நிஜம் 30
நிஜம் 30
ஷாலினி சொன்னதை கேட்ட த்வனிக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
"ம்ம்ம் எப்டியே பிரச்சனை முடிஞ்ச சரி… இனி அந்த இம்சையோட தொல்லை இருக்காது இல்ல ஷாலு?"
"இல்ல த்வனி, விக்ரம் விட்ட அறைல அவனுக்கு மேல ஒரு பல் அவுட்டு, அதுக்கு அப்புறம் நம்ம ஆரு விட்டாளே பாரு ஒரு அறை… ம்ம்ம்... அதுல அவன் கீழ் பல்லு ரெண்ட காணும்னா பாரேன்" என்று சிரிக்க,
"இவ அடிச்சால ஷாலு? என்று த்வனி ஆர்வமாக கேட்க,
"பின்ன அடிக்காம என்னடி பண்ணுவேன். அந்த ராஸ்கல் இது மாதிரி சூசைட் பண்ணீப்பேன்னு மிரட்டி என்னை மாதிரி நெறய பொண்ணுங்களை எமோஷனல் பிளாக்மெயில் பண்ணி லவ் பண்ணவச்சிருக்கான்டி. அவங்ககிட்ட இருந்து நெறய பணம், நகைனு புடிங்கி இருக்கான்… என்கிட்ட கூட அம்மாக்கு உடம்பு சரியில்லன்னு சொல்லி என்னோட செயின் பணம்னு நெறய ஆட்டய போட்டுட்டான் தெரியுமா… நேத்து விக்ரம் அண்ணா அவனை அடிச்சி கேக்கும் போது தான் தெரியுது, அந்த நாய்க்கு அம்மாவே இல்லயாம். அவங்க செத்து பத்து வருஷம் ஆகுதாம். அது தெரிஞ்சது வந்து எனக்கு வெறி… வூட்டேன் ஒரு அறை… பல்லு கழன்டு விழுந்துடுச்சு" என்றதும் முவரும் வாய்விட்டு சிரித்தனர்.
"எப்டியே எல்லாம் சரியாகிடுச்சு. தென் வாட் நெக்ஸ்ட்"
"நெக்ஸ்ட் என்ன இவ கல்யாணம் தான்" என்ற ஷாலு ஆரு இடுப்பை கிள்ள,
"ஆமா த்வனி, நெக்ஸ்ட் எனக்கு மேரேஜ், அதுக்கு அடுத்து நம்ம டாக்டர் மேடமுக்கும் உன்ற ரெடிமேட் அண்ணனுக்கும் டும் டும் டும்" என்று ஆருஷி ஷாலினியை வசமாக த்வனியிடம் போட்டுக் கொடுத்தாள்.
"எது என்னோட ரெடிமேட் அண்ணா… ம்க்கும் கூட பொறந்ததே சரியான க்கீரிப்பு… இதுல புது அண்ணான… சர்தான். யாருடி அது எனக்கே தெரியாத அண்ணன்."
"என்ன த்வனி இப்டி சொல்லிட்ட… நீ சொன்னதை கேட்டு நம்ம ஷாலுவோட பிஞ்சு நெஞ்சு எப்டி வலிக்கும் தெரியுமா"
"இதென்னடி வம்ப போச்சு, நான் யாரையே சொன்ன இவளுக்கு ஏன் வலிக்குது?"
"வலிக்காத பின்ன நீ அவ ஆள பத்தி இல்ல பேசிட்டு இருக்க" என்ற ஆருவை புரியாமல் பார்த்த த்வனி,
"அப்ப நீ வருண் பத்திய சொல்லிட்டு இருக்க!?" என்று கேட்க, ஷாலினி த்வனியை அதிர்ந்து பார்க்க, ஆருஷி முதலில் "ஆமா அவர் தான்" என்று ஆரம்பித்தவள், சட்டென நிறுத்தி த்வனியை கண்கள் சிமிட்டி உற்று பார்த்தாள்.
"ஏய் நீ எப்டி அவர்தான்னு கரெக்ட்ட சொல்ற? அப்ப ஷாலு வருணை விரும்புற மேட்டர் உனக்கு முன்னையே தெரியாம?" என்று ஆச்சரியமாக கேட்க, த்வனி நக்கலாக சிரித்தாள்.
