கண்ட நாள் முதல் 7

 அத்தியாயம் 7


நிலா எதுவும் பேசாமல் எதையோ யோசித்து கொண்டே அமைதியாக அமர்ந்து இருந்தாள். ராம்குமார் அவள் கைகளை பிடித்தபடி அவள் அருகிலேயே இருந்தார்.


அங்கு வந்த அரவிந்த், "அங்கிள் எல்லாம் ரெடி வாங்க" என்று அழைக்க. நிலாவும் ராம்குமாரும் எழுந்து சென்றனர்.


நிலா அங்கு சொல்ல அங்கே ரிஜிஸ்டர் பியூனை அழைத்து பொண்ணு, பையன் இரண்டு பேர் ID யையும் செக் பண்ணிட்டிய? என்று கேட்க...


பியூன் "பண்ணிட்டேன் சார் எல்லாம் ஓகே தான்" என்றார்.


"சரி அப்ப அவங்க ரெண்டு பேரையும், அப்புறம் சாட்சி கையெழுத்து போடுறவங்களையும் உள்ள கூட்டிட்டு வா" என்றார்.


வெளியே வந்த பியூன் "அடுத்த ஜோடி நிலானி, சூர்யா. பொண்ணையும், பையனையும் உள்ள கூப்புடுறாங்க" என்று வந்த குரல் கேட்டு நிமிர்ந்த நிலா, "என்னது சூர்யாவா…? இவன் பேரு அரவிந்த் தானே, ஏன் இவங்க சூர்யான்னு சொல்றாங்க? என்ற குழப்பத்துடன் ரிஜிஸ்டரின் அறைக்குள் நுழைய அங்கே  அரவிந்த் பக்கத்தில் நின்று கொண்டு இருந்தான் சூர்யா. ரிஜிஸ்டர் கல்யாண ஜோடியை கையெழுத்து போடச் சொல்ல, முதலில் கையெழுத்து போட்டாள் நிலானி. அவளை தொடர்ந்து அரவிந்த் கையெழுத்து போடுவான் என்று  நிலா எதிர்பார்க்க  ஆனால், அங்கு மாப்பிள்ளையாக சூர்யா கையெழுத்திட நிலா அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டாள். 


"என்ன இது..?? யார் இவன்..?? இவன்  கையெழுத்து போடுறான். இங்க என்ன நடக்குதுனு ஒன்னும் புரியலயே? கடவுளே..." என்று நிலா புலம்ப. அடுத்து அரவிந்த் சூர்யாவுக்காக சாட்சி கையெழுத்து போட. நிலாவிற்கு கால்களில் இருந்து பூமியே ஒரு நிமிடம் நழுவியது. 


ரிஜிஸ்டர் "எல்லாம் நல்லபடியா முடிஞ்சது" என்று சொல்ல. நிலா அதிர்ச்சியில் அப்படியே நிற்க.. சந்தியா அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள். நிலா தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் நிற்க. அவள் கன்னத்தை கிள்ளியது ஒரு கை. அதில் தன்னிலை அடைந்தவள். நிமிர்ந்து பார்க்க அங்கே அழகிய முகத்தில் அன்பு  கலந்த சிரிப்புடன்  நின்றிருந்தார் சூர்யாவின் தாய் தனலட்சுமி.


