நிஜம் epilogue

 



நிஜம் 40


விக்ரம் மீட்டிங் முடித்து, சீக்கிரமே வீட்டுக்கு வந்ததுவிட்டான்.


"அடியேய் சீக்கிரம்டி, எவ்ளோ நேரம் தான் குளிப்ப… நீ என்ன‌ முகத்துக்குச் சோப் போடுறீய, இல்ல சுவர்ல முகத்தை வச்சு பரபரன்னு தேக்கிறீய? இவ்ளோ நேரம் ஆகுது. என்ன தேச்சாலும் இருக்குறது தான்டி இருக்கு, சீக்கிரம் வாடி, கெளம்பணும் டைம் ஆச்சு." என்றவன் டமார் என்று கதவு திறுக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவன் மூச்சடைத்து நின்றான்.


குளித்து முடித்து, கூந்தலில் துளிதுளியாகத் தண்ணீர் சொட்டிக்கொண்டிருக்க, வெறும் டவலை மட்டுமே உடலில் சுற்றிக்கொண்டு, கோவத்தில் மூச்சுக் காற்றில் அனல் வீச, இடுப்பில் கைவைத்து, எதிரில் இருந்தவனை தீயாக முறைத்துப் பார்த்துக்கொண்டு நின்றாள் த்வனி.


"என்னடா சொன்ன நீ… நான் சுவத்துல மூஞ்ச வச்சு தேய்க்கணும்மா… என்ன செஞ்சாலும் இருக்குறது தான் இருக்குமா… எவ்ளோ தைரியம் இருந்த நீ அப்டி சொல்லுவ. என் அழகுக்கு என்னடா குறைச்சல்… காலேஜ்ல என் பின்னாடி சுத்தாத ஆளே இல்லனு உனக்குத் தெரியாது. ஏன் உன் ஃப்ரண்ட் ஒருத்தன்... அவன் பேரு என்ன? ஹான்… ரகு அது கூட எனக்கு நூல் விட்டுப் பாத்தது உனக்கும் தெரியும் இல்ல… அப்றம் எவ்ளோ தைரியம் இருந்த நீ அப்டி சொல்லுவா" என்று த்வனி இன்னும் விக்ரமை நெருங்கி செல்ல, அவனுக்கு நெஞ்செல்லாம் அடைப்பது போல் இருந்தது.


"பேசுடா பேசு… இப்ப பேசுடா…" என்ற த்வனியை உச்சி முதல் பாதம் வரை ஒரு முறை முழுதாக பார்த்தவன், 


"நீ சொன்னது எல்லாம் ஓகே தான்‌. ஆ… ஆன… இதெல்லாம் நீ முழுச டிரஸ் பண்ணிட்டு வந்து கூடச் சொல்லி இருக்கலாமே" என்றவன் குரலில் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்து,


அவனுக்கு நெருக்கமாக நின்ற த்வனி தலையைப் பின்னால் இழுத்து, புரியாமல் விக்ரம் முகத்தைப் பார்த்தவள், அப்போது தான் உணர்ந்தாள், தான் வெறும் டவலை மட்டும் கட்டிக்கொண்டு அவன் முன் நிற்பதை.


கண்கள் அங்கும் இங்கும் அலைமோத, எச்சில் விழுங்கியபடி அவனை விட்டு விலகி நின்றவள்,


"எ… என்… என்ன இப்ப? ரூம் என்னுது, புருஷனும் என்னுது.‌ நான் எப்டி வேணும்னாலும் வருவேன்‌. என் ரூம், என் புருஷன், என் உரிமை" என்று என்ன பேசுவது என்று புரியாமல் அவள் வெட்கத்தில் கண்டபடி உலற வைக்க,


விக்ரம் நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடியே அவளை நெருங்க, அவள் பின்நோக்கி நகர, சுவரில் சென்று மோதி நின்றாள்.


