நிஜம் 6
இஷ்டமில்லா நிஜம் நீ
பகுதி - 6
த்வனி தன் லாப்டாப் திரையில் தெரிந்த மெயிலை நூறாவது முறையாகப் படித்துப் பார்த்துக்கொண்டிருக்க, ஜெகன் அவளைக் கண்டபடி திட்டிக்கொண்டிருந்தான்.
"என்னமோ பெருசா எல்லாத்தையும் நா பாத்துக்றேன்… நா பாத்துக்றேன்னு சொன்னீயே… இதுதான் நீ பிஸ்னஸை பாத்துக்குற லட்சணமா த்வனி. எவ்ளோ பெரிய கான்ட்ராக்ட். ஜஸ்ட் லைக் தட், நம்ம கைய விட்டு போய்டுச்சு. இந்த ஒரு கான்ட்ராக்ட் மட்டும் நமக்குக் கெடச்சிருந்த... கிட்டதட்ட பிப்டி க்ரோஸ் நமக்கு லாபம் கெடச்சிருக்கும். ஆன, இப்ப உன்னோட ஓவர் கான்ஃபிடன்ஸ்சால… கான்ட்ராக்ட் நம்ம கைய விட்டு போய்டுச்சு… இதுக்கு என்ன சொல்ற நீ??" என்ற ஜெகனை நிமிர்ந்து தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தவள். "தி இஸ் மை பிஸ்னஸ் மிஸ்டர். ஜெகன். இந்தப் பிஸ்னஸ் லாஸ்ல போனப்போ, நீங்க இத விக்க டிரை பண்ணீங்க. அப்பா ஆரம்பிச்ச பிஸ்னஸ் நம்ம காலத்துல வித்துட்டத இருக்கக் கூடாதுனு, இத நா கைல எடுத்தேன். அதுக்கும் நீங்க என்கிட்ட பணம் வாங்கிட்டீங்க மிஸ்டர். ஜெகன் மறந்து போச்ச… இது நம்ம ஃபேமிலி பிஸ்னஸ். அதன் இந்தக் கம்பெனி ஷேர் உங்களுக்குத் தந்தேன். அதுவும் அந்த ஷேர்ஸ் எல்லாம் நா ஆஷா பேர்லயும், வினு பேர்லயும் தான் வச்சகருக்கேன். உங்களுக்கு இந்தப் பிஸ்னஸ் பத்தி கேள்வி கேக்க எந்த ரைட்ஸ்சும் இல்ல… இதுல வர்ர லாஸ்கு முழுப் பொறுப்பு நா தான்னு நீங்க ஏற்கனவே சொல்லிட்டிங்க. சோ இட்ஸ் மை ப்ராப்ளம். யூ ஜஸ்ட் ஸ்டே ஆவுட் ஆஃப் இட்" என்றவளை தீயாய் முறைத்த ஜெகன். "இந்தத் திமிருக்கு ஒன்னு கொறச்சல் இல்ல. எப்டியே போ… ஆன, நாளா பின்ன பிஸ்னஸ்ல ப்ராப்ளம்னு என்கிட்ட பணம் கேட்டு வரக்கூடாது" என்றவளை விரக்தி சிரிப்போடு பார்த்தவள். "அப்டி ஒரு நாள் வந்து, உன்கிட்ட உதவி கேக்குற நெலம எனக்கு வந்த, அன்னைக்கு த்வனி உயிரோட இருக்க மாட்ட மிஸ்டர். ஜெகன். நீங்க கெளம்பலாம். அப்டியே போகும் போது. இனிமே உங்களுக்கும் இந்தக் கம்பெனிக்கும் எந்த டைய்-அ பும் இல்லைனு பேப்பர் சைன் பண்ணி மெயில் பண்ணி இருக்கேன். அதுல சைன் பண்ணிட்டு, உங்க காஃபிய வாங்கிட்டு கெளம்புங்க." என்றவளை எரிக்கும் பார்வை பார்த்த ஜெகன். "நீ என்ன செய்றேன்னு தெரிஞ்சு தான் செய்றீய த்வனி. என்னை… உன் அண்ணனை போகச் சொல்றீய?"
"இப்ப நா இங்கிருந்து போகச் சொல்றது மிஸ்டர். ஜெகனை தான். நீ எனக்கு அண்ணன்றதை நா மறந்து, நீயும் மறந்து பல வருஷம் ஆகிடுச்சு. இப்ப நீ வெறும் என்னோட ஆஷுவோட ஹஸ்பெண்ட், என்னோட விஷ்ணுவோட அப்பா. அவளோ தான். சோ ப்ளீஸ் ஜஸ்ட் லீவ் திஸ் பிளேஸ். இந்தப் பிரச்சினைய எப்டி டீல் பண்ணனும்னு எனக்குத் தெரியும். நீ போலாம்" என்றவள் மீண்டும் தன் லாப்டாபில் தன் கவனத்தைச் செலுத்த, ஜெகன் அங்கிருந்த சேரை எட்டி உதைத்து விட்டு, "இந்தத் திமிருக்கு நீ ரொம்ப அனுபவிப்ப த்வனி" என்று கத்திவிட்டு செல்ல.
