நிஜம் 9

 






இஷ்டமில்லா நிஜம் நீ

                 பகுதி 9




இரவு முடிந்து விடியல் தொடங்கும் நேரம். அதிகாலை நான்கு மணிக்கு குடிபோதையில் கண்ணு மண்ணு தெரியாமல் காரை ஓட்டியவன் கடவுளின் செயல் சரியாக அவன் வீட்டு வாசலில் வந்து நின்றான் விக்ரம். கொஞ்ச நேரம் கார் சீட்டில் சாய்ந்தபடி கண்மூடி அமர்ந்திருந்தவன். தன் ஃபோன் எடுத்து ஏதோ நம்பரை அழுத்த, அந்த பக்கம் அன்ஸ்வரிங் மெசினில் கேட்ட இனிமையான குரலை வழக்கம் போல் தன்னை மறந்து ரசித்தவன். மனதில் அடுத்த நிமிடம் த்வனி சொன்னது நினைவு வர. எரியும் நெருப்பாக மாறியது அவன் மனம். காரில் இருந்து தட்டு தடுமாறிய இறங்கி வீட்டுக்குள் நுழைந்தான் விக்ரம். 


த்வனி உதய்யிடம் தன்னை விக்ரமின் மனைவி என்று சொன்னதில் ஆத்திரத்தின் உச்சியில் இருந்தவன். அந்த நேரம் ஜெகன் ஃபோன் செய்து தன் மாமியார் வீட்டுக்கு செல்வதாக சொன்னவன். விஷ்ணுவை இரண்டு நாட்களுக்கு த்வனி பார்த்துக்கொள்வதாக சொன்னதைக் கேட்டவணுக்கு, அந்த நேரம் மூளையில் தோன்றியது ஒன்றே ஒன்று தான். இந்த உலகத்தில் எதன் மேலும் ஒட்டுதல் இல்லாமல் ஒதுங்கி நிற்கும் த்வனிக்கு விஷ்ணு என்றால் மட்டும் உயிர். இந்த உலகத்தில் அவள் உயிராக நேசிக்கும் இரண்டாவது ஆள் விஷ்ணு தான். அதை அறிந்த விக்ரம் அவனை வைத்து த்வனியை கதற வைக்க எண்ணி விஷ்ணுவை த்வனி வருவதற்கு முன்பே ஸ்கூலில் இருந்து அழைத்துச் சென்று விட்டான். 


விக்ரம் நினைத்தது போலவே த்வனி குழந்தையை தேடி தெருத்தெருவாக அலைந்ததை அவன் அனுப்பிய அவள் த்வனியை பின் தொடர்ந்தபடியே விக்ரமிற்கு வீடியோ காலில் லைவ்வாக காட்டிக் கொண்டிருக்க, விக்ரம் அவள் பைத்தியக்காரியை போல் குழந்தை தேடுவதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அதே நேரம் அத்தை எங்கு என்று கேட்ட விஷ்ணுவையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டான். ஒரு நிமிடம் கூட குழந்தையை விட்டு விலகாமல் விஷ்ணு கூடவே இருந்து அவனை கவனித்துக் கொள்ள, விஷ்ணுவும் மாமனிடம் நன்றாக ஒட்டிக்கொண்டான். கொஞ்ச நாள் விஷ்ணுவை வைத்து த்வனியை துடிக்கவைக்க விக்ரம் நினைக்க… த்வனி இது விக்ரம் வேலை தான் என்று கண்டுபிடித்தது ஒரு பக்கம் இவனின் கோவத்தை கிளற… பிறந்ததில் இருந்து இதுவரை தன்னை விளையாட்டுக்கு கூட அடிக்காத அவன் தாய் சௌந்தர்யா. இன்று அவனை அடித்த அடியில் அவன் கீழ் உதடு கிழிந்து லேசாக ரத்தமே வந்துவிட்டது. அந்த வலி முழுவதும் த்வனி மீது வன்மமாக திரும்ப. தன் அறிவும், மனமும் மழுங்கும் அளவு குடித்தவன். வெறியோடு வீட்டுக்கு வந்தவுடன் த்வனி அறைக்கு சென்றவன். கதவை வேகமாக உதைக்க… த்வனி சோர்வில் கதவை பூட்டாமல் இருந்ததால், விக்ரம் உதைத்ததில் அது பெருந்த சத்தத்தோடு திறந்துகொள்ள… நல்லா தூக்கத்தில் இருந்த த்வனி அந்த சத்தத்தில் அடுத்துபிடித்து எழ… அவள் கண் முன் கண்கள் சிவக்க நின்றிருந்தான் விக்ரம்.


