காதல் Epilogue
காதல்
இறுதி அத்தியாயம்
இன்றோடு ஷரவன், மிருதுளா கல்யாணம் முடிந்து ஒரு வாரம் ஓடிவிட்டது.
நிலவன் வேலை விஷயமாக வெளியூர் சென்றவன், இன்று தான் ஊருக்கு திரும்பி இருந்தான்.
வீட்டிற்குள் நுழைந்ததும் லட்சுமி, லட்சுமியின் தங்கை பிரியா, சிந்து, விஷ்வா என்று எல்லோரும் எங்கேயோ அவசரமாக கிளம்பி கொண்டிருந்ததை பார்த்து, "என்ன குடும்பமே எங்கயோ மொத்தமா கிளம்பிட்டீருக்கீங்க போல?" என்று கேட்டபடி சோஃபாவில் அமர்ந்தவனை பார்த்தான் விஷ்வா.
"டேய் நாங்க கிளம்புறோம், நீ வீட்டை பார்த்துக்க" என்ற விஷ்வாவை முறைத்தான் நிலவன்.
"டேய் முதல்ல நீங்க எங்க போறீங்க? அதை சொல்லு முதல்ல"
"டேய் உனக்கு மேட்டர் தெரியாதுல்ல… நம்ம வால்டியூப்க்கு கல்யாணம் நடக்கப்போகுது டா. இன்னைக்கு கல்யாணம் பத்தி பேசுறாங்க, யூ.எஸ் ல இருந்து ஆகாஷ் வந்திருக்காரு, நாங்க எல்லாரும் தனு வீட்டுக்கு தான் கிளம்பிட்டு இருக்கோம். செல்வகுமார் சார் எங்க எல்லாரையும் கண்டிப்பா வர சொன்னாரு, ஷரவனும், அமுல்பேபியும் கூட வராங்க" என்று சொன்னவன் அனைவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
நிலவனுக்கு தனுவிற்கு கல்யாணம் என்று கேட்டபோதே தலையில் இடி விழுந்தது போல் ஆகி விட, அதன் பின் விஷ்வா சொன்ன எதுவும் அவன் காதில் விழவில்லை. சில நொடிகள் அப்படியே இருந்தவன், உடனே கோபமாக எழுந்து காரை எடுத்துக்கொண்டு தனு வீட்டிற்கு விரைந்தான்.
ஹாலில் அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க, வேகமாக உள்ளே வந்த நிலவனை யாரும் கவனிக்கவில்லை. நிலவன் நேராக தனு அறைக்கு செல்ல, அவள் அப்போது தான் புடவையை கட்டி முடித்திருந்தாள்.
அருகில் காலடி சத்தம் கேட்டு தனு திரும்பும் முன் நிலவன் அவள் கையை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து இறுக்கி அனைத்தவன், அவள் கத்த ஆரம்பிக்கும் போதே அவள் இதழை தன்வசப்படுத்தி இருந்தான்.
திடீரென நடந்த நிகழ்வில் தனு சுதாரித்து அவனிடம் இருந்து விலக முயல, அவன் இரும்பு பிடியில் இருந்து அவளால் விலக முடியவில்லை.
தன் கடுங்கோபத்தை தனுவின் இதழில் வன்மையாக காட்டிய நிலவன் கொஞ்ச நேரம் கழித்து அவளை தன்னிடம் இருந்து விலக்கி, நேராக அவள் கண்ணை பார்த்து, "போடி? இப்ப போ? இப்ப போய் சொல்லு பார்க்கலாம் அந்த ஆகாஷை கல்யாணம் பண்ண ஓகேன்னு, போடி போய் சொல்லுடி" என்றபடியே அவள் அருகில் வந்து அவள் கூந்தலை பிடித்து தன் முகத்துக்கு அருகில் கொண்டு வந்தான்.
