Posts

Showing posts from July, 2022

ஆழியின் ஆதவன் 17

Image
  ஆழி 17 ஆழி கையில் ஆவி பறக்கும் டீயுடன், அவன் ஆவியை எடுக்கும் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு வந்தாள். "இந்தாங்க சார் டீ, தலை வலிக்குதுன்னு சொன்னீங்க இல்ல, இந்தாங்க இந்த மருந்தை போடுங்க எல்லாம் பறந்து போய்டும்" என்று டீயும் கூடவே ஒரு கேப்சூல் மாத்திரையையும் அவன் கையில் கொடுக்க, இடித்துக்கொண்டே அந்த கேப்சூலை வாயில் போட்டுக்கொண்டு, டீயை ஒரு வாய் குடித்த விமல், "ஏங்க டீ சூப்பரா தான் இருக்கு… என்னை உள்ள கூப்பிடாம அவாய்ட் பண்ண, வேணும்னு தானே பொய் சொன்னீங்க" என்று ஏதோ பெரிய ரகசியத்தை கண்டு பிடித்தது போல் அட்டகாசமாகச் சிரிக்க, ஆழி அவன் கேவலமான சிரிப்பை சகிக்க முடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டு, "அய்யோ அப்படி எல்லாம் இல்லீங்க சார், சும்மா ஒரு சேஃப்டிக்கு தான். இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியல இல்ல, அதோட இது தனி வீடு வேற, இங்க இருந்து கத்துனா கூட யாருக்கும் கேக்காது, உதவிக்குக் கூட யாரும் இல்ல, அதான்…" என்றவளை வக்கிரமாக துகிலுரிக்கும் பார்வை பார்த்தபடியே எழுந்து ஆழியை நோக்கி நடந்த விமல், "நீ சொல்றது உண்மைதான் ப்யூட்டி, காலம் கெட்டுதான் கெடக்கு. ஆனா பாரு இவ்ளோ

ஆழியின் ஆதவன் 16

Image
 ஆழி 16 "ஏய் அது உனக்கு எப்படி தெரியும்?" என்றவன் சட்டென உதட்டை கடித்துக்கொள்ள, "ம்ம்ம் நீங்க போட்ட மாறுவேஷம் அந்த லட்சணம் போலீஸ்காரர். மண்டைய மறைச்ச நீங்க உங்க மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டீங்க" என்று சிரித்தபடியே சைத்ரா அவன் அருகில் வர, சற்று முன் அந்தக் கத்து கத்தியவள் இவள்தானா என்று முகிலுக்கு குழப்பமாக இருந்தது. "என்ன முகில் சைத்து சொல்றது புரியலயா?" என்ற மீராவை அப்பாவியாகப் பார்த்த முகில், "எனக்கு இவங்க சொல்றது மட்டும் இல்ல, இவங்களையே சரியா புரியல மீரா" "போகப்போக புரிஞ்சுக்குவீங்க மிஸ்டர். போலீஸ்காரர். இப்ப நம்ம கொண்டை மேட்டருக்கு வருவோம், ஆமா நாங்க தான் ஹேக்கிங், ட்ராக், பக் (bug) இதெல்லாம் பண்ற ஆளுங்கன்னு தெரியும் இல்ல… அப்புறம் என்ன வெண்ணைக்கு ஆழி பின்னாடி போனீங்க…" என்ற சைத்ராவை புரியாமல் பார்த்த முகில், சட்டென கண்கள் விரிய, "ஏய் அப்ப நீங்க என்னை ட்ராக் பண்ணிட்டு இருக்கீங்களா?" என்று அதிர்ந்தவனைப் பார்த்து வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்த சைத்ரா, "ஆழி இது டியூப்லைட் கூட இல்லடி... வாழ மட்டை..‌. ரொம்பக் கஷ்டம்