கோவத்திலா? இல்லை குடித்ததிலா? என்று விளக்க முடியாத அளவுக்கு அவன் ரத்தமென சிவந்திருந்த விழிகளில் த்வனி கூட ஒரு நிமிடம் பயந்துதான் போனாள்.


"என்னடி மறுபடியும் என்னை ஜெயிச்ச சந்தோஷத்துல நிம்மதியா தூங்கிட்டு இருக்கீய நீ…?? விடமாட்டேன்டி... விடமாட்டேன். உன்ன நிம்மதியா இருக்க விடமாட்டேன்." என்றபடி தட்டு தடுமாறி நடந்து த்வனி அருகில் வந்தவன். அவள் கழுத்தை பிடித்து நெறித்தபடி, "உனக்கு எவ்ளோ திமிர் இருந்த நீ என் பொண்டாட்டினு அந்த உதய்கிட்ட சொல்லியிருப்ப. எங்கிருந்துடி வந்துச்சு அவ்ளோ தைரியம் உனக்கு. நீ எம் பொண்டாட்டியாடி…?? சொல்லுடி நீ எனக்கு பொண்டாட்டியா??" என்று மேலும் அவள் கழுத்தை நெறிக்க. த்வனிக்கு மூச்சு விட முடியாமல் தவிக்க. அவள் முகத்தை நோக்கி குனிந்தவன். "எனக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி இருந்த அது அவதான். அவ ஒருத்தி மட்டும் தான்." என்று த்வனியை முறைத்தவன். "அது உனக்கும் நல்லா தெரியும்… தெரியுமில்லடி. அப்றம் எதுக்குடி அப்டி சொன்ன…?" என்று அவள் முடியை கொத்தாக பிடித்து இழுத்தவன் மேலும் அவள் கழுத்தை நெருக்க, தன் முழு பலத்தையும் கொண்டு அவனை தன்னைவிட்டு தூரம் தள்ளிவிட்ட த்வனி. 


"டேய் ஒழுங்க இங்க இருந்து போய்டு… நா ஏற்கனவே உன் மேல கொலவெறில இருக்கேன். ஒரு பச்சபுள்ளைய மறச்சு வச்சியே நீயெல்லாம் என்ன ஜென்மம்டா.?? பிரச்சனை உனக்கும் எனக்கும் தானாடா. எதுக்குடா வினுவ தூக்குனா?? நீ சரியான ஆம்பளயா இருந்தா... நேர என்கிட்ட மோதி இருக்கணும். அதவிட்டு போயும் போயும் உன் வீரத்த ஒரு குழந்தைகிட்ட காட்டி இருக்க. ச்சீ உன்ன பாத்தாலே பத்திட்டு வருது. இதுல அவள பத்தி வேற" என்று தன் கண்களை அழுத்தமாக மூடித்திறந்தவள். "தேவையில்லாம அவள பத்தி பேசி என்னை கொலகாரி ஆக்காத. நா பழச நெனைக்காத வரை தான் உனக்கு நல்லது. தேவை இல்லாம உன் சாவ நீயே தேடிக்காத... மரியாதைய வெளிய போய்டு" என்றவள் கண்கள் இருட்டிக் கொண்டு வர. கால்கள் நிற்க முடியாமல் தள்ளிபடியே விக்ரம் பார்த்து கத்த… 


