நிஜம் 39

 



நிஜம் 39


அழகான நீரோடை போல் விக்ரம், த்வனி வாழ்க்கை சலசலவெனச் சத்தமாக ஓடிக்கொண்டிருந்தது.


இருவருக்கும் இடையில் நாளுக்கு நாள் அன்பும் புரிந்தாலும் எந்த அளவுக்கு வளர்ந்ததோ, அதோ அளவு வம்பு, சண்டையும் வளர்ந்தது.


ஆஷா சொன்னது போல் அடிதடியாக, அழகாக இல்லறத்தை நடத்திய இருவரும் தாம்பத்தியத்தை மட்டும் தள்ளி வைத்தனர். திருமண முடிந்த இருவரும் இணைந்தே ஆகவேண்டும் என்பதை விடுத்து, இருவருக்கும் மனம் இசையும் வேளையில் அது இயல்பாக நடக்கட்டும் என்று இருந்துவிட, அன்பும் வம்புமாய் அழகாக அவர்கள் நாட்கள் நகர ஆரம்பித்தது ஒரு வருடம் ஓடி இருந்தது.


"டேய் லூசு, இன்னைக்கு அந்த வீணா போன வருண் வருதுன்னு சொன்னீயே எப்ப வருதும் அது…" என்று மரியாதையாகக் கேட்ட தன் மனைவியைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டான் விக்ரம்.


"ஏன்டி கேக்குறதை கொஞ்சம் ஒழுங்க கேட்ட தான் என்னவாம். அவன் தான் என் தங்கச்சி தங்கச்சின்னு டி‌.ஆர் மாதிரி உயிரையே விடுரான். நீ அவனுக்கு மறந்து கூட மரியாதை குடுக்க மாட்டுங்கிற… இன்னும் ரெண்டு நாள்ல அவனுக்கு ஷாலுக்கும் கல்யாணம், உன் ஃப்ரண்ட் புருஷனுன்ற முறைக்காது அட்லீஸ்ட் கொஞ்சம் பாத்து பேசுடி."


"டேய் நான் உனக்குப் பலமுறை சொல்லிட்டேன்‌. ஜெகன் விஷயத்தில் நீ என்ன வேணும்னா சொல்லு, இல்ல செய் நான் எதுவும் கேக்க மாட்டேன். ஆனா, எனக்கும் என்ற கதிர், வருண் அண்ணாச்சிகளுக்கு நடுவுல வராதன்னு.‌‌.. எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். உனக்கு என்னடா வந்தது…" என்று கையில் கரண்டியோடு இடுப்பில் கைவைத்து அவனை முறைத்தபடி நின்ற த்வனியை பார்த்து ரெண்டடி பின்னால் சென்றவன்,


"அதுக்கில்லடி ராட்சசி… என்ன இருந்தாலும் நீ இப்டி பேசுறது ஷாலுக்குக் கஷ்டமா இருக்குமேன்னு தான்" என்று இழுத்தவன், அவள் அசந்த நேரம் அவள் கையில் இருந்த கரண்டியை பிடிக்கக் கொண்டான்.


"அதெல்லாம் அவ ஒன்னு நெனைக்க மாட்ட, அப்டி நெனச்சான்னு வையேன், அப்றம் நாத்தனார் கெடுமைனா என்னன்னு அவ தெரிஞ்சிக்குவ" என்று சொல்லி த்வனி சிரிக்க,


"இந்த ஜென்மத்தில் அந்தத் தப்பை நான் செய்ய மாட்டேன் என் அன்பு அண்ணியார் அவர்களே" என்று ஷாலினி குரல் கேட்டு, த்வனி திரும்பி பார்க்க, அங்கு வருண், ஷாலினியோடு, ஐந்து மாத வயிறு முன்னே தள்ளிக்கொண்டு இருக்க, தன் கணவன் விஜய்யின் கையைப் பிடித்தபடி நின்றிருந்தாள் ஆருஷி.


"ஏய் வாங்க வாங்க… உள்ள வாங்க" என்று கத்தியபடி த்வனி வாசலுக்கு ஓடி வந்தாள்.


நால்வரும் ஹாலில் வந்து உட்கார, "வாங்க வாங்க, எப்ப வந்தீங்க?' என்று வந்த விக்ரம் கையில் இருந்த குட்டி லயா ஆசையாக வருணிடம் தாவ, அவளைக் கையில் வாங்கிக் கொண்டான் வருண்.