"எல்லாம் தெரியும், என்னோட மெடிக்கல் ஹிஸ்டரி பத்தி அந்த வீணா போன விக்ரம்கு அடுத்து எல்லா டீடெல்ஸையும் ஃபிங்கர் டிப்ல வச்சிருக்குறது வருண் தான். அடிக்கடி என்னை ஹெல்த் பத்தி கேப்பான். நான் முறைச்சிட்டு போய்டுவேன். அப்றம் தான் இந்த டீடெயில்ஸ் எல்லாம் எப்டி வருணுக்கு தெரியுதுன்னு யோசிக்கும் போதே தெரிஞ்சு போச்சு. என்னோட அப்டேட் அவருக்கு யார் மூலமா போதுன்னு" என்ற த்வனி ஷாலினியை பார்த்து ஒற்றை புருவம் உயர்த்தி கண்டித்து,
"என்ன நான் சொன்னது கரெக்ட் தானா" என்று சிரிக்க, ஷாலினி கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தது.
"ஏய் இதெல்லாம் ரொம்ப அநியாயம்டி… இந்த மேட்டர் தெரிஞ்ச நீ வானத்துக்கும் பூமிக்கும் குதிப்ப, ஷாலினிய தூக்கி தூக்கிப் போட்டு ஃபுட்பால் மாதிரி மிதிப்பேன்னு நான் ஆர்வம எதிர்பார்த்த... நீ அசல்ட்டாக இருக்க… என்னதிது"
"ஆமாடி இந்த வாயித்த வச்சிட்டு தான் நான் ஃபுட்பால் ஆடப்போறேனா… சர்தான் போடி லூசு"
"சரிடி அது வேணாம், அட்லீஸ்ட் அவளை நல்ல திட்டவாது செய்டி… என் லவ் பத்தி தெரிஞ்சப்ப மட்டும் அகராதிலயே இல்லாத கெட்ட கெட்ட வார்த்தைய தேடி எடுத்து என்ன எப்டி எல்லாம் லெஃப்ட் ஆன்ட் ரைட் வாங்குன… அவளை மட்டும் ஒன்னு சொல்லமாட்டேங்கிற… அப்ப நான் அன்பில்லயா" என்று ஆருஷி கண்களை கசக்க,
"என்ன பர்ஃபாமென்ஸ்ஆ… சகிக்கல… ச்சீ மூஞ்ச ஒழுங்க வை…"
"போடி நான் உன்மேல கோவம். பேசமாட்டேன் போ" என்று குழந்தை போல் அடம்பிடித்த ஆருவை பார்க்க த்வனி சிரிப்பு தான் வந்தது.
"ஏய் நீ என்னை பத்தி என்ன தான்டி நெனச்சிட்டு இருக்க? என்னை பாத்த என்ன லவ்வை பிரிக்கும் வில்லி மாதிரிய தெரியும். நீ லவ் பண்னது ஒரு கழுசடயை. அதனால்தான் வேணாம்னு சொன்னேன். பட் வருணுக்கு என்ன குறை. இவ டாக்டர், அவரும் ஒரு பெரிய கம்பெனில வேலை பாக்குறாரு… நான் அவன் கூட படிச்சவடி, ஒரளவு எனக்கு வருண் பத்தி தெரியும். ஹீ இஸ் ஏ நைஸ் ஜெண்டில்மேன். ஷாலினிக்கு அவர் கரெக்ட் மேட்ச். அப்டி இருக்க இதுல நான் சொல்ல என்ன இருக்கு. வருணை மேரேஜ் பண்ண ஷாலினி ஹேப்பி இருப்ப, சோ ஐ ஆம் ஓகே வித் இட்"
"ம்ம்ம் சொல்லுவா சொல்லுவா… என்ன இருந்தாலும் அவர் உன்னோட ரெடிமேட் அண்ணா இல்ல. நீ அவருக்கு தான் சப்போட் பண்ணுவா"
"ஏய் ஆரு, நானும் அப்ப இருந்து பாக்குறேன், நீ ரெடிமேட் அண்ணா ரெடிமேட் அண்ணான்னு பெனத்திட்டு இருக்க, என்னடி அது. நான் எப்ப வருணை அண்ணான்னு சொன்னேன்." என்று த்வனி புரியாமல் கேட்க,
"ம்ம்ம் அத ஏன் என்கிட்ட கேக்குற. இத இருக்குதே உன்ற வருங்கால ரெடிமேட் அண்ணி இதுகிட்ட வேளு" என்ற ஆரு தலையில் கொட்டினாள் ஷாலினி.
