நிஜம் 5

   







     

   இஷ்டமில்லா நிஜம் நீ 
                  
              பகுதி - 5



ஜெகன் குரலில் கேட்டு திரும்பிய‌ த்வனியை ஜெகன்‌ தன் அருகில் அழைக்க, அண்ணனையும், அவன் அருகில் கண்ணில் வெறுப்போடு இவளை பார்த்துக்கொண்டிருந்த விக்ரமையும் மாறி மாறி பார்த்தபடி அங்கு வந்தவள். "சொல்லு ஜெகன். என்ன பேசணும்" என்றவள் பார்வை முழுதும் விக்ரம் மீதே இருந்தது.


"மாப்ள ஒரு சூப்பர் ஐடியா வச்சிருக்காரு த்வனி. அதுபடி செஞ்ச நமக்கு நெறய ப்ராபிட் வரும்." என்றவனை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தவள். "சரிரிரி... அத ஏன் நீ என்கிட்ட சொல்லிட்டு இருக்க…? இது உங்க பிஸ்னஸ், உங்க ஐடியா… இத நீ என்கிட்ட சொல்றன்னா…?! கண்டிப்பா உனக்கு என்கிட்ட இருந்து ஏதோ வேணும். அப்டி தானா…??"  


"ஆமா த்வனி. நம்ம கிராமத்துல இருக்க நிலம் இருக்கு இல்ல? அங்க ஒரு பெரிய ரெசார்ட் கட்ட நாங்க ப்ளான் பண்ணி இருக்கோம். அந்த இடத்துல ரிசார்ட் கட்டுன நமக்கு வருஷா வருஷம் செம்ம லாபம் வரும் த்வனி" என்ற ஜெகன் கண்கள் பணம் என்றது பெரிதாக விரிய… த்வனி திரும்பி விகர்மை பார்த்தவள். 'ம்ம்ம் நீ உன் ஆட்டத்தை ஸ்டார்ட் பண்ணிட்ட போல விக்ரம்.' என்று உள்ளுக்குள் நக்கலாக சிரித்தவள்.


"சாரி ஜெகன். நீ சொல்றது சரி வாரது. அது அக்ரிகல்ச்சர் லேண்ட். உனக்கு மறந்து போச்ச…?? அங்க எப்டி ரிசார்ட் கட்ட முடியும். கவர்மெண்ட் அப்ரூவல் கெடைக்காது. இட்ஸ் நாட் பாஸிப்ல்..."


"இட்ஸ் இஸ் பாஸிப்ல் ஜெகன். நீங்க முன்ன ஒரு தடவை என்கிட்ட சொல்லி இருக்கீங்க… உங்ளுக்கு அந்த கிராமத்தில் நிலம் இருக்கு, அதுவும் உங்க பேர்ல தான் இருக்கு" என்ற வார்த்தையை அழுத்தி சொன்ன விக்ரம். "அதை யோசிச்சு தான் நா இந்த பிளானே போட்டேன். அங்க மட்டும்‌ ரிசார்ட் கட்னா... நமக்கு நெறய லாபம் வரும். நீங்க என்கிட்ட சொன்னதை வச்சு பாத்த நீங்க ரொம்ப நாளா அந்த நெலத்துல எதுவும் பண்ணல. சோ நமக்கு தெரிஞ்ச ஆளுங்கள வச்சு அந்த இடம் விவசாயத்துக்கு சரிபட்டு வராதுன்னு பேப்பர்ஸ் ரெடி பண்ணி அப்ரூவல் வங்கிடலாம்னு உங்க தங்கச்சி கிட்ட சொல்லுங்க" என்ற விக்ரமை த்வனி தீயாக முறைக்க…


"ஆமா த்வனி மாப்ளக்கு கவர்மெண்ட்ல நிறைய ஆளுங்களை தெரியும். அவங்களை வச்சு இந்த மேட்டரை ஈசியா முடிச்சிடலாம். இதனால லாபம் யாருக்கு? உன் அண்ணாக்கும், உன் புருஷனுக்கும் தானா த்வனி கொஞ்சம் யோசி" என்ற ஜெகனை பார்க்க பார்க்க த்வனிக்கு பற்றிக்கொண்டு வந்தது.