"இங்க பாரு டி. இந்த ஜென்மத்தில் உனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது என் கூட மட்டும் தான் நடக்கும். அப்படி இல்லன்னா சாகுற வரை நானும் சிங்கிள் தான். நீயும் சிங்கிள் தான். உன் மனசுலயும் சரி, உன் வாழ்க்கையிலும் சரி நான் மட்டும் தான் இருக்கணும், அந்த இடம் எனக்கு மட்டும் தான். அதை நான் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்" என்று கடுமையான குரலில் சொல்ல,
தனு அவனை விழி இமைக்காமல் உக்கிரமாக பார்த்தாள்.
"உனக்கு உண்ணப்பத்தி, நீ நெனச்சது நடக்கணும்னு அதை பத்தி மட்டும் தான் கவலை இல்ல... உனக்கு நீ நினைச்சது நடந்தா போதும், என்னோட உணர்ச்சிகளுக்கும், நான் என்ன நினைக்கிறேன்னு உனக்கு கவலையே இல்ல, என்ன ஏதுன்னு ஒரு வார்த்த கூட கேக்காம நீ பாட்டு வந்து கிஸ் கொடுக்குற? என்ன நெனச்சிட்டு இருக்க நீ? நீ யாரு டா எனக்கு முத்தம் கொடுக்க. நீ யாரு டா என்ன கல்யாணம் செய்யக்கூடாதுன்னு சொல்ல? யாரு நீ" என்று அவள் கொதிக்க,
அதில் நிலவன் இன்னும் கடுப்பானவன், "நான் யாரா? நான் யாருன்னு தான கேட்ட? இருடி இரு நான் யாருன்னு இப்ப காட்டுறேன்" என்றவன், அந்த அறையை விட்டு வெளியேறி ஹாலுக்கு வர, அவனை திடீரென அங்கு பார்த்த அனைவரும் கேள்வியாய் அவனை பார்த்தனர்.
"டேய் நீ எப்படா இங்க வந்த.? அதுவும் உள்ள இருந்து வர? எங்களுக்கு தெரியாம நீ எப்ப உள்ள போன" என்று விஷ்வா கேள்வி மேல் கேள்வி கேட்க,
"டேய் உன்னோட எல்லா கேள்விக்கும் நான் அப்புறம் பதில் மெயில் பண்றேன். இப்ப எனக்கு டைம் இல்ல" என்றவன் "ஹலோ இங்க ஆகாஷ் யாரு?" என்று கேட்க. ஆறடியில் பார்க்க அழகாக, ஸ்டைலாக இருந்த ஒருவன் "எஸ் ஐ அம் ஆகாஷ் "என்றான்.
அவனை எரிப்பது போல் பார்த்த நிலவன், பின் தான் கோபத்தை அடக்கிக் கொண்டு "ப்ளீஸ் மிஸ்டர். ஆகாஷ் நான் உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என்றவனை அனைவரும் விசித்திரமாக பார்க்க,
"நீ என்னடா அவர்கிட்ட பேசணும்? அதுவும் தனியா" என்ற லட்சுமி நிறுத்திய ஆகாஷ்.
"இட்ஸ் ஓகே ஆன்ட்டி. அவர் ஏதோ என்கிட்ட பேச நெனைக்குறாரு, பேசட்டுமே… வாங்க மிஸ்டர். நிலவன் மாடிக்கு போய் பேசுவோம்" என்றவன் நிலவனுடன் மாடிக்கு சென்றான்.
நிலவன் தன்னை தீயாய் முறைப்பதை பார்த்த ஆகாஷ், "என்ன ஏதோ பேசணும்னு சொல்லிட்டு, ஏன் என்னை இப்படி அடிச்சு பார்த்துட்டு இருக்கீங்க சகலை" என்க,
அவனின் சகலை என்ற வார்த்தையில் கொதித்து போன நிலவன், "அடி செருப்பால... யாருக்கு யாருடா சகலை" என்று ஆகாஷ் சட்டை காலரை பிடித்தவன், "உனக்கு மரியாதையா சொல்றேன் இப்படியே இங்கிருந்து ஓடிடு. இல்ல மகனே உன்னோட டெட்பாடி தான் திரும்ப அமெரிக்க போகும்" என்று எச்சரிக்க, நிலவன் கையை தான் சட்டையில் இருந்து எடுத்த ஆகாஷ்,
"நா எதுக்கு பாஸ் இங்கிருந்து போகணும். அவ்வளவு தூரத்தில் இருந்து வந்தது சும்மா திரும்பி போறதுக்க? அதோட என்ன போக சொல்ல நீங்க யாரு பாஸ்? இது என் மாமனார் வீடு" என்று உரிமையோடு சொன்னவனை கொலைவெறியோடு பார்த்தான் நிலவன்.
