நிஜம் 14






இஷ்டமில்லா நிஜம் நீ 14


த்வனி லயாவை தீயாக முறைத்தபடி உட்கார்ந்திருக்க, லயா அதைக் கவனிக்காமல் பேசிக்கொண்டே இருந்தாள்.


த்வனி பொறுத்து பொறுத்து பார்த்து, 'பொறுத்தது போது பொங்கி எழுடா‌ மகனே மனோகரா' என்பது போல், "ஸ்டாப் இட் லயா. தட்ஸ் எனாஃப்…" என்று கத்தியவள் லயாவை தீயாக முறைத்து, "ஏன்டி நானும் அப்ப புடிச்சி பாத்துட்டு இருக்கேன், சும்மா சும்மா தேவ் தேவ்னு என்னமோ ஜெபம் மாதிரி அந்தப் பன்னாட பேரயே திருப்பித் திருப்பிச் சொல்லிட்டு இருக்க…? எனக்குக் காதுல கம்பிய காச்சு குத்துற மாதிரி இருக்கு. தெரியமா தான் கேக்குறேன்? அதென்னடி 'தேவ்… தேவுஉஉஉன்னு... செல்லம் வேண்டி கெடக்கு அந்தப் பன்னிக்கு? காலேஜ்ல இருந்து வந்துல இருந்து அவனைப் பத்தியே பேசிட்டு" என்று வல்லென விழுந்தாள்.


"ஏன்டி இப்படி வல்லுனு விழுற? நா நடந்ததைத் தான சொன்னேன். என்ன நடந்துன்னு தெரியாம தான் அவரு சண்டைக்கு வந்துட்டாரு, என்கிட்ட வம்பு பண்ணும்போது உனக்குக் கோவம் வந்த மாதிரி தானே… அவர் ஃப்ரண்டை யாரோ அடிச்சிட்டாங்கன்னு அவருக்கும் கோவம் வந்திருக்கும்..." என்று ஆரம்பித்தவள் த்வனியின் அக்னி பார்வையில் கப்பென வாயை மூடிக்கொண்டாள்.


த்வனி லயா காதை பிடித்து வலிக்கும்படி திருகி, "என்ன சொன்ன நீ? இப்ப என்னடி சொன்ன?? அவனும் நானும் ஒன்னாடி? சொல்லுடி அவனும் நானும் ஒன்னா?''


"அய்யோ… நான் அப்டி சொல்லலபா. அவரும் அவர் ஃப்ரண்டுக்காகத் தான் வந்தாரு… மத்தபடி அவர் நல்ல டைப்னு சொல்ல வந்தேன்." என்றவளை த்வனி ஆழமாகப் பார்த்தாள்.


"பஸ்ட் இம்ப்ரஷன் இஸ் தீ பெஸ்ட் இம்ப்ரஷன் லயா. நா ஒருமுறை ஒருத்தர் இப்டி தான்னு முடிவு பண்ணிட்ட… அது எப்பவும் மாறாது. அது உனக்கே நல்லா தெரியும். என் மனசுல அவன் தப்புன்னு அழுத்தமா பதிஞ்சிடுச்சு. அது இந்த ஜென்மத்தில் மாறாது. என்ன எதுன்னு தெரிஞ்சிக்காம சண்டைக்கு வந்தானே அது முதல் தப்பு? சரி அதைக் கூட விடு, ப்ரண்டுக்காக வந்தன்னு நீ சொல்ற... ஆன, முதல் தடவை பாக்குற ஒரு பொண்ண, அவ தப்பே பண்ணி இருக்கட்டுமே! அதுக்குன்னு வாடி போடினு பேசுவானா? அவனை எல்லாம் என்னால நல்லபையன் லிஸ்ட் சேக்க முடியாதுடி. நீ என்ன சொன்னாலும் அவனைப் பத்தின என்னோட எண்ணம் மாறாது. ஐ ஜஸ்ட் ஹேட் ஹிம். ஐ ஹேட் ஹிம் பிரேம் தி கோர். மறுபடியும் அவன் முகத்தைப் பாக்க கூட எனக்கு இஷ்டம் இல்ல." என்று லயாவை கூர்மையாகப் பார்த்தவள், "ஒன் மோர் திங் லயா... இதுவே நீ அவனைப் பாத்தி பேசுறது, இல்ல... நெனக்குறது கூட லாஸ்ட் டைம்ம இருக்கட்டும். அதுதான் உனக்கு…" என்று சற்று பொருத்து, "நமக்கு நல்லது.‌ ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்" என்றுவிட்டு த்வனி தன் வேலையைப் பார்க்க,


லயா த்வனியை நிமிர்ந்து பார்த்தவள், 'ஐம் சாரிடி. இதுவரை நீ சொன்ன எதையும் நான் மீறி நடந்தது இல்லை. நீ எனக்கு எது சொன்னாலும், எது செஞ்சாலும் அது என் நல்லதுக்குத் தான் எனக்கு நல்லா தெரியும்.