"எல்லாம் உங்க பொண்டாட்டி ரொம்ப மரியாதைய வருண் எப்ப வரும்னு கேட்டாங்களே அப்பவே வந்துட்டோம்" என்று ஆருஷியின் கணவன் வருண் காலைவர, விக்ரம் த்வனி முறைக்க, அவள் திருதிருவென முழித்தபடி நாக்கை கடித்துக்கொண்டு நின்றாள்.


"சரி த்வனிமா எதுக்கு அண்ணைத் தேடினன்னு சொல்லவே இல்லயே?" என்று வருண் கேட்க, த்வனி சட்டெனச் சமையலறைக்குள் ஓடியவள், ஒரு தட்டில் சூட சூட மிளகாய் பஜ்ஜியை எடுத்து வந்து வருண் முன் நீட்டினாள்.


"உனக்கு மிளகா பஜ்ஜி ரொம்பப் புடிக்கும் இல்ல. அதுவும் சூட இருந்த ரொம்பப் புடிக்கும், அதான் எங்க நீ வர்ரதுக்குள்ள ஆறி போய்டுமோன்னு, நீ எப்ப வருவேன்னு கேட்டேன்." என்றவளை பார்த்து வருணுக்கு உள்ளம் நெகிழ்ந்து.


என்ன தான் ஜெகன் த்வனியின் உடன்பிறந்த அண்ணனாக இருந்தாலும் த்வனி மனதார தன் சகோதரனாக நினைப்பது கதிர், வருண் இருவரை தான்.


த்வனி, விக்ரம் குழந்தையைத் தொட்டிலில் போட்டு 'லயா' என்று பெயர் வைத்தது கூடக் கதிரும், வருணும் தான். இதில் ஜெகனுக்குக் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும், தன் ஒரு அண்ணனாக இருந்து த்வனிக்கு எதுவும் செய்யவில்லை என்ற உண்மை உறுத்த அமைதியாக இருந்துவிட்டான்.


இதனால் ஆஷா மனம் வருந்த கூடாது என்று த்வனி ஆஷாவிடம் மன்னிப்பு கேட்க, 


ஆஷாவோ, "நீ செஞ்சதுல எந்தத் தப்பும் இல்ல த்வனி. கதிர் சார், வருண் தப்பி ரெண்டு பேருக்கும் தான் உனக்கு அண்ணன்னு சொல்லிக்கிற தகுதி இருக்க, இவரு உன் கூடப் பொறந்தாரு அவ்ளோதான். ஆன, ஒரு அண்ணனா அவர் கடமை எதையும் அவர் செய்யலயே.‌.. நீ செஞ்சது தான் த்வனி சரி" என்றுவிட்டாள்.


குட்டி லயாவுக்கு மொட்டை அடிக்கும்போது கூட, சம்பிரதாயத்துக்கு ஜெகன் மடியில் வைத்து முடியிறக்கியவள், வருணை தாய்மாமனாக இருக்க வைத்து, அவன் மடியில் குழந்தையை உட்கார வைத்து காது குத்த சொல்ல, வருணுக்குக் கண்கள் கலங்கி விட்டது.


வருண் த்வனிக்கு அண்ணன் என்ற உணர்வை கொடுக்க, அவள் அவனுக்குத் தன் குழந்தையின் தாய்மாமன் என்ற உறவையும் உரிமையைக் கொடுத்து அவனைத் தன் குடும்பத்தில் இணைத்துக்கொண்டாள்.


த்வனி, வருண் இருவருக்கும் இடையே இருக்கும் பாசம் அனைவருக்கும் நன்கு புரிந்து இருந்தது. அதனாலேயே த்வனி வருணை இப்டி பேசுவதை யாரும் தப்பாக எடுத்துக் கொள்வதில்லை. மீறி யாராவது த்வனியை எதவது சொன்னால் வருண் அவர்களை உண்டு இல்லை என்று செய்துவிடுவான். அதனாலேயே யாரும் வாய்திறப்பதே இல்லை. ‌


"என்ன த்வனி எல்லாம் பஜ்ஜியும் உன் பழைய அண்ணாக்கு தானா? இந்தப் புது அண்ணாக்கு ஒன்னு இல்லயா… நானும் உன் ஃப்ரண்ட் ஆருஷி புருஷன் தாம்மா. எனக்கு ஒன்னும் இல்லயா"


"அதெல்லாம் ஒன்னு இல்ல விஜய், உங்களுக்குத் தான் மிளகா பஜ்ஜி புடிக்கதே… அதான் தரல… உங்களுக்காக லட்சுமி ஆன்ட்டி உள்ள சூட சூட உளுந்து வடை போட்டுட்டு இருக்காங்க. உங்களுக்குத் தான் அது ரொம்பப் புடிக்குமே இருங்க எடுத்துட்டு வரேன்" என்று சமையலறைக்குள் சென்ற த்வனி ஜூஸ், வடை, பஜ்ஜி என்று விதவிதமான உணவை எடுத்து வந்து அவர்கள் முன் வைத்தாள்.