"நிலா நீ ரொம்ப அழகா இருக்கம்மா" என்று நெட்டி முறித்தவர். இப்ப புரியுது கல்யாணமே வேணாம்னு, இருந்தவன் இப்டி அவசர கல்யாணத்துக்கு ஏன் ஒத்துக்கிட்டான்னு. உன்னை மாதிரி மகாலட்சுமியை விட எப்படி மனசு வரும். அரவிந்த் எங்க கிட்ட உன்ன பத்தி பேசும்போதே உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. உன் போட்டோ பார்த்ததும் நீதான் என் மருமகன்னு முடிவே பண்ணிட்டேன். உங்க கல்யாணத்தை நல்ல விமர்சையாக பண்ணனும்னு தான் ஆசைப்பட்டேன். ஆனா, உன் மாமனாருக்கு  முக்கியமான மீட்டிங் இருக்கு. இன்னைக்கு சாயந்திரமே கிளம்புறோம். திரும்பி வர ஒரு வாரம் ஆகும். சரி வந்ததுக்கு அப்புறம் கல்யாணம் வச்சுக்கலாம்னு பாத்த, உன் ஜாதகப்படி இன்னைக்கு உன் கல்யாணம் நடந்த ரொம்ப நல்லதுன்னு உங்க அம்மா சொன்னாங்க" என்றதும் நிலா திரும்பி கலையை பார்க்க கலை அப்படியே திரும்பி சந்தியாவை பார்த்தார். சந்தியா உடனே வராத ஃபோனில் பேசிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட, மீண்டும் தொடர்ந்த தனலட்சுமி, "உங்க அம்மா சொன்னது சரியா பட்டுச்சு அதனால இன்னைக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் வச்சுட்டு வேற ஒரு நல்ல நாள் பார்த்து நல்ல விமர்சையா கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டோம்" என்று குழந்தை போல் வெள்ளந்தியாக சிரித்த தனலட்சுமியை, ஏனோ நிலாவுக்கு  மிகவும் பிடித்துவிட்டது. அவரை பார்த்து சினேகமாய் புன்னகைக்க.. மருமகள் சிரிப்பில் தனலட்சுமி உருகி விட்டார்.


"என் தங்கம் எவ்ளோ அழகான சிரிப்பும்மா உனக்கு. உன்ன பாக்க முன்னாமே வரலாம்ன்னு தான் நினைச்சேன். ஆனா, டிக்கெட் கிடைக்கல டா. இன்னைக்கு உன்னை பாத்தே ஆகணும்னு எப்படியே வந்துட்டோம்" என்று அவர் மூச்சு விடாமல் பேச. "கொஞ்சம் முச்சு வாங்கிட்டு பேசு தனம்" என்று தன் மனைவியை கிண்டல் செய்தபடியே அங்கு வந்தார் சூர்யாவின் அப்பா குமரேசன்.


"போங்கா நீங்க! புள்ளைய பாத்த சந்தேஷத்தில் எனக்கு ஒன்னுமே புரியல" என்று  தனலட்சுமி வெட்கப்பட. குமரேசன் அவரை கலாய்க்கா நிலாவுக்கு அவர்கள் இருவரையும் மிகவும் பிடித்து விட்டது.


"சரிமா நிலா உன்னை விட்டுப் போக மனசே இல்ல. ஆனாலும்  பிளாட்டுக்கு நேரமாச்சு நாங்க இப்ப கிளம்புறோம்." என்றவர் கலையிடம் வந்து இன்னும் பத்து நாள்ல நல்ல முகூர்த்தம் வருது. அதுலயே கல்யாணத்தை வச்சுக்கலாம்.  அரவிந்த்தோட அப்பா, அம்மா எல்லா ஏற்பாட்டையும் பாத்துப்பாங்க. அதுவரை என் மருமகளை பாத்திரமாக பாத்துகோங்க" என்றவர் அனைவரிடமும் சொல்லி விட்டு கிளம்பினார்.


சூர்யாவும், அரவிந்த்தும் அவர்களை வழி அனுப்பி வைக்க உடன்சொல்ல. இங்கு நிலா யாருக்கே கல்யாணம் என்பது போல் அமைதியாக நின்றிருந்தாள்.


கலை சந்தியாவிடும் சென்று, "ஏய் வராத ஃபோன்ல எவ்ளோ நேரம் தான்டி பேசுவ.? போய் அங்க நிலா கூட இரு" என்றவரை சந்தியா  ஏற இறங்க பார்த்தவள். "ஏம்மா நீ போக வேண்டியது தானே. உன் பொண்ணு தானே அவ... நீயே போய் பேசு."


"அடியேய்! அவ இப்ப என்ன மூடுல இருக்கன்னு தெரியலடி... இப்ப நா மட்டும் போன கன்பர்ம் டெத் தான்.

நா போக மாட்டேன்.நீதான் தைரியசாலி ஆச்சே! நீ போடி" என்ற அம்மாவை முறைத்த சந்தியா,  "தாயா நீ? இல்ல தாயா ன்னு கேக்குறேன்? இப்டி பெத்த புள்ளையை அந்த கொள்ளிவாய் பிசாசு கிட்ட மாட்டி விட பாக்குறியே இது நியாயமா, அடுக்குமா..??" என்று சந்தியா கொதிக்க.


