நிஜம் 8

             






இஷ்டமில்லா நிஜம் நீ

              பகுதி 8




த்வனி தன் வேலையில் முழ்கியிருக்க. அந்த நேரம் அவள்‌ ஃபோன் மணி அடித்தது. ஃபோனை எடுத்துப் பார்த்தவள் முகத்தில் இயல்பாக ஒரு குறுநகை பரவ. ஃபோனை அட்டென் செய்தவள். "சொல்லு ஆஷூ" என்றதும். "த்வனி நீ ஃப்ரீய" என்று பதட்டமாக வந்த ஆஷாவின் குரலில் புருவம் சுருக்கி த்வனி. "என்னச்சு ஆஷூ? ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு. ஜெகன் எதாவது சொல்லிட்டானா?"


"அதெல்லாம் இல்ல த்வனி. அப்பா ஃபோன் பண்ணாரு. அம்மாக்கு உடம்பு சரியில்லயாம்" என்று விசும்ப… "அத்தைக்கு என்னச்சு ஆஷூ பயப்படும்படி ஒன்னு இல்லயே?"


"பெருச ஒன்னு இல்ல த்வனி. பிபி கொஞ்சம் அதிகமாகி மயங்கி விழுந்துட்டாங்கலாம்‌. அப்பா ரொம்ப பயந்துட்டாரு, அதான் ஃபோன் பண்ணாரு. நானும் உன் அண்ணாவும் அங்க போறோம். நீ கொஞ்சம் வினுவ ஸ்கூல்ல இருந்து பிக் பண்ணி உன் வீட்டுக்கு கூட்டிப் போய்டுடா. நாங்க நாளைக்கு இல்ல அதுக்கு மறுநாள் வந்துடுவோம். அதுவர வினுவ நீ கொஞ்சம் பாத்துக்குறீய?"


"ஏய் லூசு அண்ணி‌. அது என்ன பாத்துக்குறீயான்னு கேள்வி. நா வர்ர வரை உன் மருமகனை பாத்தோக்கேன்னு சொல்லுவீயா. அதவிட்டு பர்மிஷன் கேட்டுட்டு. நீ கெளம்பு. வினுவ நா பாத்துக்கிறேன். நீ அங்க போனதும் அத்தை எப்டி இருக்காங்கன்னு எனக்கு ஃபோன் பண்ணி சொல்லு." என்றவள் ஃபோனை வைத்துவிட்டு சௌந்தர்யாவுக்கு கால் செய்து விஷயத்தை சொன்னவள். வினு வீட்டுக்கு வரும் விவரம் சொல்ல. சௌந்தர்யாவுக்கு விஷ்ணுவின் குறும்புகள் வெகுவாக பிடிக்கும் என்பதால். அவன் இரண்டு நாள்‌ அந்த வீட்டில் இருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டவர். உடனே குழந்தையை அழைத்து வர சொல்ல. மாலை ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவதாக சொல்லிவிட்டு தன் வேலைகளை முடித்து மூன்று மணி போல் விஷ்ணு படிக்கும் ஸ்கூலுக்கு சென்றவளுக்கு‌ அங்க மதியமே அவனை யாரோ வந்து அழைத்து சென்றதாக அவன் டீச்சர் சொல்ல. த்வனிக்கு உயிரே நின்று விட்டது.


ஜெகன், ஆஷா ஊரில் இல்லாத நேரத்தில் யார் வந்து குழந்தையை அழைத்துச் சென்றது என்று புரியாமல் குழம்பி த்வனி அங்கிருந்த டீச்சர் உட்பட அனைவரையும் வாங்கு வாங்கென்று வாங்கியவள். "இதுதான் நீ குழந்தைய பாத்துக்கிற லட்சணமா…?? அதெப்படி யார்னு தெரியாத ஆள் கூட நீங்க குழந்தைய அனுப்பி வச்சிங்க" என்று கொதித்தவள். உங்க யாரையும் நா சும்மா விடமாட்டேன்" என்று கத்திவிட்டு வினுவை தேடி கிளம்பியவள். சௌந்தர்யாவுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்ல அவருக்கும் ஒரு நிமிடம் இதயமே நின்றுவிட்டது. 