ஆழியின் ஆதவன் 15

Image
  ஆழி 15 "எஸ் ஆழி… அவங்களை அப்படியே விட எங்களால எப்படி முடியும்?. என்னோட தங்கச்சி ஆஷா… அவ பாவம் தெரியுமா… ரொம்ப அப்பாவி. அவளைப் போய்" என்று கோவத்தில் எழுந்த விஷ்ணு, "அந்தக் கமிஷனர் ராஸ்கலை நான் சும்மா விடமாட்டேன். இப்பவே போய் அவனை என்ன செய்றேன்னு பாரு" என்று எழுந்த விஷ்ணு கையைப் பிடித்து நிறுத்திய மீரா, "போகும்போது மறக்காம ஒரு மலர்வளையம் வாங்கிட்டு போங்க, கரெக்டா நீங்க சென்னை போய் சேரும் நேரம் அந்த ஆளோட இறுதி ஊர்வலம் நடந்திட்டு இருக்கும்." என்ற மீராவை விஷ்ணு அதிர்ந்து பார்க்க, மீரா இதழோரமாகச் சிரித்தவள், "மேட்டர் தெரிஞ்ச பிறகும், எவிடன்ஸ் எதிர் பார்த்துட்டு சும்மா இருக்க நாங்க ஒன்னும் போலீஸ் இல்ல மிஸ்டர். விஷ்ணு. எங்களுக்கு வேண்டியது காரணம் தான், ஆதாரம் இல்ல. இப்ப இந்த உலகத்தில ஆஷா இல்லாம போனதுக்கு அந்த ஆளும் ஒரு காரணம். சோ... முடிச்சாச்சு" என்ற மீரா திரும்பி ஆழி, சைத்ராவை பார்க்க, அவர்கள் முகத்தில் வெற்றிப் புன்னகை. மீரா சொன்னதை கேட்ட விஷ்ணு, உடனே தன் ஃபோனில் யாருக்கோ தொடர்பு கொண்டு பேசியவன், திரும்பி ஆதவ்வை பார்த்து தலையசைக்க, மீரா சொன்னது உண்ம

ஆழியின் ஆதவன் 14

Image
  ஆழி 14 ஏய் நீ என்ன சொல்ற? நீ சொல்றது உண்மையா? இந்தக் கேஸ்ல சம்பந்தப்பட்டது மூணு பேர். அந்தப் பையன் விமல், அவன் அப்பன், அன்ட் அந்த சைலேஷ். இதுல யார் பத்தின எவிடன்ஸ் ஆஷா கிட்ட இருந்தது? இதை ஏன் ஆஷா எங்ககிட்ட சொல்லல?, இப்ப அந்த மெமரி கார்டு எங்க?" என்று சிபிஐ யாக மாறிய‌‌ ஆதவ் கேள்வி மேல் கேள்வி கேட்க, ஆழி ஆதவனை நிமிர்ந்து பார்த்து, "சொல்லி இருப்பா மிஸ்டர். ஆதவ், சொல்லிருந்திருப்பா… அவ அண்ணா அந்த நேரம் அண்டர் கவர் ஆபரேஷனுக்குப் போகாம அவ பக்கத்துல இருந்திருந்தா சொல்லி இருப்பா, அவ கட்டிக்கிட்ட புருஷன்… நீங்க பெரிய சிபிஐ னு அவளுக்கு நீங்க சொல்லி இருந்தா, அவளும் உண்மையா சொல்லி இருப்பா… ஆனா, நீங்க பெத்த அம்மாகிட்டயும், கட்டின பொண்டாட்டிகிட்டயுமே உங்களைப் பத்தி சொல்லாம விட்டதின் விளைவு தான் ஒருவகையில் ஆஷா சாவுக்கு காரணமா போச்சு, நாங்களும் ஆஷாகிட்ட இருந்த அந்த மெமரி கார்டை பாத்திருந்தா, அதுல இருந்தவன் கதைய நாங்க அன்னைக்கே முடிச்சிருந்தா… ஆஷா இப்ப உயிரோட இருந்திருப்ப. அந்த வகையில் நாங்களும் ஆஷா சாவுக்கு ஒரு காரணம் தான். ரெண்டு உயிரா இருந்த ஆஷாக்கு, எங்க அவகிட்ட இருந்த எவிடன்ஸ் பத்தி வெ

ஆழியின் ஆதவன் 13

Image
  ஆழியின் ஆதவன் 13 முழுதாக ஒரு மணி நேரம் கழித்து, "இதுதான் நாங்க… நாங்க நல்லவங்கனு சொல்ல மாட்டோம். பட், இதுவரை எந்த நல்ல மனுஷனுக்கும் நாங்க கெட்டது செஞ்சது கிடையாது. அதுதான் உன் விஷயத்திலும் செஞ்சோம். நீ பாக்க அப்பாவியா தெரிஞ்ச… உன்னை எப்படியோ போன்னு எங்களால விட முடியல. அதான் உன்னை நாங்க காப்பதினோம். உன்னை இங்க நிறைய பேர் கொல்ல தேடிட்டு இருக்காங்க, அசைன்மென்ட் எங்களுக்கு வந்திருக்குன்னா கண்டிப்பா இதுக்கு பின்னாடி இருக்குறது பெரிய பிக் ஷாட்டா தான் இருக்கணும். சோ உன் உயிருக்கு இப்பவும் ஆபத்து இருக்கு" என்ற ஆழி ஆஷா முகம் பார்க்க, ஆஷாவின் முகம் பயத்தில் வெளிறிப் போனது. "இங்க பாரு, நீ பயந்து இங்க ஒன்னும் ஆக போறது இல்ல. நீ உன்னை பத்தி எதாவது சொன்னா தான் எங்களால உனக்கு ஏதாவது செய்ய முடியுமான்னு பாக்க முடியும். இந்த சூழ்நிலையில உனக்கு எங்களை விட்டா இங்க யாரும் இல்ல, சோ ப்ளீஸ் ஏதாவது சொல்லு" என்று மீரா அக்கறையாக கேட்க, அவளை நிமிர்ந்து பார்த்த ஆஷா, "என் பேரு ஆஷா, ஊரு சென்னை" என்று தன்னை பற்றி தேவையான தகவல்களை மட்டும் சொன்னாள். "சரி... நீ இங்க டெல்லிக்கு எதுக்கு

