நிஜம் 3

 






இஷ்டமில்லா நிஜம் நீ 

                             பகுதி - 3


திருமணம் நடந்த சூழ்நிலை திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் ஒருமாதிரி இறுக்கமான மனநிலையை கொடுக்க, அதற்கு மேல் அந்த ஊரில் இருக்க விரும்பாமல் அன்று மாலையிலேயே அனைவரும்‌ அவரவர் ஊருக்கு கிளம்பிவிட, ஆஷா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் விக்ரம், த்வனியை தன்னோடு தனியாக அழைத்துச் செல்வதிலேயே பிடிவாதமாக இருக்க, வேறு வழியில்லாமல் த்வனியை விக்ரமுடன் தனியாக அனுப்பி வைத்தனர் ஜெகனும், ஆஷாவும்…


விக்ரம் காரை வேகமாக ஓட்ட, த்வனி சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் தன் ஹெட்செட்டில் பாட்டு கேட்டபடி கண்மூடி அமர்ந்திருந்தவள் விழித்திரையில், அவள் விக்ரமை முதல் முதலில் சந்தித்த நாள் கண்முன் நிழலாடியது…


 த்வனியை  அடியோடு விக்ரமை வெறுக்க வைத்த அதே காலம். விக்ரம் தேவ்வாக மாறியிருந்த சிலநேரங்களில் அவனை மனதார மதிக்கவும் வைத்தது. ஆனால் அந்த நல்லெண்ணத்தில் அவனே மண்ணள்ளிப் போட்டுக் கொள்ள, அந்த நேரம் காலம் விரித்துவைத்த வலையில் சரியாக விழுந்தனர் த்வனியும், விக்ரமும். த்வனி, விக்ரம் இருவரின் வாழ்க்கையும் மொத்தமாக இருள் கவ்விய நாள் அது… அந்த நாளை நினைத்த த்வனியின் சம்பலான இதயம், மீண்டும் தீ பற்றி எரிந்தது... நடந்த அனைத்தையும் நினைத்து உள்ளுக்குள் கதறிய, த்வனி மனதில் தோன்றியது எல்லாம் ஒன்றே ஒன்று தான்… "அந்த கடவுளோ நினச்சாளும் மாத்த முடியாத பல விஷயம் நம்ம ரெண்டுபேர் வாழ்க்கையையும் முடக்கிப் போட்டுடுச்சு… எங்க என்னையும் மீறி எதுவும் தப்பு நடந்திடும்ற பயத்துல ஊரைவிட்டு, உன்னோட கண் பார்வை விட்டு ரொம்பதூரம் ஓடிப் போனவள…??? இப்டி தேடிப்புடிச்சு கல்யாணமுன்ற பந்தத்தில் வலுக்கட்டாயமாக இணைச்சு தன்னோட அழிவை தானே தேடிக்கிட்டானே இந்த விக்ரம்" என்ற சிந்தனை அவளின் மனதில் ஓட அமைதியாக கண்மூடி இருந்தவளின் அந்த அமைதி, விக்ரமை வெகுவாக வெறியேற்ற, அவள் சீட் பெல்ட் போடாமல் இருப்பதை பார்த்தவன் மூளை வேகமாக எதையோ யோசிக்க, அவன் எண்ணத்தின் வேகத்தை அப்படியே காரின் ஸ்டேரிங்கில் காட்ட, கார் இன்னும் இன்னும் வேகமெடுத்தது. ஒரு இடத்தில் விக்ரம் தீடிரென சடன் பிரேக் போட… கார் 'கிரீச்' என்ற சத்தத்தோடு ரோட்டை தோய்த்தபடி கொஞ்ச தூரம் சென்று நின்றது.


விக்ரம் ஒரு குரூரப் புன்னகையோடு திரும்பி த்வனியை பார்க்க, அவள் தன் காலை காரின் முன்புறம் அழுத்தி ஊன்றியபடி இருந்தவள். திரும்பி விக்ரமை பார்த்து ஒரு புருவம் உயர்த்தி "கீழ பாரு" என்று செயற்கை செய்ய, அங்கு அவள் சீட் பெல்ட் சரியாக அதன் இடத்தில் பொருந்தி இருந்தது. இறுகிய முகத்டோட நிமிர்ந்தவனை பார்த்து பெருமூச்சு விட்ட த்வனி. "திங்க் பிக் விக்ரம்…!! நீ மோதுறது த்வனி கூட... இப்டி ஸ்கூல் பையன் மாதிரி பண்ணிட்டு இருக்கீயே??? ஜஸ்ட் குரோவ் அப் மேன்" என்றவள் மீண்டும் தன் ஹெட்செட்டை காதில் பொருத்திக் கொண்டு கண்மூடி சாய்ந்து கொள்ள… விக்ரமின் அவள் மீதான வன்மம் இன்னும் இன்னும் அதிகமானது.


