நிஜம் 36
நிஜம் 36 த்வனி விக்ரமையே பார்த்திருக்க, அவன் குழந்தையை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். "நீ மயக்கம் போட்டு விழுந்ததை பார்த்து, ஒரு நிமிடம் எல்லாரும் பயந்துட்டாங்க, அதுலயும் நம்ம வருண்… சொல்லவே வேணாம். பாவம் மறுபடியும் ஹாஸ்பிடல்லயே பொழப்பு போய்டுமான்னு பொலம்பி தள்ளிட்டான்." என்று லேசாக சிரித்தவள், "அவனும் மத்தவங்களுக்கு பாவம் தான். ஒன்னு நீ ஹாஸ்பிடல்ல இருக்க, இல்ல நான் இருக்கேன். இல்லாட்டி ரெண்டு பேரும் வந்து படுத்துக்குறோம். அவங்க நம்மளுக்கு தேடுவு காக்க வேண்டி இருக்கு… நம்ம பாதி கதை ஹாஸ்பிடல்ல தான் நடந்திருக்கு" என்று குறும்பாக சொன்னவளை நிமிர்ந்து பார்த்த விக்ரம் முகத்தில் லேசாக சிரிப்பு எட்டிப் பார்க்க, த்வனி அதிசயமாக அவனை பார்த்து, "ஏய் உனக்கு சிரிக்க கூட தெரியுமா? நான் இதுவரை நீ இப்டி சிரிச்சு பாத்ததே இல்ல" என்று கிண்டல் செய்ய, விக்ரம் நிமிர்ந்து அவள் விழிகளை பார்த்து, மெதுவாக "தேங்க்ஸ்" என்று சொல்ல, த்வனி திரும்பி அவனை பார்த்து, "அப்ப நானும் உனக்கு தேங்க்ஸ் சொல்லனுமா?" என்றாள். "நீ எதுக்கு எனக்கு தேங்க்ஸ் சொல்லணும்?...