"டேய் எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி சொல்லுவ. மகனே நீ மட்டும் என் தனுவ கல்யாணம் பண்ண சம்மதம்னு சொல்லிப் பாரு... அப்புறம் தெரியும் இந்த நிலவன் யாருன்னு" என்று சொல்ல. அவன் சொன்னதை கேட்டு ஆகாஷ் சத்தம் போட்டு சிரித்தான்.
அதில் இன்னும் கடியான நிலவன், "டேய் ஏன்டா இப்ப இப்படி கேவலமா சிரிக்கிற?" என்று பல்லைக் கடிக்க,
"பின்ன என்ன பாஸ் இந்த மாதிரி காமெடி பண்ணா சிரிக்காம என்ன செய்ய? நீங்க பாஸா இல்ல லூசா... நான் போய் தன் பேபிய கல்யாணம் பண்றத..." என்று வயிற்றை பிடித்து சிரித்தவன், "கடவுளே நெனைக்கவே சிரிப்பு சிரிப்பா வருது" என்று வாய்விட்டு சிரித்தான்.
"நல்லவேள என் பொண்டாட்டி கீழ இருக்கா, அவ மட்டும் நீங்க சொன்னத கேட்டு இருந்தா இந்நேரம் ரெண்டு பூரி கட்டையும், என் மண்டையும் ஒடஞ்சிருக்கும்" என்று மீண்டும் சிரிக்க, நிலவன் ஆகாஷ் சொன்னதை கேட்டு அப்படியே சிலையாய் நின்றான்.
"டேய் என்னடா சொல்ற நீ? உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா" என்று வியப்பாக கேட்க,
"ஆமா பாஸ்" என்று ஆகாஷ் கூலாக சொல்ல, நிலவன் மூளையே குழம்பி வெளியே வந்துவிடும் போல் இருந்தது.
"டேய் என்னடா நடக்குதிங்க? யாருடா நீ?? எதுக்குடா இங்க வந்த? அவ என்னடான்னா உன்னை மாமான்னு கொஞ்சுற, நீ என்னடான்னா இது உன் மாமனார் வீடுன்னு சொல்ற? விஷ்வா தனுக்கு கல்யாணம், அத பத்தி பேச இங்க வந்திருக்கோம்னு சொல்றான். என்னடா நடக்குதிங்க… இங்க எது உண்மை எது பொய், எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு" என்று தலையை பிடித்துக் கொண்டான்.
ஆகாஷ் மெதுவாக அவன் தோளை தொட்டு, "எல்லாமே உண்மைதான் பாஸ். இது என் மாமனார் வீடு. அது உண்மை தான் ஏன்னா தனுவோட பெரியப்பா பொண்ணு அஞ்சலி தான் என்னோட வைஃப். சோ, டெக்னிகலி இது என் மாமனார் வீடு. அப்புறம் தனு என்ன மாமான்னு சொல்றது. அக்கா புருஷனை மாமான்னு தான பாஸ் சொல்லுவாங்க, அப்புறம் இந்த கல்யாண மேட்டர். இங்க எல்லாரும் வந்திருக்கிறது உங்களுக்கு தனுவை பொண்ணு கேட்டு தான் பாஸ்" என்று சொல்ல நிலவனுக்கு தலையில் ஐஸ்கிரீம் மழை பெய்தது போல் அப்படி ஒரு சந்தோஷம்.
