நிஜம் 26
நிஜம் 26
த்வனி அமைதியாக தன் எதிரில், உடல் முழுவதும் பல வண்ண வயர்கள் சுற்றி இருக்க, செயற்கை சுவாசம் மூலம் மெதுவாக மூச்சு விட்டுக்கொண்டிருந்த விக்ரமை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
இன்னும் ஒன்றிரண்டு நாளில் விக்ரம் கண்விழிக்க விடில் அவன் உயிருக்கு ஆபத்து என்று டாக்டர் சொல்லிவிட அந்த இடத்திலேயே "விக்ரம்" என்று கத்தியபடி சௌந்தர்யா நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மயங்கி சரிய, அந்த ஹாஸ்பிடலிலேயே சௌந்தர்யாவை அனுமதித்தான் வருண்.
ஒருபக்கம் விக்ரம், இன்னொரு பக்கம் சௌந்தர்யா என்று அனைவரும் அங்கும் இங்கும் ஓடி ஓடி ஓய்ந்து போயினர்.
விக்ரம் த்வனியிடம் அத்துமீறி நடந்த அன்றைய இரவுக்கு பின், த்வனிக்கு விக்ரம் முகத்தை பார்க்கக் கூட பிடிக்காமல், எங்கு நேரில் பார்த்தால் அவனை எதுவும் செய்துவிடுவேனே என்ற எண்ணத்திலேயே அவள் அவனை பார்க்காமல் விலகிச் சென்றாள். ஆனால், இன்று மயக்கத்தில் இருந்து கண்விழித்த சௌந்தர்யா, த்வனியிடம் கொஞ்சி கேட்டதால் அவனை பார்க்க ஹாஸ்பிடல் வந்திருந்தாள்.
அன்று வருணுக்கு ஃபோன் வந்த அடுத்த நிமிடம் த்வனிக்கு துணையாக ஆஷா வீட்டில் இருக்க, மற்ற அனைவரும் ஹாஸ்பிடல் விரைந்திருந்தனர்.
"டாக்டர் விக்ரம்கு என்ன ஆச்சு? அவனுக்கு இப்ப எப்படி இருக்கு டாக்டர்? அவன் உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லயே? என்று வருண் பதற,
"மிஸ்டர். விக்ரம் இங்க அட்மிட் ஆகி ஒன்பது நாள் ஆகுது வருண். கடல்ல மீன் பிடிக்க போட்டு வச்சிருந்த வளையில் இவர் மாட்டி இருக்காரு, ரொம்ப நேரம் தண்ணிலயே இருந்திருக்காரு போல, மயங்கிப்போய் உயிருக்கு போராடிட்டு இருந்தவரை, அந்த மீனவர்கள் தான் இங்க கொண்டு வந்து சேத்தாங்க… அவர் பத்திய விவரம் எதுவும் எங்களுக்கு தெரியாதனால, நாங்களும் உடனே போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டு ட்ரீட்மென்ட்டை ஸ்டார்ட் பண்ணோம். பட், அவர் எங்க ட்ரீட்மென்ட்டுக்கு ரெஸ்பான்ஸ் பண்ணவே மாட்டேங்குறாரு மிஸ்டர்.வருண். ஐ திங்க் அவர் சூசைட் பண்ணிக்க தான் கடல்ல விழுந்திருப்பாரு போல, அவர் வாழ விரும்பல, அவரோட உள்மனசு சாகணும்னு ஆழம நினைக்குது, அதான் எங்க ட்ரீட்மென்ட்டுக்கு அவர் ரெஸ்பான்ஸ் செய்ய மாட்டேங்குறாரு. இதுக்கு மேலேயும் இப்படியே போன அவர் உயிர் பொழைக்குறது ரொம்ப கஷ்டம்." என்று டாக்டர் சொல்ல,
"டாக்டர் ப்ளிஸ் அப்படி சொல்லாதீங்க டாக்டர். எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல டாக்டர், இல்ல எங்கயாவது வெளிநாட்டுக்கு கூட்டி போனும்னாலும் சொல்லுங்க நான் கூட்டிட்டு போறேன். எங்க விக்ரமை மட்டும் காப்பாத்தி குடுத்துடுங்க டாக்டர்" என்று வருண் டாக்டர் கையை பிடித்து கொண்டு கொஞ்சினான்.
