Posts

Showing posts from March, 2023

ஆழியின் ஆதவன் Epilogue

Image
  EPILOGUE இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஆதவன் வீடு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. திடீரென்று "அண்ணா" என்று மேலிருந்து கத்தும் ஓசை கேட்க, விஷ்ணுவும் முகிலும் பாய்ந்து மாடிக்கு ஓடிச்சென்று கதவை திறந்து பார்க்க, அங்கு கண்களில் இருந்து கண்ணீர் வழிய முகத்தை பாவம் போல் வைத்திருந்தவள் முகத்தை பார்த்ததும் இருவரும் ஆதவ் மீது பாய்ந்தனர். "டேய் என்ன பண்ண அவள, ஏன் அவ அழுகுறா… அதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன், நான் என் தங்கச்சிய என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு… நீ தான் எம் பொண்டாட்டி என்கூட தான் இருப்பா, நான் அவளை கண்ணுக்குள்ள வச்சி பாத்துக்குறேன்னு சொல்லிட்டு, இப்ப அவளை கண்கலங்க வச்சிருக்க ராஸ்கல்… இது சரிபட்டு வராது… நான் இப்பவே என் தங்கச்சிய என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்" என்று விஷ்ணு குதிக்க, ஆதவ் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான். "டேய் ச்சீ அடங்கு… மொதல்ல இங்க என்ன நடந்ததுன்னே உனக்கு தெரியாது… நீயா ஒன்ன நெனச்சிட்டு சும்மா தைய்யதக்கான்னு குதிச்சிட்டு இருக்க. முதல்ல உன் அருமை தங்கச்சி கிட்ட, அவ எதுக்கு அழறான்னு கேளு" என்றவன் அவளிடம் திரும்பி,

ஆழியின் ஆதவன் 30

Image
  ஆழி 30 இவர்கள் சாட்டிலைட் ஃபோன் பயன்படுத்துவதால்  யுவ்ராஜால் இவர்கள் யார் என்றும், இருக்கும் இடத்தையும் கண்டுபிடிக்க முடியாமல் போக, தன்னைப் பற்றி தன் தந்தைக்கு தெரிந்து விடுமோ என்ற பயத்தில் முழுதாக தன்னிலை இழந்து பைத்தியமாகி இருந்தவன் வெகு சுலபமாக ஆழி விரித்த வலையில் சிக்கிக் கொண்டான். அந்த காட்டுக்குள் இருந்த இடிந்த கட்டிடத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுத்துக் கிடந்தான் யுவ்ராஜ். யுவ்ராஜ் அருகில் சென்ற ஆழினி அவன் முகத்தை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தாள். "நான் இதுவரை நெறைய பேரை கொன்னு இருக்கேன். பட், அதெல்லாம் வெறும்‌ பணத்துக்காக மட்டும் தான். சோ எப்படி அவங்களை எவிடன்ஸ் இல்லாம முடிக்கனும்னு மட்டும் தான் நினைப்பேன். பட், உங்க விஷயத்துல தான்டா, எனக்குள்ள கூட இவ்ளோ மோசமான, ஒரு கொடுமையான ஆழி இருக்கான்னு எனக்கே புரிஞ்சுது‌. எனக்கு அவ்ளோ ஈசியா உங்கள கொன்னு நிம்மதியான மரணத்தை தர விருப்பம் இல்ல.  இதுவரை யாரையும் இது மாதிரி சித்திரவதைப் பண்ணி யாரையும் கொன்னுருக்க கூடாதுனு யோசிச்சு யோசிச்சு உங்க ஒவ்வொருத்தரையும் முடிச்சேன்‌. இப்ப உன்னோட முறை" என்றவளை யுவ்ராஜ் முறைத்தான். &qu

ஆழியின் ஆதவன் 29

 ஆழி 29 அதை கேட்டு ஆதியை தவிர மற்ற மூன்று ஆண்களுக்கு வியந்து போய்,‌ "அது எப்டி யுக்தா உனக்கு தெரியும்? என்று‌ ஆச்சரியமாக கேட்க,  "நாங்க படிச்ச ஸ்கூல் ல அவங்க ஹெட் மாஸ்டர் ஆக்கும் மிஸ்டர் போலீஸ்கார்" என்று சைத்ரா குறும்பாக சொல்ல மீண்டும் அங்கு சிரிப்பலை பரவியது. "ஓகே காய்ஸ் வாட் நெக்ஸ்ட்?‌ என்ற யுக்தாவின் கேள்வியின் உள்ளர்த்தம் ஆழிக்கு புரிய, "இல்லக்கா, அந்த யுவ்ராஜ் என்னோட டார்கெட் அவனை நான் என் கையால கொல்லனும். என் வாழ்க்கை நா செய்யப்போற கடைசி கொலை…  எனக்கு கிடைக்கவே கிடைக்காதுனு நெனச்ச எல்லாத்தையும் எனக்கு வாரிக் கொடுத்த ஆஷாக்கு நான் செய்ற நன்றிக்கடன் இது… இதுக்குள்ள நீங்க வராதீங்க க்கா, ப்ளீஸ்" என்னவளின் உணர்வு யுக்தாவுக்கு ஒன்றும் புரியாமல் இல்ல, ஆனால் மீண்டும் ஆழியும் மற்றவருக்கு கடந்து வந்த பாதையில் மீண்டும் செல்ல வேண்டாம் என்று எண்ணத்தில் யுவ்ராஜ் கதையை அவளே முடிக்க நினைக்க, ஆழி அதற்கு எதிராக நிற்க, "ஆழி நான் சொல்றத கொஞ்சம் கேளுடி" என்று ஆரம்பிக்க, "ப்ளீஸ் கா… நீங்க வேற என்ன சொன்னாலும் நான் கேக்குறேன். பட் ப்ளீஸ் இதுல மட்டும் முடியாது