"நீங்க இப்ப என்ன சொன்னீங்க... எனக்கும் தனுவுக்கும் கல்யாணம் பேசவா எல்லாரும் வந்திருக்காங்க? தனு இதுக்கு ஒத்துகிட்டாளா?" என்று நம்பாமல் கேட்க,
'ஆமா பாஸ் அவ உங்களை தான் மனசார விரும்புறா, இந்த விஷயம் எனக்கு கொஞ்ச நாள் முந்தி தான் தெரிஞ்சுது. என்னோட ப்ரண்ட் ஒருத்தன் தனுவ புடிச்சு போய். என்கிட்ட வந்து கேட்டான், நானும் தனுகிட்ட கேட்டேன். ஆனா, அவ நான் இந்தியால ஒரு குரங்கை மனசார காதலிச்சிட்டேன். ஆனா, அந்த குரங்கு என்னை புரிஞ்சுக்காம ரொம்ப தப்பா பேசிடுச்சு, என்னால அத தாங்கிக்க முடியல, அதான் அது செவுல்ல ஓங்கி ஒன்னு வச்சுட்டு போடான்னு சொல்லிட்டு இங்க வந்துட்டேன். ஆனா, அவனை என்னால மறக்கவே முடியாது, இந்த பிறவியில் எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது அந்த குரங்கு கூட தான். இல்லன்னா எனக்கு கல்யாணமே இல்ல மாமா." சொல்லிடுச்சு.
னநான் கூட கேட்டேன்,"என்ன தனு இது சின்ன புள்ளை மாதிரி பேசிட்டு, சரி நீ சொல்றது நா ஒத்துக்கிறேனே வச்சிக்க, ஆனா, அந்த பையனும் இன்னமும் உன்னை நெனச்சிட்டு இருக்கணுமே? ஒருவேளை அந்த பையன் உன்ன மறந்து வேற கல்யாணம் பண்ணி இருந்தால் நீ என்ன பண்ணுவ?" என்றவனை பார்த்து சிரித்த தனு,
"என்னை தவிர அவனால இன்னொரு பொண்ண நெனச்சு கூட பாக்க முடியாது மாமா. அவன் அந்த அளவு என்ன உயிரா காதலிக்கிறான்" என்றவள் முகம் கர்வத்தில் மிளிர்ந்தது.
இவ்வளவு நேரம் ஆகாஷ் சொல்லியதை கேட்டுக் கொண்டிருந்த நிலவன் கண்கள் கலங்கி இருந்தது.
"அவ இந்தியா வந்தது, மிருதுக்காக மட்டுமில்ல நிலவன், உங்களை பாக்கவும் தான். ஆனா, நீங்க பேசுன வார்த்தை அவளை ரொம்ப காயப்படுத்திடுச்சு, அதான் நீங்க அவகிட்ட பலமுறை பேச வந்தும் அவ விலகி போய்ட்டா, ஒரு லெவலுக்கு மேல அவளால நீங்க கஷ்டப்படுறத பாக்க முடியல, அந்த நேரம் மிருது, ஷரவன் பிரச்சனை முடியாம அவ மனசுல இருக்குறத சொல்லவும் அவ விரும்பல, அப்கோர்ஸ் நீங்களும் அவங்க ரெண்டு பேர் லைஃப்ல நல்ல முடிவு கிடைக்காம உங்க கல்யாணம் பத்தி யோசிக்க மாட்டீங்க. அதான் அவங்க கல்யாணம் முடியும் வரை அவ வெயிட் பண்ணா, நானும் செல்வா மாமாகிட்டையும், மிருதுகிட்டையும் உங்க காதலை பத்தி சொன்னேன். மாமாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் போல. உடனே ஓகே சொல்லிட்டாரு. மிருது உங்க அம்மா லட்சுமி ஆன்ட்டி, பிரியா ஆன்ட்டி கிட்ட பேசினா, அவங்களுக்கு ஏற்கனவே தனுவ உங்களுக்கு கட்டிவைக்கனும்னு எண்ணம் இருக்கவும் அவங்களும் சம்மதிச்சிட்டாங்க, உங்களுக்கு ஒரு ஷாக் சர்ப்ரைஸ் கொடுக்க தனு செஞ்ச ஏற்பாடு தான் இந்த விஷயத்தை உங்க கிட்ட இருந்து மறச்சது. இன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் சிம்பிள நிச்சயம், அடுத்த ஒரு மாசத்தில் கல்யாணம்" என்று ஆகாஷ் சொல்லி முடிக்கும் முன் நிலவன் பறந்திருந்தான் தன்னவளை தேடி.
