கன்னத்தில் காதல் முத்தம் 15

  காதல் 15




இருவரும் எதுவும் பேசாமல் வீடு திரும்பி இருந்தனர். ஆராத்யா அமைதியாக அவள் அறைக்கு சென்று விட, அக்னிக்கு அடுத்து என்ன செய்வதென்று புரியாத நிலை.




"அப்ப இவ மனசுல, நான் அந்த ஆதியை அசிங்கப்படுத்த தான் இவளை தூக்கிட்டு வந்தேன்னு தான் நினைக்குறாளா? இத்தனை நாள்ல ஒரு நிமிஷம், ஒரு நொடி கூட இவ என்னோட காதலை உணரவே இல்லையா?" என்று வாய்விட்டு புலம்பியவன் கைப்பேசி ஒலிக்க, அதை எடுத்து பார்த்தான்.




வழக்கம் போல் கௌதமும் ஷிவானியும் தான் 'கான்ஃபரன்ஸ் காலில்' அழைத்திருந்தனர்.




ஆராத்யா இருந்த அறையை ஒருமுறை எட்டிப்பார்த்து விட்டு, மேலே சென்று அழைப்பை ஏற்று, "ஹலோ" என்றான் இறங்கிய குரலில்.




"என்ன அக்னி, வாய்ஸ் டல்ல இருக்கு, எதும் ப்ராப்ளம்மா?"




"ம்ம்ம்… ஆமா ஷிவானி, தியாக்கு உடம்பு சரியில்ல" என்றான்.




"ஏன் என்னாச்சு ஆராக்கு? இப்ப எப்டி இருக்க அவ? டாக்டர் கிட்ட கூட்டிபோனியா அவளை? டாக்டர் என்ன சொன்னாங்க?" என்று பதறியவள், "நான் உடனே அங்க கிளம்பி வரேன்" என்றாள் அவசரமாக.




"ஏய்… ஏய்… நீ உடனே கிளம்பி வர்ல அளவு அவளுக்கு ஒன்னும் இல்ல, அவளுக்கு பீரியட்ஸ்… உனக்கு தான் தெரியுமே… இந்த மாதிரி டைம்ல அவ ரொம்ப வீக் ஆகிடுவான்னு, அதோட அவளுக்கு ஃபீவர் வேற, மருந்து கொடுத்திருக்கேன். இப்ப அவ ஓகே தான்… பட்,‌ உனக்கு இங்க வரணும்னா நீ வா… நோ ப்ராப்ளம்" என்றான் அக்னி.




"ம்ம்ம்… வரேன் அக்னி. கூடிய சீக்கிரம் வரேன். இனிமேலும் இந்த விஷயத்தை இழுத்தடிக்க முடியாது. போலீஸ் ரொம்ப டீப்பா இன்வெஸ்டிகேஷன் பண்ணிட்டு இருக்காங்க, எப்ப வேணும்னாலும் நம்ம சிக்க வாய்ப்பிருக்கு, அதோட" என்றவளின் குரலில் இறங்கிவிட,




"என்ன… ஆதியோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கு… அதானே?" என்று‌ ஷிவானியின் எண்ணத்தை தெளிவாக கணித்து கேட்க, "ம்ம்ம் ஆமா அக்னி, ஹீ இஸ் டோட்டலி கொலாப்ஸ்டு… அவனை கண்கொண்டு பாக்க முடியல அக்னி… அவனை பாக்கும் போது மனசுக்குள் ஏதோ பண்ணுது.




அவனோட சிட்டுவேஷன் நாளுக்கு நாள் மோசமாகிட்டே போகுது. சோ எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம், ஆராவை முழுசா உன் பொண்டாட்டியா மாத்தி இங்க கூட்டிட்டு வந்தே ஆகணும். நான் சொல்றது உனக்கு புரியுதில்ல?" என்று கேட்டாள் ஆதங்கமாக.




"உனக்கு ஆராவை விட, அந்த ஆதி மேல தான் அக்கறை இல்லடி? என்று வந்த கௌதமின் நக்கல் வார்த்தையில் கடுப்பான இருவரும், "ஷட் ஆஃப் கௌதம்" என்றனர் ஒரே நேரத்தில்.




"ஓகே சாமி நான் இவளை பத்தி இனி வாயே திறக்கல… நீங்களே உங்க திட்டத்தை தீட்டுங்க" என்றவன், "அங்க எல்லாம் எப்டி போகுது அக்னி? ஆராகிட்ட எதாவது சேஞ்ச் இருக்க?" என்று கேட்க,




விரக்தியாக சிரித்த அக்னி, இன்று மாலை அவள்‌ பேசியதை சொல்லி, "அவ இன்னும் நான் ஆதியை அசிங்கப்படுத்த தான் இவளை தூக்கிட்டு வந்தேன்னு நினைச்சிட்டு இருக்கா கௌதம்… அவளுக்கு இப்ப கூட என் காதல் புரியவே இல்ல" என்றவன் குரலில் அத்தனை வேதனை.




