Posts

Showing posts from January, 2024

விழி வழி காதல் நுழைந்ததடி 27

 விழி 27 தன்விக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் பேச்சே வராமல் போக, கண்களில் கண்ணீர் கரைகட்டி நிற்க, இருவரையும் மாறி மாறிப் பார்த்தவள், ஆதர்ஷனைப் பாவமான பார்வை பார்த்தபடி, "என் பாஸ்க்கு எப்பவும் கொடுத்த வாக்கை மீறும் பழக்கமோ, நம்பினவங்களுக்கு துரோகம் செய்யும் பழக்கமோ இல்லையே…" என்றாள் தழுதழுத்த குரலில். "உன் ஆதுவுக்கு இப்பவும் அந்தப் பழக்கம் இல்ல தான் தன்வி" என்றான் ஆதர்ஷன் அமைதியாக. கண்ணீர் துளிர்த்த விழிகளால் அருகில் நின்ற அவள் கணவனைச் சுட்டிக்காட்டி, "அப்ப இதுக்கு என்ன பேரு? நீங்க சொன்னீங்க இல்ல, நீ தான் இந்த வீட்டு மருமக, நம்ம கல்யாணம் நடக்கும்னு" என்றாள் அழுத்தமாக. "நோ தன்வி, நல்லா யோசிச்சுப் பாரு… நான் நீதான் நம்ம வீட்டு மருமகன்னு தான் சத்தியம் பண்ணனே தவிர, எந்த இடத்திலும் நான் உன்னை மேரேஜ் பண்ணிப்பேன்னு சொல்லவே இல்ல" என்றவனைக் கண்கள் சுருக்கி முறைத்தவள், அதே கோபத்தோடு திரும்பி தஷ்ஷைப் பார்த்தாள்.  "இப்பவாவது நீங்க சொன்னீங்களே, நான் உண்மையைத் தெரிஞ்சிக்கும் நேரம் வரும் வரும்னு… ஐ திங்க், அந்த டைம் இப்ப வந்திடுச்சின்னு நினைக்குறேன் தஷ்" என...

விழி வழி காதல் நுழைந்ததடி 26

விழி 26 வீரராகவன் காரில் முன்புறம் அமர்ந்து கொள்ள, தன்வியைப் பின்புற இருக்கையில் பத்திரமாக அமர வைத்துவிட்டு, சீட் பெல்ட்டை அவளின் வயிற்றில் அழுத்தம் கொடுக்காதபடி பதமாகப் போட்டு விட்டவன், அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.  கார் புறப்பட்டு சீரான வேகத்தில் சென்று கொண்டு இருக்க, இங்கு நொடிக்கு நொடி ஆதர்ஷனின் முகத்தில் இறுக்கமும், பயமும் கூடிக் கொண்டே போனது. தன்வியும் அதை கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். அவன் முகமே அவளுக்கு அவன் தனக்கு வைத்திருக்கும் அதிர்ச்சியின் அளவை‌ச் சொல்லாமல் சொன்னது.  அவனுக்குள்ளேயே இவ்வளவு பதட்டம் பயம் என்றால் அதைக் கேட்கப் போகும் தன்னிலை என்ன என்று யோசிக்கவே அவளுக்கு நடுக்கமாக இருந்தது. அந்த நடுக்கத்திற்கு ஆறுதலாகக் கணவனின் கை வளைவில் தன் கையைக் கோர்த்துக் கொண்டவள், அப்படியே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அதுவரை வெளியே பார்வையைப் பதித்திருந்த ஆதர்ஷன் திரும்பி தன்வியைப் பார்த்தான். அவள் தன் கையை இறுக்கமாகப் பிடித்திருந்த விதமே அவளின் மனநிலையை அவனுக்கு உணர்த்த, மென்மையாக அவள் தலையை வருடியபடி அவளின் உச்சந்தலையில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தவன், அவளைத் தன் தோள...

விழி வழி காதல் நுழைந்ததடி 25

 விழி 25 அன்றைய நாளுக்குப் பிறகு ஆதர்ஷனும் தன்வியும் பேசிக் கொள்ளவில்லை.  ஆதர்ஷ் ஏதேனும் கேட்டால் அதற்கு, "ம்ம்ம்" என்ற சத்தம் மட்டுமே அவளிடம் இருந்து பதிலாக வரும். தான் கருவுற்றிருக்கும் தகவலைக் கூட தாத்தாவிடம் சொல்லும் மனநிலை இல்லை தன்விக்கு. ஆதர்ஷனுக்கு அந்த நற்செய்தியை முதலில் தெரிந்து கொள்ளும் உரிமை தன்வியை உயிராக நேசிக்கும் வேறு ஒரு ஜீவனுக்குத் தான் உண்டு என்று நினைத்து வீரராகவனிடம் அவனும் எதுவும் சொல்லவில்லை. அதேநேரம் தன்வி தாத்தாவிடம் எதுவும் சொல்லாமல் இருந்ததை வைத்தே ஆதர்ஷனுக்குப் புரிந்துவிட்டது அவளின் மனநிலை என்னவென்று. அதனாலேயே அவனுக்கு அவளுடன் எதுவும் பேசப் பயமாக இருந்தது.  அப்படியே இரண்டு நாட்கள் அமைதியாக நகர, வீரராகவன் மற்றும் தன்வியுடன் ஆதர்ஷன் அமெரிக்காவுக்குப் பயணமானான். பயணத்தின் போது கூட தன்வி எதுவும் பேசாமல் அமைதியாக வர, ஆதர்ஷனுக்கு உள்ளுக்குள் பயம் பற்றிக் கொண்டது.  விமானத்தில் தன்னருகில் அமர்ந்திருந்தவளின் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவன், அவள் கண்களை ஒரு தவிப்போடு பார்த்தபடி, "என்ன ஆனாலும் நீ… நீ என்னை விட்டுப் போக மாட்ட இல்ல ...