Posts

Showing posts from June, 2023

விழி வழி காதல் நுழைந்ததடி 1

விழி 1 அழகாய் விடிந்த காலைப் பொழுதில், வழியில் வண்ண வண்ணமாகப் பூத்திருந்த அழகிய மலர்களைக் கூட ரசிக்காமல், அந்த எட்டு மாடிக் கட்டிடத்தின் உள்ளே வேகமாக நுழைந்தான் ஆதர்ஷன் விஜயராகவன்.  இன்றைய தேதியில், இந்தியாவில் பல தொழில்களில் முதலிடத்தில் இருக்கும் வி.வி இண்டஸ்ட்ரீஸ் சேர்மன் வீரராகவனின் பேரன். தன் தாத்தா உருவாக்கிய தொழிலை, ஆதர்ஷின் தந்தை உச்சத்தில் நிறுத்தி இருந்தார். அதை இன்று வரை முதல் இடத்திலேயே வைத்திருக்கும் இளம் தொழிலதிபன் ஆதர்ஷ்.  ஐந்தடி ஒன்பது அங்குல உயரத்தில், வசீகரிக்கும் கோதுமை நிறத்தில் பார்க்கும் அனைவரையும் கவரும் ஆண்மகன். தினமும் செய்யும் உடற்பயிற்சியில் வடித்து வைத்த கற்சிலை போன்றிருக்கும் அவன் தேகத்தை அவன் அணிந்திருந்த கறுப்பு நிறச் சட்டை இன்னும் கம்பீரமாகக் காட்ட, காற்றில் அலைந்தாடிய கேசத்தைத் தன் இடது கைகொண்டு கோதியபடியே வந்த அந்த முப்பது வயது அழகனைப் பார்த்து மரியாதையாக அங்கிருந்தவர்கள் எழுந்து நின்று, "குட் மார்னிங் சார்" என்று சொல்லத் தலையாட்டி அவர்களின் காலை வணக்கத்தை ஏற்றவன், அவனைப் பார்த்து ஆசையாகப் புன்னகைத்த பெண்களைப் பார்த்ததும் கண்களில் அத்தனை இறு...

அழகி நிறைவு பகுதி

  அழகி 33  ஜீவாவின் கண்ணில் போன ஜீவன் மீண்டும் சுடர் விட்டு ஒளிர்ந்தது. "டேய் ஆதி… சாம் உன்னோட கையை இறுக்கி புடிச்சிருக்காடா. அப்ப அவளுக்குக் கான்ஷியஸ் வந்திடுச்சுன்னு தானே அர்த்தம்?" என்றவன் ஹாஸ்பிடல் என்றும் பாராமல் சந்தோஷத்தில் சத்தமாகக் கத்தினான். ஆதியின் உயர்ந்து இருந்த இடது கையை மயக்கத்திலும் இறுக்கி பிடித்திருந்தாள் யுக்தா. "என் பொண்டாட்டி என்னைத் தனியா விட்டு போக மாட்டானு, நான் தான் சொன்னேனே டா… அவ எப்பவும் சொன்ன வார்த்தையை காப்பாத்துவா. அவ திரும்பி என்கிட்ட வருவான்னு எனக்குத் தெரியும்!" என்றவன் தன் கையைப் பிடித்திருந்த யுக்தா கையில், தன் முரட்டு இதழ்களை மென்மையாகப் பதித்தான். முழுதாக எட்டு மணிநேரம் எடுத்தது யுக்தா கண் விழித்துச் சுய உணர்வுக்கு வர. மெதுவாகக் கண்விழித்தவள் முன் மொத்த குடும்பமும் அழுது வடிந்து நிற்க, ஆதித் மட்டும் அடக்க முடியாத கோவத்தைத் தன் கண்களில் தேக்கி வைத்து அவனவளை முறைத்துக் கொண்டிருந்தான். சிவகாமி பாட்டி வேகமாக யுக்தா அருகில் வந்து அவள் காதை மெதுவாகப் பிடித்துத் திருகியாவர், "ஏன்டி ராங்கி? நீ அடங்கவே மாட்டியா டி? வீட்ல இத்தனை பேர்...

அழகிய தமிழ் மகள் 32

  அழகி 32 அந்த ஆள் நடமாட்டம் இல்லாத அண்டர் கன்ஸ்ட்ரக்ஷன் பில்டிங்குக்குள் யுக்தா வேகமாக நுழைய, அவள் கழுத்தில் ஏதோ சுருக்கென்று குத்தியதை உணர்ந்தாள். கழுத்தை பிடித்துக் கொண்டு அப்படியே கீழே முட்டி போட்டு உட்காந்து திரும்பி பார்க்க, அங்குக் கையில் மருந்து இல்லாத காலி சிரஞ்சி ஊசியைக் கையில் பிடித்த படி, குரூரமாகச் சிரித்துக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி. யுக்தா கண்கள் செருகும் நிலையிலும் ப்ரீத்தியை தீயாய் முறைத்துக் கொண்டிருக்க, "என்ன மிசஸ் சம்யுக்தா ஆதித்தன். கண்ணு செருகுதா? உடம்பெல்லாம் ஒரு மாதிரி இருக்குமே? நரம்புங்க எல்லாம் சுண்டி சுண்டி இழுக்குதில்ல? ம்ம்… அப்படித் தான் இருக்கும். உனக்காகவே ஆப்பிரிக்கா காட்டுல இருந்து வர வச்ச பயங்கர விஷம் இது யுக்தா! நீ எப்படி என்னோட உதய்யை விஷ ஊசி போட்டு கொன்னியோ, அதே மாதிரி நீயும் ஒவ்வொரு நிமிஷமும் துடிச்சு துடிச்சு சாகணும். நீ உதய்க்கு குடுத்த விஷத்தை விட, இது செம்ம ஸ்ட்ராங்கான டோஸ்!" என்று சிரித்தவள், "நான் இங்க வந்ததே, உன்னையும், உன் ஃப்ரண்ட்ஸ் நிஷா, ஜானவி, ராஷ்மி எல்லாரையும் கொல்லனும்னு தான் டி வந்தேன். இங்க வந்த பிறகு தான் தெரிஞ்சுது...