"ஆஷு சொல்றது கரெக்ட் தான்… நீயெல்லாம் என்ன டிசைன்னே தெரியலயே. ச்சை" என்று ஜெகனை மனதில் போட்டு வறுத்தெடுத்தவள். "சாரி ஜெகன் உன் மாப்ள சொல்ற மாதிரி எல்லாம் செய்ய முடியாது… ஏன்னா ஆறுமாசம் முந்தியே, நா அந்த நெலத்துல வாழை போட சொல்லிட்டேன். இப்ப காய் எல்லாம் கொல தள்ளி அறுப்புக்கு ரெடிய இருக்கு" என்ற த்வனியை விக்ரம், ஜெகன் இருவரும் அதிர்ந்து பார்க்க…


"என்ன த்வனி இதெல்லாம் அதெப்படி நீ என்னை கேக்காம, இதெல்லாம் செய்யலாம். இதெல்லாம் உனக்கு தப்பா தெரியல?" என்ற அண்ணனை கேவலமாக ஒரு லுக்கு விட்டவள். "அந்த நிலமும், வீடும் மிஞ்சு போன பிப்டி டூ சிக்ஸ்டி லக்ஸ் தான் வரும். ஆன, நீ அதை என் பேருக்கு மாத்தி தர... ரெண்டு கோடி வொர்த் பெங்களூர் வீட்டை என்கிட்ட கேக்கும் போதும், அந்த வீட்ட உன் பேருக்கு மாத்திக்கும் போதும் அது உனக்கு தப்பா தெரியலய ஜெகன்??" என்ற த்வனி கேள்வியில் ஜெகன் தலைகுனிந்து இருக்க… 


"வாட் இஸ் திஸ் கெஜன்?? அப்ப அந்த லேண்ட் இப்ப உங்க பேர்ல இல்லயா? என்று விக்ரம் அதிர… ஜெகன் இல்லையென்று தலையாட்டியவன். த்வனி கல்யாணம் அன்னைக்கே பிராபர்ட்டி பேப்பர்ஸ்ல சைன் பண்ண ஏற்பாடு பண்ணி வக்கீலையும் வர வச்சு இருந்தேன் விக்ரம். அப்றம் தான் மாதவன் ஓடிப்போய் கொஞ்சம் பிரச்சனை ஆகிடுச்சு, அப்றம் தான் உங்க கல்யாணம் நடந்தது. கல்யாணமும் முடிஞ்சிடுட்டு, பேப்பர்ஸ் கூட ரெடிய இருந்தது. சோ எதுக்கு தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்ணனும்னு... நீங்க த்வனிய கூட்டிட்டு கெளம்புறதுக்கு முன்னயே த்வனிகிட்ட பேப்பர்ஸ்ல சைன் வாங்கிட்டேன். கொஞ்ச நாள் முன்ன தான் ரிஜிஸ்டர் பண்ணேன்" என்றவனை விக்ரம் ஏதோ ஜந்துவை பார்பதுபோல் பார்த்தவன். "எந்த மாதிரி நெலமையில அந்த கல்யாணம் நடந்துச்சு, இவன் என்னடான்னா அந்த நேரத்துலயும் சொத்து பத்திரத்ல சைன் வாங்குறதுல தெளிவ இருந்திருக்கானே…!! என்ன‌ டிசைன் இவன்? இந்த ராட்சசி காலேஜ் டைம்ல அடிக்கடி இவனை அவதார் அண்ணன்னு சொல்லு… அது கரெக்ட் தான் போல... என்ன கண்றாவி அவதாரமோ இவன்?" என்று‌ மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டவன்‌. "இவளை மாதிரி மனசே இல்லாத ராட்சசி கூடப்பொறந்தவன் இப்டி தான் இருப்பான்" என்று த்வனியை‌ முறைத்தபடி… "என்ன ஜெகன் இப்டி பண்ணிட்டிங்க? இப்ப என்ன‌ பண்றது. நா அந்த லேண்ட் உங்க பேர்ல இருக்குன்னு தானே இந்த ஐடியாவே போட்டேன். இப்ப என்ன பண்றது??"


"நீங்க ஏன் விக்ரம் கவலைப்படுறீங்க…? லேண்ட் என்பேர்ல இல்லாட்டி என்ன? த்வனி பேர்ல தானா இருக்கு, அவ ஹஸ்பண்ட் கேட்ட அவ குடுக்க மாட்டாளா என்ன?" என்றவனுக்கு த்வனி இல்லை என்று தலையாட்டி காட்ட…


"ஏன் த்வனி? உன் அண்ணாக்கு, உன் புருஷனுக்காக அந்த நிலத்த தரமாட்டிய…??" 


