Posts

Showing posts from November, 2021

அர்ஜூன்‌ & ஆத்யா 3

Image
  மெய் 3 ‍‌ இவ்வளவு நேரம் நடந்த கூத்தை எல்லாம் வேடிக்கை பார்த்து சிரித்துக்கொண்டிருந்த அர்ஜூன், "என்ன சித்தி உங்களுக்கு ஆத்யாவை ரொம்பப் பிடிக்கும் போல? இங்க ஒருத்தன் இருக்குறதை கூடக் கவனிக்காம அவளுக்குச் சப்போர்ட் பண்ணி ஆன்ட்டியை திட்டிட்டு இருக்கீங்க" என்ற அர்ஜூன் குரலை கேட்ட அபிராமி, "டேய் அர்ஜூன், நீ இங்க என்ன பண்ற?" என்றவர் அவன் கையில் இருந்த கட்டை பார்த்து, "டேய் என்னடா இது?? எப்டி அடிப்பட்டுச்சு?" என்று அவன் கையை பார்க்க, ஆத்யா சொன்ன பொய்யையே அர்ஜூன் அபிராமியிடம் சொல்ல, அபிராமி ஆத்யாவை சந்தேகமாக பார்க்க, அவள் கண்ணாலேயே "சாரி அத்த சாரி" என்று கெஞ்சினாள். "உனக்கு எதுவும் அடிபட்டுச்சா அத்துமா" என்று அபிராமிக்கு ஆத்யா "இல்லை" என்று தலையாட்டினாள். "ஏன்டா ?? அடிபட்டதும் நேர வீட்டுக்கு வரவேண்டியது தானே.? நான் டாக்டரை வர சொல்லியிருப்பேன் இல்ல?!" "இல்ல சித்தி, ஆத்யா தான் என் வீடு பக்கத்துல தான் இருக்கு, அங்க போய் மருந்து போட்டுக்கலாம்னு சொன்னா, அதோட ரத்தம் வேற வந்தது, நம்ம வீட்டுக்கு வரதுக்குள்ள நிறைய ரத்தம் போய்டு...

அர்ஜூன் & ஆத்யா 2

Image
 மெய்  2 ஆத்யா அபிராமியின் மெடிக்கல் ரிப்போர்ட்டை முழுவதும் பார்த்து விட்டு,  "உங்களுக்கு ஒன்னு இல்ல ஆன்ட்டி, எல்லாம் நார்மல் தான். சர்ஜரி செஞ்ச எல்லாம் சரியாகிடும். ஆபரேஷன் முடிஞ்சதும் நீங்க ஹாப்பியா வேகமாக ஓடியே இந்தியா போய்டுவீங்க பாருங்க…" என்று ஆறுதல் சொல்ல சின்னவளை ஏக்கமாகப் பார்த்தார் அபிராமி. "சந்தோஷம், நிம்மதி, சிரிப்பெல்லாம் என்னோட…" என்று தொடங்கியவர் சற்று நிறுத்தி திரும்பி அர்ஜூனை பார்த்துவிட்டு, "எங்க வாழ்க்கையை விட்டு போய் ரொம்ப வருஷம் ஆகுது அத்தும்மா" என்று விரக்தியாக சொல்ல, ஆத்யா கண்களைச் சுருக்கி கேள்வியாய் அபிராமியை பார்க்க, அபிராமி உடனே தன்னைச் சுதாரித்துக் கொண்டு,  "நான் சந்தோஷமா, ஹாப்பியா இருக்கணும்னு நீ நெனச்ச எனக்காக ரெண்டு விஷயம் செய்விய அத்து?" என்று கேட்க, ஆத்யா மறுபேச்சு பேசாது 'சரி' என்று தலையை மட்டும் ஆட்டினாள்.  அதில் மகிழ்ந்த அபிராமி, "முதல்ல நீ என்னைப் பழைய மாதிரி அத்தைன்னு வாய் நெறைய கூப்பிடனும்" என்றதும், ஆத்யா அதற்குச் சம்மதம் என்று சொல்ல, அடுத்து அபிராமி கேட்டதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் வ...

அர்ஜூன்‌ & ஆத்யா‌ 1

Image
                                                             அர்ஜூன் & ஆத்யா 1 மெய் 1 வெண்ணிலவு இரவெல்லாம் அலைந்து திரிந்து ஓய்ந்து போய் ஓய்வெடுக்க மேகங்களுக்குள் மறைய, பூமித்தாய் இருளில் தவிப்பாளே என்று தன் அக்னி சிறகை விரித்துப் பகலவன் பறந்து வந்த காலைப்பொழுது கண்விழித்தான் அர்ஜூன். அர்ஜூனின் இரவுவேளைகள் தூக்கம் தொலைந்த பொழுதுகளாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஒரு காலத்தில் அவன் வாழ்க்கையை‌ வண்ணங்களால் நிறைந்து மகிழ்ச்சியை மட்டும் அவன் வாழ்க்கையில் விதைத்தவள், இன்று துக்கத்தையே அவன் வாழ்வாக்கி, அவனின் மொத்த சந்தோஷத்தையும் துடைத்து எடுத்து சென்றுவிட்டாள். அர்ஜூன்…!!! பெரிய பணக்கார குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசு. காந்த கண்கள், அதில் தீர்க்கமான பார்வை, செதுக்கிய கூர் நாசி, சிரிப்பை மறந்த சிகரெட் புகை படியாத  தடித்த இளம் ரோஸ் நிற உதடுகள், அதற்கு மேல் ஆண்மைக்கு இலக்கணமான கருத்த மீசை, அதை ஒட்டி அழகாக ட்ரிம் செய்யப்பட்ட நாலு நாள் தா...