"ஆன…"


" ஆன…" ஏன்னு தெரியல த்வனி. முதல் முறைய தேவ் விஷயத்தில் என் மனசுல சின்னத் தடுமாற்றம். என் மனசு என்னை அறியாம அவனைகிட்ட போகுது த்வனி. வெறும் ஒருமுறை அதுவும் சண்டையில பாத்த அவன் மேல எனக்கு ஏன் இப்டி ஒரு சாப்ட்கார்னர் வருதுனு தெரியல… பட் ஐ லைக் ஹிம். நானா அவனைப் போய்ப் பாக்க மாட்டேன். ஆன, அவன் என் பக்கத்துல வந்த கண்டிப்பா என்னால நீ சொன்னதைச் செய்ய முடியாது. ஐம் சாரிடி.' என்று மனதில் நினைத்தவள், மெதுவாக அங்கிருந்து எழுந்து சென்றாள்.


லயாவை விக்ரம் பற்றிப் பேசாதே, நினைக்காதே என்று சொன்ன த்வனிக்கு அப்போது தெரியவில்லை, லயாவோடு சேர்ந்து த்வனியும் இனி வரப்போகும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், நொடியும் அவள் வாழ்வின் கடைசி நிமிடம் வரை அவன் ஒருவனைப் பற்றிய சிந்தனையில் தான் இருக்கப்போகிறாள் என்று…


த்வனி, லயா காலேஜ் சேர்ந்து ஒரு வாரம் ஓடி இருந்தது. இந்த ஒரு வாரத்தில் விக்ரமும் லயாவும் நன்றாகப் பேசும் அளவு நெருங்கி இருந்தனர். த்வனியும், லயாவும் வேறு வேறு பாடப்பிரிவு என்பது லயாவுக்கு வசதியாகப் போய்விட, அவளைத் தேடி வரும் விக்ரமை புறக்கணிக்க மனமின்றி, அவளுக்கும் அவனுடன் பழகுவது பிடித்திருக்க, விக்ரமுடன் பேசி பழக ஆரம்பித்தாள்.


அன்று வருணும், விக்ரமும் பேசிக்கொண்டிருக்க, அங்கு வந்தனர் ரகுவும் இன்னும் இரண்டு நண்பர்களும்.


"என்ன ரகு ஒரு வாரமா காலேஜ் பக்கம் ஆளயே காணும்? என்ன அந்தப் பஜாரி அடிச்ச அடியில பல்லு எதுவும் கழண்டு போச்ச? பல்செட் கட்ட ஹாஸ்பிடல் அட்மிட் ஆகிட்டியா?" என்று வருண் கிண்டலடிக்க, அவனை முறைத்தான் ரகு.


"ஏன்டா கேக்க மாட்ட? இல்ல ஏன் கேக்க மாட்ட… உங்கள ஃபரண்டுன்னு நெனச்சு வந்ததுக்கு அந்தப் பொம்பள ஜெட்லி கிட்ட மாட்டி, என் மண்ட முடி போனது தான் மிச்சம். போங்கடா..‌. பேசாம நா பொண்ண பொறந்து அந்த ராட்சசி ஃப்ரண்டா இருந்திருக்கலாம். அந்தக் குட்டி பொண்ணுக்கு சப்போட்ட விக்க அவ எப்டி பட்டுன்னு கெளம்பி வந்தா… நீங்களும் இருக்கீங்களே… அவகிட்ட கத்துங்குங்கடா நட்புன்ன என்னன்னு" என்று அலுத்துக் கொண்டவன், கழுத்தை நெறிப்பது போல் பிடித்தான் விக்ரம்.