விக்ரம் இரு கைகளையும் சுவற்றில் உன்றி, அந்த இடைவெளியில் அவளைச் சிறை செய்து,


"மேடம் என்ன சொன்னீங்க… என் ரூம், என் புருஷன், என் உரிமைனு தானா சொன்னீங்க…" என்று ரசனையாக அவளை ஒரு பார்வை பார்த்து,


"ம்ம்ம்… என் பெட் ரூம், எம் பொண்டாட்டி, என் உரிமை" என்று அவள் இடையில் கை வைத்து அவளைத் தன்னருகில் இழுந்து, அவள் இதழ்களை நெருங்கிச் செல்ல, அவனைத் தள்ளிவிட்ட த்வனி வேகமாகப் பாத்ரூமிற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.


பயந்து ஓடிய த்வனியை பார்த்து சிரித்த விக்ரம், இழுத்து மூச்சுவிட்டு, "இன்னைக்கு இவ என்னை ரொம்பவே சோதிக்கிறாளே… கடவுளே நீதான் என்னைக் காப்பத்தணும்…" என்று தலையை அழுத்திக் கோதியவாறு அங்கிருந்து சென்றான்.


இங்கு த்வனி இதயம் வேகமாகத் துடிக்க, அவள் இயல்புக்கு வரவே வெகு நேரம் பிடித்தது. அவன் நெருங்கி நின்றது, அவனின் ரசனையான பார்வை, லேசாக அவள் இடையைத் தீண்டிய அவன் விரல்கள், என்று நடந்ததை நினைக்க நினைக்க, வெட்கத்தில் அவளுக்கு உடல் முழுவதும் சிவந்து போனது.


அழகிய மெரூன் நிறத்தில் புடவை கட்டி லேசாக ஈரமாக இருந்த முடியை மேலே மட்டும் கிளிப் செய்து முடியை தன் முதுகில் படர விட்டபடியே வந்த த்வனியின் பார்வை கண்ணாடி முன் நின்று தலைவாரிக் கொண்டிருந்த, அவளின் கொண்டவன் மேல் விழுந்தது.


இளம் மஞ்சள் நிற சட்டையும், ஸ்கை ப்ளூ கலர் ஜீன்ஸும் அணிந்து கண்ணுக்கு அழகாக நின்றவனை விட்டு பார்வையை அகற்ற முடியாமல் நின்றாள் அவனவள்.


தன்னவள் தன்னை ரசிக்கிறாள் என்ற உணர்வு விக்ரமை சிலிர்க்க வைக்க,


"அடியேய்… சைட் அடிச்சது போதும். அந்தக் கபோர்ட்ல வருணுக்கும் ஷாலினிக்கும் வாங்கின நகை இருக்கு, எடுத்து பேக்ல வை" என்றவனைப் பார்த்து உதட்டை சுழிந்து ஒழுங்கு காட்டிவிட்டு சென்றவள் கபோர்டில் இருந்து நகை பெட்டியை எடுக்க, அவள் காலுக்கு அருகில் வந்து விழுந்து ஒரு ஆல்பம். த்வனி அதை எடுத்து புரட்டி பார்க்க, அதில் விக்ரமின் சிறுவயது புகைப்படங்கள் இருந்தது.


ஒவ்வொரு படமாகப் பார்த்தவள், ஒரு ஃபோட்டோவை பார்த்ததும் பட்டெனக் கண்களை மூடிக்கொண்டாள்.


கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு விக்ரம் முன் வந்து நின்ற தவ்னி, "மிஸ்டர். ஆனழகன் கொஞ்ச நேரம் முன்ன என்னைப் பார்த்து, நான் அழகு இல்லன்னு சொன்னீங்க இல்ல" என்று விஷமமாகக் கேட்க,


"அப்ப மட்டும் இல்லடி, இப்பவும் அதையே தான் சொல்றேன். உன்னால என்னடி செய்யமுடியும்" என்று திமிராகப் பேசியவன் முன் அந்த ஃபோட்டோவை காட்டினாள் த்வனி.