"அப்றம் வருண் எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸும் முடிஞ்சுது இல்ல… நாளைக்கு எப்ப கெளம்பனும்" என்று கேட்டான் விக்ரம்.


"எல்லாம் முடிஞ்சுது விக்ரம். நாளைக்குக் காலையில் வேன்ல நம்ம எல்லாரும் இங்க இருந்து கெளம்பனும்."


"கதிர் எப்ப வருவேன்னு சொன்னாரு வருண்?"


"அவரு ரென்யா அப்பா, அம்மா கூட ரெண்டு நாள் இருந்துட்டு அப்டியே அவங்களையும் கூட்டி நேர மண்டபத்துக்கு வந்துடுரேன்னு சொல்லிட்டாரு த்வனி‌. ஜெகன் வெளியூர் போயிருக்காரு, சோ ஆஷா சிஸ்டரும் விஷணும் கூட நாளைக்கு நம்ம கூடத் தான் வராங்க"


"நாளைக்கு எத்தனை மணிக்குடா கெளம்பனும்.?"


"ஒன்பது மணிக்கு விக்ரம்"


"ஒன்பது மணிக்க" என்று யோசித்த விக்ரம், "டேய் நாளைக்கு முக்கியமான மீட்டிங் இருக்குடா. நீ வேற லீவ்ல இருக்க, கண்டிப்பா நான் அட்டென் பண்ணி ஆகணும்டா… நீ ஒன்னு பண்ணு நீங்க எல்லாரும் கெளம்புங்க, நான் மீட்டிங் முடிச்சிட்டு நேர அங்க வந்துடுறேன்" என்றான்.


"சரிடா, அப்ப நாங்க அம்மா, த்வனி, பாப்பாவை கூட்டிட்டு போறோம் சரியா…" என்க,


"இல்ல வருண் எனக்கும் நாளைக்கு ஒரு முக்கியமான வீடியோ கால் இருக்கு… சோ நீங்க போங்க, நாங்க விக்ரம் கூட வரோம்" என்றவளை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்த ஷாலினியும் ஆருஷியும் திரும்பி ஒருவரை பார்த்து ஒருவர் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டனர்.


"என்ன இது ரெண்டு பேரும் இப்டி பண்றீங்க" என்று வருண் முறைக்க,


"நீ விடு வருண், இவங்க எப்ப வராங்களோ வரட்டும். நாளைக்கு நானும் பாப்பாவும் உங்க கூடவே வேன்லயே வரோம்." என்றார் சௌந்தர்யா.


"ஏம்மா நம்ம எல்லாம் ஒன்ன கார்ல போலாம்மா" என்ற விக்ரமை பார்த்து மென்மையாகச் சிரித்த சௌந்தர்யா,


"இல்லடா வேணாம். இங்க இருந்து மண்டபத்துக்கு மூணு மணி நேரம் டிராவல் பண்ணணும். குழந்தைக்குக் கார்ல அவ்ளோ நேரம் டிராவல் பண்றது கஷ்டம இருக்கும். அதோட வேன்ல நெறய பேர் கூடப் போன அவளுக்கும் நல்லா இருக்கும் இல்ல. அதான் சொல்றேன்" என்க, விக்ரம் தயங்கினான்.


விக்ரம் இப்போதெல்லாம் ஒரளவு சௌந்தர்யாவை புரிந்து நடந்தான். நடந்ததில் அவர் தவறு எதுவும் இல்லை‍, ஒரு தாயாக அவர் செய்தது சரி என்று அவனுக்குப் புரிய கொஞ்ச கொஞ்சமாகச் சௌந்தர்யாவிடம் சகஜமாகப் பேச தொடங்கினான்.