"வெளிநாடுக்கு கூட்டிப்போக எல்லாம் தேவையில்லை வருண். அதுக்கெல்லாம் அவசியமாமே இல்ல, அவர் எங்க ட்ரீட்மென்ட்க்கு ரெஸ்பான்ஸ் பண்ணினாலே போதும். ஆனா, அதை அவர் செய்ய மாட்டேங்குறாரு" என்ற டாக்டர், "அவருக்கு நெருக்கமானவங்க எல்லாம் அவர்கிட்ட பேசுங்க, அவர் ரியாக்ட் பண்றவரை பேசுங்க, நீங்க பேசுறதை கேட்டு அவருக்கு மறுபடியும் வாழணும்ன்ற எண்ணம் வரணும். அவர்குள்ள இருக்க சாகணும்ற எண்ணம் போய், உயிர் வாழணும்னு ஆசை வரணும். அப்ப தான் நாங்க கொடுக்கும் மருந்து, மாத்திரை வேலை செய்யும். அதுவும் இவர் இன்னும் ஒரு நாள்ல கண்ணு முழுச்சே ஆகணும். இல்லாட்டி" என்று எல்லோர் நம்பிக்கையையும் உடைக்கும் உண்மையை சொல்லிவிட்டு டாக்டர் செல்ல, அனைவரும் கலங்கிப் புலம்பினர்.
சௌந்தர்யா, வருண் உட்பட அனைவரும் அவன் காதருகில் கரடியாக கத்தியும் விக்ரம் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. டாக்டர் சொன்ன நேரத்தில் இன்னும் கொஞ்ச நேரமே மிச்சமிருக்க, எங்கு விக்ரமுக்கு எதாவது ஆகி விடுமோ என்ற பயம் அனைவர் மனதையும் கவ்வத் தொடங்கியது.
கடைசி முயற்சியாக சௌந்தர்யா த்வனி ஃபோனுக்கு அழைத்து, தன் கண்ணீரில் அவள் மனதை நனைத்து, பேசிக் கரைத்து அவளை ஹாஸ்பிடல் அழைக்க, பிடிக்காவிட்டாலும் லயாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக த்வனி விக்ரமை பார்க்க ஹாஸ்பிடல் வந்தாள்.
"நான் அப்ப சொன்னதை தான்டா இப்பவும் சொல்றேன். நீ எந்த வகைலயும் என் லயாக்கு ஏத்தவன் இல்ல… நான் உறுதிய சொல்றேன். நீ அவ லவ்க்கு துளி கூட அருகதை இல்லாத ஜென்மம். யுவர் ஏ பிளடி இப்போக்ரெட் ராஸ்கல். நீ சரியான சுயநலவாதிடா. உனக்காகவே வாழ்ந்து, உனக்காகவே தன்னோட கடைசி நிமிஷம் வரை சாவோட போராடி, உன்னோட வாழணும்ற ஒரே ஆசையில், அவ்ளோ கொடுமையான எல்லா ட்ரீட்மென்ட்டையும் பல் கடிச்சிட்டு பொறுமையா செஞ்சிக்கிட்ட பாரு அவ லூசு தான்டா. அவளுக்கு அப்ப தெரியலடா, நீ எவ்ளோ பெரிய சுயநல பேய்னு... ம்ம்ம் அவ சாகுற கடைசி நிமிஷம் வரை உன்னையே தான் நெனச்ச, உன்னை தான் யோசிச்ச, உன்னை பத்தி மட்டும் தான்டா யோசிச்ச… ஆனா நீ? ச்சீ… அவளோட கடைசி ஆசையே நீ வாழணுகுறது தான்டா… அந்த சின்ன ஆசைய கூட நெனவேத்த துப்பில்லாம இப்படி சாகபாக்குற உன்னை பாக்கும்போது எனக்கு பத்திட்டு வருதுடா… அவ ஒவ்வென்னயும் உனக்காக பாத்து பாத்து செஞ்சடா… அந்த எல்லா கர்மத்தை பாக்கத்துல இருந்து பாத்த எனக்கே உள்ளுக்குள் அப்படி வலிக்கும்டா, அப்ப அவளுக்கு எப்படி வலிச்சிருக்கும். ஆனா நீ... அதையெல்லாம் ஒரு செகண்ட் கூட யோசிக்காம, ரொம்ப ஈசியா ஒரு நிமிடத்தில் நிம்மதியா உயிர விட முடிவு பண்ணிட்ட இல்ல... நீ எப்பவும் பெருச சொல்லுவீயே ,உன்னைவிட நான் தான்டி என் ரென்யா மேல அதிக