இதயம் 14
இதயம் 14 தர்ஷியைப் பார்க்க ஆதர்ஷ் வரச் சொல்லியது பற்றி அதீஷனிடம் சந்தோஷமாகச் சொல்லிக் கொண்டு இருந்தாள் தன்வி. “இன்னேரம் ஆது அவர் மனசுல இருக்கிறதை தர்ஷினி அக்காகிட்டச் சொல்லி இருப்பாரு இல்ல?” என்று கணவனிடம் கேள்வி கேட்டவள், “ஆமா, சொல்லாம என்ன செய்வாரு… கொஞ்ச நாள் அக்காவைப் பார்க்காமல் இருந்ததுக்கே சாரு வாடிப் போயிட்டாரு… இனியும் அவரால் அக்காவை விட்டுப் பிரிஞ்சு இருக்க முடியாது… கண்டிப்பா இன்னேரம் அவர் மனசுல இருக்கிறது எல்லாம் சொல்லி இருப்பாரு” என்று கேள்வியும் அவளே கேட்டு பதிலையும் அவளே சொல்லிக் கொண்டாள். அமைதியாக எதையோ யோசித்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்து, “என்ன தஷ், நான் பாட்டுக்கு இங்க பேசிட்டு இருக்கேன்… நீங்க அமைதியா ஏதையே யோசிச்சிட்டு இருக்கீங்க? அப்படி என்னதான் யோசிச்சிட்டு இருக்கீங்க?” என்றபடியே தன் கணவன் அருகில் வந்து அமர்ந்தாள். தன்னருகில் வந்து அமர்ந்தவள் முகத்தைப் பார்த்து இழுத்து மூச்செடுத்தவன், “நான் நேத்து தர்ஷன்கிட்டப் பேசினேன்.” என்றான் எந்த முகாந்திரமும் இல்லாமல். “இப்படித் தலையும் புரியாம வாலும் புரியாம, ஆதுகிட்டப் பேசினேன்னு சொன்னா என்ன அர்த்தம்?” என்று கேட்டாள...