Posts

Showing posts from March, 2026

கன்னத்தில் காதல் முத்தம் Epilogue

  Epilogue ஆரா, அக்னியுடன் வந்து தங்கள் வாழ்க்கையை தொடங்கி இத்தனை நாட்களில், "என்னால தான் ஆதிமாமா இப்டி ஆகிட்டாரு. என்னால தான் எல்லாம். மாமா ரொம்ப நல்லவர் தெரியுமா தேவ்? நான் தான் அவரை இப்டி மாத்திட்டேன்… எல்லாம் என்னால தான்…" என்று அடிக்கடி அவள் ஆதியை நினைத்து புலம்ப, அந்த கவலையே அவளை மன அழுத்தத்தில் கொண்டு விட்டது‌. அந்த நேரத்தில் தேவ்வின் அருகாமையும், ஷிவானியின் அரவணைப்பு, கவுன்சிலிங், யோகா என்று அனைத்தும் தான் அவளை அந்த நோயில் இருந்து மீட்டது. அதன் பின் ஆரா, அக்னி வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் சென்றாலும் ஆராவுக்கு உள்ளுக்குள் ஒரு நெருடல் இருந்துகொண்டே இருந்தது‌. அதற்காக அவள் ஆதியை மன்னிக்கவோ, அவனுடன் பேசவோ தயாராக இல்லை. இப்டியே ஒரு‌ மாதம் செல்ல, அன்று காலை அழைப்பு மணி ஒசை கேட்டு கதவைத் திறந்த ஆரா, அங்கு கலங்கிய விழிகளுடன் நின்றிருந்த பல்லவியை தான் பார்த்தாள். ஏனோ அவளுக்கு அவள் மாமன் ஆதியை விட பல்லவி மேல்தான் அதிக கோவம் வந்தது. மகள் போல் வளர்த்த தனக்கு எப்படி இப்படி ஒரு துரோகத்தை செய்ய முடிந்தது இவரால்? என்ற கோவம். மகன் தவறான வழியில் செல்லும் போது அதைத் தடுக்காமல், பாசம் எ...

கன்னத்தில் காதல் முத்தம் 29

  காதல் 29 ஆராத்யா அழுதழுது மயக்க நிலைக்கே சென்றிருந்தாள். பாவம் அவளும் ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சிகளை தான் தாங்குவாள்? ஷிவானி சோஃபாவில் மயங்கி இருந்த ஆராவை தூக்கிக்கொண்டு போய் அறையில் படுக்க வைக்க சொல்ல, அக்னிக்கு அவளைத் தொடவே கைகள் நடுங்கியது. "என்னாச்சு அக்னி?" என்று கேட்ட ஷிவானியை அடிபட்ட பார்வை பார்த்தவன், "பயமா இருக்கு ஷிவானி. நான் தொட்டேன்னு சாகப்போனா இவ… இப்ப தூக்குறதுக்காக நான் அவளைத் தொட்டா மறுபடியும் ஏதாவது…" என்று சொல்லும்போதே அக்னிக்கு குரல் கமுறி விட்டது. "ப்ச்… அதெல்லாம் ஒன்னும் ஆகாது அக்னி. அவ அடிக்கடி சொல்வா, என்னை பொருத்தவரை யாரை நான் கல்யாணம் பண்றேனோ, அவனைத் தான் சாகும்வரை காதலிப்பேன்னு. அவ ஆதிய லவ் பண்ணாம இருந்தாலும் அவனுக்கும் தனக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சு, இனி ஆதிதான் தன்னோட வாழ்க்கைனு நினச்சா, அப்டி இருக்க அவளால உங்களை காதலிச்சதை ஏத்துக்க முடியல அக்னி. அதை அவ ஆதிக்கு பண்ற துரோகம்னு நெனச்சிதான் தற்கொலை பண்ற அளவுக்கு போய்ட்டா… இப்ப தான் எல்லா உண்மைகளையும் தெரிஞ்சிருச்சு இல்ல, இனிமே சரியாகிடுவா… நீங்க அவளை தூக்கிட்டு போய் படுக்க வைங்க...