"ஏன்டா உனக்கு எத்தனை முறை சொல்லி இருக்கேன். பொண்ணுங்கிட்ட பொறுக்கி தனமா சேட்ட பண்ணாத… அப்டி பண்ணிட்டு எங்ககிட்ட வந்து நிக்கதன்னு… செய்ற தப்ப எல்லாம் நீ செஞ்சிட்டு இப்ப குத்துது கொடயுதுன்ன நாங்க என்ன செய்ய? நியாயமா நான் தான் உன்ன தூக்கிப்போட்டு மிதிக்கணும். என்ன நடந்துச்சின்னு சொல்லாம என்னைக் கூட்டிப்போய், அங்க தேவையில்லாம சீன் ஆகிடுச்சு" என்று விக்ரம் ரகு முனைந்தான்.


"நா என்னடா பண்ண, அந்தப் பொண்ணு குட்டிய, பாக்க அப்டியே பார்பி டால் மாதிரி இருந்துச்சு அதான் சும்மா" என்றவன் கன்னத்தில் விக்ரம் கை ரேகை பதிந்தது.


ரகு தன் கன்னத்தைக் கையில் பிடித்தபடி, "ஓய் ப்ரே? எதுக்கு இது? ஓய் மீ மேன்?" என்று திருதிருவென முழிக்க…


"டேய் ஒரு அடியோட போச்சுன்னு சந்தோஷப்படு... இல்லாட்டி நீ அந்தப் பொண்ணு பத்தி பேசுனதுக்கு இன்னேரம் உன் பல்லு மொத்தம் வெளிய கொட்டி இருக்கும். இனி அந்தப் பொண்ணு பத்தி பேசாத" என்ற வருண் விக்ரமை பார்த்து கண்ணடிக்க… ரகு திரும்பி விக்ரமை பார்க்க, விக்ரம் முகத்தில் லவ் பல்ப் பளிச்சென்று எரிந்தது.


"இது எப்படா நடந்துச்சு…? ஒரு வாரம் தானடா நான் காலேஜ் வர்ல, என்னடா...? டேய் இன்னும் யார் யார் யாரு கூட ரூட் போட்டு சுத்திட்டு இருக்கீங்கன்னு சொல்லிடுங்கடா… நா பாத்து சூதானமா இருந்துக்றேன். முதல் அந்த ஜெட்லிக்கு யாராவது ரூட் விடுறத இருந்த சொல்லிடுங்க… இன்னும் ஏழு ஜென்மத்துக்கும் உங்க ஒட்டும் வேணாம் உறவும் வேணாம்னு உங்களைத் தள்ளி வச்சிடுறேன்" என்று ரகு நொந்து கொண்டான்.


"டேய் என்னடா இப்படி ஆகிட்ட…? ஏன் அந்தப் பொண்ண நெனச்சு இப்டி நடுங்குற? அன்னைக்கு என்னமோ அவளை விடமாட்டேன், என்னை அடித்தவளை என் காலில் வந்து விழவைக்கும் வரை ஓயாமாட்டான் இந்தக் கோட்டைச் சாமி, இது என் தாய் மீது சத்தியம். அப்டி இப்டினு செந்தமிழ்ல டைலாக் எல்லாம் விட்ட… இப்ப இப்டி பம்முற, என்னடா?" என்று வருண் கேட்டான்‌.


"அடப்போடா டேய்… நானும் அவள எதாவது பண்ணி பழிக்குப்பழி வாங்கணும் தான் ஒரு வாரம் காலேஜ் கட் பண்ணிட்டு அவளைப் பத்தி விசாரிச்சுப் பாத்தேன். அதுக்கு அப்பறம் இனி அவ இருக்கத் திசை பக்கம் கூட நிக்கக் கூடாதுன்னு ஓடியாந்துட்டேன்." என்றவனை வருண் புரியாமல் பார்த்தான்.


"என்னடா அப்படி என்ன அந்தப் பொண்ணு பத்தி தெரிஞ்சுக்கிட்ட? என்ன அந்தப் பொண்ணுக்குப் பாட்ஷா பட ரஜினி மாதிரி எதும் ஃப்ளாஷ்பேக் இருக்க என்ன? இல்ல எதும் ரவுடி, டான் இது மாதிரி எதுவும் ஆள் சப்போட் இருக்க?" என்றவனைப் பாவமாகப் பார்த்த ரகு,


"சப்போட்டு... அவளுக்கு... ஏன்டா நீ வேற… அவளுக்கு எந்த டான்னும் சப்போட் இல்ல… அவளே ஒரு சோலோ டான்டா" என்று குலுக்கி குலுங்கி அழுதவனைப் பார்த்து நண்பர்கள் ஒரு வரை ஒருவர் மாறிமாறிப் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.