த்வனி கண்மூடி தன் சேரில் சாய்ந்தபடி அமர்ந்து விட்டாள்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு த்வனி திரும்பி பார்க்க, அங்கு ஆருஷி பரபரப்பாக அறைக்குள் வருவதைப் பார்த்தவள். "என்ன ஆஷு ஃபோன் பண்ணி என் கூட இருக்கச் சொன்னால" என்றவள் முகத்தில் சின்னச் சிரிப்பு.
"ஆமா த்வனி… அந்த மனுஷன் அவளை என்ன கொதறி வைக்றாரே, நீங்க ரெண்டு பேரும் அவ கூட இருங்கன்னு அண்ணி, ஷாலுக்கு ஃபோன் பண்ணங்க… அவளுக்கு ஹாஸ்பிடல்ல கொஞ்சம் வேலை இருந்துச்சுன்னு எனக்கு ஃபோன் பண்ணா..., அதான் உடனே நா கெளம்பி வந்தேன்." என்றவள். "எப்டி த்வனி இப்டி நடந்துச்சு. நீ கோட் பண்ண அமௌண்ட் விட ஜஸ்ட் ஓன் லேக் ல கான்ட்ராக்ட் வேற கம்பெனிக்கு போய்டுச்சுன்னு ஆஷா அண்ணி சொன்னாங்க… இது எப்டி த்வனி? ஹவ் ஸ் இட் பாசிபுள்?"
"எனக்கும் புரியல ஆரு, இது எப்டின்னு எனக்கும் சுத்தமா புரியல… பட் ஒன்னு கன்பார்ம். நா ரெடி பண்ண இந்த டென்டர் பத்திய விஷயம் எல்லாம், என்னைத் தாண்டி வெளிய போயிருக்கு. அதுதான் எப்டின்னு புரியல"
"அது எப்டி த்வனி. நீ உன்னோட எல்லாப் பிஸ்னஸ் டீடெயிஸையும் உன்னோட பெர்சனல் லாப்டாப்ல தானா சேவ் பண்ணி வைப்ப… அதோட பாஸ்வேர்டு வேற யாருக்கும் தெரியாதே…!!! ஏன்? ஜெகன், ஆஷாக்கு கூட உன்னோட பாஸ்வேர்டு தெரியாதே, ஒரு தடவை ஜெகன் ஏதோ முக்கியமான ஃபைல் வேணும்னு உன்னோட லாப்டாப் ஓபன் பண்ண டிரை பண்ணி முடியாம கத்திட்டு இருந்தாரே… அப்டி இருக்க… யாருக்கு அந்தப் பாஸ்வேர்டு தெரிஞ்சிருக்கும்" என்று ஆருவின் வார்த்தையில் தண்ணீர் குடித்தபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தவள். குடித்த தண்ணீர் தொண்டையில் சிக்கிக்கொள்ள… இரும்பியபடி வெடுக்கெனத் திரும்பி ஆருவை பார்த்தவள் கண்கள் கோவத்தில் நெருப்பாகச் சிவந்திருந்தது.
"நா யார் பேரை பாஸ்வேர்ட வச்சிருப்பேன்னு…!!! ஒரே ஒருத்தனால மட்டும் தான் கண்டுபுடிக்க முடியும். அவன் தான் இத செஞ்சிருக்கனும். அவனால மட்டும் தான் இத செய்யமுடியும்." என்றவள் கைகள் இறுக... அவள் கையில் இருந்த கண்ணாடி டம்ளர் உடைந்து நொறுக்கி அவள் கையைப் பதம் பார்த்தது. அவள் கைகளில் இருந்து ரத்தம் வழிவதை பார்த்து பதறி ஆரு., "ஏய் த்வனி என்னடி பண்ற? என்று கத்தியபடியே அவள் அருகில் வந்தவள். தன் கர்சீப் எடுத்து த்வனி கையில் இறுக்கக் கட்டிவிட்டவள். "ஏன்டி எரும என்னடி இது… லூசு மாதிரி பண்ணிட்டு… முதல்ல ஹாஸ்பிடல் கெளம்பு" என்றவள் த்வனியை அழைத்துக்கொண்டு ஷாலினி வேலை செய்யும் ஹாஸ்பிடல் சென்றாள்.
ஷாலினியும், ஆருவும் த்வனியை கண்டபடி திட்டிக்கொண்டிருக்க. அவள் அமைதியாகக் கட்டுபோட்டிருந்த தன் கைகளையே பார்த்துக்கொண்டிருநதாள். "இப்ப என்ன ஆச்சுன்னு நீ இப்டி இருக்க த்வனி. ஜஸ்ட் ஒரு கான்ட்ராக்ட் அது போனதுக்க நீ இப்டி லூசு மாதிரி பண்ணிட்டு இருக்க?? என்னமோ இதுக்கு முன்ன இப்டி நடக்காத மாதிரியே ரியாக்ட் பண்ற… இதுக்கு முன்ன எத்தனை கான்ட்ராக்ட் உன் கம்பெனிக்குக் கெடைக்காமா போயிருக்கு!!!"