இரவு ஒன்பது மணி போல் விக்ரம் தன் வீட்டின் முன் காரை நிறுத்த, அவன் கல்யாண செய்தி தெரிந்த வீட்டில் வேலைசெய்யும் பெண் ஆரத்தி தட்டோடு வெளியே வர, விக்ரம் அதை தட்டி விட்டவன். "நரகத்துல யாரும் வரவேற்க மாட்டாங்க… இவ இங்க சந்தோஷம வாழ வர்ல… நீ போ" என்று அந்த பெண்ணை விரட்ட, த்வனி அவன் பேசியது எதையும் காதில் வாங்காது அலட்சியமாக திரும்பியவள் அங்கு ஜெகனின் கார் விக்ரம் வீட்டிற்குள் வருவதை பார்த்தவள். ஆஷா தான் நச்சரித்து ஜெகனை அழைத்து வந்திருப்பாள் என்று புரிந்துகொண்ட த்வனி. "டேய் உன்னோட அரும ஃப்ரண்ட் வரான். நீ உன்னோட நல்லவன் வேசத்தகட்டிக்கோ" என்றவள் காலை, "அத்த…" என்று வேகமாக ஓடி வந்து கட்டிக்கொண்ட விஷ்ணுவை கைகளில் தூக்கிக்கொண்ட த்வனி ஆஷாவிடம், "ஏன் இப்டி பண்ணிட்டு இருக்கே ஆஷு நீ? இந்த நேரத்துல குழந்தைய கூட்டிட்டு இவ்ளோ தூரம் டிரைவ் பண்ணி வரணுமா??" என்று செல்லமாக கடிந்துகொள்ள… ஆஷா நுனிநாக்கை கடித்தபடி கண்ணடித்தவள், "உங்கொண்ணன் மாதிரி என்னால எல்லாம் இருக்க முடியாதுமா" என்றவளை த்வனி தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.


"என்ன ஜெகன்? இந்த நைட் டைம்ல டிராவல் பண்ணி வந்திருக்கீங்க? என்ன... நா உங்க தங்கச்சிய அப்டியே முழுங்கிடுவேன்னு பயந்துட்டீங்களா?" என்று வலிய வரவைத்த சிரிப்போடு கேட்க, "அதெல்லாம் இல்ல விக்ரம்… ஆஷாக்கு இவள அனுப்பிட்டு அங்க நிம்மதியா இருக்க முடியல, பொலம்பிட்டே இருந்தா… உடனே த்வனிய பாக்கணும்னு ஒரு நச்சரிப்பு, விஷ்ணுவும் அத்த அத்தனு அழுதுட்டே இருந்தான். அதோட உங்க கல்யாணம் தீடிர்னு நடந்திடுச்சு, உங்க வீட்ல என்ன சொல்லுவாங்களோன்னு ஒரே டென்ஷன்?? நாங்க இருந்த உங்களுக்கு கொஞ்சம் நல்லா இருக்கும்ன்னு தான்" என்று இழுக்க, ஆஷா அங்கு கீழே விழுந்து கிடந்த ஆரத்தி தட்டை பார்த்தவள் விக்ரமை நிமிர்ந்து பார்க்க, "அது ஒன்னு இல்லீங்க, வேலக்கார அக்கா கை தவறி கெட்டிட்டாங்க" என்று சமாளித்தவன். "வேற ஆரத்தி தட்டை எடுத்துவாங்க" என்று கத்த, வேலைகார பெண்ணும் வேறு தட்டில் ஆரத்தி எடுத்து வர, ஆஷா விக்ரமை த்வனி அருகில் நிற்க சொல்லி, அவளே ஆரத்தி எடுக்க இருவரும் ஒருவரை ஒருவர் தீயாக முறைத்துக்கொண்டே வீட்டிற்குள் செல்ல, த்வனி தன் வலது காலை எடுத்து வைத்து தன் புது வாழ்க்கைக்குள் நுழைந்தாள். 