விக்ரம் மீண்டும் அவள் அருகில் நெருங்கியவன். அவள் கன்னத்தை அழுத்திபிடித்தவன். "ஏய் நீ யாருடி அவள பத்தி என்னை பேசக்கூடாதுன்னு சொல்றதுக்கு? நீ பழச மறந்துட்டனு சொன்ன அத நம்ப நா என்ன கேணயாடி?? உனக்கு பழசு எப்பவும் ஞாபகம் இருக்கணும். நீ செஞ்ச தப்பு… ச்சீ இல்ல… நீ செஞ்சது தப்பு இல்ல. பாவம் நீ செஞ்சது மன்னிக்க முடியாத பாவம். உனக்கு அது எப்பவும் ஞாபகம் இருக்கணும். அதனால தானா இப்ப இப்டி ஒரு வாழ்க்கை வாழுறேன்னு நெனச்சு நெனச்சு நீ சாகணும்." என்று கத்த… அவன் அழுத்தி பிடித்ததால் கன்னத்தில் ஏற்பட்ட வலியோடு அவனிடம் இருந்து வந்த மதுவின் வாடகையில் அருவெறுப்பாக உணர்ந்தவள். "ஏய் ச்சீ… கைய எடு. உனக்கு எவ்ளோ தைரியம் இருந்த என்னை தொடுவ?? உன் பக்கத்துல நிக்குறதே எனக்கு அருவெறுப்ப இருக்கு… ச்சீ முதல்ல கைய எடுடா… வெளிய போடா" என்று அவனை தள்ளிவிட பார்க்க. பாவம் அவள் உடலில் சுத்தமாக பலம் இல்லாமல் போக. குடிபோதையில் இருந்த விக்ரமை அவளால் இன்ச் கூட அசைக்க முடியவில்லை. ஏற்கனவே த்வனியை துடிக்க வைக்க வழி தேடிக்கொண்டிருந்த விக்ரமை அவளின் வார்த்தை தூண்டி விட… அவள் தாடையை ஒரு கையால் இருக்கிபிடித்தவன். இன்னொரு கையால் அவள் இடுப்பை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்தவன். கண்களில் என்ன தெரிந்ததோ… பல வருடங்களுக்கு முன் அவளை பயமுறுத்திய அதே கண்களை இன்று மீண்டும் பார்த்த த்வனியின் உடல் முழுவதும் பயத்தில் நடுங்க தொடங்கியது. ஆனால், அன்று த்வனியை காப்பாற்றிய அவள்…!! அந்த அவள். இந்த அனைத்திற்கும் காரணமான அவள். இப்போது த்வனி அருகில் இல்லையே. இப்போது யார் த்வனியை காப்பாற்றுவது. த்வனி மட்டும் சரியான நிலையில் இருந்திருந்தால் விக்ரமால் அவள் விரல் நகத்தை கூட தொட முடியாது. ஆனால், ரெண்டு நாளாக விஷ்ணுவை தேடி அலைந்து தளர்ந்து போயிருந்த த்வனிக்கு விக்ரமை எதிர்த்து நிற்க சக்தி இல்லாமல் போக… என்ன செய்வதென்று புரியாமல் தவிக்க… த்வனியின் பயந்த விழியை இமைக்காமல் பார்த்த விக்ரம். "நா தொட்ட உனக்கு அருவெறுப்பா இருக்கில்ல…? உனக்கு கூட பயம் வருது இல்லடி" என்று குரூரமாக சிரித்தவன். "அது தான்டி எனக்கும் வேணும். நீ அருவெறுப்பு தாங்க முடியாம நீ அழணும். கதறணும். உன்னை நீயே வெறுக்கணும். அதான்டி வேணும் எனக்கு" என்றவன் போதையில் அறிவுகெட்டு போய், ஆத்திரம் மட்டும் அவன் மூளையில் நிரம்பி இருக்க… த்வனியை கட்டிலில் தள்ளிவிட்டு, அவள் புடவையை உருவி எறிந்தவன். அவள் மேலே விழுந்து அவளை வன்மையாக ஆட்கொள்ள… உடலும், மனதும் தளர்ந்த நிலையில் இருந்த த்வனிக்கு குடிபோதையில் மிருகமாக மாறியிருந்த விக்ரமை தடுக்கும் சக்தி இல்லாமல் போனது.


