நிஜம் 10

 






இஷ்டமில்லா நிஜம்‌ நீ 

             பகுதி - 10




த்வனி மருந்து மயக்கத்தில் நல்ல உறக்கத்தில் இருக்க… அந்த ஹாஸ்பிடலில் வேலை செய்யும் டாக்டர் என்ற முறையில் ஷாலினி, விக்ரமை பார்க்க சென்றாள். அவன் மெடிக்கல் ரிப்போட்டை பார்த்தவள் முகம் வெகுவாக வெளிறி இருந்தது. விக்ரம் கைகளில் குத்தி இருந்த கண்ணாடி துண்டு அவன் கை நரம்புகளை அறுத்திருந்ததால் ரத்தம் அதிகமாக உடலில் இருந்து வெளியேறி இருந்தது. அது கூடவே உடலில் பல இடங்களில் கண்ணாடி துண்டு கிழித்த காயங்கள் ஆழமாக இருந்தது. அது பத்தாதென்று, அவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்க. அவன் உயிர் பிழைத்தால் அது மறுபிறவி என்று சொல்லும் அளவு அவன் நிலை இருக்க… ஷாலினி கூட த்வனியின் இப்போதைய நிலைக்கு விக்ரம் தான் காரணம் என்பதை ஒரு நிமிடம் மறந்து விக்ரம் சீக்கிரம் குணமாக வேண்டும் என்று கண்மூடி கணவுளை வேண்டிக்கொண்டாள்.


சௌந்தர்யா தவிப்போடு த்வனியை பார்த்திருக்க, த்வனியும் எங்கோ வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள். நடந்த சம்பவம் த்வனியை உடலாலும், மனதாலும் வெகுவாக பாதித்திருந்தது. ஆனால், அவள் கண்ணில் இதுவரை ஒரு சொட்டு கண்ணீர் வராமல் அவள் அழுத்தமாக இருக்க, அதுவே அனைவரையும் பயமுறுத்தியது. வாய்விட்டு அழுதலாவது அவள்‌ மனதின் இருக்கம் குறையும். ஆனால், அவள் கண்களோடு சேர்த்து மனதையும் கட்டி வைத்திருந்தால் மற்றவர் தான் என்ன செய்ய முடியும். 


என் தான் விக்ரம் மேல் கோபம் இருந்தாலும் விக்ரம் நிலையை நினைத்து ஒரு குழந்தையின் தாயாக வருந்திய ஆஷா, ஆதரவாக சௌந்தர்யா தோளில் கைவைத்து அழுத்தியவள். "விக்ரம்கு இப்ப எப்டி இருக்குமா??" என்று கேட்க… அதுவரை கண்களில் அடக்கி வைத்திருந்த கண்ணீர் மடை திறந்த வெள்ளம் போல் வெளியே வர… ஆஷாவை கட்டிக்கொண்டு அழுதவர். "இன்னும் சீரியஸ் கண்டிஷன்ல தான் இருக்கான். தலையில பெரிய காயம். டாக்டர் இப்ப ஒன்னும் சொல்லமுடியாதுன்னு சொல்றாங்க. கடவுளை வேண்டிக்க சொல்றாங்க. நெறய ரத்தம் வேற போயிருக்கு. அவன் பிளட் குரூப் வேற ரொம்ப ரேர். உடனே பிளட் வேணும்னு சொல்றாங்க… இவன் இப்டி இருக்க விஷயம் மட்டும் மீடியாக்கு தெரிஞ்சிது அவ்ளோதான். அப்றம் இவன் ஏன்டா பொழச்சோம்னு ஃபீல் பண்ற மாதிரி இந்த மீடியாக்காரங்க பண்ணிடுவாங்க. அதனால ரொம்ப க்ளோஸ் சர்க்கிள்ல பிளட் டோனர்ஸ் தேடிட்டு இருக்கேன் " என்றவர் எங்கு தன் ஒரே மகன் தன்னை விட்டு போய்விடுவானோ என்ற பயத்தில் கதறி அழ… 


த்வனி திரும்பி சௌந்தர்யாவை பார்த்தவள். "ஆஷூ, ஷாலினிய கூப்புடு" என்று சொல்ல, ஆஷா ஃபோன் போட்டு ஷாலினியை அழைக்க. அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கு வந்து நின்றாள் ஷாலினி. 


