Posts

Showing posts from June, 2024

இதயம் இறுதி அத்தியாயம்

  இறுதி அத்தியாயம்  அவன் கண்களோ அந்த இடத்தில் நின்றவளை கூர்ந்து பார்க்க, அவன் மனமோ ‘அவள் உண்மையாக அவன் கண்முன் தான் நிற்கிறாளா? இல்லை அது வெறும் காட்சிப் பிழையா? தன் கண்கள் காண்பது உண்மை தானா?’ என்று அவன் மனம் சிந்தித்துக் கொண்டிருக்க, அவனையும் அறியாமல் அவன் கால்கள் அவளை நோக்கிச் சென்றது. அதற்குள் அவள் அங்கிருந்து நகர, அவனும் அவளைத் பின் தொடர்ந்தான்.  அந்த நேரம் அதீஷன் அங்கு வர, “அதீ… தன்வி உள்ள இருக்கா, நீ அவளைப் பார்த்துக்க” என்றவன், “டேய் தர்ஷா… நீ எங்க போற?” என்று கேட்டதைக் கூடக் காதில் வாங்காமல் அங்கிருந்து வேகமாக ஓடிச் சென்றான். வேகமாக அவளின் பின்னால் தன் வாகனத்தை விரட்டிச் சென்ற ஆதர்ஷ், அவள் ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்திற்குள் செல்வதைப் பார்த்து அவளைப் பின்தொடர்ந்து சென்றான். அவள் ஒரு வீட்டின் உள் செல்வதைப் பார்த்தவன், அவள் உள்ளே சென்று கதவை அடைக்கும் முன் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல, திடீரென நடந்த நிகழ்வில் கண்கள் விரிய அதிர்ந்து நின்றாள் தர்ஷினி. ஆதர்ஷனைப் பார்த்து தர்ஷினி அதிர்ந்து நிற்க, ஆதர்ஷனோ அவளைத் தன் பார்வையால் எரித்துக் கொண்டிருந்தான். “நீங்க.‌‌..” ...

இதயம் 17

  இதயம் 17 தர்ஷினியின் கடிதத்தைப் படித்த ஆதர்ஷனுக்கு ஒரு நிமிடம் உலகமே நின்று போனது போல் ஆனது.  எதுவும் வேண்டாம் என்று விலகி, ஒதுங்கி ஓடி ஒளிந்தவனைத் தேடிப் பிடித்து, உண்மையாகக் காதலித்து, விடாமல் அவனுக்காக அவனுடனே போராடி இன்று அவன் மனதை முழுவதும் தன் வசப்படுத்தி விட்டு, இனி அவளின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நிலையில் தன்னை நிறுத்திவிட்டு, இப்படி விட்டுச் சென்றவளை நினைக்க நினைக்க ஆதர்ஷனுக்கு நெஞ்சமெல்லாம் கசந்தது. ’நான் அப்படியே இருந்திருப்பேனேடி… என்னை அப்படியே விட்டிருக்கலாம் இல்ல? நான் விலகி விலகித் தானேடி போனேன்… என்னை துரத்தித் துரத்தி வந்து காதலிச்சது, என்னையும் உன்னைக் காதலிக்க வச்சது, இப்படி என்னைப் பாதியில் விட்டுட்டுப் போகத் தானா..‌.‌.?’ என்றவன் அவளின் கையெழுத்து இருந்த அந்தக் காகிதத்தைத் தன் நெஞ்சில் வைத்து அழுத்திக் கொண்டவனின் உள்ளம் கத்திக் கதறும் ஓசையில் அந்த அறையே அதிர்ந்தது. தர்ஷினி அவனை விட்டுச் சென்ற தினம், இரவு வரை தர்ஷினியைத் தேடி தெருத் தெருவாக அலைந்தான் ஆதர்ஷ். ஒருவேளை தன்வியிடம் தர்ஷினி, அவள் எங்கு செல்கிறாள் என்று சொல்லி இருப்பாளோ என்று தோன்ற நேராகத் தன்...

