நிஜம் 38




நிஜம் 38


த்வனி ஒரு நிமிடம் தூங்கும் மகளின் முகத்தைக் கண்களில் தேக்கிக்கொண்டவள், "பாப்பாவை நல்லா பாத்துக்க, நீயும் ஒழுங்க சாப்டு" என்று விக்ரமை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் தரையைப் பார்த்து சொல்லிவிட்டு சென்றவள், இடது கை கதவின் கைப்பிடியில் இருக்க, அவள் வலது கை விக்ரமின் கைப்பிடிக்குள் இருந்தது.


த்வனி திரும்பி அவனைப் பார்க்காமல் அமைதியாக நிற்க,


"நான் அப்டி என்னடி பாவம் பண்ணேன். ஏன் எல்லாரும் என்னை விட்டு விட்டு போறீங்க… முதல்ல அம்மா, அப்றம் ரென்யா, இப்ப நீயும் போற இல்ல… ஏன் உங்க யாருக்குமே என்னைப் புடிக்கலிய? நான் அப்டி என்ன பாவம் செஞ்சேனு எல்லாரும் என்னை விட்டு விலகி போறீங்க" என்று உயிர் இல்லாமல் வந்த விக்ரமின் வார்த்தைகள் த்வனியை உயிரோடு வதைக்க, கண்களை இருக்க மூடி, உதட்டை கடித்து, அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக நின்றாள்.


விக்ரம் தன் பிடித்திருந்த அவள் கையில் அழுத்தத்தைக் கூட்டி, 


"போகாதடி… நீயும் என்னைவிட்டு போய்ட்டா எனக்குன்னு யாருமே இல்லடி… பாப்பாவோட நானும் உன்னோடவே இருக்குறேனே ப்ளீஸ்… நீ என்னைவிட்டு போன நான் அநாதை ஆகிடுவேன்டி" என்றவன் வார்த்தைகள் முடிவு பெறும் முன் அவனைத் தன் நெஞ்சோடு வாறி அணைத்திருந்தாள் த்வனி.


அவனை அணைதிருந்தவள் கைகள் மேலும் மேலும் இறுக்க, விக்ரம் கண்ணில் நீரோடு அசையாமல் அமைதியாக நின்றான்.


த்வனி அவனை அணைத்தபடியே, தலையை இடவலமாக ஆட்டி, "போகமாட்டேன்டா… உங்க ரெண்டு பேரையும் விட்டு எங்கயும் போகமாட்டேன். எப்பவும் போகமாட்டேன்" என்றவள் வார்த்தைகள் காதில் கேட்டது தான், காற்று கூடக் கடக்க முடியாதபடி, அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான் விக்ரம்.


"என்ன மாப்ள நாங்க உள்ள வரலாமா…" என்ற வருண் குரல் வெளியே இருந்து கேட்க,


"வெக்கம், மானம் இருந்த உள்ள வராத" என்ற த்வனியின் குரல் உள்ளிருந்து கேட்டது.


"என்ன வருண் இது, இவ இப்டி சொல்லிட்டா" என்ற கதிரை பார்த்துச் சிரித்த வருண்‌,


"ஆமா டாக்டரே நமக்கு அதெல்லாம் இருக்க என்ன?"


"ச்சீ ச்சீ… எப்ப இதுங்க ரெண்டு கூட பழக ஆரம்பிச்சோமோ அப்பவே தான் அதெல்லாம் நமக்கு இல்லன்னு முடிவகிடுச்சே…"


"அட விடுங்க டாக்டரே… தேவை இல்லாத அன்வாண்டட் திங்ஸ் எல்லாம் நமக்கு எதுக்கு… அவ சொன்ன ரெண்டும் தான் நமக்கு இல்லயே… அப்றம் என்ன வாங்க உள்ள போவோம்" என்ற வருணோடு கதிர், ஷாலினி, ஆருஷி உள்ளே சென்றார்.


"ஏய் இங்க இத்தனை பேர் நிக்குறோம் கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாம ரெண்டு பேரும் இப்டி கட்டிக்கிட்டு நிக்குறீங்களே, ச்சீ தள்ளி நில்லுங்க."