"ஷாலு இப்ப என்னால பிளட்‌ குடுக்க முடியுமா?" என்று கேட்க. ஷாலினிக்கு அவள் ஏன் இதை கேட்கிறாள் என்று நன்றாக புரிந்தது. கொஞ்சம் முன் த்வனி இப்படி கேட்டிருந்தால் த்வனி கன்னம் சிவக்கும் அளவு பளார் என்று ஒரு அறை விட்டிருப்பாள். ஆனால், விக்ரம் இருக்கும் நிலையை அவள் கண்களால் கண்ட பிறகு ஒரு பெண்ணாக அவள் மென்மையான மனது விக்ரமுக்காக வருந்த, மெதுவாக தலையை ஆட்டியவள். த்வனியை மெதுவாக அழைத்துச் சென்றாள். த்வனி கொடுத்த ரத்தம் விக்ரம் உடலில் கலக்க தொடங்க… த்வனி ஒரு ஃபோன் நம்பரை ஷாலினியிடம் கொடுத்தவள். "இந்த நம்பர்க்கு கால் பண்ணி விக்ரம்கு பிளட் வேணும்னு சொல்லு. தேவையான யூனிட் பிளட் கிடைக்கும்." என்றவள் கட்டிலில் கண்மூடி படுத்திருந்த விக்ரமை ஒரு நிமிடம் அழுத்தமாக பார்த்தவள். "உன்னை எனக்கு புடிக்காது. சுத்தமா புடிக்காது. என்னோட வாழ்க்கையில நா அடியோட வெறுக்குற ஒரே ஆள் நீதான்… ஆனா…!!! நீ சாகக் கூடாது. நீ உயிரோட இருக்கணும். இருந்தே ஆகணும்." என்றவள் நர்ஸ் உதவியுடன் தன் அறைக்கு செல்ல. சௌந்தர்யா தவிர மற்ற அனைவரும் அவளை விசித்திரமாக பார்த்தனர். 


சௌந்தர்யா த்வனி அறைக்கு சென்றவர். "நா த்வனிகிட்ட தனிய பேசணும்" என்று சொல்ல, ஷாலினி, ஆருஷியுடன் ஆஷாவும் அறைக்கு வெளியே சென்ற அடுத்த நிமிடம் த்வனி கைகளை இறுக்கி பிடித்த சௌந்தர்யா. "என்னை மன்னிச்சிடு த்வனி. என்னை மன்னிச்சிடு. இப்டி ஒருத்தனை பெத்ததுக்கு என்னை மன்னிச்சிடுமா…" என்றவர் கண்ணீர் விட்டு கதற. த்வனி எந்தவித உணர்வுமின்றி அமைதியாகவே இருக்க… "எனக்கு புரியுது த்வனி. அவன் செஞ்சது தப்பு தான்… பெரிய பாவம் தான். ஆ… ஆனா… அதுக்காக அவனா சாகட்டும் விட என்னால முடியலமா…" 


"என்னலயும் அவன் சாகட்டும்னு விடமுடியாது. அதான் அவனுக்கு பிளட் குடுத்தேன். தேவ் இருக்கணும். உயிரோட இருக்கணும். அட்லீஸ்ட் நா உயிரோட இருக்க வரையாது அவன் இருக்கணும். இருந்தே ஆகணும்." என்றவள் கண்மூடி படுத்துக்கொண்டாள்.


சௌந்தர்யாவுக்கு அவள் தேவ் என்று சொன்னதிலேயே, அவள் மனதில் என்ன இருக்கிறதென்று புரிய, அவருக்கு யாரை நினைந்து அழுவதென்று புரியாமல் தன் விதியை நினைத்து அழுது தீர்தார்.


அன்று காலை எட்டு மணிபோல் லேசாக போதை தெளிந்த விக்ரம் எழுந்து தன் இருந்த அறையை சுற்றிப் பார்த்து அதிர்ந்தே விட்டான். சட்டென் திரும்பி பார்த்தவன் பார்வையில் தரையில் மயங்கி கிடந்த த்வனி தெரிய, குடிபோதையில் த்வனியிடம் அவன் அத்துமீறி நடந்து கொண்டது அவன் மண்டையில் உறைக்க… அவன் இதயம் சுக்குநூறாக உடைந்தது. தலையை பிடித்தபடி, "நோ…" என்று கத்திகொண்டே அவனின் பிரைவேட் அறைக்கு ஓடிச் சென்றவன்‌ கண்ணில் தெரிந்தது அந்த ஐந்தடி உயர ஃபோட்டோ. 


