நிஜம் 16
நிஜம் 16
கதிரிடம் பேசிய பிறகு த்வனிக்கு மனது சற்று அமைதியாக, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே உறங்கிக் போனாள்.
மூன்று நாட்கள் அமைதியாக செல்ல, அன்று த்வனியும், லயாயும் காலேஜ் வந்தனர்.
அன்று த்வனிக்கு பிராக்டிகல் கிளாஸ் இருந்ததால் லயாவை தனக்காக காத்திருக்காமல் வீட்டுக்கு சென்று விட சொல்ல, இருவரும் அவரவர் வகுப்புகளுக்கு சென்றனர்.
விக்ரம் லயாவுக்காக காத்திருக்க, அவனை பார்த்தும் பார்க்காதது போல் லயா தலைகுனிந்து செல்ல, விக்ரம் அவள் கையை பிடித்து இழுத்து நிறுத்தினான்.
"ஏய் ரென்யா… என்னாச்சு உனக்கு? நானும் பாக்குறேன்… மூணு நாளா நீ ஏன் என்கிட்ட பேசவே மாட்டேங்கிற, ஃபோன் பண்ண அட்டென் பண்ணால, ஒரு மெசேஜ் கூட இல்ல, நான் எதிர்க வந்த கூட என்னை பாத்தும் பார்க்காத மாதிரியே போற... என்ன தான் ஆச்சு உனக்கு, என்னை பாத்த பைத்தியக்காரன் மாதிரி இருக்க உனக்கு, என்ன தவிக்க விட்டு, அழுவச்சு வேடிக்கை பாக்க நினைக்குறீய?" என்று அவன் கோவமாக கத்தியபடி குனிந்திருந்த அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்க, அவள் கண்கள் கலங்கி இருந்தது.
"ஏய் ரென்யா… என்ன இது? எதுக்கு இப்ப அழுகுற? என்னாச்சு உனக்கு? நா ஏதோ டென்ஷன்ல கத்திட்டேன், சாரிமா… சாரி. இனிமே இப்படி கத்தமாட்டேன், எதுவ இருந்தாலும் என்கிட்ட சொல்லுடா, நா பாத்துக்குறேன்" என்றது தான் லயா, "தேவ்" என்று அவனை இறுக்கி அணைத்து இன்னும் கத்தி அழுக ஆரம்பித்தாள்.
விக்ரம் மெதுவாக அவள் தலையை வருடியபடி, "ஒன்னு இல்லடா, நா தான் கூட இருக்கேன் இல்ல, என்னன்னு சொல்லு நா பாத்துக்கிறேன்" என்றவன் தோளில் முகத்தை புதைத்து, தேம்பிபடியே த்வனிக்கும் அவளுக்கும் இடையே விக்ரமால் வந்த சண்டை முதல், கதிர் வரை எல்லாவற்றையும் சொல்லி அழ, விக்ரமுக்கு த்வனி மேல் கட்டுக்கடங்காத கோபம் வந்தது.
"ரென்யா ப்ளீஸ்… முதல்ல அழறத நிறுத்து, இப்ப என்னாச்சுனு இப்படி அழுதுட்டு இருக்க, சரி... நீ உன்னோட அப்பா, அம்மா அப்பறம் அந்த கதிர் பத்தி சொன்னது கூட ஓகே, பட் இந்த த்வனி யாரு நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல? அவ யாரு உன்னை என்னோட பேச வேணாம், பழக வேணாம்னு சொல்ல… நம்ம ரெண்டு பேருக்கு லவ் பண்றோம், ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரையே வச்சிருக்கோம், இது நம்ம சொந்த விஷயம் இதுல தலையிடா அவளுக்கு எந்த உரிமையும் இல்ல, இத நீ அவகிட்ட தெளிவ சொல்லிடு, முதல்ல நீ அவ கூட பழகுறத நிறுத்து, அவயெல்லாம் ஒரு ஆளுன்னு" என்று கோவத்தில் கத்திக்கொண்டிருந்த விக்ரம், லயாவின் முக மாற்றத்தை கவனிக்கவில்லை.
"ஸ்டாப் இட்" என்ற அவள் கணீர் குரலில் திடுக்கிட்டு திரும்பி விக்ரம், லயாவின் கோவத்தில் கொதித்திருந்த முகத்தை கண்டு அதிர்ந்து தான் போனான்.