"ஏய் நீதான் தைரியமான ஆளாச்சே போடி. நா அப்பவே அவகிட்ட இந்த கல்யாணம் பத்தி சொல்லுன்னு சொன்னேன். நீதான் அதெல்லாம் ஒன்னும் வேணாம். அவ ஏதாவது பிராடு வேலை பண்ணுவ. என்ன வந்தாலும் நா பாத்துக்குறேன்னு சொன்ன... இப்ப இப்டி சைடு வாங்குற.? மரியாதைய அவளை சமாளி இல்லலல..??"


"இல்லைன்ன என்ன பண்ணுவ.?" என்று சிந்தியா திமிராக கேட்க.


"ம்ம்ம்ம். என்ன செய்வேனா? நேர நிலா கிட்ட போய், இது எல்லாத்துக்கும் நீதான் காரணம்னு தெளிவ போட்டு கொடுத்துடுவேன். தட்ஸ் ஆல்" மீதிய அவ பாத்துக்குவ" என்றார் கலை தோள்களை குலுக்கியபடி...


"அடபாவி கொலைகார அம்மா!! எவ்வளவு கிரிமினல் புத்தி உனக்கு? நடந்தது எதுலயும் உனக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி பேசுற…?"


"ஓஓ!!! அப்ப நீ இரண்டு பேரும் சேர்ந்து தான் இந்த பிளான் போட்டிங்களா?" என்ற நிலாவின் குரலில் இருவரும் அப்படி திரும்பி பார்க்க, அங்கே இவர்களை கொலைவெறியுடன் இடுப்பில் கைவைத்து முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா...


"அய்யோ பிடாரி பின்னால தான் இருந்தால? இது தெரியாம நாம பாட்டுக்கு வாக்குமூலம் குடுத்துட்டோமே... சரி சமாளிப்போம். அடியேய் சந்தியா நீ போய் உங்க அப்பாவை கூட்டி வா, அப்ப தான் இந்த பிசாசை சமாளிக்க முடியும். சீக்கிரம் போடி" என்றது தான் சந்தியா சிட்டாக பறந்து ராம்குமாரிடம் சென்றாள்.


ராம்குமார் சூர்யா மற்றும் அரவிந்திடம் பேசிக்கொண்டு இருக்க. அங்கு வந்த சந்தியா "அப்பா சீக்கிரம் வா. உன் பொண்டாட்டி இவர் பொண்டாட்டி கிட்ட மாட்டிக்கிச்சு... வந்து காப்பாத்துங்க" என்றாள் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க.


சூர்யா "என்ன ஆச்சு சந்தியா..?"


"அது மாம்ஸ். அம்மா அது வாயாலயே உங்க பொண்டாட்டி கிட்ட மாட்டிக்கிச்சு. இப்ப அப்பா வந்த தான் கலை நமக்கு. இல்ல கலை நமக்கு இல்ல" என்றவள் ராம்குமாரை இழுத்துச் செல்ல. அரவிந்த் சூர்யாவை பார்த்து, "டேய் கேட்டிய? அவ அம்மாவுக்கே, இந்த நெலமன? உன்னோட கதி என்ன ஆக போகுதோ? தெரியலயே டா.?"  என்ற அரவிந்த் தோளில் கைபோட்ட சூர்யா, "விடுடா பாத்துக்கலாம்" என்றான்.


அங்கு நிலா கலையை முறைத்து கொண்டு இருக்க கலை, "அய்யோ முறைக்குறளே… இந்த மனுஷனை என்ன இன்னும் காணும்.  இதுதான் சாக்குன்னு என்ன பழிவாங்க பார்க்குறரோ?" என்று  புலம்ப அங்க வந்து சேர்ந்தார் ராம்குமார்.


"என்னடா நிலா என்று கேட்க..??"

அவர் புறம் திரும்பியவள் "ஒன்னும் இல்ல குமார் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நா ஆஃபீஸ் வரை போட்டு வரேன்" என்று சொன்னவள் அங்கிருந்து கிளம்ப. 


கலை, "ஏய் என்னடி விளையாடுறியா? இப்ப தான் கல்யாணம் முடிஞ்சு இருக்கு. மாப்பிள்ளை கிட்ட ஒரு வார்த்தை கூட இன்னும் நீ பேசல. இப்ப என்னடான்னா ஆபீசுக்கு போகணும்னு சொல்ற? இது உனக்கே நல்லா இருக்க?" என்று கலை கேட்க.


