Posts

Showing posts from June, 2022

ஆழியின் ஆதவன் 10

Image
  ஆழி 10 ஆழி வீட்டுக்குள் நுழையவும் ஆதவ் அவன் அறையில் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. "என்ன ஆழி மேடம், வரவர நீங்க அடிக்கடி வெளிய போறீங்க,  ரொம்ப நேரம் கழிச்சு தான் வீட்டுக்கு திரும்பி வரீங்க… என்ன மேட்டர்?" என்று கேட்க, அங்கு வந்தார் வெண்மதி. "டேய் ஏன்டா எப்பப்பாரு அவளையே நோண்டிட்டு இருக்க? உனக்கு வேற வேலையே இல்லையா? நீதான எப்பவும் சொல்லுவ அவ நிலாக்கு வெறும் கேர் டேக்கர் தான், அதுக்கு நான் சம்பளம் தரேன்னு... அப்படி இருக்க, அவளை கேள்வி கேக்குற உரிமைய உனக்கு யார் தந்தது?." என்ற தன் தாயை செல்லமாக முறைத்த ஆதவ், "என்ன பேசுறீங்கம்மா நீங்க, அவ இந்த வீட்ல தான தங்கி இருக்கா, அந்த உரிமையில் தான் கேட்டேன்." என்று சமாளிக்க, "அதெப்படி டா? அவ இங்க இருக்கனால உனக்கு உரிமை வந்துடுமா என்ன? அவ ஒன்னும் இந்த வீட்டு ஆள் இல்லயே, இந்த வீட்ல தங்கியிருக்கா அவ்ளோதான். ஆழி வெறும் பேயிங் கெஸ்ட் தான். நீ எப்படி மாச மாசம் அவளுக்கு சேலரி குடுக்கறியோ, அதே மாதிரி அவளும் இங்க தங்க வாடகை குடுக்குறாளே, சோ அவளை கேள்வி கேக்க உனக்கு எந்த ரைட்ஸ்சும் இல்லை" என்று வேண்டுமென்றே ஆதவ்

ஆழியின் ஆதவன் 9

Image
 ஆழி 9 "சைத்ரா லேப்டாப்பை ப்ரொஜெக்டர்ல கனெக்ட் பண்ணி அந்தப் பென்டிரைவ்வ பிளே பண்ணு" என்றாள் ஆழினி. "ம்ம்ம் ஓகே ஆழி" என்ற சைத்ரா அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த வேலையை முடித்திருந்தாள். முதல் ஃபோட்டோவைப் பார்த்தனர் பெண்கள் மூவரும். "இந்த ஆள் யாருன்னு அந்த டெப்டி டீடெயில்ஸ் குடுத்திருக்கு ஆழி, அதை பாக்கறியா" என்று கேட்ட சைத்ராவை திரும்பிப் பார்த்த ஆழி, "அதை அப்படியே டெலீட் பண்ணிடு, உனக்கு ஐஞ்சு நிமிஷம் தான் டைம், நான் டீ போட்டுட்டு வர்றதுக்குள்ள, இந்த ஆள் யாருன்னு நீ கண்டு புடிச்சு… எங்களுக்கு சொல்லணும்… ஓகேவா?" என்று புருவத்தை உயர்த்திக் அழுத்தமாக கேட்க, "டீ யோட எனக்கு சூடா பட்டர் பாப்கார்ன் கிடைக்கும்னா, நீ சொன்னத நான் செய்றேன். என்ன டீல் ஓகேவா?" என்று கட்டை விரலை உயர்த்திய சைத்ரா தலையில் செல்லமாக கொட்டிய மீரா, "எரும மாடு மாதிரி வளர்ந்திருந்தாலும், இவளுக்கு குழந்தை தனம் இன்னமும் போகல ஆழி, பாரு சின்னப் புள்ள மாதிரி பாப்கார்ன்க்கு அலையுறத" என்று சிரித்தபடியே ஆழியும் மீராவும் சமையலறையில் நுழைய, சைத்ரா தன் வேலையை தொடங்கினாள். ஆழியும