அழகிய சிகப்பு வண்ணப் பட்டுப்புடவையில் கல்யாண கோலத்தில், தலையில் பூச்சூடி, நெற்றியிலும், உச்சி வகுட்டிலும் குங்குமம் மின்ன, கழுத்தில் இருந்த நெக்லஸ், ஆரத்திற்கு இடையில கொஞ்சமாக தாலிக் கயிறு வெளியே தெரிய, முகம் முழுவதும் சிரிப்போடு நின்றிருந்தாள் அவள்.


விக்ரம் முழு உடலும் நடுங்கியபடி அந்த ஃபோட்டோ அருகில் சென்றவன் கைகள் அந்த ஃபோட்டோவை தொடப்போக, சட்டென கையை கீழே போட்டவன்… 


"இல்ல…"


"இல்ல…"


"உன்ன தொடுற‌ தகுதிய நா இழந்துட்டேன். உன்ன தொடுறது மட்டும் இல்ல... மனசுல உன்னை நெனைக்குற தகுதிய கூட நா இழந்துட்டேன். நா இழந்துட்டேன். அந்த ராட்சசி… அந்த ராட்சசி உன்னை நெனக்குற நிம்மதியா கூட என்கிட்ட இருந்து பறிச்சிட்டாளே… நா என்னடி செய்றது" என்று முகத்தில் அடித்துக்கொண்டு கதறி அழுதவன், அந்த அறையில் இருந்த பொருட்களை தூக்கிப்போட்டு உடைக்க… அந்த நேரம் அவன் குடித்து மிச்சம் வைத்திருந்த மது பாட்டில் அவன் கண்ணில்பட அதை எடுத்து உடைத்தவன். தன் கை மணிக்கட்டில் ஆழமாக வெட்டிக்கொள்ள. அவன் கையில் இருந்து வந்த ரத்தம் அந்த அறை முழுவதும் பீச்சியடித்தது. கண்கள் சொருகியபடி மெதுவாக நடந்து அந்த ஃபோட்டோ அருகில் சென்றவன். "ஏன்டி… ஏன் என்னை விட்டு போன… அந்த படுபாவி பேச்ச கேட்டு என்னை விட்டு ஏன்டி போன… ஏன்டி என்னை விட்டு போன?? நீ இல்லாம நா என்ன ஆவேண்ணு நீ ஒரு நிமிஷம் கூட யோசிக்கலயாடி" என்று புலம்பியவன். அடுத்த நொடி "இல்ல…!!! நீ கண்டிப்பா என்னை பத்தி யோச்சிருப்பா… என்னை பாக்க வந்திருப்ப… ஆனா, அந்த மனசாட்சி இல்லாத ராட்சசி தான் உன்ன தடுத்திருப்பா… எனக்கு தெரியும் உன்ன பத்தி. நீ... நீ… தேவதைடி… என்னோட தேவதை…" என்று அந்த ஃபோட்டோவில் இருந்தவள் சிரிப்பை பார்த்து வறண்டு புன்னகைத்தவன். "கூட இல்லாட்டியும் உன்னை நெனச்சிட்டே, நீ வாழ்ற இந்த உலகத்துல வாழ்றதே சந்தோஷம்னு இவ்ளோ வருஷமா இருந்தேன்டி. ஆனா, இன்னைக்கு… இன்னைக்கு அந்த சந்தோஷத்தையும் என்னை விட்டு போய்டுச்சு… இந்த விக்ரம் தேவ் மனசுலயும், வாழ்க்கைலையும் ஒரே ஒருத்திக்கு தான் இடமிருக்கு. அந்த இடம் உனக்கு தான். உன் ஒருத்திக்கு மட்டும் தான். ஆனா, இன்னைக்கு என்னையும் அறியாம அந்த த்வனிய… அந்த த்வனி கூட" என்று இறுக்கி கண்களை மூடியவன். "இனிமே உன்னை மனசுல நெனக்கிற தகுதி எனக்கில்லடி, உன்ன நெனக்காத வாழ்க்கை எனக்கு வேணாம்…!!! இந்த உசுரும் வேணாம்" என்றவன் அந்த உடைந்த கண்ணாடி பாட்டிலை கொண்டு உடலில் பல இடங்களில் குத்திக்கொள்ள. உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேற, மறங்கி கீழே விழுந்தவன். தலை அங்கிருந்த டேபிளில் பலமாக மோதி அடிபட… அந்த ஃபோட்டோவை பார்த்து மென்மையாக சிரித்தவன். "ஐ ஸ்டில் லவ் யூ ரென்யா… லவ் யூ டி" என்றபடியே கண்மூடினான்.