"எல்லாம் சீக்கிரம் சரியாகிடும் அக்னி… அவளும் பாவம் தான. எல்லாம் தீடீர்னு நடந்து போச்சு… எத்தனை அதிர்ச்சியை தான் அவளும் தாங்குவா சொல்லு? அதை டைஜஸ்ட் பண்ண அவளுக்கும் டைம் வேணும் இல்ல…" என்றவன்,‌ "ஏன்டி இவளோ நேரம் வளவளன்னு பேசிட்டு இருந்த, இப்ப என்ன வாயை மூடிட்டு இருக்க? எதாவது சொல்லேன்" என்றான், சென்ற நொடி இனி அவளைப் பற்றி பேசமாட்டேன் என்று சொன்னதை மறந்து.




"இத அவ எப்ப கேட்டா அக்னி?" என்று கேட்டாள் ஷிவானி.




"இப்பதான்… வெளியே வாக் போயிருந்தோம் அப்ப தான் கேட்டா."




"சரி… நீ தான் அவ சின்ன வயசு தேவ்னு நீ அவகிட்ட எப்ப சொன்ன?"




"அது அவ ப்ரெக்னன்ட் னு ஒரு சீனைப் போட்டாளே அன்னைக்கே சொல்லிட்டேன். அது ஏன் இப்ப கேக்குற?" என்று கேட்டதும் ஷிவானி சில நிமிடங்கள் மௌனமாகி விட்டாள்.




"என்னடி? என்ன காதுல ஸ்பீக்கர் அவுட்டா? இல்ல வாய்ல மைக் அவுட்டா? பதில் பேசாம இருக்க!" என்ற‌ கௌதம், அக்னியிடம் அசிங்கமாக திட்டு வாங்கிய பிறகே அடங்கினான்.




"என்னாச்சு ஷிவானி?" என்று கேட்ட அக்னிக்கு, "இல்ல அக்னி… ஆராக்கு உன்மேல அப்படி ஒரு டவுட் இருந்திருந்தால், உன்னை பத்தி தெரிஞ்ச அன்னைக்கு இல்ல இந்த கேள்வியை எல்லாம் கேட்டு இருக்கணும்… அப்ப கேக்காம இப்ப இந்த கேள்வியை கேட்டதுக்கு காரணம், கண்டிப்பா உன்மேல உள்ள டவுட்னால இருக்க வாய்ப்பே இல்ல அக்னி.




நிச்சயமா ஆரா, நீ அவ மேல வச்ச காதலுக்காக அவளைத் தூக்கினியா? இல்ல ஆதி மேல இருக்க பகையில் அவளைத் தூக்கியான்னு தெளிவுப் படுத்திக்க தான், அவ கண்டிப்பா இப்ப இந்த கேள்வியை கேட்டு இருக்கணும்" என்றாள் உறுதியாக.




அப்போது தான் அக்னியே அந்த கோணத்தில் யோசிக்க ஆரம்பித்தான்.




"மேபீ… நீ சொல்றது கரெக்ட்டா கூட இருக்கும் ஷிவானி. அவ அந்த கேள்வியை கேக்கும் போது அவ குரல்ல அப்டி ஒரு பயம்" என்றான் அப்போது அவளின் முகபாவத்தை யோசித்தவனாக. "கரெக்ட் அக்னி… எங்க நீ ஆதியை பழிவாங்க தான் அவளை கடத்தினேன்னு சொல்லிடுவீயோன்னு தான் அவ பயந்திருக்கணும். சோ இதுல இருந்து அவ மனசுல உன்மேல லேசாக சாப்ட் கார்னர், ஒரு சின்ன எதிர்பார்ப்பும் வந்திருக்குன்னு நல்லா தெரியது.




அந்த சாப்ட் கார்னர்ரை சீக்கிரம் லவ்வா மாத்து… நமக்கு அதிக நேரம் இல்லை அக்னி. உனக்கு புரியும்னு நினைக்கிறேன். ஈஸ்வர் இப்ப ஸ்டேபுள்ல இல்ல… ஆராவோட கடத்தல் அவனை ரொம்ப அஃபெக்ட் பண்ணி இருக்கு…




அதான் நமக்கு இவ்ளோ டைம் கிடைக்கிது. அவன் மட்டும் கொஞ்சம் யோச்சிக்க ஆரம்பிச்சான், கண்டிப்பா உன்னைக் கண்டு புடிச்சிட்டுவான். சோ சீக்கிரம் எதாவது பண்ணு" என்றவள் வைத்துவிட, அக்னி அடுத்து என்ன செய்வது? என்று யோசிக்க ஆரம்பித்தான்.