"லிசன் தேவ்… யார் கூட பழக கூடாதுனு சொல்ற நீ… how dare you... நா உன்னை விரும்புகிறேன் தான், என் உயிர் அளவுக்கு விரும்புறேன். ஆனா, என்னோட த்வனிய விட அதிகமா ஒன்னும் இல்லை, எனக்கு நீ எப்படியே, அதுக்கு ஒரு படி, இல்ல... இல்ல பலபடி ஒசத்தி அவ. இன்னொரு தடவை நீ அவளை பத்தி தப்ப எதுவும் பேசுன, அப்பறம் நா சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன். ஆமா, அவ உன்னோட என்னை பழக கூடாதுன்னு சொன்னா தான். ஆனா, அதுக்கு காரணம் அவளுக்கு என்மேல இருக்க அன்பு, அக்கறையும் தான். எங்க எனக்கு எதுவும் தப்ப நடந்துடுமோன்ற பயம் அவளுக்கு, அதான் அவ இப்படி இருக்க, ஏன் நீ கூட என்னை விரும்புற, நா எதுவும் ப்ராப்ளம்ல இருந்த அதுக்கு காரணமா இருக்கவங்களை நீ சும்மா விட்ருவீயா என்ன? அது மாதிரி தான் இதுவும். இப்ப கூட அவ ஒரு வார்த்தை சொன்ன நான் உன்னை விட்டு அவகிட்ட வந்துவேன்னு அவளுக்கு நல்லா தெரியும். பட், அவ அப்படி சொல்ல மாட்ட, பிகாஸ் அவளுக்கு தெரியும் நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன்னு, நீ இல்லாட்டி என் மனசு கஷ்டப்பட்டும்னு அவளுக்கு தெரியும். சோ அவ உன்னை மாதிரி இப்படி சொல்ல மாட்டா, முதல்ல நீ அத புரிஞ்சிக்க… என்னோட த்வனி கூட நான் பழக கூடாதாம், சொல்ல வந்துட்டான் பெரிய இவன் மாதிரி" என்று படபடவென பொறிந்தவள், "இனிமே த்வனி பத்தி தப்ப பேசாத" என்று கத்தி விட்டு அங்கிருந்து சென்றாள்.
போகும் அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த விக்ரம் மனது பயத்தில் வேகமாக அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. எங்கு த்வனியால தன்னவள் தன்னை வெறுத்து விடுவாளோ என்ற பயம் அவன் மனதை கீற தொடங்க, அன்று ரகு தவ்னி சொன்னால் லயா எதையும் செய்வாள் என்றது வேறு நினைவுக்கு வர, அவன் மனதின் பயம் முழுவதும் த்வனி மீது ஆத்திரமாக மாறியது. அதோ ஆத்திரத்துடன் அவன் த்வனியை பார்க்கச் சென்றான்.
த்வனி கிளாஸ் முடித்து வெளியே வர, யாரோ அவள் கையை வலுவாக பிடித்து இழுக்க, நிலை தடுமாறி த்வனி, கீழே விழாமல் இருக்க, அங்கிருந்து சுவற்றை பிடித்துக்கொண்டு, தன்னை நிலைப்படுத்தி, நிமிர்ந்து பார்க்க, விக்ரம் கோவத்தில் சிவந்த கண்களோடு அவளை எரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
"ஏய் அறிவிருக்க உனக்கு? எவ்ளோ தைரியம் இருந்த என் கைய புடிச்சி இழுப்ப, அவ்ளோ திமிர போச்சா உனக்கு?" என்று த்வனி கத்த,
"அதையே தான்டி நானும் கேக்றேன். உனக்கு என்னடி அவ்ளோ திமிர், எதுக்குடி ரென்யாகிட்ட அப்படி சொன்ன? எங்கிருந்து வந்துது அவ்ளோ தைரியம் உனக்கு" என்று அவன் அவளை நெருங்கி அவள் கழுத்தை நெறிப்பது போல் வர, த்வனி சற்று அசரவில்லை.
லயா இன்னேரம் அனைத்தையும் அவள் தேவ்விடம் கொட்டி இருப்பாள் என்று உணர்ந்த த்வனிக்கு, விக்ரம் எதற்காக வந்திருக்கின்றான் என்பது புரிந்து விட்டது.