"ஹலோ மிஸ்டர் அமெரிக்கன் ரிடன். நான் என்ன யாரையோவ கட்டிட்டு நிக்குறேன். எம் புருஷனை தான கட்டிட்டு நிக்குறேன். உங்களுக்கு எங்க எரியுதாம். அதுக்குத் தான் வெக்கம், மானம் இருந்த உள்ள வராதீங்கனு சொன்னேன்." என்றவளை கதிர் முறைக்க,


"ஹான் வாங்க சௌந்தர்யாம்மா" என்று வருண் சொல்ல, ஷாக் அடித்தது போல் விக்ரம், த்வனி இருவரும் விலகி நின்றனர்.


"அது அந்தப் பயம் இருக்கட்டும். எப்டி எங்க ப்ளான்." என்று வருண் சட்டை கலரை பிடித்து இழுத்து, அவன் தலையில் நமக்கென கொட்டினாள் த்வனி.


"ஆஆஆ" என்று தலையைத் தடவிக்கொண்ட வருண், "ஏய் எதுக்கு இப்ப என்னைக் கொட்டுனா?"


"கொட்றத… நல்ல பெரிய கட்டைய எடுத்து தலையிலயே போடனும். எதுக்குடா விக்ரம்கு ரொம்ப உடம்பு முடியல, சீரியஸ்னு சொன்ன? நான் எவ்ளோ பயத்துடேன் தெரியுமா… அடிச்சுப் புடிச்சி ஓடி வந்தேன்."


"அதுக்கு நீ அடிக்கணும்னா, தோ நிக்குறாரு பாரு டாக்டர் அவர அடி… இந்த மிஷன்ல அவர் தான் எங்க தல" என்று கதிரை கோர்த்துவிட… த்வனி கதிரை முறைக்க,


வருணை திரும்பி பாரத்த கதிர், 


"ஏய் மேன்… நல்லா பண்ற மேன் நீ"


"எதுக்குக் கதிர் இப்டி பண்ண? என்று த்வனி இடுப்பில் கைவைத்து முறைக்க,


"பின்ன வெறும் ரெண்டு நாள் கூட உங்க ரெண்டு பேரால பிரிஞ்சு ஒருத்தரை விட்டு ஒருத்தரால இருக்க முடியல… இதுல டிவோஸ் பண்றாங்கலாம் டிவோஸூ… அதுக்குத் தான் இருந்த அதிர்ச்சி வைத்தியம்… எப்டி எங்க ப்ளான்…"


"ஏய் கதிர், அப்ப இவ உங்க கூட யூ.எஸ்க்கு வந்து அங்கயே இருக்கப்போறான்னு சொன்னது" என்ற விக்ரம் கேட்க,


"அதுவும் பார்ட் ஆப் த மிஷன் தான் விக்ரம்" என்று குலாகச் சொல்ல,


"எது… என்ன கதிர் நீங்க… நீங்க சொன்னதைக் கேட்டு நான் எவ்ளோ பயத்துட்டேன் தெரியுமா… எங்க இவ நெஜமாவே என்னை விட்டு போய்டுவாளேன்னு நெனச்சு, எனக்கு உயிரே போய்டுச்சு"


"ஏய் என்னப்பா இது… நான் எப்ப யூ.எஸ் போறேன்னு சொன்னேன். எல்லாரும் சேர்ந்து ஒரே பொய் பொய்யச் சொல்லி இருக்கீங்க. கூட்டு களவாணிகளா…" என்று த்வனி அனைவரையும் முறைக்க,


"எது கூட்டு களவாணிய… பாருங்க டாக்டர் தல… இவங்களைச் சேர்த்து வச்சதுக்கு இவ நம்மைக் களவாணினு சொல்ற"


"விட்ற விட்ற… பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். சண்டையில் கிழியாத சட்டை இல்ல எங்க இருக்கு ஷாலும்மா. எப்டியே இதுங்க ரெண்டையும் பிக்-கப் பண்ணி விட்டாச்சு. நம்ம கடமை முடிஞ்சிது. வாங்க நம்ம போவோம். இதுங்க எப்டியாது போய்த் தொலையாட்டும்" என்று அந்த அறையை விட்டு வெளியேறிய நால்வர் முகத்தோடு, மனதும் நிம்மதியில் மகிழ்ந்தது. 