கன்னத்தில் காதல் முத்தம் 28

 காதல் 28 மறுநாள் காலை குளித்து முடித்து கோயிலுக்கு செல்ல தயாரான புதுமண தம்பதிகள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. இருவரும் கிளம்பி வெளியே வரும் நேரம் ஆராவின் கைப்பேசி அலறியது. ஆராவின் கைப்பேசி ஆதியிடம் இருந்ததால், அக்னி அவளுக்கு ஒரு புது கைப்பேசி வாங்கிக் கொடுத்தவன், ஒரு புது நம்பரையும் எடுத்துக் கொடுத்திருந்தான். அந்த எண் ஆராவின் தந்தை, ஷிவானி, அவளின் தாய், தந்தைக்கு மட்டுமே தெரியும் என்பதால் தந்தை தான் அழைத்தாரோ என்று ஆவலாக கைப்பேசியை எடுத்துப் பார்க்க, அவளை அழைத்திருந்தது ஷிவானியின் தந்தை. "ஷிவிப்பா கால் பண்றாரு" என்றபடி அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் கையில் இருந்த பூஜை தட்டு கீழே விழ அதில் இருந்த பொருட்கள் எல்லாம் மூளைக்கு ஒன்றாக சிதறியது. கல்யாணத்திற்கு வந்துவிட்டு அன்று மாலைப் போல் வீட்டுக்கு திரும்பி இருந்த ஆராவின் தந்தைக்கு மரடைப்பு வந்திருக்க, அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக சொன்னார் ஷிவானியின் தந்தை. உடனே அக்னி, ஆரா இருவரையும் கிளம்பி போய் அவரை பார்க்குமாறு சொன்னார். காரில் போகும் வழியெங்கும் ஆரா அழுதுகொண்டே வர அக்னிக்கு அவளைப் பார்க்கவே கஷ்டமா இருந்தது. எவ்வளவு சம...

கன்னத்தில் காதல் முத்தம் 27

 காதல் 27 அந்த நேரத்தில் ஷிவானியை அங்கு எதிர்ப்பார்க்காத ஆரா, "ஏய் என்னடி ஆச்சு? நான் இங்க இருக்கேன்னு உனக்கு எப்டி தெரியும். நீ எப்டி இங்க வந்த?" என்று கேட்க, ஷிவானி திரும்பி ஆராவின் தந்தையைப் பார்த்தாள். "நான் தான் ஷிவாவை வரச்சொன்னேன் ஆரு." என்றார் அவர். ஆரா புரியாமல் அவரைப் பார்க்க, "நாளைக்கு கோயில்ல நடக்கப்போறது பூஜை இல்ல ஆரு… உனக்கும் ஆதிக்கும் கல்யாணம்" என்று இடியைத் தூக்கி அவள் தலையில் போட, "அப்பா" என்று அலறி விட்டாள் ஆரா. நேற்று இரவு ஆராவைப் பற்றி பேச ஆதி அறைக்குச் சென்றவர், ஆதியும் பல்லவியும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு அதிர்ந்து தான் போனார். அவர் தூக்கி வளர்ந்த பிள்ளையா இப்படி? என்று அவர் உள்ளம் தவித்து போக அமைதியாக தன்னறைக்கு வந்துவிட்டார். "அப்… அப்பா… நீங்க சொல்றது நிஜமா… ஆதிமாமாவா இப்டி செஞ்சாரு. என்னால நம்ப முடியலயேப்பா" என்று நம்பமுடியாமல் இறஞ்சும் குரலில் கேட்க, "என்னாலயும் தான் ஆரு நம்ப முடியல, அதுவும் பல்லவி இப்டி செய்வான்னு என்னால நினச்சுக்கூட பாக்க முடியலடா… ஆதி நேர வந்து எனக்கு என் ஆரா வேணும்னு சொல்லி கட்டாயத்...

