Posts

Showing posts from September, 2022

ஆழியின் ஆதவன் 26

  ஆழி 26 ஆதவன் கைகளைக் கட்டிக்கொண்டு கடலை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க, விஷ்ணுவும் முகிலும் அவன் அருகில் வந்தனர். "இவங்க மூணு பேருக்கும் திடீர்னு‌ என்னச்சினே தெர்ல… யுக்தா பேரை கேட்டு ஏன் இப்டி ரியாக்ட் பண்றாங்கனே புரியல, ஏற்கனவே அவங்களை தெரியுமான்னு கேட்ட அதுக்கும் பதில் இல்ல, ம்ம்ம்… ஒன்னும்‌ புரிய மாட்டுது" என்ற முகிலை திரும்பி பார்த்த ஆதவன், "நான் நினைக்குறது சரின்னா யுக்தாவை இவங்களுக்கு இதுக்கு முன்னையே தெரிஞ்சிருக்கணும். யுக்தாகும் இவங்களை கண்டிப்பா தெரிஞ்சிருக்கணும். யுக்தா பேரை கேட்டதும் ஆழி முகத்துல தெரிஞ்ச மாற்றமே அதுக்கு சாட்சி. ஆனா இது நல்லாத கெட்டதன்னு தான் தெரியல. எங்க எந்த சூழ்நிலையில் இவங்க மீட்டிங் நடந்துன்றதை பொறுத்து தான் இனிமே இங்க எல்லாமே நடக்கும்." "யு ஆர் ரைட் ஆதவ். பட் ஆழி கடைசிய சொன்னதை நீ கவனிச்சியா? நாங்கன்னு சொன்னவ மீரா, சைத்துவை பாத்த அப்றம் நான் இங்கிருந்து போய்டணும்னு சொன்ன… சோ அதுக்கு அர்த்தம் மீராவும் சைத்ராவும் இங்க இருந்த யுக்தாவால அவங்களுக்கு எதுவும் ஆகாது தானே?."  "எஸ் முகில், நீ சொல்றதும் சரிதான். மீரா, சைத்ரா

ஆழியின் ஆதவன் 25

 ஆழி 25  மீரா முன்னே நடக்க, அவள் பின்னால் நடந்து வந்த விஷ்ணு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. "இப்ப எதுக்கு மூஞ்சிய இப்படி வச்சிட்டு வரீங்க நீங்க?" என்ற மீராவை முறைத்த விஷ்ணு, "ஏன்டி கேக்க மாட்ட, நீ ஏன் கேக்கமாட்ட… அந்தப் பூச்சி, புழு விக்கிற பொறம்போக்கு உன்னை அப்படியே முழுங்குற மாதிரி பாக்குறான். நீ என்னடான்னா ஒன்னும் சொல்லாம கம்முன்னு நிக்குற… எனக்கு உள்ள எப்படி எரியுது தெரியுமா… அவனை அங்கேயே நாலு மிதி மிதிச்சிருப்பேன் ஆனா, நீதான் என்னை புடிச்சு இழுத்துட்டு வந்துட்ட… இருக்கட்டும் இன்னைக்கே அவன் இடத்தை சீஸ் பண்ணி, அவனை அரெஸ்ட் பண்ணி உள்ள தள்ளுறேன்" "அது உங்ளால முடியாது, அவன் ஒவ்வொரு மெட்டீரியல் டிரான்சாக்ஷனுக்கும் ஒவ்வொரு இடமா மாத்திட்டு இருப்பான். இப்ப நீங்க அங்கப்போனா அங்க உங்ளுக்கு ஒன்னும் கிடைக்காது" என்று அவனை உற்றுப் பார்த்து அழகாகச் சிரித்து, "என்னை யார் பாத்தா எனக்கு என்ன… நான் யார பாக்குறேன்றது தான் நமக்கு முக்கியம். என்னோட பார்வை எப்பவும் உங்க மேல தான் இருக்கும். இந்த மீராவின் பார்வை எப்பவும் அவ கண்ணன் மேல மட்டும் தான் இருக்கும்"