"ஏன்டி நாரதி(நாரதரின் பெண்பால் மக்களே) வாயை வச்சிட்டு சும்மாவே இருக்க மாட்டிய?" என்றவள் த்வனியிடம் திரும்பி,
"அது ஒன்னு இல்ல த்வனி. அன்னைக்கு சௌந்தர்யா ஆன்ட்டி உன்னை பத்தி சொன்னத கேட்டதுல இருந்து வருணுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு" என்று தொடங்கியவள், அன்று தூங்கிக் கொண்டிருந்த த்வனியிடம் வருண் பேசிய அனைத்தையும் சொல்லக் கேட்ட, த்வனியின் கண்கள் லேசாக கலங்கியது.
"ஏய் த்வனி என்னச்சுடி?" என்று ஷாலினி பதற, விரல்கொண்டு விழியோரம் லேசாக துடைத்த த்வனி,
"ஒன்னு இல்ல ஷாலு. ஜஸ்ட் ஏதோ ஒரு குட் ஃபீல், தட்ஸ் ஆல். எப்டியோ எல்லாம் நல்லபடிய நடந்த எனக்கு சந்தோஷம் தான்." என்று த்வனி சிரிக்க, ஷாலினி ஆருவையும் அந்த சிரிப்பு தொற்றிக் கொண்டது.
"இன் ஃபேக்ட் அந்த டைம் வரைக்கும் எனக்கு வருணை அவ்ளோவ புடிக்காது த்வனி. பட், அவர் உன்கிட்ட பேசினத கேட்டப்போ, அவர் மேல எனக்கு கொஞ்சம் கொஞ்சம மரியாதை வந்தது. அதுக்கு அப்புறம் அடிக்கடி உன்னை பத்தி விசாரிப்பாரு, நான் உனக்கு சில பிரக்னன்சி சம்பந்தப்பட்ட புக்ஸ், அப்புறம் சில ஹோம் மேட் ப்ராடக்ட்ஸ், ஹெல்தி ஃபுட்ஸ் எல்லாம் குடுத்தேனே, அது கூட அவர் தான் உனக்காக வாங்னாரு. எங்க அவர் குடுத்த நீ வாங்கமாட்டீயேன்னு என்கிட்ட குடுத்து குடுக்க சொன்னாரு… அதெல்லாம் அவர் என்னை இம்ப்ரஸ் பண்ண செய்யலன்னு எனக்கு நல்லா தெரியும், பட் ஆம் இம்ப்ரஸ்டு. அவருக்கு என்னை புடிக்கும்னு எனக்கும் தெரியும், சோ வேற என்ன கமிட்டாகி ஆச்சு"
"ம்ம்ம் அப்ப உங்க லவ்க்கு நானும் என்னோட பாப்பாவும் தான் ரூட் போட்டு தந்திருக்கோம்னு சொல்லு" என்று சிரித்த த்வனி,
"இனிமே வருண் எனக்காக எது வாங்கினாலும் நேர என்கிட்ட கொண்டு வந்து தரச் சொல்லு. எங்க வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடுவுல நீ யாரு அந்நியன்" என்று த்வனி கிண்டல் செய்ய,
"என்ன த்வனி இப்டி கேட்டுட்ட, இவ தான் அந்த ஹீரோயின் மாங்கனி" என்று ஆரு அவள் பங்கிற்கு ஷாலுவை வர… அவர்கள் சிரிப்பு சத்தம் காதைப்பிளந்தது.
"சரி சரி… த்வனி நாங்க பாக்கத்துல இருக்க கோயில் போறோம். நீயும் வாயேன். அப்டியே காலார நடந்த மாதிரி இருக்கும்."
"ம்ம்ம் சரி ஷாலு. இரு ஆன்ட்டிகிட்ட சொல்லிட்டு, அந்த பைத்தியத்துக்கும் ஒரு மெசேஜ் போட்டு வரேன். இல்லாட்டி அது வரும் போது நான் வீட்ல இல்லன்னு தெரிஞ்ச பின்னாடி தீ வச்ச கொரங்கு மாதிரி குதிக்கும்." என்ற த்வனி விக்ரமுக்கு மெசேஜ் அனுப்பி விட்டு, தான் ஏழு மாத வயிற்றைத் தூக்கிக்கொண்டு நடக்க, ஷாலினி, ஆரு இருவரும் ரெண்டு பக்கமும் அவள் கைகளைப் பிடித்துககொள்ள, கோயிலுக்கு கிள்மபினாள்.
வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த
விக்ரம், த்வனியின் மெசேஜை பார்த்தவன் நேராக கோயிலுக்கு சென்றான்.
அங்கு த்வனி நடக்க முடியாமல், முகம் முழுவதும் வேர்த்து போய், மேல் மூச்சு கீழ் மூஞ்சு வாங்க அங்கிருந்த ஒரு டேபிளில் உட்கார்ந்து இருக்க, ஷாலினியும், ஆருவும் அவளுக்கு அங்கிருந்த அட்டையை வைத்து விசிறிகள் கொண்டிருப்பதைக் கண்டவன் வேகமாக த்வனியிடம் சென்றான்.
"ஏய் என்னச்சு?? எதுக்கு உனக்கு இப்டி மூச்சு வாங்குது?" என்று பதறியவன் அவன் கைகுட்டை எடுத்து அவள் முகத்தில் இருந்த வேர்வையை துடைத்து விட, அவன் துடைக்கும் போது, அவன் கைகள் நடுங்குவதை த்வனி கவனித்தாள்.
"ஏன்டா நீ எப்பவும் இப்டி தானா… சின்ன சின்ன விஷயத்துக்கு கூட என்னமோ கொரேனா பாஸிட்டிவ்னு வந்த மாதிரி ரியாக்ஷன் தர... ஐம் ஜஸ்ட் பிரெக்நெண்ட், நாட் ஏ பேஷன்ட். சும்மா சும்மா நீ இப்டி பதறி என்னையும் பயமுறுத்தாத புரியுத…" என்றவளை விக்ரம் முறைக்க,
"ஓய் என்ன முறைப்பு வேண்டி இரு உனக்கு. சும்மா மூஞ்சு வாங்குறதுக்கு எல்லாம் இப்டி பதறிட்டு இருந்த என்னடா அர்த்தம். கோயிலுக்கு வந்தேன், கால் வலிச்சது, நடக்க முடியல, சோ உக்காந்தேன், காத்து இல்ல அதனால வேர்க்குது. இதோ இப்ப எழுந்து வீட்டுக்கு போகப் போறேன், இதுக்கு எதுக்கு இம்புட்டு பர்பாமன்ஸ்…" என்று கையை டேபிளில் ஊன்றியபடி எழுந்து, அடுத்த நொடி விக்ரம் கைகளில் இருந்தாள்.
"டேய் லூசு… என்னடா பண்ற? ச்சி கீழ இறக்கி விடுடா என்ன…" என்று அவன் கைகளில் இருந்தபடி கத்தியவளில் ஒரு வார்த்தை கூட அவன் காதுகளில் விழவில்லை.
"உனக்கு தான் கால் வலிக்குதுனு சொன்ன இல்ல, பேசாம வாடி" என்றவன் அவளை தூக்கிக்கொண்டு கோயிலில் இருந்து காருக்கு நடந்து வர அங்கிருந்த அனைவரும் இவர்களை தான் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அவன் செய்கையில் த்வனிக்கு வெட்கம் பிடிங்கி தின்ன, "டேய் அநியாயம் பண்றடா நீயி. எல்லாருக்கும் பாக்குறாங்கடா, என்ன கீழ வூடுடா" என்று கத்த,
"யாரு பாத்த எனக்கென்ன… யூ ஆர் மை லிகலி வெடெட் வைஃப். ஐ ஹவ் ஃபுல் ரைட்ஸ், யாரு பாத்த எனக்கென்ன..." என்று நடக்க, ஷாலினியும் ஆருவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
காரின் பின் சீட்டில் த்வனியை மெதுவாக உட்கார வைத்து சீட் பெல்ட்டை போட்டு விட்டு, அதை ஒரு முறை இழுத்து, சரியாக இருக்கிறத என்று பார்த்து விட்டு,
"ம்ம்ம்… ஷாலு, ஆரு உக்காருங்க போலாம்" என்றான்.
"இல்ல அண்ணா, நீங்க கெளம்புங்க, நாங்க கேப் புக் பண்ணி போய்டுவோம்"
"அதெல்லாம் ஒன்னு வேணாம். போற வழி தானா, நான் டிராப் பண்றேன் உங்காருங்க, தனிய ஒன்னு போக வேணாம், இருட்டிட்டு வருது, வாங்க" என்று கணீர் குரலில் சொல்ல, அடுத்த நிமிடம் த்வனிக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தனர் இருவரும்.