"ஆமா விக்ரம், நீங்க வீட்டுக்கு வர ஏன் இவ்ளோ நேரமாச்சு? உங்களுக்கு பின்ன கெளம்புனா நாங்க, வரும்போது தான் நீங்களும் வந்திருக்கீங்க?" என்ற ஆஷாவை அதட்டிய ஜெகன். "இதென்னடி கேள்வி? அவங்க மேரேஜ் என்ன சிட்டுவேஷன்ல நடந்துச்சின்னு உனக்கு தெரியாத? அவருக்கும் த்வனிகிட்ட தனிய பேச வேண்டி இருக்குமில்ல, அதுக்கு தான் அவரு அவள தனிய அழைச்சிட்டு வந்ததே… எங்கயாது காரை நிறுத்தி, அவ கூட தனிய டைம் ஸ்பென் பண்ணி இருப்பாரு, அது கொஞ்சம் டைமாகி இருக்கும்... அதபோய் கேட்டு…" என்ற ஜெகன் பேச்சு எரியும் நெருப்பில் எண்ணெய் உற்றுவது போல் இருக்க, 'நா…!! இவ கூட…!! டைம் ஸ்பென் பண்றத?? ம்ம்க்கும்... எனக்கு மட்டும் ஒரு சான்ஸ் கெடச்ச இவளை, துண்டு துண்டா வெட்டி போட்ருவேன்' என்று மனதில் நினைத்தவன் அதை வெளிகாட்ட முடியாமல் வெறுமான தலையாட்டி வைக்க, 


ஆஷா வீட்டை ஒரு பார்வை பார்த்தவள். "ஆமா வீட்டுல யாரும் இல்லையா? உங்க வீட்டு ஆளுங்க எல்லாம் எங்க? என்று கேட்க.


"எனக்கு அம்மா மட்டும் தான்… வேற யாரும் இல்ல. அவங்க பிஸ்னஸ் மீட்டிங்காக டெல்லி போயிருக்காங்க… நா இன்னும் என்னோட கல்யாண மேட்டர் பத்தி அவங்கிட்ட சொல்லல…" 


"ஏங்க இன்னும் சொல்லல?? கல்யாணம் நடந்த நெலம சரியில்ல… அதனால அவங்ககிட்ட சம்மதம் கேக்கமுடியாம போச்சு… அட்லீஸ்ட் நீங்க த்வனிய வீட்டுக்கு கூட்டிட்டு வரும்போதாது ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்லி, அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டிருக்கலாம் இல்ல" என்ற ஆஷாவுக்கு எங்கு விக்ரமின் அம்மா த்வனியை ஏற்றுக்கொள்ளாமல் எதுவும் தகராறு செய்வாரோ என்று உள்ளுக்குள் கிலியாடிக்க விக்ரமையே ஒரு தவிப்போடு பார்த்திருக்க...


"அவனுக்கு நா உயிரோட இருக்குறதே மறந்துபோச்சு போல... அதான் பெத்தவளுக்கு கூட சொல்லாம... இப்டி தீடிர்னு கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கான்" என்று சத்தம் வந்த திசை அனைவரும் திரும்பி பார்க்க அங்கு முகம் முழுவதும் கோபத்தோடு வேகமாக வந்துகொண்டிருந்தார் விக்ரமின் தாய் சௌந்தர்யா.


வீட்டிற்குள் வந்த சௌந்தர்யா விக்ரமை எரிக்கும் பார்வை பார்க்க, அவன் எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்க, அடுத்து சௌந்தர்யாவின் பார்வை ஆஷா அருகில் திருமண கோலத்தில் இருந்த த்வனி மீது விழ… அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவர் அருகில் வந்த ஆஷா அவரை கையெடுத்துக் கும்பிட்டவள். "உங்ககிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணது பெரிய தப்புதாம்மா… ஆனா, எங்க நெலம அப்டி ஆகிடுச்சு… எங்க த்வனி கல்யாணம் நின்னு நாங்க என்ன செய்றதுன்னு தெரியாம கைய பெஞ்சிட்டு நிக்கும்போது உங்க பையன் தாம்மா எங்க பொண்ண கல்யாணம் செஞ்சு எங்க மானத்தை காப்பாத்துனாரு…" என்றவள் த்வனி கையை பிடித்து இழுந்து தன் அருகில் நிறுத்தியவள். "எங்க த்வனி ரொம்ப நல்ல பொண்ணும்மா..‌. ரொம்ப நல்ல மனசுமா அவளுக்கு, அடுத்தவங்க மனசு புரிஞ்சு நடந்துக்குவா, யாருக்கும் கெட்டது நெனைக்க மாட்டா, நிச்சயம் அவளை உங்களுக்கு புடிக்கும். அவ உங்ளுக்கு நல்ல மருமகள இருப்பாம்மா… ப்ளிஸ் இவங்களை ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா" என்று ஆஷா கதறிக்கொண்டிருக்க, 