நிஜம் 18

Image
  நிஜம் 18 விக்ரம், லயாவின் காதல் நாளுக்கு நாள் பூமி பிளந்து சொல்லும் வேர் போல் வளர்ந்து கொண்டே செல்ல, த்வனி என்ன செய்வதென்று ஒன்றும் புரியாமல் தவித்தாள். அவள் குழப்பத்திற்குக் கதிர் ஒருவனால் மட்டுமே சரியான வழியைச் சொல்லமுடியும் என்று கதிரை ஃபோனில் அழைத்தாள் த்வனி. "என்ன த்வனி, என்னாச்சு? லயா குட்டி எப்படி இருக்க?" "அவ நல்லா தான் இருக்கா. ஆனா, தான் இன்னும் கொஞ்ச நாள்ல லூசாகிடுவேன் போல இருக்கு கதிர்" என்றாள் கவலையாக. "ஏன் த்வனி என்னாச்சு?" "எனக்கு ரொம்பக் கஷ்டாம இருக்கு கதிர். ஒரு ஃப்ரண்ட இருந்து நா உயிரையே வச்சிருக்க என்னோட லயா காதலை பிரிக்க, நா எல்லா வழியிலயும் ட்ரை பண்றேன். அவ அப்பா, அம்மா… ஏன் உன்னவிட எனக்குத் தான் அவ மனசு பத்தி தெரியும். அவ அந்த வீணா போன விக்ரம் மேல உயிரையே வச்சிருக்க, அது நல்லா தெரிஞ்சும், நா அவ லவ்வை பிரிக்கச் சீரியல் வில்லி மாதிரி ட்ரை பண்றத நெருங்கும்போது எனக்கே என்ன நெனச்சு அசிங்கமா இருக்கு கதிர்" என்றவள் குரலில் இருந்தே அவள் மனது எந்தளவு கலங்கி இருக்கிறது என்று கதிருக்கு நன்றாகப் புரிந்தது. "ஏய் த்வனி என்ன இது குழந...

நிஜம் 17

Image
  நிஜம் 17 விக்ரம், த்வனி பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாக, பாவம் இவர்கள் இருவர் சண்டையில் லயா மண்டை தான் உருண்டது. இப்போதெல்லாம் லயா வாயில் மந்திரம் போல் வரும் ஒரே டய்லாக், "எனக்கு வந்ததும் சரியில்ல, வாச்சதும் சரியில்ல, இதுங்க சண்டையில காயுது என் மண்ட" னு அவர்கள் நாட்கள் நகர்ந்தது. த்வனி எவ்வளவுக்கு எவ்வளவு விக்ரமிடம் இருந்து லயாவை தள்ளி வைக்கப் பார்த்தாலோ, அதற்கு நேர்மாறாக லயா விக்ரமின் உண்மை அன்பில் இன்னும் இன்னும் அவனிடம் நெருங்கிப் போனாள். த்வனி நினைத்தால் அவளின் ஒரு வார்த்தையில் லயாவை விக்ரமிடம் இருந்து பிரிக்க முடியும். ஆனால், அது லயாவை காயப்படுத்தி விடும் என்ற ஒரே காரணத்திற்காக அவள் நிதானமாக லயாவின் மனதில் இருந்து விக்ரமை எடுக்கும் வழியை தேடினாள். ஆனால், அதற்குள் லயா மனது மட்டுமல்லாமல், அவள் சிந்தனையில் இருந்து உயிர் வரை விக்ரம் நிலைத்து, நிறைத்து விட்டிருந்தான். அவள் தேவ்வின் உண்மை காதலில் பெண்ணவள் மொத்தமாக முழ்கி தன்னைத் தொலைந்துவிட்டாள். இனி த்வனியின் நிலை என்னவாகும்? அன்று லயா த்வனியுன் செலவிடும் ஞாயிறு, த்வனி ஞாயிறு. அது என்ன த்வனி ஞாயிறுனு கேட்டால், ஒரு முறை, சன்ட...

நிஜம் 16

Image
நிஜம் 16 கதிரிடம் பேசிய பிறகு த்வனிக்கு மனது சற்று அமைதியாக, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே உறங்கிக் போனாள். மூன்று நாட்கள் அமைதியாக செல்ல, அன்று த்வனியும், லயாயும் காலேஜ் வந்தனர். அன்று த்வனிக்கு பிராக்டிகல் கிளாஸ் இருந்ததால் லயாவை தனக்காக காத்திருக்காமல் வீட்டுக்கு சென்று விட சொல்ல, இருவரும் அவரவர்  வகுப்புகளுக்கு சென்றனர். விக்ரம் லயாவுக்காக காத்திருக்க, அவனை பார்த்தும் பார்க்காதது போல் லயா தலைகுனிந்து செல்ல, விக்ரம் அவள் கையை பிடித்து இழுத்து நிறுத்தினான். "ஏய் ரென்யா… என்னாச்சு உனக்கு? நானும் பாக்குறேன்… மூணு நாளா நீ ஏன் என்கிட்ட பேசவே மாட்டேங்கிற, ஃபோன் பண்ண அட்டென் பண்ணால, ஒரு மெசேஜ் கூட இல்ல, நான் எதிர்க வந்த கூட என்னை பாத்தும் பார்க்காத மாதிரியே போற... என்ன தான் ஆச்சு உனக்கு, என்னை பாத்த பைத்தியக்காரன்‌ மாதிரி இருக்க உனக்கு, என்ன தவிக்க விட்டு, அழுவச்சு வேடிக்கை பாக்க நினைக்குறீய?" என்று அவன் கோவமாக கத்தியபடி குனிந்திருந்த அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்க, அவள் கண்கள் கலங்கி இருந்தது. "ஏய் ரென்யா… என்ன இது? எதுக்கு இப்ப அழுகுற? என்னாச்சு உனக்கு? ...