விழி வழி காதல் நுழைந்ததடி 7
விழி 7 அந்த அறையே ஊசி விழும் ஓசை கூடத் துல்லியமாய்க் கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது. ஆதர்ஷ், தன்வி முன் மண்டியிட்டு தரையில் அமர்ந்து, அப்படியே அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான். அவன் கொடுத்த அதிர்ச்சியில் உறைந்து, உடல் இறுகி இருந்தவள் கைகள் அவளையும் அறியாமல் அவன் தலையை மெதுவாக வருடிக் கொடுத்தது. "நீ… நீ என்னை வெறுத்திட மாட்ட இல்ல குட்டிப் பாப்பா? இதுக்கு அப்புறமும் நீ என்னை நேசிப்ப தானே? என்னை ஒதுக்கிட மாட்ட இல்ல" என்றவன் குரல் கமறிவிட, அவன் தலையைக் கோதியபடியே இருந்தவள் விரல்கள் சட்டென நின்றுவிட, மெல்ல நிமிர்ந்து ஆலன் முகத்தை ஒரு நிமிடம் ஆழமாகப் பார்த்தாள். "இந்த ஜென்மத்தில் என்னோட ஆதுவை என்னால வெறுக்க முடியாது. நீங்க எப்படி இருந்தாலும் என்னோட ஆது தான். தப்பே செஞ்சிட்டு நீங்க என் முன்னால நின்றாலும் நான் உங்க பின்னால தான் நிப்பேன். அப்படி இருக்க… இதுல உங்க தப்பு எதுவும் இல்லயே பாஸ். அப்புறம் நான் எப்படி உங்களை வெறுக்கவோ, விலகவோ முடியும்" என்று அழுத்தமாகச் சொன்னவளை நிமிர்ந்து பார்த்த ஆதர்ஷின் கண்களில் கண்ணீர் துளித் துளியாக வழிய, அதைத் தன் பிஞ்சு வி...