Posts

Showing posts from July, 2021

இஷ்டமில்லா நிஜம் நீ - 1

Image
      இஷ்டமில்லா நிஜம் நீ நிஜம் - 1 புதிய நாள் பொழுது விடிந்து காலை எட்டு மணி என்பதை அந்தக் கூக்குக் கடிகாரம் தன் 'கூக்கு கூக்கு' என்ற குரலில் கத்தி கத்தி தெரிவிக்க, அதைப் பார்த்தபடி படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தாள் த்வனி. ஐந்தரையடி உயரம், கவர்ந்திழுக்கும் மாநிறம், காலையில் குளித்து முடித்து விரித்துவிட்ட அவள் கூந்தல் காற்றில் பறக்க, கீழே இறங்கியபடி, கூக்கு கூவுவது சரியா என்று தன் கைக்கடிகாரத்தைப் பார்க்க, 'கூக்கு இஸ் கரெக்ட்' என்று அவள் வாட்ச் சொல்ல, தான் ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டில் இருந்து அவள் ஃபோனை எடுக்கவும், அது அடிக்கவும் சரியாக இருந்தது. ஃபோனை அட்டென் செய்து "ஹலோ" என்றவள். "ம்ம்ம் நா ரெடி தான்டி. தோ… பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்" என்றவள் தன் புல்லட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். அந்த ரெஸ்டாரன்ட்டில் த்வனி எதையே தீவிரமாக யோசித்துக் கொண்டு ஜுஸ்சை குடிக்காமல் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருக்க, எதிரே அவள் தோழிகள் ஆருஷியும், ஷாலினியும் ஜுஸ்சையும் த்வனியையும் மாறி மாறி பார்த்தபடி இருந்தவர்கள். "ஏய் த்வனி, இப்ப எதுக...