அழகிய தமிழ் மகள் 31

  அழகி 31 யுக்தா வினய் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, வினய் கன்னத்தில் கை வைத்துச் சோகமாக உட்கார்ந்திருந்தான். "ஏன் டா அண்ணா… உனக்கு நிஷாவ புடிக்கலயா? நான் சொன்னேன்னு தான் அவளைக் கட்டிக்கிட்டியா?" என்று வேண்டுமென்றே வினய்யை வெறுப்பேத்தினாள்‌. "ஏய்…‌ ஏய்… அதெல்லாம் ஒன்னும் இல்ல.‌ நிஷான்னா எனக்கு உயிரு, நான் அவளை ரொம்ப லவ் பண்றேன். அவ இல்லாம எனக்கு லைஃப்பே இல்ல. நான் அவளைப் புடிச்சு தான் கட்டிக்கிட்டேன்." "ஓ பரவயில்லயே ,சார் பொண்டாட்டிய இவ்ளோ லவ் பண்றாரே?இத வச்சே இவனை அவகிட்ட கோத்து விடறேன் பாரு. அந்தக் கெழவி கூடச் சேர்ந்து, இவனும் தான என் கல்யாண விஷயத்துல கூட்டு களவாணி தனம் செஞ்சு ஆதித் கூட என்னைக் கோத்து விட்டான்.‌ இரு டா இரு…’ என்று உள்ளுக்குள் ப்ளான் போட்டவள் "ஏன் டா? இத நீ அவகிட்ட சொன்னியா? நிஷாக்கு நீ அவளை லவ் பண்ற மேட்டர் தெரியுமா?" வினய் சோகமாக இல்லை என்று தலையை ஆட்டியவன், "அவளுக்கு ஃபர்ஸ்ட்ல இருந்தே என்னை சுத்தமா‌ புடிக்காது சாம். ஆனா, அதுல அவ தப்பு ஒன்னும் இல்ல. நான் தான் அவளை மொறச்சிட்டே திரிஞ்சேன். அதோட பலனை இப்ப நல்லா அனுபவிக்கிறேன்...

அழகிய தமிழ் மகள் 30

  அழகி 30 ராம் குழப்பமாக யுக்தாவை பார்த்தபடி இருக்க, வினய் பொறுமை இழந்தவன், "ஏய் சாம், என்ன‌ இதெல்லாம்? உதய்க்காகத் தான் இதெல்லாம் நடக்குதுன்னு நீ எப்படி சொல்ற? இதுல ப்ரணவ் எங்கிருந்து வந்தான்? உன்னைக் கொல்ல யாரு நெனக்குறா? அந்த சேது, ஆதிகிட்ட இருந்த பகையில தானே ப்ரணவ்வை கடத்துனான்? அப்ப அதுக்கு என்ன அர்த்தம்?" "சிம்பிள் டா அண்ணா… அந்த சேது ஆதித்தை டார்கெட் பண்ணி இருந்தால், அன்னைக்கு ப்ரணவ்வை கடத்தின விஷயத்தை ஆதிக்கு தான் ஃபோன் பண்ணி சொல்லி மிரட்டி இருப்பானே தவிர, எனக்கில்ல. அன்னைக்குக் கால் வந்தது எனக்கு. சோ மெயின் டார்கெட் ஆதியா இருக்க வாய்ப்பில்லன்னு எனக்கு அன்னைக்கே புரிஞ்சு போச்சு. அதோட அன்னைக்கு என்கிட்ட ஃபோன்ல பேசுனுது சேது இல்ல, பேசுன விஷயம் வேறயா இருந்தாலும் அந்தக் குரல்ல என் மேல இருந்த கோவத்தையும், வெறுப்பையும், வன்மத்தையும் என்னால இப்பவும் உணர முடியுது. அப்ப இருந்த டென்ஷன்ல அதைப் பத்தி என்னால யோசிக்க முடியல. அதோட அன்னைக்கு அந்தச் சேது ஒரு வார்த்தை சொன்னான்.  ப்ரணவ்வை ஒன்னும் செய்ய மாட்டேன்னு குடுத்த வாக்கை கூடப் பாக்க மாட்டேன், குழந்தையைக் கொன்னுடுவேன்னு… அவன்...