இதயம் 16

  இதயம் 16 ஆதர்ஷன் தனது அறையில் இங்கும் அங்குமாக நடந்து கொண்டு இருந்தவன் மனதில் புயல் வீசிக்கொண்டு இருந்தது.  தன்வி வீட்டை விட்டுச் செல்லும் அளவுக்கு வந்தது அவனை வெகுவாகப் பயமுறுத்தியது. அவனுக்கு நன்கு தெரியும், தன்வியும் அதீஷனும் இரு கூட்டில் வாழும் ஒற்றை உயிர் என்று. இருவரும் அந்த அளவு ஒருவரை ஒருவர் நேசிக்கும் போது, தன்னால் அவர்கள் இருவரின் மணவாழ்க்கையில் எதுவும் பிரச்சனை வந்து விடுமோ என்று யோசித்தவன், உடனே தர்ஷினியைப் பார்த்து இதற்கு ஒரு நல்ல முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்துத் தன் கைபேசியில் இருந்து அவளுக்கு அழைக்க, அதுவோ அவள் அலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாகச் சொன்னது. கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்த ஆதர்ஷ், அவளை நேரில் சென்று பார்ப்பது என்று முடிவு செய்து தர்ஷினியின் வீட்டுக்குக் கிளம்பினான். கால் மணி நேரப் பயணத்திற்குப் பிறகு தர்ஷினியின் வீட்டை அடைந்தவன், அழைப்பு மணியை அடிக்கக் கையை உயர்த்த, உள்ளுக்குள் ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது.  அன்றைய நாளுக்குப் பிறகு இன்று தான் அவளைப் பார்க்கப் போகிறான். அவள் என்ன சொல்லுவாளோ என்ற பயத்துடன் சேர்த்து, அவள் இப்போது எப...

இதயம் 15

  இதயம் 15 அன்று காலை விடிந்தது முதல் அதீஷன் பதட்டமாகவே சுற்றிக் கொண்டிருந்ததைக் கவனித்துக் கொண்டு இருந்தார் அமிர்தா. “டேய் அதீ… என்னாச்சு உனக்கு? காலையில் இருந்து பார்க்குறேன், நீ ரொம்பப் பதட்டமாவே இருக்க? என்ன ஆச்சு உனக்கு? ஆமா தன்வி எங்கடா? மணி பத்தாச்சு, இன்னும் ஒண்ணும் சாப்பிடாம ரூம்லயே இருக்கா? வயித்துல குழந்தை இருக்கேன்னு ரெண்டு பேருக்கும் எங்கயாச்சும் பொறுப்பு இருக்கா… இந்த மாதிரி நேரத்தில் ஒழுங்கா டைமுக்குச் சாப்பிட வேணாமா?” என்று அக்கறையுடன் கேட்டார். அதீஷன் அதற்கு எதுவும் பதில் சொல்லாமல் இருக்க, அவன் அருகில் சென்று மகனின் முகத்தைப் பார்த்தவர், “டேய் என்னடா ஆச்சு? ஏன் உன் முகம் இப்படி பதட்டமா இருக்கு? எதுவும் பிரச்சனையா?” என்று கேட்க, தாயைத் தாவி அணைத்துக் கொண்டவன், “எனக்குப் பயமா இருக்கு மா… எதோ பெருசா நடக்கப் போற மாதிரி மனசுக்குத் தோணுது…” என்று புலம்ப அமிர்தாவுக்கு ஒன்றும் புரியவில்லை. “டேய், இப்படி மொட்டையா சொன்னா எப்படிடா? என்ன பிரச்சனைனு கொஞ்சம் தெளிவாச் சொல்லுடா” என்ற தாயின் அணைப்பில் இருந்து விலகி வந்தவன், “அது வந்து ம்மா… நேத்து…” என்று ஆரம்பித்தவன் தர்ஷினி, தன்வ...