ஆழியின் ஆதவன் 11

 



ஆழி 11


குழந்தையோடு ஆதவன், வெண்மதி மற்றும் முகில் கொடைக்கானல் வரும் விஷயத்தை ஆழினி சைத்ரா, மீராவுக்கு ஃபோன் செய்து சொல்ல, 


"என்ன ஆழி இது? கூட குழந்தையை கூட்டிட்டு வரேன்னு பாத்தா, இப்படி ஒரு குரங்கையும், குட்டி சாத்தானை தோள்ல போட்டுட்டு வர்ற, என்னடி நீ…?"


"என்னை என்ன செய்ய சொல்ற சைத்து? சிட்டுவேஷன் என்னை நல்லா போட்டு சிவக்க வச்சிருக்கு"


"ம்ம்ம்… சரி விடு ஆழி, ரெண்டு ஸ்மால் பாய்ஸ் தானா பாத்துக்கலாம். நீ அங்கு போனதும், நீங்க தங்கும் இடத்தின் அட்ரஸ் மெசேஜ் பண்ணி விடு, நாங்க ரெண்டு பேரும் இப்பவே கெளம்புறோம். நீ அங்கு வந்ததும் மீட்டிங் ஸ்பாட் பிக்ஸ் பண்ணிக்கலாம்." என்று சைத்ரா ஃபோனை வைக்க, மீரா அவளைப் பார்க்க, சைத்து அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவள், "ஆதவன், முகில் ரெண்டு பேரும் ஆழி கூட வராங்க, எல்லாம் அந்த தெய்வத்துக்கு தான் வெளிச்சம். நீ கிளம்ப ரெடி பண்ணு மீரா" என்றாள்.


அன்றைய தினமே மீராவும் சைத்ராவும் கொடைக்கானல் கிளம்பிச் சென்றுவிட, அடுத்த நாள் காலை முகில் காரில் ஆதவ், ஆழி, நிலா, வெண்மதி மூவரும் கிளம்ப, அவர்கள் காரை தொடர்ந்து வால் பிடித்துக் கொண்டு சென்றது விஷ்ணுவின் புல்லட்.


முகில் வீட்டின் முன் கார் நிக்க, காரில் இருந்து இறங்கியவர்களின் உடலை கொடைக்கானலின் குளிர் லேசாக உதற வைத்தது.


ஆதவ் கைகளைப் பரபரவென தேய்த்துக்கொள்ள, ஆழி கொடைக்கானலின் எல்லையை நெருங்கும் முன்பே, குழந்தையை அழுத்தமான வூல்லன் ஷாலில் சுற்றி இருந்தவள், இப்போதும் நிலாவை குளிர் தாக்காது, தன் நெஞ்சோடு சேர்த்தனைத்துக் கொண்டு நிற்க, அவளைப் பார்த்து முகிலுக்கு ஆதவ் மீது கோபம் கோபமாக வந்தது.


"நிலாவை எப்படிப் பாத்துக்குது இந்தப் பொண்ணு…‌ இந்த புள்ளைய போய் கொல்லப் பாக்குறானே இந்தக் காட்டெருமை, இவனுக்கு எல்லாம் நல்ல சோறே இல்ல. பழைய சோறு கூட கிடைக்காது." என்று வாய்க்குள் முனங்க,


"டேய் நீ மைண்ட் வாய்ஸ்னு நெனச்சு கொஞ்சம் சத்தமா பேசிட்டு இருக்க, நீ சொன்னது எனக்கு நல்லாவே கேக்குது." என்று சிரித்த ஆதவ்வை முறைத்த முகில்,


"கேட்டா கேட்கட்டுமே. எனக்கு என்ன பயமா? உன்னால என்னை என்ன செய்ய முடியும். வேணும்னா இதுக்காக ஆழிய கொல்லும் போது என்னையும் சேர்த்து போட்ரு" என்று முகத்தை திருப்பிக்கொண்டான்‌.