ஆஷாவின் வார்த்தைகளை கேட்க கேட்க விக்ரமிற்கு உள்ளுக்குள் எரிமலை குழம்புபோல் ஆத்திரம் கொதித்தது. " யாரு இவ நல்ல பொண்ண? இவளுக்கு நல்ல மனசா?? ம்ம்ம்... மனசே இல்வாத ராட்சசி இவ… இவளுக்கு மட்டும் மனசுன்னு ஒன்னு இருந்திருந்த, இன்னைக்கு என் வாழ்க்கையும் மத்தவங்க மாதிரி நிம்மதியா, சந்தோஷம இருந்திருக்குமே… எப்டி எல்லாம் வாழணும்னு ஆசப்பட்டேன். எல்லாத்தையும் இவளோட கெட்ட எண்ணத்துனால ஒன்னு இல்லாம பண்ணிட்டாளே பாவி… உயிரோட என்னை சாகடிச்ச இவளை மட்டும் நா நல்லா இருக்க விட்டுடுவேனா?? ஒவ்வொரு நிமிஷமும் நா எப்டி உயிர்வலில துடிக்கிறேனோ... அந்த வலிய... அதே வலிய இவளும் அனுபவிக்கணும். வாழும்போதே எனக்கு நரகத்தை காட்டுன இவளும் அதே நரகத்தில் என்னோட சேர்ந்து அனுஅனு துடிக்கணும்" என்றவன் கண்கள் கோவத்தில் சிவக்க, நடம்புகள் புடைக்க, கையை இறுக்கி மூடி தன் கோவத்தை கட்டுப்படுத்திக்கொண்டு நிற்க… இங்கு சௌந்தர்யா த்வனியையே அக்னி பார்வை பார்த்தபடி இருக்க, த்வனியும் அவரை தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.


"என் வைஃப் சொன்னது உண்மை தான் மேடம். உங்க பையன் தான் இன்னைக்கு என்னோட, என் தங்கச்சியோட மானத்தை காப்பாத்தி இருக்காரு… ப்ளிஸ் மேடம் தயவுசெய்து நடந்ததை மன்னிச்சு இவங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க" என்ற ஜெகனுக்கு கைகாட்டி "போதும்" என்றவர். " அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே… அப்றம் எதுக்கு இப்ப வந்து இப்டி பேச்சிட்டு இருக்கீங்க…?? நா மன்னிச்சிட்ட நடந்தது எதுவும் இல்லைனு ஆகிடுமா?? அப்டி ஒரு பவர் என்கிட்ட இருந்து நடந்து முடிஞ்ச நெறய விஷயத்தை நடக்கவே விடாம பண்ணியிருப்பேனே" என்று கோபமாக சொன்னவர். மூச்சை இழுத்து விட்டு, "அதான் கல்யாணம் முடிஞ்சு போச்சே, இவளையும் இங்க கொண்டு வந்துவிட்டாச்சு… அப்றம் என்ன நீங்க கெளம்பு" என்று அழுத்தமாக சொன்ன சௌந்தர்யாவை தவிப்போடு பார்த்த ஆஷா, "அம்மா நா சொல்றத…" என்று தொடங்கும் போதே, "நா உங்களை கெளம்ப சொன்னேன்" என்று சௌந்தர்யா மீண்டும் அழுத்தி சொல்ல… 


"ஆஷு நீ கெளம்பு… வினுவ கூட்டிட்டு இங்க இருந்து போ" என்ற த்வனியை ஆஷா கலக்கமாக பார்க்க, த்வனி கண்ணசைவில் அவளை போகச் சொன்னவள். "ஜெகன் நீ கெளம்பு" என்ற ஒற்றை வார்த்தையில் அந்த இடம் காலியானது. 


விக்ரம் கண்கள் முழுவதும் வெறியோடு த்வனியை பார்த்தவன். ஆரத்தி எடுக்கும் போது மீண்டும் கழுத்தில் அணிந்த திருமண மாலையை கழட்டி குப்பைத்தொட்டியில் விட்டெறிந்தவன். தன் பிரைவேட் அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டான். இனி அந்த அறையை விட்டு அவன் எப்போது வெளியே வருவான் என்பது அந்த ஆண்டவனுக்கும் தெரியாது.


இங்கு வீட்டு ஹாலில் நின்று கொண்டிருந்த த்வனியின் கையை இறுக்கி பிடித்து தரதரவென இழுத்து சென்ற சௌந்தர்யா, அவளை தன் அறைக்குள் வேகமாக இழுத்து தள்ளியவர். அந்த வேகத்திலேயே த்வனி கன்னத்தில் 'பளார்' என்று பலமாக அறைந்திருந்தார்.