நிஜம் epilogue
நிஜம் 40 விக்ரம் மீட்டிங் முடித்து, சீக்கிரமே வீட்டுக்கு வந்ததுவிட்டான். "அடியேய் சீக்கிரம்டி, எவ்ளோ நேரம் தான் குளிப்ப… நீ என்ன முகத்துக்குச் சோப் போடுறீய, இல்ல சுவர்ல முகத்தை வச்சு பரபரன்னு தேக்கிறீய? இவ்ளோ நேரம் ஆகுது. என்ன தேச்சாலும் இருக்குறது தான்டி இருக்கு, சீக்கிரம் வாடி, கெளம்பணும் டைம் ஆச்சு." என்றவன் டமார் என்று கதவு திறுக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவன் மூச்சடைத்து நின்றான். குளித்து முடித்து, கூந்தலில் துளிதுளியாகத் தண்ணீர் சொட்டிக்கொண்டிருக்க, வெறும் டவலை மட்டுமே உடலில் சுற்றிக்கொண்டு, கோவத்தில் மூச்சுக் காற்றில் அனல் வீச, இடுப்பில் கைவைத்து, எதிரில் இருந்தவனை தீயாக முறைத்துப் பார்த்துக்கொண்டு நின்றாள் த்வனி. "என்னடா சொன்ன நீ… நான் சுவத்துல மூஞ்ச வச்சு தேய்க்கணும்மா… என்ன செஞ்சாலும் இருக்குறது தான் இருக்குமா… எவ்ளோ தைரியம் இருந்த நீ அப்டி சொல்லுவ. என் அழகுக்கு என்னடா குறைச்சல்… காலேஜ்ல என் பின்னாடி சுத்தாத ஆளே இல்லனு உனக்குத் தெரியாது. ஏன் உன் ஃப்ரண்ட் ஒருத்தன்... அவன் பேரு என்ன? ஹான்… ரகு அது கூட எனக்கு நூல் விட்டுப் பாத்தது உனக்கும் தெரியும் இல்...