விழி வழி காதல் நுழைந்ததடி 24
விழி 24 ஒரு நிமிடம் உயிர் வரை பதறிய ஆதர்ஷன், கணநேரத்தில் தன்னைச் சுதாரித்துக் கொண்டு "தன்வி…" என்று கத்திக்கொண்டே அவளை நோக்கி ஓடியவன், அவள் குதிக்கும் முன் அவளது கையைப் பிடித்து இழுத்துத் தன் நெஞ்சோடு அணைத்தான். அடுத்த நொடி அவளைத் தன்னில் இருந்து விலக்கி கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட, அவனது ஐந்து விரல்களும் அவளது பட்டுக் கன்னத்தில் பதிந்திருந்தது. "ஏன்டி இப்படிப் பண்ண? சொல்லுடி, எதுக்கு இப்படி ஒரு முடிவெடுத்த? ஒரு செகண்ட் நான் லேட்டா வந்திருந்தா என்னாகி இருக்கும்? நெனச்சுப் பார்க்கவே எனக்குப் பதறுதுடி…" என்று அவள் தோள்களைப் பிடித்து உலுக்கியபடி, அடிநெஞ்சில் இருந்து கோபத்தில் கத்தியவனுக்கு, அவள் இல்லாத ஒரு வாழ்க்கையைக் கற்பனை செய்து பார்க்கக் கூட பயமாக இருந்தது. அவன் கோபத்திலும் பயத்திலும் கத்திக் கொண்டு இருக்க, தன்வியோ முகத்தைத் தன் கைகளால் மூடிக்கொண்டு கதறி அழுதபடி அப்படியே முட்டி போட்டுத் தரையில் அமர, அவளது நிலை கண்டு அவளவனுக்கும் கண்களில் நீர்த் துளிகள் துளிர்க்க, அவளைத் தூக்கி நிறுத்தியவன், அவள் தலையைப் பிடித்து இழுத்துத் தன் நெஞ்சோடு சாய்த்துக்கொண்டு, தலை...