Posts

Showing posts from February, 2024

விழி வழி காதல் நுழைந்ததடி. 33

  விழி 33 அதீஷன் காட்டிய புகைப்படங்களைப் பார்த்து எச்சில் கூட்டி விழுங்கிய தன்வி, "இ..இது உங்களுக்கு எப்படிக் கிடைச்சிது…" என்று இழுத்தவள், "அப்..அப்ப என்னை நீங்க ஸ்பை பண்றீங்க இல்ல" என்று கோவமாகக் கேட்டாள். "என்னை வேற‌ என்னடி செய்யச் சொல்லற? ஒரு வாரமா நீ என்கிட்டப் பேசல… ஆனா, நாள் முழுக்கவும் ஒன்னு ஃபோன் பேசிட்டு இருக்க, இல்ல எங்கயாவது வெறிச்சுப் பார்த்தபடி தீவிர யோசனையில் இருக்க… நான் உன் புருஷன்டி, உள்ளும் புறமும் உன்னை முழுசாய்ப் புரிஞ்சி வச்சிருக்க எனக்கு, அன்னைக்கு நீ சொன்ன உன்கிட்டப் பேச மாட்டேன்க்கு அர்த்தம் புரியாதுன்னு நினைக்கறயா?" என்றான் வலியோடு. அவனின் கேள்வியில் அவளின் கண்கள் கலங்கிவிட, "எ..எனக்கு வேற என்ன பண்றதுன்னு தெரியல" என்றாள் அழுகையோடு. "சரி, நான் கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லு, தர்ஷன் வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை… அவன் அப்படி இருக்கும் போது, நீ மட்டும் என்னோட சந்தோஷமாய் இருக்க உனக்குக் கஷ்டமா இருக்கு… சோ, அவன் வாழ்க்கை சரியாகும் வரை என்னைப் பிரிஞ்சு இருக்க நினைக்கிற, ஓகே… ஒருவேளை, தர்ஷன் காலம் முழுக்க இப்படியே இருந்து...

விழி வழி காதல் நுழைந்ததடி 32

  விழி 32 அந்த நொடிவரை சிரித்துக் கொண்டிருந்த ஆதர்ஷனின் முகம் சிரிப்பைத் தொலைத்து, வறண்ட பாலை நிலம் போல் மாறிவிட்டதைக் கவனித்தவள், திரும்பி தன்னவனை கேள்வியாகப் பார்த்தாள். அவன் ஏதோ சொல்ல வரும் முன், "அவன் என்னை வேணாம்னு சொல்லிட்டுப் போயிட்டான் தன்வி" என்றவன் குரலில் அத்தனை வலி… அது காதல் தோற்றதால் வந்த வலி அல்ல, நண்பன் என்று நினைத்தவன் அந்த நம்பிக்கையை உடைத்ததால் வந்த வலி. அதைக் கேட்ட பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்த தன்வி, "என்..என்னாச்சு?" என்று கேட்டாள் மெல்லிய குரலில். "அவன் அப்பாவுக்கு ஆஸ்திரேலியால பெரிய பிஸினஸ் இருக்கு… அதை இவனுக்குக் கொடுக்கணும்னா அவன் ஆதர்ஷனை விட்டுடனும்னு அவன் ஃபேமிலில சொல்லிட்டாங்க… முதல்ல முடியாதுன்னு ரொம்ப ஸ்ட்ராங்கா தான் இருந்தான். ஆனால், போகப்போக உன் வீட்லயும் ப்ராப்ளம், என் ஃபேமிலிலயும் ப்ராப்ளம்… நம்ம ரிலேசன்ஷிப்க்கு எதிர்காலம் இல்ல, நம்ம ரெண்டு பேருக்குமே நம்ம ஃபேமிலி தான் ஃபர்ஸ்ட் பிரையாரிட்டி… சோ, அவங்களுக்காக வாழ்வோம்னு சொல்லிட்டு ஆஸ்திரேலியா போயிட்டான்…" என்ற அதீஷனை அதிர்ந்து பார்த்தவள், "இதெல்லாம் எப்ப...