தனு அறைக்கு சென்ற நிலவன் அவளை பின்புறமாக இடையோடு இறுக்கி அணைத்தான்.
"சாரி டி... ரொம்ப சாரி… உன்ன ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன், ரொம்ப சாரி டி" என்று மனதில் இருந்து சொல்ல, தனு திரும்பி, அவனை இறுக்கி அணைத்தாள்.
"ஐ மிஸ் யூ நிலா...மிஸ் யூ வெரி பேட்லி" என்றவள் நிமிர்ந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு, மீண்டும், "ஐ லவ் யூ நிலா… ஐ லவ் யூ பாட்டம் ஆப் மை ஹார்ட் நிலா " என்றவள் இன்னும் இன்னும் அவனை தன்னோடு இறுக்கி கொண்டாள்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு
ஷரவன், மிருதுளா பிரச்சனையின் போது தன் தந்தையின் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைக்காக வெளிநாடு சென்ற பரத் ஐந்து வருடம் கழித்து போன வருஷம் தான் இந்தியா திரும்பினான்.
சாருக்கு லவ் எதுவும் செட்டகாமல் போக, வேறு வழி இல்லாமல் வீட்டில் பார்த்த அவன் மாமன் மகள் ஷாலினியை திருமணம் செய்ய ஓகே சொல்ல, இன்று அவனுக்கு தான் திருமணம். அந்த கல்யாண மண்டபம் விளக்கு வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்தது.
"டேய் பிரேம், இந்தம்மா ரஷ்மி இங்க வந்து பாருங்க. உங்க பையன் எப்ப பாரு என் பொண்ணு பின்னாடியே சுத்திடு இருக்கான். இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன். என் பொண்ணை இவன் கிட்ட இருந்து காப்பாத்துறதே எனக்கு ஓவர் டைம் வேலையா போச்சு. எவ்வளவு அழகாக பொண்ணுங்க கல்யாணத்துக்கு வந்திருக்காங்க நிம்மதியா சைட் கூட அடிக்க முடியல" என்று விஷ்வா புலம்ப,
"உனக்கு பின்னாடி ஒரு சூப்பர் ஃபிகர் இருக்கு, உனக்கு ஓகேவன்னு பாரு மச்சி" என்று பிரேம் சொல்ல,
" எங்க? எங்க? எங்க அந்த ஃபிகர்" என்று விஷ்வா ஆர்வமாக திரும்ப அங்கு பத்திரகாளியாக நின்றிருந்தாள் சிந்து. .
விஷ்வா தோளில் இருந்து இறங்கிய அவன் மகள் சிவிகா, பிரேம் மகன் தருண் கையை பிடித்து, "வா தருண் நம்ம போய் விளையாடலாம். அப்பாக்கு அம்மா கையில நல்ல அடி இருக்கு" என்றுவிட்டு செல்ல,
பிரேம், "குழந்தைங்க வர உன் லட்சணம் தெரிஞ்சிருக்கு, த்த்து..." என்று காறித்துப்பியவன், "சிந்து யூ ஸ்டார்ட்" என்றவன் ரஷ்மியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து செல்ல, அடுத்த நொடி விஷ்வா கன்னம் வீங்கி இருந்தது.
இங்கு அறைக்குள் நிறைமாத வயிறுடன் புடவை கட்ட முடியாமல் தவித்த தன் மனைவிக்கு அழகாக புடவை கட்டி விட்டுக் கொண்டிருந்தான் நிலவன்.