அது விக்ரம் ஒரு வயது குழந்தையாக இருக்கும்போது டிரஸே இல்லாமல் எடுத்த ஃபோட்டோ. இதுநாள் வரை விக்ரம் அதை மறைத்து வைத்திருக்க, இன்று தவறான சமயத்தில் சரியாக த்வனி கையில் அது சிக்கி இருந்தது.


"ஏய் அத குடுதுடுடி… சொன்ன கேளுடி… குடுடி அதை" என்று விக்ரம் அவளைத் துரத்த,


"தரமாட்டேன் போடா… இத அப்டியோ பெருசு பண்ணி நம்ம ரூம்ல… ம்ஹும் இல்ல இல்ல நம்ம வீட்டு ஹால்ல மாட்டப்போறேனே" என்று அவள் ஓட…


"ஏய் வேணாம்டி. ஒழுங்க அத குடுத்துடு" என்று விக்ரம் அவளைப் பிடிக்க வர, அவள் சோஃபா, கட்டில் என்று அனைத்தின் மீதும் தாவி எறி ஓடி அவனுக்குத் தண்ணி காட்டியவள், ஒரு கட்டத்தில் அவன் கையில் சீக்க, அப்போது ஃபோட்டோவை கொடுக்காமல் சண்டித்தனம் செய்தவள், கால் இடரி கட்டிலில் விழு, அவள் மேலே வந்து விழுந்தான் விக்ரம்.


த்வனி தலைக்கு மேல் ஃபோட்டோவை தூக்கிப் பிடித்துக் கொண்டு தரமாட்டேன் என்று அடம்பிடிக்க, விக்ரம் முழுதாக அவள் மீது படர்ந்து இருந்தவன், அவள் கையில் இருந்த படத்தை வாங்கப் பார்க்க, ஒருசில வினாடிகள் இவர்கள் போராட்டம் தொடர, முதலில் தன்னிலை உணர்ந்தது விக்ரம் தான்.


அவள் கட்டி இருந்த புடவை கலைந்து இருக்க, அது மறைத்து வைத்திருந்த அவளின் அழகு விக்ரமின் கண்களை விரியவைக்க, முழுதாகத் தன்னிலை இழந்திருந்தான் அவளவன்.


விக்ரம் அமைதியானதை உணர்ந்த த்வனி திரும்பி விக்ரம் முகம் பார்க்க, அவன் கண்கள் சொன்ன செய்தியில் கன்னம் சிவந்து போகக் கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.


அவள் கன்னச்சிவப்பு அவள் எண்ணத்தைச் சொல்ல,

காற்றுக்கும் வலிக்காத படி, "த்வனி" என்று மென்மையாக அழைத்தான் விக்ரம்.


அவன் அவளைப் பெயர் சொல்லி அழைப்பது இதுவே முதல் முறை, த்வனி முகம் மலர, இதழ் விரிய கண்களைத் திறந்து விக்ரம் முகத்தைப் பார்க்க, அவளை முழுதாக எடுத்துக்கொள்ள, அவள் அனுமதி வேண்டி, அவன் அவள் முகம் பார்ப்பது அவளுக்குத் தெரிவாகப் புரிந்தது.


அவள் அனுமதி இல்லாமல், அவனையும் அறியாமல் போன முறை நடந்து போல் இன்னொரு முறை த்வனியை காயப்படுத்தி விடக்கூடாது என்று, தன் உணர்வுகளைக் கட்டி வைத்து, அவனைக் கட்டிக்கொண்டவளிடம் அனுமதியை வேண்டினான்.