சௌந்தர்யா காலை வீட்டுக்குள் நுழையும் போதே அவரிடம் ஓடி வந்த வேலைகாரி, காலையில் மயங்கி இருந்த த்வனியை ஷாலினியும், ஆருஷியும் தூக்கிச் சென்ற தகவளை சொல்ல… என்ன நடந்திருக்கும் என்று ஓரளவு யூகித்த சௌந்தர்யா விக்ரமை தேடி ஓட… அங்கு குற்றுயிராய் கிடந்த மகனை பார்த்தவர் உயிரே நின்றுவிட்டது.



த்வனி இருந்த ஹாஸ்பிடல் அறைக்கதவு திறக்க, யாரென்று திரும்பி பார்த்தவள். கண்கள் ஒரு நிமிடம் ஆச்சரியமாக விரிய, அடுத்த நிமிடம் இயல்புநிலைக்கு திரும்பியவள். "நீ ரூம் மாறி வந்துட்ட… விக்ரம் ரூம் இது இல்ல?" என்றவளை திட்ட வாயெடுத்தவன். பின் அவள் நிலையை உணர்ந்து தன்னை அடக்கிக் கொண்டு. "நீ விக்ரம்கு செஞ்ச பாவத்துக்கு அவன் உன்னை கொன்னு போட்டிருந்த கூட நா இவ்ளோ வருத்தப்பட்டிருக்க மட்டேன். பட்…?" என்று தலையை கோதி தன்னை நிலைப்படுத்தியவன். "விக்ரம் உனக்கு செஞ்சது தப்பு. மன்னிக்க முடியாத தப்பு. எத சொல்லியும் நியாயப்படுத்த முடியாத தப்பு." என்றவன். நிமிர்ந்து த்வனியை பார்த்தவன். "விக்ரம் அப்டிப்பட்டவன் இல்ல. அவன் எப்பவும் பொண்ணுங்க பின்னாடி அலஞ்சவன் இல்ல. அது எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும். அவன் இப்டி மாற காரணமே நீதான். அது உனக்கே நல்லா தெரியும். விக்ரமோட நண்பனா இருந்து பார்க்கும்போது அவன் பக்கம் நியாயம் இருக்கு. ஆனா, ஒரு தாய்க்கு மகனா, ஒரு தங்கச்சிக்கு அண்ணனா இருந்து பார்க்கும்போதும், உனக்கு நடந்ததை என்னால எந்த வகைலையும் நியாயப்படுத்த முடியாது. அதான் உன்ன பாக்க வந்தேன். டேக் கேர்" என்றவன் எழுந்து கதவருகில் சென்று திரும்பியவன். "எனக்கு ஒரு விஷயம் தான் சுத்தமா புரியல, அவன் உனக்கு இவ்ளோ பெரிய தப்பு பண்ணணிருக்கான். ஆன, நீ அவனுக்கு ரத்தம் கொடுத்திருக்க, பாத்ததுக்கு டாக்டர்கிட்ட என்னோட நம்பர் கொடுத்து தேவையான பிளட் அவனுக்கு கெடைக்காவும் வச்சிருக்க… வொய்?? வொய் த்வனி? இது நீ அவனுக்கு செஞ்ச பாவத்துக்கு பிராயச்சித்தமா? என்றவனை த்வனி திரும்பி தீர்க்கமாக ஒரு பார்வை பார்க்க, "நா வரேன்." என்று விட்டு அவன் வேகமாக செல்ல, இருவரும் பேசிக் கொண்டிருந்ததை வெளியே நின்று கேட்டுக்கொண்டிருந்த ஷாலினி அந்த புதியவன் பின்னாலேயே ஓடினாள்.