அன்பு வச்சிருக்கேன்னு, இப்ப சொல்றேன்டா, உன்னைவிட லயா மேல அதிகம அன்பு வச்சிருக்குறது நான் தான்டா. அதான் அவ கடைசிட சொன்ன வார்த்தைக்காக, நான் உன்னை எதுவும் செய்யல, உன்கிட்ட உண்மைய சொல்லல, எல்லாத்துக்கும் மேல எனக்கு புடிக்காட்டியும் கல்யாணத்தையும் பண்ணிக்கிட்டேன், அதுவும் என் தலையெழுத்து உன்னை கட்டிக்கிட்டேன். இந்த நிமிஷம் வரை இனிமேயும் நான் அவ சொன்ன வார்த்தைக்காக வாழ்வேன்டா… என்னை நம்பி என் வயித்துல கருவ வந்திருக்க என் லயாவுக்காக நான் வாழ்வேன். உனக்கு தான் லயா ஆசை பத்தி எந்த கவலையே, மரியாதையே இல்லயே… நீ போ... நீ போய் தொலடா… சாவு... செத்து போ… ஆனா, ஒன்னு ஒருவேளை என்னை பழிவாங்க, நீ செத்து என்னை விதவையாக்கி அழுக வைக்கலாம்னு ப்ளான் பண்ணி, நீ சாக நெனச்சிருந்த, ஐ ஆம் வெரி சாரிடா பைத்தியக்கார, அதெல்லாம் இந்த த்வனிகிட்ட நடக்காது. எனக்கு நீ இருந்தாலும் ஒன்னு தான் இல்லாட்டியும் ஒன்னு தான். பொறக்கப்போற என் லயா குட்டியோட நான் என் வாழ்க்கைய சந்தோஷமா முக்கியம, போட்டிக்கு நீ இல்லாம நான் லயாவோட நிம்மதியா இருப்பேன்" என்றவள் எழுந்து திரும்ப, அங்கு கைகளை கட்டிக்கொண்டு த்வனியையே உற்று பார்த்தபடி நின்றிருந்தான் வருண். அவன் அருகில் ஆஷா, ஷாலினி, ஆருஷியும் இருந்தனர்.
"ஏய் த்வனி என்னடி இது? உன்னை என்ன பேச சொன்ன நீ என்ன பேசிட்டு இருக்க, உயிருக்குப் போராட்டிட்டு இருக்க மனுஷனை போய் சாக சொல்ற… உன்னோட மனுஷத்தன்மை செத்து போச்ச என்ன?" என்று ஆஷா அவளை திட்ட, த்வனி ஆஷாவை இமை உயர்த்தி ஒரு பார்வை பார்த்துவிட்டு, வருணை தாண்டிச் செல்ல,
"எனக்கு நம்பிக்கை வந்துடுச்சுமா, கண்டிப்பா விக்ரம் எழுந்து வந்துடுவான்னு எனக்கு முழு நம்பிக்கை வந்துடுச்சு" என்றவன் த்வனியை கையெடுத்து கும்பிட, த்வனி அவனை ஒரு நிமிடம் ஆழமாக பார்த்தவள் அங்கிருந்து சென்றாள்.
"தேவ்… தேவ்… டேய் தேவ் எந்திரிடா" என்ற லயாவின் குரலில் விக்ரம் மெல்ல கண்விழிக்க, அவன் முன் காதல் பொங்கும் கண்களுடன் அவனை பார்த்து சிரித்தபடி அமர்ந்திருந்தாள் தேவின் ரென்யா.
"ரென்… ரென்யா… ரென்யா" என்ற விக்ரமின் குரல் தழுதழுக்க, அவன் இதழில் தன் ஒற்றை விரல் வைத்து 'உஷ்' என்ற லயா, "எதுவும் பேசாத… நான் உன்மேல செம்ம கோவத்தில் இருக்கேன். எதாவது பேசின நான் எழுந்து போய்டுவேன்" என்றதும்,
"இல்ல… இல்ல நான் பேசல நீ என்னைவிட்டு போகத ரென்யா" என்றவன் அவள் கையை கெட்டியாக பிடித்துக்கொள்ள, அவன் தலைமுடியை மெதுவாக கோதியவள், "ஏன் தேவ் இப்படி செஞ்ச? நான் அழுத உனக்கு புடிக்காது தானா… அப்பறம் ஏன்டா எப்ப பாரு என்னை அழ வைச்சு வேடிக்கை பாக்குற? செத்த அப்புறம் கூட நீ என்னை நிம்மதியா இருக்க விடமாட்டியா" என்றதும் விக்ரம் கதறி அழ தொடங்கினான்.