"யூ ஆர் ரைட் ஷாலு… இதுக்கு முன்ன நெறய முறை இந்த மாதிரி நடந்திருக்கு… பட், அப்பெல்லாம் நேர்மையான முறையில தான் நா தோத்திருக்கேன். ஆன, இப்ப அப்டி இல்ல… ஒருத்தன் என் முதுகுல குத்திட்டான். ராப்பகலா நா கஷ்டப்பட்டு ரெடி பண்ண டென்டர் டீடெயில்ஸை திருட்டுத்தனமான எடுத்து அந்தக் கம்பெனிக்கு கொடுத்து என்னைப் பழவாங்கிட்டான். ம்ம்ம்…!! அவன்கிட்ட நா இத தவிர நா வேற என்ன எதிர்பாக்க முடியும்" என்றவள் முகத்தில் கசப்பான புன்னகை.
"ஏன்டி? ஏன்? அந்த விக்ரம் ஏன் உன்னை இப்டி டார்ச்சர் பண்றாரு. அப்டி என்ன ஏழவு பிரச்சனை தான்டி உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல" என்று தோழிகள் தலையில் அடித்திக்கொள்ள…
"விடமாட்டேன்டி… இந்த த்வனிக்கு தோல்விய பாத்துப் பயம் இல்ல. நேர்மையான தோல்விய நா தைரியம ஏத்துக்குவேன். பட், துரோகத்தை…!!! நெவர்… இந்தக் கான்ட்ராக்ட் நியாயம எனக்குக் கெடைக்க வேண்டியது. அது எனக்குத் தான் கெடைக்கணும். கெடைக்க வைப்பேன். அந்த விக்ரம்கு அவனோட காலேஜ்ல படிச்ச த்வனிய தானே தெரியும். ஆன, இந்தக் கம்பெனி எம்.டி த்வனிய பத்தி, பிஸ்னஸ்வுமன் த்வனிய பத்தி இப்ப வரை அவனுக்குத் தெரியாதில்ல…?? தெரியவைக்குறேன்." என்றவள் கைகள் இறுக… அவள் கைகளில் மீண்டும் ரத்தம் கசிந்தது.
இரவு போல் வீடு திரும்பி த்வனியின் வாடிய முகத்தைப் பார்த்த விக்ரம் தன் திட்டம் வெற்றி பெற்றதை நினைத்து ஒரு குரூரப் புன்னகையோடு த்வனியை பார்த்துக் கொண்டிருந்தான்.
"த்வனி… எனம்மா இது? உன் கையில என்ன கட்டு.? என்னச்சு? என்று சௌந்தர்யா பதற…
'ம்ம்ம்… அடுத்தவங்களைக் காயப்படுத்தி மட்டும் பழகுனவ, இன்னைக்கு முதல் தடவை அவள, அவளோ காயப்படுத்திட்டு இருக்க… இது தான்டி ஆரம்பம்… இனி ஒவ்வொரு நாளும் உனக்கு நரகம் தான்டி' என்றவன் கண்கள் வன்மத்தில் சிவக்க… "பிஸ்னஸ் ல எதாவது ப்ராப்ளம் இருந்திருக்கும்… எதாவது கான்ட்ராக்ட் இவ கம்பெனிக்கு கெடைக்காம போயிக்கும்… அதுல மேடம் பயந்துட்டாங்க போல... அதான் இப்டி போல" என்று நக்கலாகச் சிரித்தவன். "ம்ம்ம் பிஸ்னஸ் ல இதெல்லாம் சகஜம்னு மேடம்கு சொல்லுங்க" என்றவன் குரலில் நக்கல் நிறைந்திருக்க.
விக்ரம் சொன்ன தோரணையே சௌந்தர்யாவுக்கு என்ன நடந்திருக்கும் என்று உணர்ந்த… த்வனியை திரும்பி பார்க்க, அவள் கோவமாக விக்ரமை முறைத்து கொண்டிருந்தவள். சட்டென எழுந்து நின்று. "இந்த த்வனிக்கு பயம்னு ஒன்னு இருந்திருந்த, மிஸஸ். த்வனி விக்ரம் தேவ்வ இந்த வீட்டுக்குள்ள அடியெடுத்து வச்சிருக்க மாட்டா… அதுலயே என்னோட தைரியம் உங்க புள்ளைக்குப் புரிஞ்சிருக்கணும் ஆன்டி. ம்ம்ம்… என்ன பண்றது. அவர் அறிவு அவ்ளோதான். என்னைப் புரிஞ்சுக்க உங்க புள்ள இன்னொரு ஜென்மம் எடுக்கணும்" என்றவள் மாடிக்கு செல்ல படிகளில் ஏறியவள் நின்று திரும்பி சௌந்தர்யாவை பார்த்தவள். "எண்ணி மூனே நாள்ல அந்தக் கான்ட்ராக்ட் என் கைக்கு வரும்…!! வரவைப்பேன்…!!" என்றவள் வேகமாக மேலே சென்றுவிட்டாள்.
