Posts

Showing posts from October, 2021

நிஜம் 15

Image
இஷ்டமில்லா நிஜம் நீ  பகுதி 15 விக்ரம், லயாவின் பழக்கம் காதலாக மலரும் தருணத்தை நெருங்கிக் கொண்டிருக்க, காலமும் அதற்குத் துணை போவதுபோல் த்வனி கொஞ்ச நாள் லயாவை விட்டு விலக இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. "த்வனி எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டியா?" என்று கேட்டபடியே வந்த லயாவின் தாய் பிரியா கையில் இருந்த ‌பெரிய டிபன் பாக்ஸை பார்த்த த்வனி, "ம்மா என்னம்மா இது? நா என்ன வேற நாட்டுக்கப் போறேன், இங்க இருக்கச் சென்னைக்குத் தானா போறேன். அதுக்கு எதுக்கு இவ்ளோ பேக் பண்ணி இருக்கீங்க?" "என்னடி இங்க இருக்க சென்னை... மொத்தம் பத்துமணி நேரம் டிராவல் பண்ணும். வழியில உனக்குப் பசிக்குமில்ல. நீ நடுவுல எங்கயும் இறங்கி வெளிய ஹோட்டல்ல சாப்ட வேணாம்னு தான் கொஞ்சமா பேக் பண்ணி இருக்கேன். ஒழுங்கா எல்லாத்தையும் சாப்டு, வழியில எங்கயும் இறங்க கூடாது புரியுத" என்ற பிரியா டிபன் பாக்ஸை த்வனி பேக்கில் வைக்க, சங்கர் அவர் பங்கிற்குப் பிஸ்கட், குகீஸ், சாக்லேட் என்று வாங்கி வந்திருந்தார். த்வனி சென்னைக்குக் கிளம்பி தயாராக நிற்க, லயா அவளைக் கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். "ஏய் லயா குட்டி, என்ன...

நிஜம் 14

Image
இஷ்டமில்லா நிஜம் நீ 14 த்வனி லயாவை தீயாக முறைத்தபடி உட்கார்ந்திருக்க, லயா அதைக் கவனிக்காமல் பேசிக்கொண்டே இருந்தாள். த்வனி பொறுத்து பொறுத்து பார்த்து, 'பொறுத்தது போது பொங்கி எழுடா‌ மகனே மனோகரா' என்பது போல், "ஸ்டாப் இட் லயா. தட்ஸ் எனாஃப்…" என்று கத்தியவள் லயாவை தீயாக முறைத்து, "ஏன்டி நானும் அப்ப புடிச்சி பாத்துட்டு இருக்கேன், சும்மா சும்மா தேவ் தேவ்னு என்னமோ ஜெபம் மாதிரி அந்தப் பன்னாட பேரயே திருப்பித் திருப்பிச் சொல்லிட்டு இருக்க…? எனக்குக் காதுல கம்பிய காச்சு குத்துற மாதிரி இருக்கு. தெரியமா தான் கேக்குறேன்? அதென்னடி 'தேவ்… தேவுஉஉஉன்னு... செல்லம் வேண்டி கெடக்கு அந்தப் பன்னிக்கு? காலேஜ்ல இருந்து வந்துல இருந்து அவனைப் பத்தியே பேசிட்டு" என்று வல்லென விழுந்தாள். "ஏன்டி இப்படி வல்லுனு விழுற? நா நடந்ததைத் தான சொன்னேன். என்ன நடந்துன்னு தெரியாம தான் அவரு சண்டைக்கு வந்துட்டாரு, என்கிட்ட வம்பு பண்ணும்போது உனக்குக் கோவம் வந்த மாதிரி தானே… அவர் ஃப்ரண்டை யாரோ அடிச்சிட்டாங்கன்னு அவருக்கும் கோவம் வந்திருக்கும்..." என்று ஆரம்பித்தவள் த்வனியின் அக்னி பார்வையில் க...

நிஜம் 13

Image
      இஷ்டமில்லா நிஜம்‌‌ நீ                  பகுதி 13 த்வனியும் லயாவும் தங்கள் வகுப்பை தேடிப்பிடித்து வந்து சேர்வதற்குள் அவர்களுக்கு நாக்குத் தள்ளிவிட்டது. "அய்யோ சாமி இதுக்கு மேல முடியாது. முதல் நாளே கண்ணு கட்டுது. இதுக்கு மேல ஆகாதுடா சாமி" என்று ஒரு வகுப்பை கட்டடித்துவிட்டு கேன்டீன் வந்த தோழிகள் இருவரும், பிஸ்கட்டை டீயில் குளிப்பாட்டி, சுத்தம் செய்து தங்கள் தொண்டைக்குள் இறக்கியபடி ஏதோ கதை பேசிக்கொண்டிருந்தனர். த்வனி தன் அருகில் யாரோ மிக நெருக்கமாக நிற்பது போல் உணர்ந்தவள்‌‌, நிமிர்ந்து பார்க்க. அங்கும் அவளை எரிப்பது போல் முறைத்து பார்த்தபடி நின்றிருந்தான் விக்ரம் தேவ். விக்ரம் பின்னால் த்வனியிடம் அடிவாங்கிய ரகு, "டேய் விக்ரம் இவதான்டா என்னை அடிச்சது" என்று த்வனியை கை காட்டினான். "ஏய் லயா! இங்க பாருடி பால்வாடி பாப்பா போய் ஆளைக் கூட்டிட்டு வந்திருக்கு. ஏன்டா சின்னப் பையா வீட்ல பெரியவாங்க யாரும் இல்லயா?" என்று கிண்டலடித்தவளை பார்த்து தீயாய் முறைத்தான் விக்ரம். "ஏன்டி? உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா? ஒரு ஆம்பளைய கை நீட்டி அடி...