என்ன செய்வது என்று புரியாமல் தவித்த த்வனி. அசிஸ்டன்ட் கமிஷனராக இருக்கும் ஷாலினியின் தந்தைக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்ல. அவர் ஒரு பக்கம் வினுவை தேடி போலீஸை அனுப்பி வைக்க. த்வனி ஒரு பக்கம் தன் காரை எடுத்துக்கொண்டு வீதி வீதியாக விஷ்ணுவை தேடி அலைந்தாள். அதற்குள் விஷயம் தெரிந்த ஷாலினியும், ஆருஷியும் அவர்களும் ஒரு பக்கம் வினுவை தேடித் திரிந்து கொண்டிருந்தனர்.


இரவு தொடங்கி மறுநாள் மாலை வரை தெருத்தெருவாக குழந்தையை தேடி அலைந்து திரிந்த த்வனி. மாலை ஆறு மணிபோல் வீடு திரும்ப அங்கு ஷாலினியும், ஆருஷியும் இருந்தனர். தோழிகளை பார்த்த த்வனி அடுத்த நிமிடம் பாய்ந்து சென்று அவர்களை கட்டிக்கொண்டு கதறி அழ. நாள் முழுவதும் அழுது அழுது வீங்கி இருந்த த்வனியின் முகத்தை பார்த்த தோழிகள் இருவரும் அவளை தேற்ற வழி தெரியாமல் நின்றனர். சௌந்தர்யா தனக்கு தெரிந்த பெரிய பெரிய போலீஸ் ஆபீசர் மூலம் முயற்சி செய்தும் குழந்தை எங்கிருக்கிறான் என்று ஒரு விபரமும் தெரியாமல் பெண்கள் நால்வரும் தவித்து நின்றனர். கொஞ்ச நேரத்தில் த்வனியின் ஃபோன் அடிக்க, அதை எடுத்து பார்க்க ஆஷா தான் அழைத்திருந்தாள். ஆஷாவுக்கு என்ன சொல்வது. குழந்தை எங்கு என்று கேட்டாள் என்ன சொல்வதென்று பதறிய த்வனி ஃபோனை அட்டென் செய்யாமல் இருக்க. அது மீண்டும் மீண்டும் அடித்துக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் சௌந்தர்யா ஃபோன் அடிக்க, ஆஷா தான் த்வனி அழைப்பை எடுக்காமல் போனதால் அவருக்கு கால் செய்திருந்தாள். த்வனி சௌந்தர்யாவை பார்த்து வேண்டாம் என்று தலையை ஆசை ஃபோனை அட்டென் செய்த சௌந்தர்யா. "சொல்லு ஆஷா" என்றதும். ஆஷா குழந்தையை பற்றி கேட்க… "த்வனி விஷ்ணுவ கூட்டிட்டு வெளிய போயிருக்க ஆஷா" என்று எதையோ சொல்லி சாமாளிக்க… "ஓஓஓ அப்டியம்மா. நா அவளுக்கு கால் பண்ணேன். அவ எடுக்கால. விக்ரம் ஃபோன் கூட ரீச் ஆகல. அவரும் த்வனி கூட போயிருக்காராம்மா?" என்று கேட்க. வேறு வழியில்லாமல் சௌந்தர்யா "ஆமாம்" என்று சொல்லி வைக்க. "ரொம்ப தேங்க்ஸ்மா. நீங்க இல்லாட்டி இந்த நேரம் ரொம்ப கஷ்டமா போயிக்கும். நா கேட்டது விக்ரம் கூட. அதுனால என்ன விஷ்ணு எங்க வீட்ல இருக்காட்டும்னு சொல்லிடாரு." என்றவள். "சரிம்மா நாங்க கெளம்பிட்டோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்க வந்துவோம்." என்ற ஆஷா. "த்வனி வந்ததும் எனக்கு பேச சொல்லுங்க" என்றுவிட்டு ஃபோனை வைக்க. ஸ்பீக்கரில் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த த்வனி எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்க… " என்ன த்வனி இது. ஆஷா அண்ணி இன்னு கொஞ்ச நேரத்துல வரேன்னு சொல்றாங்க. வந்து வினு எங்கன்னு கேட்ட, நம்ம என்ன பண்றது." என்று ஷாலு பதற, த்வனி மெதுவாக நிமிர்ந்து சௌந்தர்யாவை பார்த்தவள். "விக்ரம் எங்க?" என்று கேட்க. 