"ப்ளீஸ் தேவ் தயவுசெய்து அழத, நீ அழறத பாக்கும் சக்தி எனக்கில்ல தேவ் . ப்ளீஸ் ஸ்டாப் கிரையிங்" என்ற லயா அவன் கண்களை துடைத்துவிட்டு,
"நீ வாழணும் தேவ். நூறு வயசு வரை நல்லா வாழணும். அதை நான் பாக்கணும். அதுக்கு தான் கடவுள் த்வனிய உன் வாழ்க்கையில் இணைச்சு இருக்காரு போல, நான் உங்க ரெண்டு பேருக்கும் குழந்தைய பொறந்து கடைசி வரை உங்க கூடவே இருக்கபோறேன்னு நிம்மதியா இருக்கும் போது, நீ இப்படி சாக முடிவெடுத்துட்டுயேடா... இது உனக்கே நியாயம தேவ். ப்ளீஸ் தேவ் இனிமே இப்படி பண்ணாத, த்வனியையும் அவ வயித்துல இருக்க என்னையும் நீதான்டா பத்திரமா பாத்துக்கணும். பாவம்டா த்வனி அவளுக்குன்னு இருந்தது நான் மட்டும் தான். இப்ப நானும் இல்ல. எனக்கு பதில் அந்த இடத்தில் இருந்து நீதான் அவளை பாத்துக்கணும். நான் எங்கேயும் போகலடா, உன்னோட தான் இருக்கேன்... இருப்பேன். நீ செத்து உன் நினைவில் உயிரோட இருக்கும் என்னையும் கொன்னுடாத தேவ் ப்ளீஸ். ப்ளீஸ் தேவ், என் ஆசைய நிறைவேத்து தேவ்… எனக்காக நீ வாழணும் தேவ்" என்றவள் குரல் மெல்ல தேயத் தொடங்க, அவள் உருவம் மெல்லமாக மறைய ஆரம்பித்தது.
மூடி இருந்த விக்ரமின் விழியின் ஓரம் கண்ணீர் துளிகள் வழிய, அவன் மூடிய கண்களில் விழிப்பந்துகள் அங்கும் இங்கும் உருல, அவன் இதயத்தின் இயக்கத்தை பார்க்க, பொறுத்திருந்த கருவி "பீப் பீப்" என்று வேகமாக கத்த ஆரம்பிக்க, அந்த நேரம் அந்த ஹாஸ்பிடலே அதிரும் படி ஒலித்தது, மயக்கத்தில் இருந்து கண்விழித்த விக்ரம் "ரென்யா" என்று அலறிய குரல்.
அனைத்து பரிசோதனையும் முடிந்து விக்ரம் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிந்து அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஷாலினி ஃபோன் செய்து ஆஷாவிடம் விஷயத்தை சொல்ல, ஆஷா த்வனியிடம் விக்ரமுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சொன்னவள், "கடவுளே... இன்னையோட எல்லா பிரச்சனையும் முடியட்டும். இனி எந்த புது பிரச்சனையும் வராம, நடக்கப்போறது எல்லாம் நல்லதாவே இருக்கணும்" என்று கடவுளை கண்மூடி வேண்டிக்கொண்டிருந்த ஆஷா பார்த்து இதழ் சுளித்து சிரித்தாள் த்வனி.
'நீ நினைக்குற மாதிரி பிரச்சனை முடியல ஆஷு… இப்ப தான் பிள்ளையார் சுழி போட்டு உண்மையான பிரச்சனை தொடங்கி இருக்கு' என்று மனதில் நினைத்தவள், கண்களை மூடி இழுத்து மூச்சு விட்டு, தனது அறைக்கு சென்றாள்.
காலை ஐந்து மணிபோல் விக்ரம் படுக்கைக்கு அருகில் இருந்த சோஃபாவில் உறங்கிக்கொண்டிருந்த வருண் திரும்பி படுத்தவன் பார்வை விக்ரம் படுக்கையில் விழ அது காலியாக இருப்பதை பார்த்து பதறியடித்துக்கொண்டு எழுந்தான் வருண்.
அந்த ஹாஸ்பிடல் முழுவதும் சல்லடை போட்டு அலசி பார்த்தும் விக்ரம் கிடைக்காமல் போக, வருண் மறுபடியும் முதல்ல இருந்த என்று வாய்விட்டு புலம்பியபடி கீழே அமர்ந்து விட்டான்.