"ஆமாடா தைரியம் தான். அது என் கூடவே பொறந்தது. உன்ன மாதிரி பொறுக்கிய எல்லாம் பாத்தா இன்னும் அதிகமாக வரும், அதுக்கு இப்ப என்னங்குற?"
"ஏய் யாரா பாத்து பொறுக்கின்னு சொன்ன?" என்று விக்ரம் முறைக்க,
"உன்ன பாத்து தான்டா சொல்றேன் பொறுக்கி. ஒரு அப்பாவி பொண்ணு கிட்ட செண்டிமெண்ட்ட பேசி ஏமாத்தி, அவ வாழ்க்கைய நாசம் பண்ண பாக்குற உன்னை பொறுக்கின்னு சொல்லாம, பொன்மனச் செம்மல்னா சொல்லுவாங்க"
"ஏய் யாரா பாத்து ஏமாத்துறவன்னு சொல்ற? அதுவும் என் ரென்யாவ, அவ தான்டி எனக்கு எல்லாம், அவளைவிட எனக்கு இந்த உலகத்தில் எதுவும் முக்கியம் இல்ல, யாரும் பெருசு இல்ல, அவ என் உயிருக்கும் மேலடி அவ, இன்னொருவாட்டி நான் என் ரென்யாவ ஏமாத்துறேன்னு சொன்னா… உன்னை கொன்னுடுவேன் ராஸ்கல்" என்று த்வனி கழுதை பிடித்து அவன் இறுக்க, மூச்சுவிட போராடி த்வனி, தன் ஹீல்ஸ் செருப்பை விக்ரம் காலில் வைத்து ஒரு அழுத்து அழுத்த, வலி தாங்காமல் விக்ரம் பிடி தளர்ந்து.
"டேய் உன்னோட இந்த 90's மூவி டயலாக் எல்லாம் வேற யார்கிட்டயாது சொல்லு, உடனே உருகி, அய்யோ சாமி நீங்க இம்புட்டு நல்லவங்களா, எனக்கு இது தெரியாம போச்சே, உங்களவிட நல்லா மாப்ள எங்க பொண்ணுக்கு எங்க கிடைக்கும்னு க்ளைமாக்ஸ் அப்பா டயலாக் எல்லாம் பேசுவாங்க, பட் இந்த த்வனி கிச்சன்ல உன்னோட டால் வேகாது. சோ கெட் லாஸ்ட், லயாவிட்டு தள்ளி இரு, அதுதான் உனக்கு நல்லது. " என்று த்வனி விக்ரமை எச்சரிக்க, விக்ரம் அவளை அலட்சியமாக பார்த்தான்.
"அதையே தான்டி நானும் உனக்கு சொல்றேன். மரியாதைய என் ரென்யாவ விட்டு ஒதுங்கி போய்டு, எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல, நீ இல்ல உன் பேர் வர்றது கூட எனக்கு புடிக்கல, சோ ஜஸ்ட் ஸ்டே அவுட். இது தான் உனக்கு லாஸ்ட் வர்நிங், இனிமே என்னோட ரென்யாவ நா பாத்துக்கிவேன். அவ இனி எனக்கு தான், எனக்கு மட்டும் தான் சொந்தம்" என்றவனை பார்த்து சத்தமாக சிரித்தாள் த்வனி.
"டேய் ஏன்டா? ஏன்டா சிரியஸா பேசும்போது இப்படி காமெடி பண்ணிட்டு இருக்க," என்று சிரித்தபடி இருந்த த்வனி முகம் கொஞ்சம் கொஞ்சமாக இருகிவிட, "உன்னை அவ லைஃப் ல இருந்து தொரத்த என்னோட ஒரு வார்த்தை போதும்டா. ஜஸ்ட் நான் அவகிட்ட உன்னைவிட்டு விலகி வான்னு சொன்னபோது, நெக்ஸ்ட் செகண்ட் அவ லைஃப் ல நீ இருக்க மாட்ட," என்று கர்வமாக சொன்னவள், அடுத்த நிமிடம், "பட் நா அதை செய்ய மாட்டேன். பிகாஸ் அவ உன்னை உண்மையா லவ் பண்ற, அவ மனசு கஷ்டப்படுறத என்னால பார்க்கமுடியாது. பட் அட் தி சேம் டைம், அவ லவ் வையும், உன்னையும் என்னால சகிச்சிக்கவே முடியாது. இப்ப எனக்காக லயா உன்னை விட்டு குடுத்தாலும் அவ மனசுல உன்னோட நெனப்பு கடைசி வரை இருக்கும். எனக்கு நீ அவ வாழ்க்கையில இருந்து போறது முக்கியம் இல்ல, அவ மனச விட்டு போகணும். போக வைப்பேன்" என்று சவால் விட்ட த்வனியை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தான் விக்ரம்.