"அவன் என்னம்மா சொல்றது, நாளைக்கு உங்களையும் என் மருமகளையும் நான் கூட்டிட்டு தான் போப்போறேன். காலையில் ரெடிய இருக்கம்மா"



"டேய் வருண் சும்மா இருடா… ம்மா நீங்க சொல்றது சரிதான். ஆனா, பாப்பா நாங்க இல்லாம இருப்பாளா?" என்று விக்ரம் யோசிக்க,


"டேய் டேய் ரொம்பப் பேசாதடா… அவ பேருக்கு தான் உன் பொண்ணு. ஆனா, அவளுக்கு இந்த மாமாவை தான் ரொம்பப் புடிக்கும். உங்க ரெண்டு பேரையும் விட நாங்க லயாவை நல்லா தான் பாத்துக்குவோம். என்னடா லயாகுட்டி மாமா சொல்றது கரெக்ட் தானா" என்று வருண் குழந்தையைக் கேட்க,


"லயா ஒன்றிரண்டாக முளைத்திருந்த தன் பால் பற்களைக் காட்டி சிரித்தபடியே தலையை ஆட்டினாள்.


"பாருடா என் மருமகளே எங்க கூட வர ஒத்துக்கிட்ட… அப்றம் நீ என்னடா வேணாம்னு சொல்றது"


"அப்ப சாமி நான் ஒன்னும் சொல்லல… நீயாச்சு அவளாச்சு… என்னை விடுடா" என்று கையெடுத்து கும்பிட்டான் விக்ரம்.


"அது அந்தப் பயம் இருக்கட்டும்" என்று வருண் சொல்ல, அனைவரும் சிரித்தபடியே அங்கிருந்து கிளம்பினர்.


மறுநாள் காலை ஒன்பது மணிபோல் வருணும் ஷாலினியும் விக்ரம் வீட்டுக்கு வந்தனர்.


லயா, வருண் மடியில் உட்கார்ந்து கொண்டு தன் மழலை மொழியில் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, வருண் குழந்தைக்குப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தான்.


"என்ன வருண், என்ன சொல்ற உன்ற மருமக" என்ற கேட்டபடி த்வனி காஃபியை அவன் முன் வைக்க,


"ம்ம்ம்… இவளுக்குத் தனியா விளையாட ரொம்பப் போர் ஆடிக்குதாம். கூட விளையாட தம்பி, இல்ல தங்கச்சி பாப்பா வேணும்னு சொல்ற" என்று த்வனியையும் விக்ரமையும் பார்த்து சொல்ல, ஷாலினி வாய்மூடி சிரிக்க,


த்வனி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்தவள் திரும்பி விக்ரமை பார்க்க, அவனும் அந்த நேரம் இவளை பார்க்க, த்வனி அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் வெட்கத்தில் இமைகளைத் தாழ்த்திக் கொண்டாள்.


சௌந்தர்யா குழந்தையைத் தூக்கிக்கொண்டு வருணுடன் கிளம்பி இருக்க, விக்ரம் திரும்பி த்வனியை பார்த்தான்.


அவள் விழிகள் இப்போது பூமி மீது தான் இருந்தது.


"அடியேய் ராட்சசி பாத்துடி… கீழ பாத்துட்டே நடந்து எங்கயாது விழுந்து சில்ற வாங்கி வைக்காத" என்று அவளைப் பார்த்து சிரித்தபடியே வெளியே செல்ல, த்வனி அருகில் இருந்த குஷனை தூக்கி அவன் மீது எறிந்தாள்.


அதை அழகாகக் கேட்ச் பிடித்த விக்ரம், "போடி போய் டிரஸ் எல்லாம் எடுத்து பேக் பண்ணி ரெடிய வை. அப்டியே அந்த இல்லாத வீடியோ கால் மீட்டிங்கை அட்டென் பண்ணு" என்ற கண்ணடித்துச் சிரித்தபடியே காரை எடுத்துக்கொண்டு செல்ல, தன் கள்ளத்தனத்தைக் கணவன் கண்டு கொண்டது தெரிந்து நாக்கை கடித்துக்கொண்டு சிரித்தாள் த்வனி.


த்வனி அவள் புடவைக்கு மேட்ச் ஆகும்படி விக்ரம் மற்றும் லயாவுக்கு உடைகளை பார்த்து பார்த்து தேர்வு செய்து சூட்கேஸில் எடுத்து வைத்தவளுக்கு, அப்போது தெரிந்திருக்காது, இன்று மாலை அவர்கள் இருவரும் வருண், ஷாலினி திருபண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்லப் போவதில்லை என்று… 


காட் மஸ்ட் பீ கிரேசி… என்ன நடுக்கும் என்று பொருத்திருந்து பாப்போம்.