"டேய் ஏன்டா? அன்னைக்கு என்னோட சண்டை போட்டுட்டுப் போனது. அதுக்கு அப்புறம் நீ என்னோட பேசவே இல்ல, இப்ப நீ திட்டிட்டாது என்கிட்ட பேசின சந்தோஷத்தில தான்டா, நான் சும்மா உன்னை கிண்டல் பண்ணேன். அதுக்குப் போய் நீ இப்படிப் பேசிட்டு இருக்க, இட்ஸ் நாட் குட் முகில்" என ஆதவ் வருந்த,


"ஒஒஒ… நான் பண்றது சரியில்ல, அப்ப சார் செய்றது எல்லாம் கரெக்ட், அப்படித் தான" என்று சீறிய முகில் மதி, ஆழி, குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு உள்ளே செல்ல, ஆதவ் இழுத்து மூச்சு விட்டு, "இவனுக்கு எப்படிப் புரிய வைக்கிறது" என்று யோசித்தபடியே உள்ளே சென்றான்.


அங்கு வந்த கையோடு ஆழி அவள் இருக்கும் இடத்தின் லொகேஷனை சைத்ரா, மீராவுக்கு அனுப்ப, அடுத்த ஒரு மணி நேரத்தில் இருவரும் முகில் வீட்டிற்கு அருகில் இருந்த காட்டேஜ்க்கு வந்து தங்கி விட்டனர்.


விஷ்ணுவும் அவனுக்கு ஆதவ் மற்றும் முகிலை தெரியும் என்ற விவரம் ஆழிக்கு தெரியக்கூடாது என்று, முகில் வீட்டிற்கு அருகிலேயே வேறு இடத்தில் தங்கி கொண்டான்.


கொடைக்கானல் குளிரில் சூரியனே நடுங்கினார் போல, தன் கெத்தை கொஞ்சம் குறைத்துக் கொண்டு மிதமான சூட்டை அந்த இடமெங்கும் பரப்பிக் கொண்டிருக்க, அந்த இளம் வெயில் வெளிச்சத்தில், பெயரே தெரியாத பல வண்ண மலர்கள், காற்றின் இசைக்குத் தகுந்தபடி உடல் நோகாமல், அழகாய் அசைந்து நடனமாடும் அந்த அழகிய காட்சி சூழலைக் கூட பார்த்து ரசிக்க மறந்து, எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள் ஆழி.


விஷ்ணு மற்றும் இன்னும் சிலரைப் பற்றிய தகவல்களை சைத்ராவிடம் கேட்டிருந்தாள் ஆழினி. நேற்று இரவு ஆழியை ஃபோனில் அழைத்த சைத்ரா, "நீ கேட்ட டீடெயில்ஸ் எடுத்துட்டேன்" என்றாள்.


"தட்ஸ் குட் சைத்து. ம்ம்ம் சொல்லு, நமக்கு யூஸ் ஆகுற மாதிரி எதுவும் இருக்கா?" என்று கேட்க, சைத்ரா அமைதியாக இருந்தாள்.


"சைத்து… ஏய் என்னடி, லைன்ல இருக்கியா இல்லயா?" என்று ஆழி கத்த,


"ம்ம்ம்... லைன்ல தான் இருக்கேன்" என்ற சைத்ராவின் குரலில் இருந்த மாறுதலை உணர்ந்த ஆழி,


"சைத்து இஸ் எவ்ரிதிங் ஆல் ரைட்?" என்று கேட்டாள்.


"நோ ஆழி. நம்ம நினைச்சது விட கொஞ்சம்… ம்ம்ம் இல்ல இல்ல ரொம்ப மோசமா இருக்கு. லைஃப் இஸ் எ சர்க்கிள்னு சொல்றது உண்மைதான். எங்கயோ தொடங்கின ஒன்னு, எங்கயோ போய் தொட்டு, இப்ப நம்மகிட்ட வேற விதமா திருப்பி வந்திருக்கு ஆழி." என்று சம்பந்தமே இல்லாமல் சைத்ரா உளற ஆழிக்கு மூளை குழம்பியது.