"தர‌மாட்டேன்னு இல்ல ஜெகன். இப்ப என்னால அந்த இடத்த தர முடியாது. அதுதான் மேட்டரே..."


"ஏன் தரமுடியாது. ஓஓஓ… தோட்டம் இருக்கனால சொல்றீய. சரி இப்ப அறுவடை முடியுற‌ வரை நாங்க வெய்ட் பண்றோம். இனிமே அங்க எதுவும் பண்ண வேணாம். அப்டியே கொஞ்ச நாள் விட்றுவோம். அப்றம் மாப்ள சொன்ன மாதிரி செய்வோம். ஓகே தானா" என்றவனை பார்த்து த்வனி மீண்டும் இல்லை என்று தலையாட்ட, "இப்ப என்ன வந்துச்சு?" என்று ஜெகன் சலிப்பாக கேட்க.


"ஏன்னா அந்த இடத்தை நா குத்தகைக்கு குடுத்துட்டேன்" என்று அவள் பெரிய குண்டை தூக்கிப் போட ஜெகனுக்கு தூக்கிவாரிப் போட்டது. "என்ன சொல்ற த்வனி இது எப்ப நடந்துச்சு?" 


"நீ ஒரு வாரம் முன்ன அந்த நிலத்தோட பேப்பர்ஸ் எல்லாம் சேஃப்டிய இருக்கான்னு ஃபோன் பண்ணி அக்கறைய கேட்ட பாரு... அன்னைக்கு மறுநாள் தான் இதெல்லாம் நடந்துச்சு" என்றவள் திரும்பி விக்ரமை பார்த்து நக்கலாக சிரித்தவள். 'எனக்கு தெரியும்டா. நீ கண்டிப்பா என் மனசுக்கு புடிச்ச விஷயங்களை வச்சு தான் என்னை டார்கெட் பண்ணுவேன்னு எனக்கு நல்லா தெரியும். அதுல முக்கியமானது அந்த வீடும், நெலமும். நீ நிச்சயம் அதுக்கு வேட்டு வைப்பேன்னு தெரிஞ்சு தான் நா இப்டி செஞ்சேன்' என்றவள் மைண்ட் வாய்ஸ் விக்ரமுக்கு தெளிவாக புரிய… எல்லைமீறி வந்த கோவத்தை கஷ்டப்பட்டு கட்டுபடுத்தியவன். "குத்தகைக்கு வீட்ட என்ன ஜெகன். அதை கேன்சல் பண்ணிடலாம். அவங்க தந்த பணத்துக்கு மேல குடுத்து டீலை முடிச்சிடலாம்" என்று தன் எண்ணத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று விக்ரம் விடாமல் பேச…


"அதுவும் முடியாது ஜெகன்" என்ற தங்கையை பாவமாக பார்த்த ஜெகன், "இந்த முடியாது ஏம்மா??" என்று கேட்க.


"அந்த நிலத்தை நா இயற்கை விவசாயம் செய்ற ஒரு ரிசர்ச் சென்டர்க்கு இருவது வருஷத்துக்கு அக்ரிமெண்ட் போட்டு தந்துட்டேன். அதுவும் பாதில எந்த காரண்ம் கொண்டும் கேன்சல் பண்ண மாட்டேன்னு ஸ்டேட்மெண்ட்ல சைன் போர்டு கொடுத்துட்டேன்" என்று அப்பாவியாக கண் சிமிட்டியவளை பார்க்க பார்க்க விக்ரமுக்கு அப்படியே அவள் கழுத்தை நெறித்து கொல்லாம் போல் இருந்தது‌.


"சரி ஜெகன் நிலம் தான் இல்ல, அட்லீஸ்ட் அந்த பழைய‌ வீட்டை இடிச்சு ஒரு ஃபார்ம் ஹவுஸ் கட்டலாம். நம்ம ஃபாரின் பிஸ்னஸ் கிளையண்ட்ஸ் தங்குறதுக்கு வசதியா இருக்கும்." என்றதற்கும் த்வனி மீண்டும் இடவலமாக தலையாட்ட, ஜெகனுக்கு ஐய்யோ‌ என்றிருந்தது. "இப்ப என்னடி ஆச்சு? இந்த இல்ல எதுக்கு??" என்ற ஜெகனை பார்த்து வந்த சிரிப்பை கட்டுப்படுத்தி த்வனி, "வீட்டை அந்த ரிசர்ச் சென்டர்காக நம்ம நெலத்துல வேலை பாக்குறவாங்க தாங்க லீஸ்க்கு குடுத்துட்டேன்" என்றது தான் விக்ரம் "ஷிட்" என்று அருகில் இருந்த டேபிளை எட்டி உதைத்தவன் அங்கிருந்து சென்றுவிட ஜெகனும் வந்தவழியே சென்றான்.