விழி வழி காதல் நுழைந்ததடி 31

 விழி 31 ஆதர்ஷன் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தன்வியின் பார்வையோ, அவள் கணவன் மீதே நங்கூரமிட்டது போல் நிலைத்திருந்தது. அவளின் பார்வையின் பொருளை உணர்ந்த அதீஷன், தலையை மெதுவாக மேலும் கீழும் ஆட்டி, அவனுக்கு அவளின் மேல் இருக்கும் காதலை உறுதிப்படுத்தினான். "அ…அப்ப, நீங்க என்னை மேரேஜ்க்கு முன்ன இருந்தே லவ் பண்றீங்களா?" என்று கேட்டாள் கண்கள் மின்ன. "எனக்குத் தெரியலடி… எனக்கு உன்னைச் சின்ன வயசில் இருந்தே ரொம்பப் பிடிக்கும். நீயும் அப்படிதான் இருந்த‌. என்னை உனக்கு ரொம்பப் பிடிக்கும். எப்பவும் என்னோட தான் இருப்ப, நாங்க வீட்டைவிட்டு வரும்போது என் கையிலிருந்த உன்னைத் தாத்தா வாங்கும்போது எனக்கு அவ்ளோ கோவம் வந்துச்சு… இவ என்னோட தன்வி பாப்பா, இவ என் கூடத்தான் இருப்பான்னு தாத்தாகிட்டச் சண்டை கூடப் போட்டேன் தெரியுமா? ஆனா, கடைசில உன்னை என்னோட கூட்டிட்டு வரமுடியல… நான் கிளம்பும்போது நீ கத்திக் கத்தி அழுதது இன்னும் என் கண்ணு முன்னாடி நிக்குதுடி…" என்றவனின் குரலில் அன்றைய நாளின் வலி அப்பட்டமாகத் தெரிந்தது. "உன்னைவிட்டு வந்த நாளிலிருந்து எனக்கு எப்பவும் உன்னோட நினைப்புதான்… ந...

விழி வழி காதல் நுழைந்ததடி 30

  விழி 30 இந்தியா கிளம்புவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டிருந்தான் அதீஷன். அன்றைய மறுநாள் அவர்களுக்குப் பயணம். அதீஷன் நொடிக்கொரு முறை தன் காதில் ரத்தம் வழிகிறதா என்று தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான். "டேய், அங்க என்னடா பண்ணிட்டு இருக்க? நான் இங்க பேசிட்டு இருக்கேன் இல்ல" என்று கத்திய ஆதர்ஷனை சலிப்பாகப் பார்த்த அதீஷன்,  "டேய், ஒரே விஷயத்தை எத்தனை தடவைதான்டா சொல்லிட்டே இருப்ப… ப்ளீஸ்டா முடியல" என்றான்.  "இப்ப என்ன? எந்தக் காரணம் கொண்டும் தன்விய கல்யாணத்துக்கு ஃபோர்ஸ் பண்ணக்கூடாது, அவளை எப்பவும் ஹார்ஷாப் பேசக்கூடாது. அவ மனசு கஷ்டப்படுற மாதிரி எதுவும் செய்யக்கூடாது. அவளுக்கு சாக்லேட் எதுவும் வாங்கித்தரக் கூடாது… அவளுக்கு சாக்லேட் அலர்ஜி, சில சாக்லேட் தான் அவ சாப்பிடலாம், சோ அதைக் கவனத்தில் வச்சிக்கணும், லாஸ்ட்டா  தாத்தாகிட்ட மரியாதையா நடந்துக்கனும், அவளோதானே…" என்று வேகமாகச் சொன்னவன், "இதை நீ இதுவரைக்கும் ஒரு நூறு முறையாவது சொல்லி இருப்படா" என்றான் பாவமாக. "ம்ம்ம் நூறு இல்ல… நான் ஆயிரம் முறை சொன்னாலும் நீ கேட்டுதான் ஆகணும். ப...

விழி வழி காதல் நுழைந்ததடி 29

  விழி 29 வெகு நாட்கள் கழித்து ஆதர்ஷனைப் பார்த்த அமிர்தா மகனை ஆரத்தழுவிக் கொள்ள, அவரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். "எப்படி மா இருக்கீங்க?" என்ற மகனின் கன்னத்தை வழித்து முத்தமிட்டவர், "எனக்கென்னடா… நான் நல்லா இருக்கேன்‌. பிஸினஸ் எல்லாம் அதீயும், நீயும் பார்த்துக்குறீங்க… நான் ஜாலியா என்னோட ரிட்டயர்மென்ட் பீரியடை என்னோட பேரன், பேத்தி கூட என்ஜாய் பண்ண முடியாம, தனியா தனிமையில் இனிமை கண்டுட்டு இருக்கேன்." என்றார் மறைமுகமாக, மகன்களிடம் தன் ஆசையைக் கோடிட்டு காட்டியபடி. "ம்மா… ஆரம்பிச்சிட்டீங்களா உங்க புராணத்தை? அவன் இப்ப தான் வந்திருக்கான்மா… ப்ளீஸ், போய் முதல்ல அவனுக்கும் ஆலன்கும் குடிக்க ஏதாவது கொண்டு வாங்க" என்ற அதீயை முறைத்தபடியே அங்கிருந்து சென்றார். அவர் சென்றதும், "ஏன்டா, அம்மாவை இப்படி ஹார்ஷாப் பேசற? அவங்க ஏஜ்ல பேரன், பேத்தி வேணும்னு நினைக்குறது காமன் தானடா…" என்றான் ஆதர்ஷன் தாய்க்கு ஆதரவாக. "ஓஓஓ! அம்மாக்கு சார் சப்போர்ட்டு… சரிப்பா, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல… நீ கல்யாணம் பண்ணிட்டு பேரன் நாலு, பேத்தி நாலு பெத்துக்குடு, நான் வேணாம்னு சொல்ல...