"தெரியல த்வனி. காலையில யாரோ உதய்னு ஒருத்தனை பாக்கப்போறேன். ஆபீஸ்க்கு லேட்டா தான் வருவேன்னு அவனோட பி.ஏ கிட்ட ஃபோன்ல சொல்லிட்டு இருந்தான்‌ என்றதும். த்வனி ஒரு நிமிடம் கண்மூடித்திறந்தவள். "ஆரு... விக்ரம்‌ நம்பர் எங்க, எந்த இடத்தில் இருக்குன்னு ட்ராக் பண்ணு. விஷ்ணு விக்ரம்கிட்ட தான் இருக்கான்." என்றதும் மூவரும் அதிர…


"த்வனி என்ன சொல்ற நீ.?" என்று‌ சௌந்தர்யா பதற…


"ஆமா ஆன்ட்டி. வினுவ விக்ரம் தான் கூட்டிட்டு போயிக்கான். வினுகிட்ட ஜெகன், ஆஷா, என்னை தவிர யார் கூடவும் எங்கயும் போகக்கூடாதுன்னு சொல்லி இருக்கோம். எங்களை தவிர ஷாலு, ஆருகூட மட்டும் தான் வினு வெளிய போவான். மத்தபடி முகம் தெரியாத யாராவது அவனை கூப்ட்டு இருந்த கண்டிப்பா அவன் போயிக்க மாட்டான். அவங்க மிஸ் கிட்ட சொல்லி இருப்பான். சோ" என்றவள். எங்கோ பார்த்தபடி, "அது விக்ரம் தான் ஆன்ட்டி. காலையில உதய்யை பாக்க போனவனுக்கு என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சிருக்கும். அதான் என்னை பழி திக்க இப்டி பண்ணி இருக்கான்." என்றவள். "ஆரு ட்ராக் பண்ணிட்டிய?" என்று கேட்க. "எஸ் த்வனி விக்ரம் சிம் இப்ப தாம்பரம் லொக்கேஷன் கட்டுது" என்று சொல்ல. சௌந்தர்யா இடிந்து போய் அமர்ந்து விட்டார். "த்வனி அங்க நம்ம கம்பெனி கெஸ்ட் ஹவுஸ் இருக்குமா. விக்ரம் அடிக்கடி அங்க போவான். அங்க தான் அவன் வினுவை" என்று தொடங்கியவர்.‌ அந்த வரியை முடிக்க முடியாமல், "நா போய் குழந்தைய கூட்டிட்டு வரேன்." என்றவர் மகனின் செயலால் தலைகுனிந்தபடி செல்ல. 


"த்வனி வா நம்மளும் போவோம். அவன் குழந்தைய எதாவது செஞ்சிடப்போறான்" என்று பதறிய தோழிகளை பார்த்து இல்லையென‌ தலையாட்டியவள். "அவன் அப்டி எதுவும் செய்ய மாட்டான். வினு மேல சின்ன கீறல் கூட விழாது." என்று திடமாக சொல்ல. 


"ஏய்... லூசாடி நீ? உன்ன பழிவாங்க வினுவ தூக்கி இருக்கான். நீ இப்டி சொல்ற.? உனக்கு எப்டி தெரியும் அவன் வினுவ ஒன்னு செய்யமாட்டான்னு" என்ற ஷாலுவை பார்த்து விரக்தியாக சிரித்தவள். " இந்த உலகத்தில் அவன் அதிகமாக வெறுக்குறது என்னை தான்டி. அப்டிபட்ட நா அவன் வீட்ல அவன் கூடவே இருக்கேன். அவன் நெனச்ச என்னை என்ன வேணும்னாலும் செஞ்சிருக்கலாம். ஆன, இதுவரை அவன் விரல் நகம் கூட என்மேல பட்டதில்லை. அப்டிபட்டவன் ஒரு பாவமும் அறியாத சின்ன குழந்தைய ஒன்னு செய்யமாட்டான்டி." என்று அவள் உறுதியாக சொல்ல. தோழிகள் அவளை முறைத்து விட்டு அவள் அருகில் அமர்ந்து கொண்டனர். 