விக்ரமின் முதல் பிளான் முழுதாக ஊத்திக்கொள்ள இப்போது விக்ரமின் வெறி இன்னும் அதிகமானது.


இப்போதைய நிலவரம்…!! கொஞ்சம் கலவரம் தான்…

விகரம் - 0 த்வனி - 1 பாண்ட் என்ற நிலையில் த்வனி முன்னணியில் இருக்க, அடுத்த விக்ரமின் ஆட்டம் எப்டி இருக்குமோ...????


"நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு த்வனி. பைத்தியம் புடிச்ச கொரங்குக்கு தேளும் கொட்டுன மாதிரி... ஏற்கனவே உன்மேல கடுப்புல இருந்த விக்ரம். இப்ப இந்த லேண்ட் மேட்டர்ல செம்ம கோவத்துல இருக்கான். நீ எதுக்கும் கொஞ்சம் கவனமா இருடா" என்ற மாமியாரை பார்த்து விரக்தியாக சிரித்த த்வனி. "அவனை பாத்தி எனக்கு தெரியாத ஆண்டி.? நீங்க இதபத்தி எல்லாம் யோசிக்காதீங்க… ஃப்ரீய விடுங்க ஆண்டி… நா பாத்துக்குறேன்." 


"எனக்கு அவனும் முக்கியம். நீயும் முக்கியம் த்வனி. நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்னு தான் நான் தினமும் சாமிகிட்ட வேண்டிக்குறேன்." என்று பெருமூச்சு விட்டவர். "ஆன, எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்ல த்வனி. நீ செஞ்ச ஒரு சின்ன விஷயத்துக்கு உன் கையையே எரிச்சவன் அவன். அப்டிபட்டவன் இப்ப இவ்ளோ பொறுமைய, ப்ளான் போட்டு எல்லாத்தையும் செய்றது ரொம்ப விசித்திரமா இருக்குமா… உங்க கல்யாண நடந்து நீ இந்த வீட்டுக்கு வந்தன்னைக்கு, எங்க இவன் உன்னை எதுவும் செஞ்சிடுவானோன்னு நா ரொம்ப பயந்துட்டு இருந்தேன். கண்கொத்தி பாம்பு மாதிரி உங்க ரெண்டு பேரையே பாத்துட்டு இருந்தேன். ஆன, இப்ப வரை அவனோட விரல் நகம் கூட உன்மேல படல!" என்று த்வனியை கேள்வியாக பார்க்க… விக்ரம் அப்டி எதுவும் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்று தெரிந்தவள் முத்தத்தில் கசப்பான புன்னகை பரவ, "நா எதுக்காக இப்ப வரை உங்க புள்ளைய ஒன்னும் செய்யாம இருக்கேனோ, அதே காரணம் தாம்மா அவனுக்கும்." என்றவள் அமைதியாக அங்கிருந்து சென்று விட. சௌந்தர்யா வழக்கம் போல், "ஏன்டா பாவி இப்டி செஞ்ச??" என்று கடவுளை கண்டபடி திட்டிவிட்டு சென்றார்.


இரவு மூனு மணிவரை லேப்டாப்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்த த்வனி, காலை ஏழுமணி வரை நல்லா உறக்கத்தில் இருக்க, அவள் தூக்கத்தை மணியாடித்து கலைத்தது அவள் தொலைபேசி. அரைகுறை தூக்கத்தில் யாரென்று கூட‌ பார்க்காமல் ஃபோனை அட்டென் செய்து காதில் வைத்தவள். "ஹலோ" என்று சொல்லும் முன்னே அந்த பக்கம் ஜெகன் சொன்ன செய்தியில் அடித்து பிடித்து எழுந்தவள். அரைமணி நேரத்தில் அவள் ஆபீஸுக்குள் நுழைந்தாள். அங்கு விக்ரம் அவளுக்கான அடுத்த ஆப்பை சிவிவைத்திருக்க அதை அறியாமல் வேகமாக தன் கேபினுக்கு சென்றாள் த்வனி.