கன்னத்தில் காதல் முத்தம் Epilogue
Epilogue ஆரா, அக்னியுடன் வந்து தங்கள் வாழ்க்கையை தொடங்கி இத்தனை நாட்களில், "என்னால தான் ஆதிமாமா இப்டி ஆகிட்டாரு. என்னால தான் எல்லாம். மாமா ரொம்ப நல்லவர் தெரியுமா தேவ்? நான் தான் அவரை இப்டி மாத்திட்டேன்… எல்லாம் என்னால தான்…" என்று அடிக்கடி அவள் ஆதியை நினைத்து புலம்ப, அந்த கவலையே அவளை மன அழுத்தத்தில் கொண்டு விட்டது. அந்த நேரத்தில் தேவ்வின் அருகாமையும், ஷிவானியின் அரவணைப்பு, கவுன்சிலிங், யோகா என்று அனைத்தும் தான் அவளை அந்த நோயில் இருந்து மீட்டது. அதன் பின் ஆரா, அக்னி வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் சென்றாலும் ஆராவுக்கு உள்ளுக்குள் ஒரு நெருடல் இருந்துகொண்டே இருந்தது. அதற்காக அவள் ஆதியை மன்னிக்கவோ, அவனுடன் பேசவோ தயாராக இல்லை. இப்டியே ஒரு மாதம் செல்ல, அன்று காலை அழைப்பு மணி ஒசை கேட்டு கதவைத் திறந்த ஆரா, அங்கு கலங்கிய விழிகளுடன் நின்றிருந்த பல்லவியை தான் பார்த்தாள். ஏனோ அவளுக்கு அவள் மாமன் ஆதியை விட பல்லவி மேல்தான் அதிக கோவம் வந்தது. மகள் போல் வளர்த்த தனக்கு எப்படி இப்படி ஒரு துரோகத்தை செய்ய முடிந்தது இவரால்? என்ற கோவம். மகன் தவறான வழியில் செல்லும் போது அதைத் தடுக்காமல், பாசம் எ...