அவன் நினைத்தால் ஒரு நொடி போதும் ஆராவை நெருங்க… ஆனால் ஏனோ அதைச் செய்ய அவன் விரும்பவில்லை. அவள் மனம் எந்த விதத்திலும் காயப்படக்கூடாது என்பதில் முடிவாக இருந்தான், அந்த பிடிவாத காதலன்.




'அடுத்து என்ன?' என்ற கேள்வி மலைபோல் அவன் முன் நிற்க, அடுத்து வந்த சில நாட்களில் ஆராவே அந்த மலையை வெடி வைத்து வெடிக்க வழிவகுத்தாள்.




எப்போதும் இருவரும் சேர்ந்து தான் உணவ உண்ண வேண்டும் என்று அக்னியின் கட்டளை. அன்றும் அதன்படியே இரவு உணவுக்காக அமர்ந்திருந்த ஆராவின் விரல்கள் தட்டில் கோலம் போட்டபடி இருக்க,




அவள் கவனம் இங்கில்லை என்று உணர்ந்த அக்னி, "என்னாச்சுடி? ஏன் சாப்டாம தட்டில கோலம் போட்டுட்டு இருக்க? எல்லாம் உனக்கு புடிச்ச ஐட்டம் தானா செஞ்சிருக்கேன், இதெல்லாம் புடிக்கலியா என்ன? வேற எதாவது வேணும்னுனா சொல்லுடி செஞ்சு தரேன்" என்றவனை நிமிரந்து பார்த்தவள் சட்டென்று விழிகளை தாழ்த்திக்கொள்ள, அந்த ஒரு நொடியில் அவன் கண்டது அவள் கண்களில் தெரிந்த சொல்லமுடியாத ஒரு வலி தான்.




"ஏய் தியா… என்னாச்சு உனக்கு? மறுபடியும் உன் உடம்பு சரியில்லயா என்ன?"என்று பதறியபடி அவள் நெற்றி மற்றும் கழுத்தில் கை வைத்து அவளுக்கு காய்ச்சல் அடிக்கிறதா? என்று பார்த்தான்.




அவள் நன்றாக தான் இருக்கிறாள் என்று தெரிந்த பின், ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டபடி அவள் கைமேல் கை வைத்து, "காய்ச்சல் கூட இல்லயே தியா. அப்றம் ஏன்டா ஒரு மாதிரி இருக்க? என்ன ப்ராப்ளம்?" என்று கேட்க, அவள் வெடுக்கென்று தன் கையைப் இழுத்துக் கொண்டவள்,




"இது… இதுதான்டா ப்ராப்ளம். நீ காட்டும் இந்த அன்பு தான் ப்ராப்ளம். என் மனசை தொடும், என்னோட உறுதியை அசைத்து பாக்கும் என் மேலான உன்னோட காதல் தான் என்னோட ப்ராப்ளம்…" என்று கத்தியபடி எழுந்து அக்னியின் சட்டைக் காலரைப் பிடித்துக்கொண்டு, "ஏன்டா என்னை லவ் பண்ண? எதுக்காக இப்ப என்னை இங்க தூக்கிட்டு வந்த? எதுக்காக இப்டி என்னைக் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குற? சொல்லுடா… சொல்லு…" என்று அவன் கண்ணைப் பார்த்து ஆக்ரோஷமாக கத்தியவள்,




"ஏன்டா இப்ப வந்த? இப்ப வந்து லவ் பண்றேன்னு சொன்னா நான் என்னடா பண்றது? என்னை தூக்கிட்டு வந்தியே, அட்லிஸ்ட் நான் இன்னொருத்தன் பொண்டாட்டி ஆகுறதுக்கு முன்னையே என்னை தூக்கிட்டு வந்திருக்க கூடாதா? எனக்கு கல்யாணம் ஆகும் முன்ன நீ உன் காதலை என்கிட்ட சொல்லி இருக்ககூடாத தேவ்?" என்றவள் அவன் சட்டையில் இருந்து கையை எடுத்தவள், அப்படியே தரையில் தொய்ந்து அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு கதறி அழ… அக்னிக்கு அவள் அழுவது மனதை வதைத்தாலும் அவள் சொன்ன வார்த்தைகளில் இருந்த உள்ளர்த்தம், அவள் மனதில் தன் காதல் மலர்ந்து விடும் என்ற மலையளவு நம்பிக்கையை அவனுக்கு கொடுத்தது, என்றால் அது மிகையில்லை.




அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து அவள் முகத்தை மூடியிருந்த கையை மெல்ல விலக்கி, "ஒருவேளை உனக்கு நிச்சயம், கல்யாணம் நடக்கும் முன் நான் வந்து என்னோட காதலைச் சொல்லி இருந்தா, நீ கொஞ்சம் முன்ன சொன்ன மாதிரி என்னை காதலிச்சு இருந்திருப்பியா தியா?