"சூப்பர்ங்க... என்ன அழகா புடவை கட்டி இருக்கீங்க! செம்ம போங்க" என்று தனு புருஷனை மெச்சிக்கொள்ள, தன் உயிரை சுமந்து இரு உயிராய் அழகு பதுமை போல் இருந்த மனைவியின் தாய்மையின் அழகை ரசித்து பார்த்தான் நிலவன்.
"இவ்வளவு அழகா புடவை கட்டி விட்டதுக்கு கன்னத்துல ஏதாவது தந்தா நானும் சந்தோஷப்படுவேன்" என்றவனை அருகில் அழைத்த தனு, முத்தம் கொடுப்பது போல் அவன் அருகில் சென்று, அவன் கன்னத்தை கடித்து விட. 'ஸ்ஸ்ஆஆ' என்று கத்தியவன், அவனை கடித்த அவள் வாயை தன் வாயை கொண்டு மூடினான்.
மிருதுளா திரு திருவென முழித்துக் கொண்டிருக்க, முக்தா தன் அம்மாவையும், அப்பாவையும் முறைத்துக் கொண்டிருந்தாள்.
"ஏன்ப்பா அம்மாக்கு தான் புத்தி இல்ல. உனக்கு என்ன ஆச்சு? நீயும் இப்படி பண்ணா என்ன அர்த்தம்?" என்று தன் பிஞ்சு விரல்களை நீட்டி முக்தா மிரட்ட, ஷரவன் திரும்பி மிருதுளாவை பார்த்தவன்,
'எல்லாம் உன்னால தான்டி. இதெல்லாம் எனக்கு தேவையா' என்று கண்ணாலேயே அவளை முறைக்க, மிருதுளா முகத்தை பாவமாக வைத்துக் கொண்டாள்.
"ஏம்மா நேத்து கிளம்பும்போதே கயல் பாட்டியும், லட்சுமி பாட்டியும் எக்காரணம் கொண்டும் உன்னை ஐஸ்கிரீம், சாக்லேட் சாப்பிட கூடாது. அது குட்டி பாப்பாக்கு ஒத்துக்காதுன்னு சொல்லி தான அனுப்புனாங்க... அப்படி இருந்தும் நீ திருட்டுத்தனமா அப்பாவை ஐஸ்கிரீம் எடுத்து வர சொல்லியிருக்க… நீங்களும் கொண்டு வந்து தந்திருக்கீங்க" என்று இருவரையும் முறைத்தவள், மிருதுளா கையில் தன் அக்காவின் பேச்சைக்கேட்டு தன் பொக்கை வாயை திறந்து சிரித்துக் கொண்டிருந்த, பிறந்து ஆறுமாதமே ஆன ஷரவன், மிருதுளாவின் குட்டி இளவரசன் வினய்யை பார்த்தாள்.
"இங்க பாரு தம்பி பாப்பா, இனி அம்மா ஐஸ்கிரீம், சாக்லேட்ன்னு எதாவது சாப்பிட்ட. நீ அக்கா கிட்ட சொல்லு அக்கா பாட்டிங்க கிட்ட சொல்லி அம்மாக்கும், அப்பாக்கும் அடி வாங்கித்தரேன்" என்றவள் தன் தம்பியின் பட்டு கன்னத்தில் மெதுவாக முத்தமிட்டு விட்டு செல்ல, ஷரவன், மிருதுளாவுக்கு தன் மகளின் பாசத்தை நினைத்து மனம் நிறைந்து விட்டது.
அதுவும் மிருதுளா தன் மகள் தன்னவனைப் போலவே அனைவரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதை நினைத்து அவள் உள்ளம் மகிழ்ந்தது.
குறித்த நேரத்தில் உறவும், நட்பும் சூழ்ந்திருக்க, பரத், ஷாலினி திருமணம் இனிதே முடிந்தது. இனி அனைவர் வாழ்விலும் சந்தோஷம் மட்டுமே நிலைத்து இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் நாமும் செல்வோம்.
..........முற்றும்..........