நிலா கலையை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவள், "இப்ப என்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட, அந்த பையன் பேரு என்னம்மா?" என்றாள் வேதனை நிறைந்த குரலில். அவள் கேள்வியில் கலை ஒரு நிமிடம் ஆடித்தான் போய் விட்டார். அதன் பின் அவர் எதுவும் பேசவில்லை.


ராம்குமார் கலக்கமாக "நிலாமா என்னடா இப்டி பேசிட்ட?".



"பின்ன வேற எப்படி பேசணும் குமாரு…? யாரு என்னனு தெரியாத ஒருத்தவனுக்காக காத்திருக்கிறது தப்பு. ஆனா, யாருன்னு தெரியாதவன? கல்யாணம் மட்டும் பண்ணிக்கலாம்... அப்டி தானமா?" என்ற நிலாவின் வார்த்தையில் கலை கண் கலங்கி விட்டார்.


ராம்குமாரும் கண்கலங்க, "எங்களை மன்னிச்சுடு நிலா" என்க. நிலா அவர் கண் கலங்கி நிற்பதை காண சகிக்காது. சட்டென்று அவர் விழி நீரை துடைத்து, "மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை குமார்" என்று சிரித்து சூழ்நிலையை  மாற்ற முயல, ராம்குமார் சற்று சமாதானம் ஆனார். 


"சரி ஆபிசில் கொஞ்சம் வேலை இருக்கு. நா அத முடிச்சிட்டு வீட்டுக்கு வந்திடுறேன்." என்று நிலா கிளம்ப. கலை ஏதோ சொல்ல வாயெடுக்க அவரை நிறுத்திய ராம்குமார் "நீ போய்டு வாடா" என்று நிலாவை அனுப்பி வைத்தார்.


கலை "சரிடி போகும்போது உன் புருஷனை கூப்பிட்டு  சொல்லிட்டு போ" என்க. 


"அது யாரு என் புருஷன்?" என்று நிலா வம்பு இழுக்க. "அடி பாவி  கல்யாணம் முடிஞ்சு அரை மணி நேரம் கூட ஆகல, அதுக்குள்ள புருஷன் யாருன்னு கேக்குறியேடி?" என்று சந்தியா வாய் பெத்தி சிரிக்க...


"ஓஓஓ… ஆமா! எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு  இல்ல... ச்சே மறந்தே போச்சு பாரு" என்று தலையில் தட்டிக் கொண்டவள். "எங்க அந்த திடீர் மாப்பிள்ளை" என்று சுற்றி பார்த்து, அங்கே அரவிந்துடன் பேசிக்கொண்டு இருந்த சூர்யாவை பார்த்தவள். "ஹலோ டேய் திடீர் மாப்பிள்ளை" என்று கத்தி கூப்பிட. அங்கு இதை கேட்ட அரவிந்துக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. 


சூர்யா "பார்ரா அரவிந்த் அவ திமிர" என்றவன் அவள் புறம் திரும்பவே இல்லை.


கலை தலையில் அடித்துக் கொண்டவர். "ஏய் அநியாயம் பண்ணாதடி. கொஞ்சம் மரியாதையா கூப்பிடுடி" என்று மகளை வேண்ட... 


நிலா அம்மாவை ஒரு பார்வை பார்த்து விட்டு, "ஓஓஓ மரியாதைய வேற கூப்புடனுமோ?? ம்ம்ம் ஓகே கூப்ட போச்சு" என்றவள். "டேய்யை" கட் பண்ணிவிட்டு, "ஹலோ திடீர் மாப்பிள்ளை கொஞ்சம் இங்க வா" என்று மீண்டும் கத்த… அரவிந்த் வாயிற்றை பிடித்து, வாயை மூடி சிரிக்க.  சூர்யா மட்டும் திரும்பவே இல்லை. 


"ஏம்மா கலை? பிளான் பண்ணி.,? இல்ல சாரி, பிராடு பண்ணி கல்யாணம் பண்ண தெரியுதில்ல. ஆனா, மாப்பிள்ளை பத்தி நல்ல விசாரிக்க தெரியாதா உனக்கு?" என்று குதிக்க... 


"ஏன்டி இப்ப என்ன ஆச்சு? மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்?  என்று கலை கேட்க..