"டேய் என்னடா? என்னடா ஆச்சு?"


"டேய் அவ பேரு த்வனியாம்டா… பேரு மட்டும் தான்டா சாஃப்ட்டு... ஆன, அவ… நான் நெனச்ச மாதிரி அவளும், அந்தப் பார்பி டால்" என்று ஆரம்பித்துப் பின் விக்ரமை பார்த்து வாயை அடக்கிக் கொண்டவன், "அவளும் அவ ஃப்ரண்டும் ஃபர்ஸ்ட் இயர் இல்லடா, இங்க செகண்ட் இயர்ல தான் ஜாயின் பண்ணி இருகாங்க," என்ற ரகு மேலே பார்த்தான்.


 "என்னடா பிளாஷ்பேக்கா??" என்று கேட்க ரகு 'ஆமாம்' என்று மண்டையை ஆட்ட, அவன் தலையில் நங்கெனக் கொட்டு வைத்த வருண், "த்த்து நாயே… உன் மொகரக் கட்டைக்கு அது ஒன்னு தான் கேடு? ஒழுங்க விஷயத்தைச் சொல்லுடா பரதேசி" என்று அவன் இடுப்பிலேயே ஒரு உதை விட்டான்.


"டேய் அவ இதுக்கு முன்ன படிச்ச காலேஜ்ல நடந்த அடிதடியில பெரிய பிரச்சினை ஆகி, அது போலீஸ் கேஸ் ஆகி, இவளை காலேஜ் விட்டு தூக்கிட்டாங்கடா… அதான் நம்ம காலேஜ்ல செகண்ட் இயர் ஜாயின் பண்ணி இருக்க..."


"ஏன்டா நடந்த அடிதடியில இவளுக்கும் எதும் சம்பந்தம் இருந்துதா என்ன? என்று விக்ரம் கேட்டான்.


"டேய்…!! அடிதடி பண்ணி அடிச்சதே இவதான்டா, அதுவும் யாரா அடிச்சிருக்கத் தெரியுமா… அந்தக் காலேஜ் கெஸ்ட் லெக்சரர்ரா அடிச்சிருக்கடா… அதுல இவமேல போலீஸ் கேஸ் ஆகிட்டுச்சு… காலேஜ்ல இவளை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க, அதுக்கு அப்பறம் தான் இங்க வந்திருக்க" என்று சொல்லி முடிக்க அங்கு யார் முகத்திலும் ஈயாடவில்லை.


"என்னடா சொல்ற? நெஜமாவ!!?" என்று அனைவரும் வாய்பிளந்தனர்.


"ஆமாடா… ஆன, சொல்லப்போன உண்மையில அவமேல தப்பு இல்லதான்… அந்த லெக்சரர் நெறய பொண்ணுங்ககிட்ட சில்மிஷம் பண்ணி இருக்கான். அவன் மேல ஏற்கனவே நெறய கேர்ள் ஸ்டூடண்ட்ஸ் கம்பிளைன் பண்ணி இருக்காங்க, ஆன அவன் காலேஜ் கரஸ்பாண்டன்ட் சொந்தகாரன்னு எந்த ஆக்ஷனும் எடுக்காம இருந்திருக்காங்க…


அந்த நாய்க்கு அன்னைக்கு கெட்ட நேரம் போல, அது ஒரு பொண்ணுகிட்ட ஏதோ மிஸ்பிஹேவ் பண்ண, அத அவ ஃப்ரண்ட்… அதான் இவன் ஆளு லயா பாத்திடுட்டு போய், அதை இந்த டான் த்வனிகிட்ட சொல்லி ஓஓஓன்னு அழுது வைக்க… இவ அந்த லெக்சரர்ர காலேஜ்லயே ஓட ஓட வெரட்டி வெரட்டி ஆடிச்சிருக்க… 


என்னதான் தப்பு அந்த நாய் மேல இருந்தாலும் அது பங்களா வீட்டு பணக்கார நாயாச்சே… சோ இவளை காலேஜ் விட்டு தூக்கிட்டாங்க, இவளை விட்டு பிரிஞ்சி இருக்கமாட்டேன்னு அந்தப் பொண்ணு லயாவும் இவ கூடவே இந்தக் காலேஜ் வந்துடுச்சு… யாரோ ஒரு பொண்ணுக்காக வாத்தியாரையே தூக்கிப்போட்டு மிதிச்சிருக்க, அப்படி இருக்க, அந்தப் பொண்ணு லயான்னா இவளுக்கு உயிராம்… அவளுக்காக இவ என்ன வேணும்னாலும் செய்வாளாம், அதுமேல கை வைக்கப் போனதுக்கு அவ என்ன ஒரு அடியோட விட்டதே என்ற அப்பன், ஆத்தா செஞ்ச புண்ணியம் தான். இதுக்கு மேல அவ வம்புக்கு போக நான் ரெடி இல்லப்பா" என்று ரகு மேலே பார்த்து ஒரு கும்பிடு போட்டான்.