"அது இந்த ஜென்மத்தில் உன்னால முடியாதுடி, அவ மனசு முழுக்க நான் தான் இருக்கேன். என் உயிர்ல அவ கலந்திருக்கா, உன்னால எங்கள பிரிக்க முடியாது. காட்றேன்டி இந்த விக்ரம் யாருன்னு உனக்கு காட்றேன். உனக்கு ரென்யாவோட தேவ்வை தானா தெரியும். விக்ரமை பாத்தி தெரியாது இல்ல, இனி தெரிஞ்சுக்குவ" என்றவன் கண்ணில் இருந்த கொலைவெறியை கண்டு த்வனிக்கு கூட லேசாக பதறியது.
வருண் சொல்லச்சொல்ல ஆஷா, ஷாலினி, ஆருஷி மூவரும் கதையை கேட்டுக்கொண்டிருந்தார்.
"இவ எப்பவுமே இப்படித்தான் போல ஷாலு, இப்ப என்னோட லவ் புடிக்காம என்கிட்ட சண்டை போடுற மாதிரி, அப்ப லயா, விக்ரம் லவ்ல பிரச்சனை பண்ணி இருக்க போல" என்ற ஆருஷி தலையில் அங்கிருந்து ரிமோட்டை தூக்கியடித்தாள் ஷாலின்.
"அடிங் செருப்பால, இங்க எவ்ளோ சிரியஸான மேட்டர் போய்டு இருக்கு, இப்ப உன்னோட அந்த கழுசடை காதல் பத்தி தேவையாடி… ஒழுங்க அமைதியா, வாய மூடிட்டு பேசாம இருக்கணும். இல்ல மகளே செத்த நீ" என்றதும் ஆருஷி கப்பென் வாயை மூடி கொண்டாள்.
"நீங்க சொல்லுங்க வருண் அப்பறம் என்னாச்சு? லயா யார் பக்கம் தான் நின்னாங்க, நட்பா? காதலா? எது விண் பண்ணுச்சு" என்று கேட்ட ஷாலினியை பார்த்து சிரித்த வருண்.
"நியூட்ரல்" என்றான் ஒற்றை வார்த்தையில்.
"ஆமாங்க, லயா ரெண்டு பேர் பக்கமும் நின்னாங்க, த்வனிக்காக விக்ரமையும் விடால, விக்ரம்காக த்வனியையும் விடால, ரெண்டு பேர் மேலயும் ஒரு மாதிரி அன்பா இருந்தாங்க, ரியலி ஷீ இஸ் அ நைஸ் பார்சன். பட் சிலசமயம் அவங்க இதுங்க ரெண்டுக்கும் நடுவுல நடக்குற உரிமை போராட்டத்தில் மாட்டிக்கிட்டு முழி பிதுங்கி நிக்கும் போது பாக்குற எங்களுக்கே ரொம்ப பாவமா இருக்க, பட் அவங்க எல்லாத்தையும் அழக சமாளிப்பாங்க. விக்ரம், த்வனி ரெண்டு பேர்குள்ளயும் எவ்ளோ பிரச்சனை, கோவம், வெறுப்பு இருந்தாலும் அவங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப்போற ஒரே விஷயம் லயா தான். ரெண்டு பேரும் அவளுக்கு எல்லாத்தையும் செய்வாங்க, அவளுக்காக என்ன வேணும்னாலும் செய்வாங்க"
"ம்ம்ம், வேடிக்கையா இருக்கு வருண். சரி அப்பறம் என்னாச்சு?"
"ம்ம்ம் எல்லாம் நல்லா போச்சுன்னு சொல்ல முடியாது. பட் ஒரு மாதிரி நாளும் போய்டு இருந்துச்சு" என்றவன் எண்ணம் மீண்டும் கல்லூரி காலத்திற்கு சென்றது.
