காதல் Epilogue
காதல் இறுதி அத்தியாயம் இன்றோடு ஷரவன், மிருதுளா கல்யாணம் முடிந்து ஒரு வாரம் ஓடிவிட்டது. நிலவன் வேலை விஷயமாக வெளியூர் சென்றவன், இன்று தான் ஊருக்கு திரும்பி இருந்தான். வீட்டிற்குள் நுழைந்ததும் லட்சுமி, லட்சுமியின் தங்கை பிரியா, சிந்து, விஷ்வா என்று எல்லோரும் எங்கேயோ அவசரமாக கிளம்பி கொண்டிருந்ததை பார்த்து, "என்ன குடும்பமே எங்கயோ மொத்தமா கிளம்பிட்டீருக்கீங்க போல?" என்று கேட்டபடி சோஃபாவில் அமர்ந்தவனை பார்த்தான் விஷ்வா. "டேய் நாங்க கிளம்புறோம், நீ வீட்டை பார்த்துக்க" என்ற விஷ்வாவை முறைத்தான் நிலவன். "டேய் முதல்ல நீங்க எங்க போறீங்க? அதை சொல்லு முதல்ல" "டேய் உனக்கு மேட்டர் தெரியாதுல்ல… நம்ம வால்டியூப்க்கு கல்யாணம் நடக்கப்போகுது டா. இன்னைக்கு கல்யாணம் பத்தி பேசுறாங்க, யூ.எஸ் ல இருந்து ஆகாஷ் வந்திருக்காரு, நாங்க எல்லாரும் தனு வீட்டுக்கு தான் கிளம்பிட்டு இருக்கோம். செல்வகுமார் சார் எங்க எல்லாரையும் கண்டிப்பா வர சொன்னாரு, ஷரவனும், அமுல்பேபியும் கூட வராங்க" என்று சொன்னவன் அனைவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான். நிலவனுக்கு தனுவிற்கு கல்யாணம்...