ஷாலினி, ஆருவை அவர்கள் வீட்டில் இறக்கிவிட்டு தங்கள் வீட்டுக்கு வந்தான்.
த்வனி காரில் இருந்து தரையில் இறங்கி நிற்க, மீண்டும் அவளை கைகளில் தூக்கிக்கொண்டான் விக்ரம்.
"டேய் ஏன்டா என்ன இப்டி கொடும பண்ற, என்னால நடக்க முடியும்டா" என்று கத்தியது எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு தான்.
த்வனியை மெதுவாக ஹாலில் இருந்த சோஃபாவில் உட்கார வைத்துவிட்டு விக்ரம் செல்ல, சௌந்தர்யா அவளின் அருகில் வந்தார்.
"என்ன த்வனி, உனக்கு உடம்பு எதும் முடியலியா? விக்ரம் தூக்கிட்டு வரான். என்னம்மா ஆச்சு?" என்று அவள் கன்னத்தை வருட,
"அதெல்லாம் ஒன்னு இல்ல ஆன்ட்டி" என்றவள் சட்டென, நாக்கை கடித்துக்கொண்டு,
"சாரிம்மா, அப்டியே கூப்டு பழகிடுச்சு, தீடிர்னு நீங்க இனிமே ஆன்ட்டின்னு கூப்ட கூடாது, அம்மானு தான் கூப்டனும்னு ரூல்ஸ் போட்டுட்டீங்க, நான் என்ன பண்றது, பழக்கத்தை மாத்த முடியல" என்றவளை பார்த்து சிரித்தார் சௌந்தர்யா.
"பரவாயில்லமா, போகப்போக பழகிடும். சரி இப்ப சொல்லு உடம்பு என்ன உனக்கு? டாக்டரை வேணும்னா வரச்சொல்லவா?" என்று அக்கறையாக கேட்க,
"ஐய்யோ அதெல்லாம் வேணாம்மா. எனக்கு ஒன்னும் இல்ல, கோயில்ல நடந்ததுல கால் கொஞ்சம் வலிக்கதுன்னு தான் சொன்னேன். உடனே கேஸ் சிலிண்டரை தூக்குற மாதிரி என்னை தூக்கி தோள்ல போட்டுட்டு வந்துட்டான். அங்க இருந்த எல்லாரும் எங்கள தான் பார்த்தாங்க தெரியுமா, எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சுமா" என்று முகத்தை சுருக்கிக் கொண்டாள்.
"கால் வலிய எங்க காலை காட்டு" என்று சௌந்தர்யா த்வனியின் புடவை லேசாக தூக்கி அவள் காலை பார்க்க, அவள் கால்கள் ரெண்டும் புஸ்சென வீங்கி இருந்தது.
"என்ன த்வனி இது, கால் இப்டி வீங்கி இருக்கே, நீ ஏன் என்கிட்ட சொல்ல," என்று உரிமையாக அவளை கடிந்தவர்,
"இரு நான் போய் சூடு தண்ணில கல்உப்பு போட்டுக்கொண்டு வரேன். கொஞ்ச நேரம் கால அதுல முக்கி வச்சிருந்த உனக்கு வலி குறையும்" என்று அவர் எழ, அதற்குள் கையில் பெரிய டப், உப்பு, எழுமிச்சை பழம் மற்றும் வென்னீரோடு அங்கு வந்து நின்றான் விக்ரம்.
தரையில் உட்க்கார்ந்தவன், டப்பில் மிதமான சூட்டில் இருந்த வென்னீரை ஊற்றி, அதில் உப்பை கொஞ்சம் போட்டு, லைம்மை பிழிந்து விட்டவன், மெல்லமாக த்வனி கால்களை எடுத்து டப்புக்குள் வைக்க, சௌந்தர்யா மகனின் ஒவ்வொரு செயலையும் ஒரு சிறு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
"ஏன்டி ராட்சசி உனக்கு சூடு ஓகேவா… இல்ல இன்னும் கொஞ்ச பச்ச தண்ணி ஊத்தவா?" என்றவனை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்த த்வனி, மெல்ல கண்களை மூடித் திறந்து, போது என்றாள்.