"ஏய் என்னாச்சு உனக்கு? குளிருக்கு தண்ணி கிண்ணி எதுவும் போட்டீருக்கியா என்ன...? இல்லயே நம்ம மூணு பேருக்கும் அந்தப் பழக்கம் இல்லயே" என்றவள், "நீ ஃபோனை மீரா கிட்ட குடு" என்க, 


சைத்ரா வறண்ட முகத்துடன் மீராவிடம் ஃபோன் தந்துவிட்டு செல்ல, மீரா போகும் அவளைப் பார்த்துக் கொண்டே ஃபோனை காதில் வைத்தாள்.


"ஏய் மீரா என்னடி ஆச்சு? ஏன் சைத்து ஒரு மாதிரி பேசிட்டு இருக்கா? என்ன நடக்குது அங்க?" என்று ஆழி பதட்டமாக,


"அவ மட்டும் இல்ல நானும் ஒரு மாதிரி தான் இருக்கேன். மேட்டர் தெரிஞ்சா, நீயும் எங்கள போலதான் ரியாக்ட் பண்ணுவ" என்று மீராவும் புதிர் போட, ஆழிக்கு உள்ளுக்குள் ஏதோ ஒருவித தவிப்பு.


"என்னாச்சு மீரா?"


"இது ஃபோன்ல சொல்ற விஷயம் இல்ல ஆழி. நாளைக்கு நீ இங்க வா, பேசிக்கலாம்" என்ற மீரா ஃபோனை வைத்துவிட, ஆழிக்கு ஒன்றும் விளங்கவில்லை.


இரவு நடந்ததை யோசித்துக்கொண்டே வீட்டின் பின்புறம் இருந்த சின்ன கார்டனில் நின்றிருந்த ஆழியை வெண்மதியின் குரல் கலைக்க, திரும்பிப் பார்த்தாள்.


அங்கு வெண்மதி நிலாவுடன் நிற்க, அவருக்கு அருகில் நின்றிருந்தனர் மீராவும் சைத்ராவும்.


ஆழி தோழிகள் இருவரையும் அங்கு பார்த்ததும் முதலில் அதிர்ந்தவள் பின் அவர்களை தீயாக முறைத்துக் கொண்டிருந்தாள்.


"ஆழிம்மா இந்தப் பொண்ணுங்க உன்னைப் பாக்க வந்திருக்காங்க, நீ இங்க செய்ய வந்த ப்ராஜெக்ட்காக இவங்களை உனக்கு உதவியா அனுப்பிச்சுருக்காங்களாம், தோ பக்கத்தில் இருக்கே, அந்தக் காட்டேஜ்ல தான் தங்கி இருக்காங்களாம்" என்று மதி சொல்ல, ஆழி தோழிகள் இருவரையும் முறைத்துக் கொண்டே வெண்மதி அருகில் வந்தாள்.


"சரிம்மா நான் பேசிக்குறேன் நீங்க பாப்பாவை தூக்கிட்டு உள்ள போங்கம்மா, குளிர் அதிகமாக இருக்கு" என்றதும் மதி தன் இடுப்பில் இருந்த நிலாவுடன் உள்ளே செல்லப் போக, "ஆன்ட்டி ஒரு நிமிஷம்" என்ற சைத்ராவின் குரலில் அவளை திரும்பிப் பார்த்தார் மதி.