மயக்கும் சிரிப்போடு விக்ரமை பார்த்த த்வனி,


 "டேய் விக்ரம்… காலையில லயாகுட்டி தம்பி, இல்ல தங்கச்சி பாப்பா வேணும்னு கேட்ட இல்ல… இப்ப நம்ம என்னடா பண்ணலாம். அடுத்தது பையனா? இல்ல பொண்ண? இல்ல ரெண்டுமே பெத்துகலாமா??? எனக்கு எதுவ இருந்தாலும் ஓகே தான். உனக்கு?" என்று அவள் சம்மதத்தை அழகாகச் சொல்ல, அதற்குப் பின்னும் அமைதியாக இருப்பவனா அவள் கண்வன்…


கணவன் நெஞ்சில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்த த்வனிக்கு லேசாக விழிப்பு தட்ட, மெதுவாகக் கண்விழித்து, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த விக்ரமின் முகத்தைப் பார்த்தவளுக்கு, கொஞ்ச நேரம் முன் நடந்த நிகழ்வு நினைவுக்கு வர அவள் முகம் வெட்கத்தில் அழகாய் மலர்ந்தது.


உறங்கும் விக்ரமின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி, தன் உதட்டில் வைத்து முத்தமிட, விக்ரம் அவள் கைகளைச் சட்டென இழுக்க, அவள் மொத்தமாக விக்ரம் மீது சரிந்தாள்.


"ஏன்டி முத்தம் தரதுல என்னடி கஞ்சத்தனம். என் மூஞ்சில முத்தம் தர மாதிரி உனக்கு வேற இடமே கிடைக்கலயா…" என்று அவள் இதழை விரலால் வருட, அவன் கையைத் தட்டிவிட்டாள் த்வனி.


"உதைபடுவா ராஸ்கல்… நீ எங்க வரேன்னு எனக்குப் புரியுது.‌‌ ஒழுங்க எழுந்து குளிச்சிட்டுக் கெளம்பு"


"எங்கடி கெளம்பச் சொல்ற?"


"டேய் என்னடா எங்கன்னு கேக்குற, வருண், ஷாலினி மேரேஜ் ரிசப்ஷனுக்குப் போகணும் இல்ல" என்றவளை பார்த்துச் சத்தமாகச் சிரித்தான் விக்ரம்.


"டேய் எதுக்குடா இப்டி சிரிக்கிற?"


"பின்ன சிரிக்காம என்ன செய்றது… இப்ப போய்ப் போகலாம்னு சொல்ற. கொஞ்சம் திரும்பி டைம் என்னன்னு பாருடி" என்றதும் த்வனி திரும்பி டைம்மை பார்க்க, அது மணி மூன்று என்று சொன்னது.


"டேய் மணி மூணு தானா ஆகுது. நம்ம இப்ப கெளம்பின கூட ஆறு மணிக்கு அங்க போய்டாலாம்டா" என்றவளை பார்த்து மீண்டும் சிரித்த விக்ரம்,


"அடியேய் என் அறிவாளி பொண்டாட்டி… நீ நினைக்குற மாதிரி அது மதியம் மூணு மணி இல்லடி, மிட்நைட் மூணு மணி" என்று சொல்ல, த்வனிக்கு தூக்கிவாரி போட்டது.


"எது… நைட் மூணு மணியா? என்று அதிர்ந்து பார்க்க, விக்ரம் மீண்டும் அவளை இழுத்து தன் மார்பில் போட்டுக்கொண்டு, 


"ஆமாடி ராட்சசி… மணி மூணு ஆகுது" என்று அவள் இடுப்பை கிள்ள, அவனை மூக்கு முட்ட முறைத்தாள் த்வனி.


"டேய் அங்க எல்லாரும் நம்ளா தேடிட்டு இருந்திருப்பாங்க… நம்ம பத்தி என்ன நினைப்பாங்க? அய்யோ… லயா பாப்பா என்ன பண்றளோ?" என்று புலம்ப,


"அதெல்லாம் வருணும், கதிரும் நம்மளவிடப் பாப்பாவை நல்லாதான் பாத்துக்குவாங்க, இப்ப வந்து தூங்குடி" என்று அவள் கையைப் பிடித்து இழுக்க, அவன் தலையில் நங்கென்று கொட்டினாள்.