ஆழியின் ஆதவன் 12

Image
ஆழி 12 இரண்டு நாட்களுக்குப் பிறகு, இரவு தோட்டத்தில் ஆதவ், விஷ்ணுவை கண்டபடி திட்டி கொண்டிருந்தான் முகில். "டேய் பாவம்டா அந்தப் பொண்ணு ஆழி. நிலா மேல இருக்க அன்புக்காக, திருந்தி வாழ இங்க வந்த பொண்ணு இப்ப மறுபடியும் அந்த இருட்டுக்குள்ள போக ரெடியாகிட்ட. அவ மட்டும் இல்ல, கூட இன்னும் ரெண்டு பேர் வேற, உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும் அவங்களை நீ இப்படி உன் சுயநலத்துக்காக யூஸ் பண்றது சரியில்லடா… இது நம்ம பழி, அதை நம்ம தான் தீர்த்துக்கணும். அதை விட்டுட்டு எதுக்கு சம்பந்தமே இல்லாம அந்த மூணு பேர் உயிரோட வெளையாடாதீங்க. உங்க கையாலாகாத தனத்துக்கு அவங்க தான் பலியா?" என்ற முகிலின் வார்த்தையில் கோபம் கொண்ட ஆதவ் சட்டென்று அவன் சட்டையைப் பிடித்து விட்டான். "டேய் யார்கிட்ட பேசுறேன்னு தெரிஞ்சுப் பேசு… நீ பாட்டுக்கு வாய்க்கு வந்ததை பேசிட்டே போற… என்னடா நெனச்சிட்டு இருக்க நீ?." என்ற கத்திய ஆதவ், பின் தன்னை சமன் செய்து கொண்டு முகிலின் சட்டையில் இருந்து கையை எடுத்தவன், இழுத்து மூச்சு விட்டு, "என்னைப் பத்தி தெரிஞ்ச நீயே இப்படி பேசுறீயே முகில்." என்றான் ஆதங்கமாக, நான் நெனச்ச ஒரே செகண்ட

ஆழியின் ஆதவன் 11

Image
  ஆழி 11 குழந்தையோடு ஆதவன், வெண்மதி மற்றும் முகில் கொடைக்கானல் வரும் விஷயத்தை ஆழினி சைத்ரா, மீராவுக்கு ஃபோன் செய்து சொல்ல,  "என்ன ஆழி இது? கூட குழந்தையை கூட்டிட்டு வரேன்னு பாத்தா, இப்படி ஒரு குரங்கையும், குட்டி சாத்தானை தோள்ல போட்டுட்டு வர்ற, என்னடி நீ…?" "என்னை என்ன செய்ய சொல்ற சைத்து? சிட்டுவேஷன் என்னை நல்லா போட்டு சிவக்க வச்சிருக்கு" "ம்ம்ம்… சரி விடு ஆழி, ரெண்டு ஸ்மால் பாய்ஸ் தானா பாத்துக்கலாம். நீ அங்கு போனதும், நீங்க தங்கும் இடத்தின் அட்ரஸ் மெசேஜ் பண்ணி விடு, நாங்க ரெண்டு பேரும் இப்பவே கெளம்புறோம். நீ அங்கு வந்ததும் மீட்டிங் ஸ்பாட் பிக்ஸ் பண்ணிக்கலாம்." என்று சைத்ரா ஃபோனை வைக்க, மீரா அவளைப் பார்க்க, சைத்து அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவள், "ஆதவன், முகில் ரெண்டு பேரும் ஆழி கூட வராங்க, எல்லாம் அந்த தெய்வத்துக்கு தான் வெளிச்சம். நீ கிளம்ப ரெடி பண்ணு மீரா" என்றாள். அன்றைய தினமே மீராவும் சைத்ராவும் கொடைக்கானல் கிளம்பிச் சென்றுவிட, அடுத்த நாள் காலை முகில் காரில் ஆதவ், ஆழி, நிலா, வெண்மதி மூவரும் கிளம்ப, அவர்கள் காரை தொடர்ந்து வால் பிடித்துக் கொ