இனி இருவருக்கும் பிரிவே இல்லை என்பதை உணர்ந்து.


மொட்டை மாடி சுவற்றில் கால்களைத் தொங்கப் போட்டுக் கொண்டு, கொலுசொலி சிணுங்க கால்களை ஆட்டியபடி நிலவை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த த்வனியை ஒரு அமைதியான மென்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்.


"நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும்" என்ற விக்ரமை திரும்பி பார்த்து, என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தினாள் த்வனி.


"எல்லாரும் சொல்றாங்க நான் உன்னை லவ் பண்றேன்னு… நீயும் அப்டி தான் நினைக்குறீய?" என்ற விக்ரம் முகத்தை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்த தவ்னி,


"நான் அப்டி நினைப்பேன்னு உனக்குத் தோணுத?"


"கேள்வி கேட்ட பதில் சொல்லி பழகுடி… மறுபடியும் கேள்வி கேக்காத" என்றவனை முறைத்தபடி மீண்டும் நிலாவின் மீது தன் பார்வையைத் திரும்பியவள்,


"நோ… இப்ப மட்டும் இல்ல… எப்பவும் உனக்குக் காதலின்னா அது என்னோட" என்றவள் சற்று பொறுத்து, "உன்னோட ரென்யா மட்டும் தான். அந்த இடம் அவ ஒருத்திக்கு மட்டும் தான். அந்த இடத்துக்கு வேற யாரும் வரமுடியாது, வரக்கூடாது…" என்று உறுதியாகச் சொன்னவள் திரும்பி விக்ரமை அழுத்தமாக பார்த்து, "நானும் கூடத் தான். அந்த இடம் அவளுக்குத் தான். என்னோட லயா இருந்த இடம் அவளுக்கு மட்டும் தான். உன் மனசுல காதல்ன்னா அது உன்னோட ரென்யா மட்டும் தான்" என்றவளை பெருமையாகப் பார்த்தான் விக்ரம்.


"உனக்குக் கஷ்டம இல்லயடி. உன் புருஷன் மனசுல இன்னொருத்தி இருக்கான்னும் போது உனக்குக் கஷ்டம இல்லயா?" என்றவனைப் பார்த்து அழகாய் சிரித்த த்வனி,


"உங்க காதலுக்கு உயிருள்ள சாட்சிடா நான். நான் எப்டி அப்டி நினைப்பேன். எனக்கு விக்ரமை புடிக்காது. ஆனா, என்னோட லயாவோட தேவ்வோட காதல் மேல எனக்கு நிறைய மரியாதை இருக்கு. சுருக்கம சொல்லணும்னா… உன் காதலின் காதலி நான்" என்று கண் சிமிட்டி விக்ரம் முகத்தைப் பார்த்து சிரிக்க,


"டூ யூ லவ் மீ?" என்று விக்ரம் கேட்ட கேள்வியில் அவள் சிரிப்பு மறைய, கால்கள் காற்றில் அப்படியே நின்றது.


"புரியல…"


"உனக்குப் புரியும்" என்று விக்ரம் அழுத்தமாகச் சொல்ல,


த்வனி இல்லை என்று தலையாட்டினாள்.


"நீ என்னை விரும்புறீயான்னு கேக்றேன்?"


"இதுக்கு நான் பதில் சொல்லணுமா? இல்ல உண்மையைச் சொல்லணுமா?" என்றவளை பார்த்து சிரித்த விக்ரம்,


"சரி முதல்ல பதிலையே சொல்லு" என்றான்.


"எனக்கென்ன கிறுக்கடா… போயும் போயும் உன்ன லவ் பண்ண" என்று அவள் சத்தமாகச் சிரிக்க, விக்ரம் அவளை முறைத்தான்.