ஒருமணி நேரம் கழிந்து சௌந்தர்யா வர, அவருக்கு முன் "அத்த" என்று ஓடி வந்த விஷ்ணுவை வாரியனைத்துக் கொண்ட த்வனி கதறி அழ… விஷ்ணு அவள் கண்ணை துடைத்தவன். "ஏன் அத்த அழுகுற?" என்று தன் மழலை மொழியில் கேட்டபடி அவள் கண்களை துடைத்துவிட. குழந்தையை இறுக்கிக் கட்டிக்கொண்டவள். "ஒன்னு இல்லடா குட்டி. அத்தைக்கு கண்ல தூசி" என்று எதையோ சொல்லி சாமாளிக்க. "அத்த யூ நோ. விக்ரம் அங்கிளில் இஸ் சோ குட். அவர் என்னை பீச், தீம் பார்க், ரெஸ்டாரன்ட்னு நெறய பிளேஸ்க்கு கூட்டி போனாரு. சாக்லேட், ஐஸ்கிரீம் கூட வாங்கி தந்தாங்க. ஃபுல் நைட் நாங்க ரெண்டு பேரும் கார்ட்டூன் மூவிஸ் பாத்தோம். தெரியுமா?!" என்று சொல்லிக்கொண்டே போக. த்வனியும் சௌந்தர்யாவும் ஒருவரை ஒருவர் கலங்கிய படி பார்த்திருக்க. ஷாலினியும், ஆருஷி விக்ரம் பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியாது குழம்பி இருந்தனர். 


பெண்கள் நால்வரும் இயல்புநிலைக்கு வர. இரவு எட்டு மணிபோல் த்வனி வீட்டுக்கு வந்த ஆஷா, விஷ்ணுவை அழைத்து சென்றுவிட. "ஷாலு நீ உன் அப்பாகிட்ட வினு கெடச்சிட்டான்னு மட்டும் சொல்லு. வேற எதுவும் சொல்ல வேணாம். நா அப்றம் அப்பாகிட்ட பேசுறேன்." என்றவள் கூடவே இருக்கிறோம் என்று அடம்பிடித்த ஷாலுவும், ஆருவும் கட்டாயப்படுத்தி அங்கிருந்து கிளம்பி இருந்தனர். அவர்களும் நேற்றிலிருந்து வீட்டுக்கு போகாமல் இவளோட வினுவை தேடி சோறு, தண்ணி இல்லாமல் அலைந்து கலைத்திருக்க. த்வனி அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தாள். காலையில் சீக்கிரமே வருகிறோம் என்று விட்டு ஷாலு, ஆரு இருவரும் கிளம்பி இருந்தனர். ஒரு வேலை தோழிகள் அவளுக்கு துணையாக அங்கிருந்திருந்தால் நடக்கப்போகும் அசம்பாவிதத்தை தடுத்திருக்கலாம். ஆனால் விதி யாரை விட்டது. நடப்பது நடந்து தான் தீரும். 


சௌந்தர்யாவுக்கு விக்ரமை நினைத்து நினைத்து நெஞ்சை அடைக்க, "த்வனி எனக்கு மனசு சரியில்ல நா. கோயிலுக்கு போறேன்‌." என்றவர் தளர்ந்த நடையுடன் வெளியே சென்றுவிட… ரெண்டு நாட்களாக ஊண் உறக்கமின்றி விஷ்ணுவை தேடி அலைந்ததான் விளைவு த்வனியின் உடல் அளவுக்கு அதிகமாகவே சோர்ந்திருந்தது. எதுவும் சாப்பிட மனமின்றி வேலைக்காரி லட்சுமி அம்மா கொடுத்த பாலை மட்டும் குடித்துவிட்டு மாடியில் உள்ள தன் அறைக்கு சென்றவள் விழிகளை தூக்கம் தழுவிக்கொள்ள.


இங்கு விக்ரமோ, சௌந்தர்யா வந்து அவனை கன்னத்தில் மாறி மாறி அமைந்தவர். "ஏன்டா? ஏன்?? இப்டி என்னை அனுஅனுவ சாகடிக்குறதுக்கு பதில் ஒரேயாடிய‌ உன் கையாலயே என்ன கொன்னுடுடா... நீ இப்டி ஆக நான் தானா காரணம்" என்று முகத்தில் அடித்துக்கொண்டு கதறி அழுக. விக்ரம் எந்த உணர்வும் இல்லாமல் கல்போல் இறுகி நிற்க. சௌந்தர்யா விஷ்ணுவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.


மீண்டும் ஒரு முறை த்வனியிடம்‌ தான் தோற்று போனதை நினைத்து நினைத்து விக்ரமுக்கு உள்ளுக்குள் வெறியேற… தன் ஆத்திரம் அடங்கும் அளவு கண்ணு மண்ணு தெரியாமல் இரவு முழுவதும் குடித்தவன். குடிபோதையிலேயே தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.