"டேய் ஏற்கனவே ரிசப்ஷனுக்குப் போகல… இப்ப நான் உன் பக்கத்தில் வந்த அவ்ளோதான் நாளைக்குக் கல்யாணமும் கோவிந்தா தான். நம்ம இப்பவே கெளம்பலாம்." என்று அடம் பிடிக்க, விக்ரம் இழுத்து மூச்சு விட்டு,


"அடியேய் இந்த நைட்ல பேய், பிசாசு கூட டிராவல் பண்ணதுடி… உனக்கு என்ன மேரேஜ்கு தானா போகணும், கரெக்ட் டைம்கு நான் உன்னை அங்க இருக்க வைப்பேன். அதுக்குப் பதில் நீ எனக்கு என்ன தருவ" என்று குறும்பாகக் கேட்க, அவள் அவனை அடிக்கப் பாய, அப்படியே அவளை இழுத்து அணைத்துக்கொண்டான் விக்ரம்.


த்வனி புடவை தலைப்பை திருகியபடி அமர்ந்திருக்க, கார் ஒட்டியபடியே அவளை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே வந்தான் விக்ரம்.


"எதுக்குடி அந்தப் புடவைய இந்தப் பாடுபடுத்துற… என்ன வந்துது உனக்கு" என்றவனைத் தீயாக முறைத்த த்வனி,


"பண்றதையும் பண்ணிட்டு, இப்ப ஒன்னும் தெரியாத மாதிரி என்னன்னு வேற கேக்குறீய நீ… எல்லாம் உன்னால தான் போடா" என்று சினுங்கியவளை பார்த்து குறும்பாகச் சிரித்த விக்ரம்,


"நான் என்னடி செஞ்சேன்" என்று அப்பாவியாக கேட்டு, அதற்காக த்வனியிடம் இருந்து நாலைந்து அடிகளையும் பரிசாகப் பெற்றுக்ககொண்டான்.


"நேத்து எல்லாரும் நம்ம தேடி இருப்பாங்க இல்ல. இப்ப அங்க போனா… நேத்து ஏன் வர்லன்னு கேட்ட என்னடா சொல்றது."


"என்ன சொல்றதுன்னா… உண்மைய சொல்லு" என்று வேணுடுமென்றே அவளைச் சிண்ட,


"எரும… எரும்… பேச்ச பாரு பேச்ச, இப்பவே எனக்கு ஒரு மாதிரி இருக்கு, அங்க போய் அவங்க முகத்தைப் பார்த்த என்ன பண்ணுவேனோ தெர்லயே…" என்று அவள் புலம்பிக் கொண்டே வர, விக்ரம் கல்யாண மண்டப வாசலில் காரை நிறுத்தினான்.


மணமகள் அறையில் விக்ரமும் த்வனியும் நிற்க, வருண், ஷாலினி, ஆருஷி, விஜய், கதிர், லாவண்யா என்று ஆறு பேரும் அவர்கள் இருவரையும் வட்டமாகச் சுற்றியபடி நடக்க, த்வனி விக்ரம் முதுகுக்குப் பின்னால மறைந்து கொண்டாள்.


"டேய் இப்ப எதுக்குச் சினிமா கிளைமாக்ஸ் சீனல் ரவுடிங்க ஹீரோவ சுத்துற மாதிரி எங்கள சுத்துறீங்க?"


"பாத்தீங்களா கதிர், பண்றதையும் பண்ணிட்டு எப்டி நெஞ்ச நிமித்திட்டுத் தம் கட்டி போசுறான்னு"


"அதானே வருண்... யூ.எஸ்ல இருந்து நானே டைம்முக்கு கல்யாணத்துக்கு வந்து விழுந்துட்டேன். இதுங்க இந்த இருக்கச் சென்னையில் இருந்துட்டு நேத்து வர்ல… விடாத வருண். இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாத்தே ஆகணும்" என்று கதிர் எடுத்துக்கொடுக்க, த்வனிக்கு மூக்கு மேல் கோவம் வந்தது.


