்று உணர்ந்த தோழிகள், அவள் கையை இறுக்கிப் பிடித்து, "என்ன நடந்தாலும் நாங்க உன் கூட இருப்போம். நீ எந்த தப்பும் பண்ணியிருக்க மாட்டேன்ற நம்பிக்கை எங்ளுக்கு இருக்கு. சோ வீ வில் பீ தேர் ஃபார் யூ த்வனி" என்று எழுந்து கொண்டவர்கள். "இன்கேஸ் உன்மேல தப்பே இருந்தாலும்… அப்பவும் நாங்க உன் கூட தான் நிப்போம். உனக்கு துணைய…" என்ற தோழிகளை கண்ணீரோடு சிரிக்கும் கண்களால் பார்த்தவள் அவர்களை இறுக்கிக்கட்டிக்கொண்டாள்.
அடுத்த பத்து நாட்கள் அமைதியாக கழிய, அன்று வீட்டு ஹாலில் ஜெகன் குரல் கேட்டு வெளியே வந்த த்வனி. விக்ரமும், ஜெகனும் ஏதோ பிஸ்னஸ் பாத்தி பேசிக்கொண்டிருப்பதை பார்த்து வந்த வழியே திரும்பி நடக்க, "த்வனி ஒரு நிமிஷம் உன்னோட பேசணும்" என்று ஜெகனில் குரல் கேட்டு நின்றாள்.