"என்னம்மா? என்ன வேணும்?" என்ற மதியை பார்த்த சைத்ரா, தயங்கி தயங்கி, "இல்ல ஆன்ட்டி, பாப்… பாப்பா பாக்க அழகா இருக்கா, நான் அவளை ஒரு முறை தூக்கலாமா, எனக்குப் பாப்பாவ தருவீங்களா?" என்று ஆசையாக கேட்க, மதி திரும்பி ஆழியைப் பார்க்க, ஆழி கண்களை மூடித் திறந்து சரி என்க, சைத்ராவை பார்த்து மென்மையாகச் சிரித்த மதி,


"அதுக்கென்ன இந்தா புடி" என்றதும், முகமெல்லாம் புன்னகையுடன் நிலாவை தன் கையில் வங்கிக் கொண்ட சைத்ரா, ஆசையாக நிலா கன்னத்தில் தன் இதழை பதித்து, 'ரொம்ப தேங்க்ஸ் பாப்பா. உங்க அம்மா ஆஷாவால தான் எங்களுக்கு எங்க ஆழி உயிரோட திருப்பிக் கெடச்சா, அதுக்கு உங்கம்மாக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் அது கம்மி தான். உங்கம்மா எங்களுக்கு செஞ்சது ரொம்ப பெரிய உதவி பாப்பா.‌ எங்களை எங்களுக்கே புரிய வச்சாங்க உங்கம்மா. நாங்க அவங்களுக்கு செய்ய வேண்டிய நன்றிக்கடன் செய்யாம விட மாட்டோம் பாப்பா. அவங்களுக்கு செய்ய வேண்டியதை இப்ப இருந்து நாங்க செய்ய தொடங்கப் போறோம். உனக்கு அம்மா இல்லாம செஞ்ச ஒருத்தரையும் விடமாட்டோம். இது உனக்கு நாங்க செய்ற சத்தியம்' என்று மானசீகமாக சைத்ரா குழந்தையிடம் பேசிக்கொண்டிருக்க, ஆழி சைத்ராவையும், அவள் அருகில் அமைதியாக இருந்த மீராவையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


"மதிம்மா யாரு இவங்க? என்று கேட்டபடி அந்த நேரம் அங்கு வந்த முகிலை பார்த்து ஆழிக்கு தூக்கிவாரிப் போட்டது.


"டேமிட்... இவங்க ரெண்டு பேரையும் யாரும் பாக்க கூடாதுனு தான் இவங்களை தள்ளி இருக்கச் சொன்னேன். அது தெரிஞ்சும், இப்ப இதுங்க ரெண்டும் எதுக்கு இங்க வந்ததுங்க, இப்ப என்ன பண்றது. முகில் இவங்களைப் பாத்துட்டாரே..." என்று யோசிக்கும்போதே வெண்மதி, 


"இவங்க ஆழியைப் பாக்க வந்துருக்காங்க முகில்" என்றதும் முகில் சட்டென பெண்கள் இருவரையும் ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தவன் பின், "சரிம்மா அங்க பேசிட்டு இருக்கட்டும். நீங்க குழந்தைய தூக்கிட்டு உள்ள வாங்கம்மா. குளிர்ல வெளியே நிக்க வேணாம்" என்றவன் சைத்ரா கையில் இருந்த நிலாவை வாங்கிக்கொண்டு மதியோடு உள்ளே செல்ல, திரும்பி திரும்பி மூவரையும் பார்த்துக் கொண்டே சென்றான் முகில்.


அவர்கள் உள்ளே சென்றதை உறுதிப் படுத்திக்கொண்ட ஆழி, வேகமாக தோழிகள் அருகில் வந்தவள், "ஆர் யூ நட்ஸ்? என்ன காரியம் பண்ணி வச்சிருக்கீங்க? இப்ப எதுக்கு இங்க வந்தீங்க?" என்று கத்த,


சைத்ரா அமைதியாக ஆழியைப் பார்த்து, "இனிமே நீ எங்களை மறைச்சு வைக்க எந்த அவசியமும் இல்ல ஆழி, எங்களுக்கு எதுவும் ஆகிடும்ற‌‌ பயமும் உனக்கு இனி வேணாம். தப்பு பண்ணும்போதே நம்ம பயந்தது இல்ல, அப்புறம் நல்லது செய்ய எதுக்கு பயப்படனும். ஒரு நல்ல ஆத்மாக்கு நம்ம நியாயம் செய்யப் போறோம். இனி நம்ம‌ மூணு பேரும் ஒளிஞ்சு மறைய வேணாம்." என்ற சைத்ரா பேச்சில் ஆழிக்கு உள்ளுக்குள் பகீர் என்றது.