"ஓய் அமெரிக்கா டாக்டர், கல்யாண மாப்ள அவனே சும்மா இருக்கான் நீ ஏன் மேன் எறியும் ஃபயர்ல ஆயில் உத்துற"


"வாடி வா… தப்பெல்லாம் நீ பண்ணிட்டு கதிர் அண்ணாவ திட்றீய நீ… சொல்லுடி நேத்து ஏன் நீங்க எங்க ரிசப்ஷனுக்கு வர்ல… சொல்லுடி? எங்க கல்யாணத்தை விட அப்டி என்னடி கழட்ற வேலை உங்களுக்கு" என்று ஷாலினி இடுப்பில் கைவைத்து கோவமாக கேட்க,


விக்ரம் திரும்பி த்வனியின் முகத்தைப் பார்க்க, அவள் வெட்கத்தில் சிவந்திருந்த முகத்தை அவன் முதுகில் மறைத்துக்கொண்டாள்.


ஷாலினி வருணை பார்கக, வருண் கதிரை பார்க்க, அனைவரும் முதல் முதலில் த்வனி வெட்கப்பட்டுவதைப் பார்த்து திகைத்து நின்றனர்.


அவள் வெட்கமும், விக்ரமின் குறும்பு சிரிப்புமே அவர்கள் நேற்று ஏன் வரவில்லை என்பதை அனைவருக்கும் உணர்த்திவிட்டது.


"டேய் விக்ரம் என்னடா பண்ண எங்க புள்ளைய… பொறந்ததில் இருந்து வெக்கம்னா என்னனே தெரியாம வளர்ந்த பொண்ணை ஒரு நாள்ல இப்டி மாத்தி வச்சிருக்க… என்ன ஆச்சு எங்க புள்ளைக்கு? என்ன மந்திரம் போட்ட குழந்தைக்கு, சம்திங் ராங்" என்று கதிர் கிண்டலடிக்க,


"அதான… இப்ப த்வனிய பாக்க, அசல் பொண்ணு மாதிரியே இல்ல இருக்கு, விக்ரம் அண்ணா அப்டி என்ன பண்ணீங்க எங்க நாத்தனாரை" என்று ஷாலினி அவள் பாங்கிற்கு த்வனியை சிண்டி விளையாட, த்வனி அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் அங்கிருந்து ஓடி விட,


"ஏன்டா நீங்க நேத்து வர்ல" என்று கேட்ட சௌந்தர்யாவின் கேள்விக்குக் கூடப் பதில் சொல்லாமல் த்வனி பின்னாலேயே ஓடினான் விக்ரம்.


"அம்மா அவனுக்கு நேத்து ரொம்ப இம்பார்ட்டெண்ட் மீட்டிங் இருந்துச்சு, அதான் அவன் வர்ல… விடுங்கம்மா அதான் கல்யாணத்துக்கு வந்துட்டானே"


"என்னமோ வருண்… எல்லாம் நல்லபடியா நடந்த சந்தோஷம் தான்" என்ற சௌந்தர்யா லயாவை தூக்கிக்கொண்டு செல்ல, மூன்று ஜோடிகளும் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.


"மூகூர்த்த நேரம் நெருங்க, ஷாலினி வருண் திருமணம் மனநிறைவோடு நடந்து முடிய, அனைவரும் இணைந்து இருக்க, அந்த அழகிய காட்சி அவனைவரின் மனதோடு சேர்த்துக் கேமராவிலும் பதிவானது.


இனி அனைவரின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் நாமும் செல்வோம்.



அன்புடன்,


ரூபாவதி