கன்னத்தில் காதல் முத்தம் 26

 காதல் 26 ஆதியின் அறையில் இருந்த அனைத்துப் பொருட்களும் அலங்கோலமாக சிதறி கிடக்க, வெறிபிடித்தவன் போல் அவன் கையில் கிடைத்த அனைத்து பொருட்களையும் தூக்கிப் போட்டு உடைத்து நொறுக்கிக் கொண்டிருக்க, மகனின் நடவடிக்கையில் அவனை எப்டி சமாதானம் செய்வது? என்று தெரியாமல் உடல் நடுங்க நின்றிருந்தார் பல்லவி. "ஆதி கொஞ்சம் அமைதியா இருடா…" என்று பல்லவி கதற, அவர் தோளை இறுக்கிப் பிடித்தவன், "அவளுக்கு எப்டி இன்னொருத்தனை பிடிக்கலாம்? சின்ன வயசில் இருந்து அவ எனக்கு தான்… எனக்கு மட்டும் தான்ற எண்ணத்தில் தான் அவளுக்கு ஒவ்வொன்னையும் பாத்து பாத்து செஞ்சேன். என்னைத் தவிர அவ யார் கூடவும் நெருங்க கூடாதுன்னு தான் அவ ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரை அவளை என் கண்பார்வையிலேயே வச்சிருந்தேன். ஏன் அந்த தேவ் பத்தி விசாரிக்க சொல்லும் போது கூட அவ மனசுல இனிமே அவன் எண்ணமே வரக்கூடாதுனு தான் அவன் செத்துப் போய்ட்டதா பொய் சொன்னேன்… ஆனா, இப்ப என்னடான்னா அவனையே லவ் பண்றேன்னு வந்து நிக்கிறா… எவ்ளோ தைரியம் இருக்கும் அவளுக்கு… வேற ஒருத்தனை லவ் பண்றேன்னு என்கிட்டயே வந்த சொல்ல… என் தப்பு தான், எல்லாமே என் தப்பு தான்… நிச்சயம் முடிஞ்...

கன்னத்தில் காதல் முத்தம் 25

 காதல் 25 அன்று இரவு ஆராவுடனேயே ஷிவானி தங்கி இருந்தாள். ஏதோ யோசனையில் கைகளைக் கட்டியபடி வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான், 'இந்த காதல் ஏன் இவ்ளோ சுயநலம் புடிச்சதாவும் கண்மூடித்தனமாவும் இருக்கு? சின்ன வயசிலருந்து கூடவே இருந்த ஈஸ்வர் மேல வராத லவ், எப்பவோ பாத்து பழகி பிரிஞ்சு போய், இப்ப திரும்பி வந்த தேவ் மேல இவளுக்கு எப்டி வந்தது? உண்மையில் இந்த காதலுக்கு கண் மட்டும் இல்லை, அறிவும் இல்லதான் போல' என்று தனக்குள் புலம்பியவளுக்கு தெரியாது, பின்னாளில் இதே பைத்தியக்காரத்தனத்தை வலுக்கட்டாயமாக அவளும் செய்யப்போகிறாள் என்று. தன் போக்கில் எதை எதையே யோசித்துக் கொண்டிருந்த ஷிவானிக்கு சூடான பாலை கொடுத்த ஆரா, "குடி ஷிவி" என்று சொல்ல, அவள் முகத்தை பார்த்த ஷிவானிக்கு அவள் கேட்க நினைப்பது என்ன? என்று புரிந்தது. அவள் வந்ததில் இருந்து நூறு முறையாவது அந்த கேள்வியை கேட்டிருப்பாள், ஷிவானியும் பதில் சொல்லி சொல்லியே அலுத்து விட்டாள். இப்போது நூற்றி ஒன்றாவது முறையாக, "ஷிவி உண்மையாவே என் மேல உனக்கு கோவம் இல்ல தான?" என்று அவள் மனநிலை புரியாமல் ...