"ம்ம்ம் என்ன குறைச்சல் காது தான் குறைச்சல்... நா இவ்ளோ கத்துறேன் திரும்பி பாக்குறன பாரு... அப்ப என்ன அர்த்தம் காது கேட்காதுனு தானே அர்த்தம்…"


"அடியேய் நீ முதல்ல ஒழுங்க மரியாதையா  அவரை கூப்பிடுடி... மாப்பிள்ளைக்கு நல்ல காது கேக்கும் நீ ஒழுக்க கூப்பிட்ட அவரு திரும்புவாரு…"


"ஓஓஓ ஒழுங்க கூப்பிடனுமா.? இப்ப பாரு நா எப்டி மரியாதையா கூப்புடுறேன்னு?" என்றவள்.. சத்தமாக "யோவ் புளூ சட்டை, இங்க பாரு" என்றாளே... கலை தலையில் கைவைத்து கொள்ள. சந்தியா வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க...

அங்கே அரவிந்த் "டேய் சூர்யா ஒழுங்கா போய் என்னன்னு கேட்டுடு.? இல்லேன்னு வை இன்னு என்ன சொல்லி கூப்பிட்டு உன்ன கேவலப்படுத்துவளோ தெரியாது" என்று சிரிக்க..‌. 


சூர்யா நிலா அருகில் வந்தவன்.  "உனக்கு பப்ளிக் பிளேஸ் ல, எப்படி கூப்டனுன்னு கூட தெரியாத?' என்று கேட்க. 


நிலா, "ஆமாம் உனக்கு எப்டி ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாமல் கல்யாணம் பண்ண கூடாதுன்னு தெரியதோ? அப்படி தான்" என்றாள் கோவமாக. அதை கேட்ட சூர்யா முகத்தை திருப்பி கொள்ள. 


கலை, "ஏய் நிலா என்ன இது இப்டியா வெடுக்குன்னு பேசுறது" என்று அதட்ட.


நிலா கலையை முறைத்தவள். "அப்படித்தான் பேசுவேன். போறவளை புடிச்சு வச்சு சும்மா கிளாஸ்  எடுத்துட்டு. எனக்கு டைம் ஆச்சு நா கிளம்புறேன்" என்றவள் வண்டியை எடுத்தவள்., ஒரு நிமிடம் நின்று அரவிந்தை பார்த்து, "இந்த ஜென்மத்தில் எனக்கு முதல் எதிரி நீதான்டா. உனக்கு இதுக்கு பதிலுக்கு பதில் நா ஏதாவது செய்யல.. என் பேரு நிலானி இல்லடா" என்று சபதம் செய்தவள் அங்கிருந்து புறப்பட்டு விட்டாள்.


அவள் செல்வதையே பார்த்து கொண்டு இருந்த ராம்குமார் சூர்யாவிடம் "சாரி தம்பி திடீர்னு இப்படி கல்யாணம் நடந்தால் அவ கொஞ்சம் கோபமா இருக்கா. மாத்தபடி அவ ரொம்ப நல்ல பொண்ணு பா" என்று சமாதானம் சொல்ல.


"அய்யோ அப்பா என்ன இது நீங்க போய் என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு.. அவளை பத்தி ஏற்கனவே தெரிஞ்சு தானே இந்த கல்யாணத்துக்கு ஏற்படு பண்ணோம்.. அவ இவ்வளவு அமைதிய போறதே பெரிய விஷயம்.. விடுங்கபா பாத்துகலாம்" என்றான் சூர்யா.


"உன்ன மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்க நங்க ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கனும் தம்பி" என்ற கலை சிரிப்போடு பார்த்தவன், "அய்யோ அம்மா நீங்களுமா... முதல்ல வீட்டுக்கு போங்க, உங்க அருமை பொண்ணு அமைதியா போறத பார்த்த, வீட்ட இன்னைக்கு ரெண்டாக்க போறா.. போங்க போய் நல்ல வாங்கி கட்டிக்கோங்க" என்றான் சிரித்து கொண்டே.. 


"ஹலோ மாம்ஸ் உங்க பேச்சுல ஆணவம் தெரியுதே" என்ற சந்தியா "மிஞ்சு போன இன்னும் 10 இல்ல 15 நாள் தான். அதுக்கு அப்புறம் அந்த பிடாரியை நீங்

க தான் சமாளிக்கனும் ஞாபகம் இருக்கட்டும்" என்று சொல்ல அனைவரும் சிரித்த படியே அங்கிருந்து புறப்பட்டனர்.