"ம்ம்ம்ம்ம்… நீ சொல்றது கரெக்ட் தான், நா கூடப் பாக்க செம்ம அழக இருக்காளே ஒரு பிட்டு போட்டு பாப்போம்னு நெனச்சேன். இப்ப நீ அவளைப் பத்தி சொன்ன பிறகு, லவ்வே வேணாம். பேசாம அம்மா, அப்பா பாக்குற பொண்ண அமைதியா கட்டிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்" என்ற வருணை பார்த்து நண்பர்கள் முறைக்க, விக்ரம் அவனை முதுகை பழுக்க வைத்துவிட்டான்.


"ஏன்டா...? போயும் போயும் அவதான் கெடச்சால உனக்கு?? அவளும் அவ மொகரயும்? பொறுக்கிய பொறக்க வேண்டியது, தப்பிப் பொண்ண பொறந்து என் ரென்யா லைஃப்ல வந்திடுச்சு" என்றவன் கண்ணில் த்வனி மிதமான வெறுப்பு அப்பட்டமாக தெரிந்தது.


"டேய் சும்மா சொன்னேன்டா… நா போய் அந்தப் பொண்ண… ச்சீ யாரு போய் ப்ராப்போஸ் பண்ணி அவகிட்ட செருப்படி வாங்குறது" என்ற வருணை பார்த்த ரகு,


"இல்லடா, நீ சொல்லறது தப்பு. நீ அவகிட்ட ப்ராபோஸ் பண்ண அவ ஒன்னும் சொல்லமாட்டா, சாரி ப்ரோ ஐயம் நாட் இன்ட்ரெஸ்டட் இன் லவ்னு சொல்லிட்டு அமைதியா அவ வழியில் போய்டுவா."


"உனக்கு எப்படிடா தெரியும்? நீயென்னா அவகிட்ட ப்ராப்போஸ் பண்ணிய என்ன?"


"ஏன்டா… அடிக்கத் தேடிட்டு இருக்கவ முன்போய் நிக்க நா என்ன லூசா? அதெல்லாம் ஒன்னு இல்ல… நா விசாரிக்கும் போது தெரிஞ்சுது. அவகிட்ட நெறயபேர் ப்ராப்போஸ் பண்ணி இருக்காங்க, ஆன, இவளுக்கு லவ்ல இன்ட்ரஸ்ட்‌ இல்லயாம். சோ யாருக்கும் சிக்கல. பட், அவ ஃப்ரண்ஸோட அக்கா, அண்ணா சிலபேர் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணி இருக்கா, உண்மையான லவ்வ இருந்த கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவளாம். அதான் சொன்னேன். நீ போய் லவ் பண்றேன்னு சொன்னா… அவ ஒரே வார்த்தை 'நோ' சொல்லிட்டு போய்ட்டே இருப்பா." என்றவன் விக்ரமை திரும்பி பார்த்து, 


"அவகிட்ட இருக்க இன்னொரு முக்கியமான பழக்கம்… ஒருதடவ ஒருத்தரை தப்புன்னு முடிவு பண்ணி, அவங்களை வெறுக்க ஆரம்பிச்சிட்ட… அவ்ளோதான் ஜென்மத்துக்கும் அதுல இருந்து மாறமாட்டா... அதே மாதிரி அந்தப் பொண்ணு லயாக்கு, த்வனி சொல்றதுதான் வேதவாக்கு… அவ என்ன சொன்னாலும் லயா கண்ணை மூடிட்டுச் செய்யுமாம்" என்றதில் 'என்ன சொன்னாலும்' என்ற வார்த்தையை ரகு அழுத்தி சொல்ல,


விக்ரம் திரும்பி ரகுவை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன், "இனி ரென்யா லைஃப்ல முக்கியமான ஆள்ன... அது விக்ரம் தான். விக்ரம் மட்டும் தான்." என்றான் கடுமையான குரலில்...