"சரி இப்ப உண்மைய சொல்லு" என்று விக்ரம் கேட்க, த்வனியின் முகத்தில் இருந்த சிரிப்பு அப்படியே அவள் இதழ்களுக்குள் எங்கோ சென்று மறைந்தது விட, அங்கிருந்து எழுந்து செல்ல பார்த்தவள், கையைப் பிடித்து நிறுத்தினான் அவள் கணவன்.


"அப்ப நீ என்னை லவ் பண்ற இல்ல?" என்றவன், கீழே குனிந்திருந்த த்வனியின் தாடையைப் பிடித்து நிமிர்த்தி அவள் முகம் பார்க்க, அவள் கண்களில் கண்ணீர் துளிகள் மையமிட்டு இருந்தது.


விக்ரம் அவள் கண்களைத் துடைத்துவிட, அவனைச் சட்டென இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் த்வனி.


"நா… நான்… உன்னை லவ் பண்ணா… அது நான் என் லயாக்குத் துரோகம் பண்ற மாதிரி ஆகிடுமோன்னு பயம இருக்குடா." என்று கதறியவள் முதுகை மெதுவாகத் தடவி அவன் சமாதானம் செய்ய, அவள் அவன் நெஞ்சில் சாய்ந்தபடி தேம்பி தேம்பி அழுதுகொண்டு இருந்தாள்.


"இதெல்லாம் உன்னால தான். எல்லாத்துக்கும் நீதான்டா காரணம். நீ ஏன்டா எங்க வாழ்க்கையில் வந்த? நீ ஏன் லயாவை லவ் பண்ண? நீ ஏன் என்ன கல்யாணம் பண்ண? எதுக்குடா நீ என்மேல இவ்ளோ அன்பா இருக்க?" என்றவள் அவன் மார்பில் பட்டு பட்டென அடிக்க, விக்ரம் அவள் கைகளைப் பிடித்து இழுத்து அணைத்துக்கொண்டான்.



"உனக்குத் தெரியுமா விக்ரம். என் அம்மா செத்து போனதுக்கு அப்றம் எனக்குனு யாருமே இல்லாத மாதிரி ஆகிடுச்சு. அப்றம் தான் லயா என் லைஃப்ல வந்த… அவ என்மேல உண்மையான பாசத்தோட தான் இருந்த… ஆனா, அது ஒருவிதமான குழந்தையோட லவ் மாதிரி. லயா அவ அம்மாவை எந்த அளவு நேசித்தாலே அதே மாதிரி தான் என்னையும் நேசிச்ச… சொல்லப்போனால் அவ என்னை ஒரு அம்மா மாதிரி தான் பாத்த, எனக்கும் அவ ஒரு வளர்ந்த குழந்தைய தான் தெரிஞ்ச… அதான் அவளை நான் என் கண்ணுக்குள் வச்சு பாத்துக்கிட்டேன்‌. ஆனா, என்னோட மனசுல மட்டும் அம்மான்ற இடம் வெறுமையாவே தான்டா இருந்தது" என்று அவன் நெஞ்சில் சாய்ந்தபடியே நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், "நீ என் வாழ்க்கையில் வர வரைக்கும்" என்றாள் தன் அடிமனதில் இருந்து.


"ஆமாடா… நீ என் லைஃப்ல வந்த அப்றம் எனக்கு ஒரு நாள் கூட அம்மா இல்லன்ற குறை தெரியவே இல்ல… ஏன்னா? நீ என்னை அப்டி பாத்துக்கிட்ட…