வீட்டுக்கு சென்ற ஷாலினி, ஆருஷிக்கு இருவருக்கும் த்வனியை தனியே விட்டு வந்தது உள்ளுக்குள் ஒரு மாதிரி இருக்க… இருப்புகொள்ளாமல் தவித்த இருவரும் காலை விடிந்த உடனே த்வனியை பார்க்க கிளம்பி விட்டார்கள்.


வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்த தோழிகள் மனது வேகமாக அடித்துக்கொள்ள, உடனே த்வனி அறைக்கு ஓட, அங்கு சிதறிக்கிடந்த பொருட்களை பார்த்தவர் உடல் பயத்தில் வியர்க்க தொடங்கியது. 


"த்வனி…"


"த்வனி..." என்று அழைத்தபடி அந்த அறைக்கு உள்ளே சென்றவர்கள் அங்கு கிழித்துபோட்ட வாழை நாராக தரையில் மயங்கி விழுந்து கிடந்த த்வனியை பார்த்து உறைந்தே விட்டனர்.


அருஷி கையை பிசைந்தபடி அந்த ஹாஸ்பிடல் அறைக்கு வெளியே அமர்ந்திருக்க, ரூமில் இருந்து டாக்டர் ‌வெளியேறிய அடுத்த நொடி அறைக்குள் நுழைந்த ஆரு, ஷாலினி கையை இறுக்கி பிடித்தவள். "ஷாலு த்வனிக்கு என்னச்சு ஷாலு?? அவளுக்கு ஒன்னு இல்லயே? நல்லாதானா இருக்கா?? என்று பதறியவள். ஷாலினி பேசாமல் த்வனியையே பார்த்தபடி இருந்ததை கண்டு கடுப்பானவள். "ஏய் நா கேட்டுட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு‌ அமைதிய இருக்க… சொல்லுடி த்வனிக்கு என்னச்சுடி?" என்று ஆரம்பிக்கும் போதே… "ஷீ ஹாஸ் பீன் ரேப்டு" என்ற ஷாலினி வார்த்தையில் உறைந்து நின்றாள்.


"என்ன…"


"என்னடி சொல்ற நீ.? த்வனி… த்வனிய" என்றவள் கண்கள் கண்ணீர் நிறைந்து வழிய ஷாலினி தோளைத் கட்டிக்கொண்டு கதற… ஷாலினியும் தோழி நிலையை எண்ணி கதறி துடித்தாள்.


முழுதாக இருபத்தி நான்கு மணிநேரம் கழித்து கண் விழித்த த்வனியின் முகம் உணர்ச்சிகளின்றி வெறுமையாக இருக்க… தோழிகள் இருவரும் அழுது சிவந்த கண்களோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர். செய்தி கேட்டு ஓடி வந்த ஆஷா அழுதழுது ஓய்ந்து போய் கீழே விழந்து கிடக்க... வாடிய கொடியாக கட்டிலில் படுத்திருந்த தங்கையை பார்த்து ஜெகன் கூட கலங்கிவிட்டான். முதல் முறையாக விக்ரம் பற்றி தெரியாமல் தன் சுயநலத்திற்காக த்வனி வாழ்க்கையை அழித்து விட்டோம் என்று அவன் கண்கள் கலக்கியது.