"ஏய் மீரா இவளுக்கு என்னதான்டி ஆச்சு? ஏன் ஒரு மாதிரி பேசிட்டு இருக்கா?"


"அதை இங்க சொல்ல முடியாது ஆழி. நீ அந்த ஆண்டி கிட்ட சொல்லிட்டு வா, நம்ம காட்டேஜ் போய் பேசலாம். இங்க வேணாம்" என்றவளின் முகமே சொன்னது ஏதோ பெரிய விஷயம் நடந்திருப்பதை.


வீட்டுக்குள் சென்ற ஆழி, நிலா தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்து விட்டு, வெண்மதியிடம் சொல்லிவிட்டு சைத்து, மீராவுடன் செல்ல, முகில் போகும் அவளையே வருத்தமாக பார்த்துக்கொண்டிருந்தான்.


இங்கு காட்டேஜ் வந்த ஆழி, "ம்ம்ம் இப்ப சொல்லு சைத்து, என்னாச்சு? ஏன் ரெண்டு பேரும் இப்படி இருக்கீங்க?"


"நீ நிலா அம்மா ஆஷாவ பாத்திருக்கியா ஆழி? என்று கேட்ட சைத்ராவை பார்த்து இடவலமாக தலையாட்டி ஆழி,


"இல்லமா, நான் பார்த்தது இல்ல, அன்னைக்கு ஆக்சிடென்ட் நடக்கும் போது அடிபட்டு அரை மயக்கத்தில் அவங்களை தெளிவு இல்லாம பாத்தேன். ஆனா, அவங்க முகம் மனசுல பதியல, பிகாஸ் அவங்க ஃபேஸ் பூரா ரத்தமா இருந்துச்சு, சோ முகம் ஞாபகம் இல்ல, வீட்ல அவங்க ஃபோட்டோ பார்க்கும் போது ரொம்ப மனசு கஷ்டமா இருக்குன்னு சொல்லி ஆதவ் அவங்க ஃபோட்டோ எல்லாத்தையும் எடுத்து ஒரு ரூம்ல போட்டு பூட்டி வச்சிட்டார், சோ நான் ஆஷா ஃபோட்டோ கூடப் பாத்தது இல்ல" என்ற ஆழி முன் தன் லேப்டாபின் திரையைக் காட்டினாள் சைத்ரா.


"உனக்குத் தான் மெமரி பவர் அதிகமாச்சே, இந்தப் பொண்ணு யாருன்னு தெரியுதா சொல்லு ஆழி" என்றதும் ஆழி அந்த திரையில் தெரிந்த பெண்ணின் முகத்தைப் பார்த்து, "இது நமக்கு வந்த லாஸ்ட் ப்ராஜெக்ட் பொண்ணு தான? பேர் கூட… என்று சற்று யோசித்து, "ம்ம்ம் பிரியதர்ஷினி. இவங்களை எப்படி நம்மால் மறக்க முடியும் சைத்து…?" என்ற ஆழியைப் பார்த்து மீராவும் சைத்ராவும் ஆமாம் என்று தலையாட்டினர்.


"சரி… இப்ப எதுக்கு இந்த பொண்ணு ஃபோட்டோவை பத்தி கேக்குறீங்க, முடிஞ்ச விஷயத்தைப் பத்தி இப்ப எதுக்கு?" என்ற ஆழியின் பேச்சுப் பாதியில் நிற்க, அவள் முகம் லேசாக இறுக ஆரம்பிக்க, திரும்பி தோழிகளை இமைக்காமல் பார்த்தவள்,‌ இவங்க முழுப்பேரு என்ன சைத்து? என்று கேட்டாள் வறண்ட குரலில்,


சைத்ரா இழுத்து மூச்சு விட்டவள், கண்களை இறுக்க மூடியபடி "ஆஷா பிரியதர்ஷினி" என்றது தான் ஆழிக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.