யூ நோ விக்ரம்… அம்மாக்கு அடுத்து எனக்குச் சோறு ஊட்டி விட்ட முதல் ஆள் நீதான்… அதுவும் நான் சொல்லாமலே, என் முகத்தைப் பாத்தே, எனக்குப் பசிக்குது புரிஞ்சு சாப்பாடு எடுத்துட்டு வருவா… நான் வேணும்னே விம்புக்கு பசிக்கலனு சொன்னா கூட, கட்டாயப்படுத்தி எனக்கு ஊட்டி விடுவா… சில நேரம் நீ ஊட்டி விடணும்னே நான் சாப்ட மாட்டேன்னு விம்பு பண்ணணுவேன் தெரியுமா… நான் கன்சீவ்வான நாள்ல இருந்து நீ என்னை அப்டி பாத்துக்கிட்ட. ஆனா, அப்ப நீ அதெல்லாம் குழந்தைக்காகச் செய்றேன்னு தான்டா நெனச்சேன். ஆனா, டெலிவரிக்கு அப்புறம் நீ எனக்குச் செஞ்சது எல்லாம் சத்தியமா சொல்றேன்டா, என்னைப் பெத்த அம்மா அந்த இடத்தில் இருந்திருந்த கூட ஒரு கட்டத்தில் கண்டிப்பா முகத்தைச் சுழிச்சிருப்பாங்க. ஆனா, நீ கடைசி வரைக்கு அதே அன்போட இருந்தியேடா… ஒரு கல்லு என்னோட இடத்தில் இருந்திருந்தால், அது கூட உன்னை விரும்பி இருக்குமே… நான் வெறும் உயிரும், உணர்வும் உள்ள மனுஷி தானாடா" என்று கதறி அழதவள்,


"நான் லயாக்குத் துரோகம் பண்ணிட்டேன். நா… நான் உன்ன விரும்பி இருக்ககூடாது" என்று மீண்டும் அழ விக்ரம் கண்களும் கலங்கியது.


"இல்லடி நீ லயாக்குத் துரோகம் செய்யல… நீ அவ இடத்துக்கு வர பாக்கலடி… அதுக்குப் பெரிய சாட்சி நம்ம பாப்பா தான். காலம் பூர நம்ம நல்லா வாழ்றதை நம்ம கூட இருந்து பாக்க ஆசபட்டு தான்டி ரென்யா நமக்குக் குழுந்தைய பிறந்திருக்கா… நீ அவளுக்கு எந்த துரோகமும் செய்யல புரிஞ்சிக்கோ... ரென்யா என்னோட காதல், நீ என்னோட வாழ்க்கை. அவ என்னோட, நம்ளோட அழகான நினைவு… அது நம்ம உயிரோட கலந்து இருக்கு. ஆனா, உனக்கு நானும், எனக்கு நீயும் உண்மையான உயிர் உள்ள நிஜம்டி.‌.. நமக்குள்ள இருக்க இந்த உறவு நிஜம். என் லைஃப்ல அவ இடத்துக்கு மட்டும் இல்ல, உன்னோட இடத்துக்கும் வேற யாரும் வரமுடியாது." என்று அவளைத் தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தி, அவள் முன் தன் கையை நீட்டி,


"இஷ்டமே இல்லாம இந்த உறவு சேந்தோம், வாழாமலே வாழ்ந்து அதுக்குச் சாட்சிய ஒரு உயிரையும் இந்த உலகத்துக்குக் கொண்டு வந்துட்டோம். இனிமே ரென்யாவை தவிர நம்ம கடந்த காலக் கசப்பு முழுசையும் மறந்துடுவோம். (just go with the flow) ஜஸ்ட் கோ வித் தி ப்லோ. புடிக்காம சேர்ந்தோம்… இனிமே புரிஞ்சு, புடிச்சி வாழ ட்ரை பண்ணுவோம். இனி இதுதான்னு இல்லாமல், எதுவா இருந்தாலும் இயல்பா நடக்கட்டும்னு மனசு சொல்றதை கேட்டு வாழ்வோம். ஒரே ஒரு வாழ்க்கை தான்டி… வா வாழ்ந்து பாக்கலாம், லெட்ஸ் ஸ்டார்ட் ஃப்ராம் ஹீயர்." என்று தன் முன் கை நீட்டி நின்றவனைக் கண்ணீர் கலந்த புன்னகையுடன்‌ பார்த்தவள், அவன் கையின் மேல் தன் கையை வைக்க, வேகமாய் அடித்த காற்றில் அவர்கள் அருகில் இருந்த மரத்தின் பூக்கள் எல்லாம் கிளையில் இருந்து விடுதலை பெற்று, மறுபடியும் மணவாழ்க்கையில் அடித்து வைக்கும் இருவர் மேலும் பூமாரியாகப் பொழிந்து ஆசிர்வாதம் செய்தது.