ஜெகன் மெதுவாக த்வனி அருகில் வந்து அவள் தலையை லேசாக வருடியவன். எதுவும் பேச முடியாமல் அமைதியாக அவளை பார்த்தபடி இருக்க… ஆருஷி கண்ணை துடைத்துக்கொண்டு த்வனி அருகில் வந்தவள். "ஷாலு அப்பாக்கு ஃபோன் பண்ணி வரச்சொல்லுடி… அந்த ராஸ்கல் விக்ரமை சும்மா விடக்கூடாது. அவனை புடிச்சு உள்ள தள்ளணும். அப்பாவ உடனே வரச்சொல்லு…" என்றவள் கையை பிடித்த த்வனி. தலையை மட்டும் இடவலமாக ஆட்டி வேண்டாம் என்க… ஷாலினி வேகமாக அவள்‌ அருகில் வந்தவள். "ஏன்டி?? ஏன் வேணாம்?? அந்த நாய் உன்னன இப்டி…" என்றவள் அதை முழுதாக சொல்லமுடியாமல் "என்னால சொல்லக் கூட முடியலடி. அப்டி ஒரு காரியத்தை செஞ்சிருக்கான் அந்த பரதேசி. நீ அவன் மேல கேஸ் குடுக்க வேணாம்னு சொல்ற… உனக்கென்ன பைத்தியம் புடிச்சிடுச்ச… இல்ல என்ன இருந்தாலும் அவன் என் புருஷன். கல்லு, புல்லுன்னு எதும் டைலாக் பேசப்போறிய" என்று த்வனியை முறைத்தவள்.


த்வனி மெதுவாக விழிமூடி திறந்தவள். "நா கேஸ் குடுத்து... அப்பா போய் அரெஸ்ட் பண்ண முதல்ல அவன் உயிரோட இருக்கணுமேடி." என்றவளை அனைவரும் புரியாமல் பார்க்க… த்வனி ஆழ்ந்து மூச்செடுத்தவள். "நீ சௌந்தர்யா ஆன்ட்டிக்கு ஃபோன் பண்ணு." 


"ஏய் லூசு. இப்ப எதுக்குடி அவங்களுக்கு ஃபோன் பண்ணும். நேத்து நடந்தது இன்னேரம் அந்த அம்மாக்கு தெரியாமயா இருக்கும். அப்டி இருந்தும் அந்த அம்மா உன்ன இங்க வந்து பாத்தாங்களா…? இப்ப வரை நீ எங்க? எப்டி இருக்கண்ணு கூட அந்த அம்மா தேடல… நீ அவங்களுக்கு ஃபோன் பண்ண சொல்றீயா? என்று ஷாலினி முறைக்க…


"பிளீஸ் ஷாலு ஃபோன் பண்ணு… நீ அவங்ககிட்ட பேசின அப்றம், உன் அப்பாவ வரச்சொல்லு. நா நீ சொல்ற எல்லாத்தையும் கேக்குறேன்." என்றதும் ஷாலினி சௌந்தர்யாவுக்கு ஃபோன் போட, அவர் சொன்ன செய்தியில் ஷாலினிக்கு பைத்தியமே பிடித்துவிடும் போல் ஆகிவிட. மெதுவாக திரும்பி த்வனியை பார்த்தவள். "விக்ரம் சூசைட் அட்டெம் பண்ணி. இப்பவோ அப்பவோன்னு இதே ஹாஸ்பிடல்ல தான் இருக்கான்." என்று சொல்ல… அனைவருக்கும் அதிர்ந்து நிற்க. த்வனி எந்த அதிர்ச்சியுமின்றி அமைதியாக இருந்தாள். 


"என்னடி நடக்குது இங்க‌.? என்ன தான்டி நடக்குது. என்ன எழவுக்குடி நீங்க ரெண்டு பேருக்கும் இப்டி இருக்கீங்க… ஏன்டி விக்ரம் இப்டி செய்யணும்.? நீ ஏன் இப்டி அமைதியா இருக்க‌.?" என்று ஆஷா கத்த…


"நேத்து எனக்கு என்ன நடந்துச்சோ... நா எதை இழந்தேனோ… அதேதான் அவனுக்கும்." என்றவள் மருந்து மயக்கத்தில் அமைதியாக உறங்கி விட அங்கிருந்த நால்வரும் ஒன்றும் புரியாமல் குழம்பி நின்றனர்.


விக்ரம் உயிர் பிழைப்பான??? த்வனி, விக்ரம் நிலை என்ன???