ஆதி கூட உனக்கு நடந்த எங்கேஜ்மென்ட் மீறி நீ என்னோட வந்திருப்பியா? என்னை கல்யாணம் செஞ்சிருப்பியா தியா?" என்று கேட்டவன் கண்களில் அத்தனை எதிர்ப்பார்ப்பு.




"முயற்சி செஞ்சிருப்பேன் தேவ்…‌ என் காதலுக்காக போராடி ஆதிமாமாவையும் அத்தையையும் சம்மதிக்க வச்சிருப்பேன். மாமாக்கு என்னை ரொம்ப புடிக்கும். கண்டிப்பாக என் விருப்பத்துக்கு தடை சொல்லி இருக்கவே மாட்டாரு… அப்டி ஒருவேளை அவங்க சம்மதிக்தாம இருந்திருந்தாலும் கண்டிப்பா உன்னை தான் கல்யாணம் செஞ்சிருப்பேன்…" என்றவள் மீண்டும், "ஏன் தேவ் நீ என் வாழ்க்கைல இவ்ளோ லேட்டா வந்த?" என்று அழுதபடி வேகமாக எழுந்து அவள் அறைக்கு சென்று கதவடைத்துக் கொள்ள, என்னதான் அவள் வார்த்தைகளை சுற்றிவளைத்து சொல்லி இருந்தாலும் அதன் அர்த்தம் அவள், அவன் காதலை ஏற்றுக்கொண்டு இருப்பாள் என்பது தான்.




சில நாட்களாக அக்னியும் ஆராவின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். அவள் கண்களில் ஒருவித தவிப்பு, முகம் தெளிவு இல்லாமல், எப்போதும் ஏதோ யோசனையிலேயே இருந்தவள் கண்களில், எப்போதும் ஒரு அச்சம்… இதெல்லாம் எதனால் என்று அக்னிக்கு ஒரளவு புரிந்தே இருந்தது.




அவளுக்கு தன் மீது ஈர்ப்பு வரத் தொடங்கி இருக்கிறது என்று அவனுக்கு புரிந்தது. ஆனால், ஆதியின் மனைவி என்ற நிலையில், அடுத்தவன் மேல் ஏற்படும் இந்த ஈர்ப்பு அவளை வதைத்தது. அவளை அவளே அருவருப்பாக நினைக்கும் அளவு அக்னி மீது நாளுக்கு நாள் அவளின் எண்ணங்கள் சாயத் தொடங்க, அவள் உள்ளுக்குள் மரித்து போனாள்.




இதில் ஆதி அவளைத் தேடி வராதது வேற அவள் மனதை மேலும் அழுத்த, அந்த அழுத்தம் அவள் முகத்திலும் செயலிலும் வெளிப்பட்டது. அக்னியை பார்க்காமல் தவிர்த்தாள்,




மீறி பார்க்க நேர்ந்தால் விழியை தாழ்த்திக்கொள்வாள். இப்டியே சிலநாட்கள் செல்ல, இன்று அவள் மன அழுத்தம் தாங்க முடியாமல் அக்னி முன் வெடித்து விட்டாள்.




அக்னி மூடியிருந்த அவள் அறைக்கதவை பார்த்து இறுக்கி கண்மூடித் திறந்தவன், உன்னோட மனசு மாறும்னு எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு தியா. ஷிவானி சொன்ன மாதிரி உன்னை என்னோட பொண்டாட்டியா முழுசா மாத்திக்கிட்ட பிறகு, உன்னோட ஜோடிய போய் அந்த ஆதி, பல்லவி முன்னாடி நிப்பேன்டி" என்றவன்,




அவள் உணவு உண்ணாமல் எழுந்துச் சென்றதால் பாதி ராத்திரியில் அவளுக்கு பசிக்கும் என்று பாலை காய்ச்சி, அதை ப்ளாஸ்க்கில் ஊற்றி உணவு மேசை மீது வைத்தவன் கொஞ்சம் பழங்களையும் வைத்துவிட்டு, அவள் சாப்பிடாமல் இருந்ததால் இவனும் சாப்பிடாமல் சென்று தன் அறையில் அடங்கிக் கொண்டான்.




அமைதியாக இருந்த ஆராவின் மனதில் அக்னியின் அன்பெனும் ஒளிக்கதிர் அவளை உருக்க தொடங்க அவளுக்கு தூக்கம் தொலைந்தது என்றால், 'அவளுக்கு தன்னை தான் பிடிக்கவில்லை. ஆனால் தன் காதலையும் அன்பையும் அவள் மதிக்கிறாள்.' என்ற உணர்வு நிம்மதியைக் கொடுக்க, வெகு நாட்கள் கழித்து நிம்மதியாகத் தூங்கினான் அக்னி.