ஆழியின் ஆதவன் 8

Image
 ஆழி 8 நாட்கள் அதன் போக்கில் நகர பதினைந்து நாட்கள் வேகமாக ஓடி இருந்தது. "புரிஞ்சிக்க ஆதவ். குழந்தை ஆழிகிட்ட மட்டும் தான் அழுகாம இருக்கா, ஆழி நம்ம கூட வரட்டும். பாப்பாகாக ஒத்துக்கடா" என்று வெண்மதி மகனிடம் கெஞ்சி கொண்டிருக்க, ஆதவ் முடியவே முடியாது என்று கத்திக்கொண்டிருந்தான். லட்சுமியும் வெண்மதியும் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்துக் கொண்டு நிற்க, ஆதவ் முன் நேருக்கு நேர் வந்து நின்ற ஆழினி, "லிசன் மிஸ்டர். ஆதவன்? எப்படியும் நீங்க பாப்பாவை பாத்துக்க ஒரு கேர் டேக்கர் பாக்கத்தான் போறீங்க, அது ஏன் நானா இருக்கக் கூடாது?" என்றவளை முறைத்த ஆதவ், "இங்க பாருங்க மேடம். என் வைஃப் உங்களுக்குப் பண்ணது பெரிய உதவி தான். அதுக்காக நீங்க என் பொண்ணைப் பாத்துக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. என்னால ஆள் வச்சு குழந்தையை பாத்துக்க முடியும்" என்று காட்டமாக பதில் சொல்ல, "சாரி மிஸ்டர். ஆதவ், எனக்கும் யார்கிட்டயும் ஓசில உதவி வாங்கி பழக்கம் இல்ல, சோ இப்ப சொன்னீங்களே ஆள் வச்சுப் பாப்பேன்னு, அந்த ஆளுக்கு என்ன சேலரி குடுப்பீங்களோ அதை எனக்கு குடுங்க நான் பாப்பாவ பாத்துக்குறேன். அன்

ஆழியின் ஆதவன் 7

Image
  ஆழி 7 ஒரு வருடத்திற்கு முன் ஆழினி, மீரா, சைத்ரா மூன்று பேரும்‌ ஒன்றாக இந்திய மண்ணில், தங்கள் பழைய வாழ்க்கையின் மிச்ச மீதிகளை மொத்தமாக துடைத்தெறிந்து விட்டு புதிய‌ வாழ்க்கையை தேடி அடியெடுத்து வைத்தனர். "ஏன் ஆழி இப்டி சொல்ற?" என்ற சைத்ரா முகம் வாடி இருக்க, ஆழி அவள் தலையில் கை வைத்து மெதுவாக வருடியபடி, "புரிஞ்சிக்கோ சைத்து, என்ன தான் நம்ம நம்மள பத்தின எல்லாத்தையும் விஷயங்களைமும் நம்ம அழிச்சிருந்தாலும், எங்கயாது ஒரு சின்ன விஷயத்தை நம்மையும் அறியாம மிஸ் பண்ணி இருந்தால், அதால நாம மாட்டிக்க நெறைய சான்ஸ் இருக்கு. நாம ஒன்னும் சமூக சேவை செஞ்சிட்டு இங்க வர்ல. நம்ம டார்கெட்ல வந்த யார் ஃபேமிலியாது, நம்ம‌ள விடப் புத்திசாலியா ஒரு ஆள் இருந்து, நம்ம கண்டு புடிச்சு, நம்மள டார்க்கெட் பண்ணா என்ன பண்றது சொல்லு? அதுலயும் நம்ம கொன்னதுங்க ஒன்னும் சாதாரணமான ஆளுங்கள இல்ல‌. அரசியல்வாதி, பெரிய பிஸ்னஸ்மேன், விஐபின்ற பேர்ல இருந்த நம்மள விடப் பெரிய பெரிய கிரிமினல்ஸை, அதுல ஐஞ்சு பேர் அண்டர்வேர்ல்ட் டான் வேற. இப்டி நம்ம கை வச்சது எல்லாம் பெரிய இடம் மட்டுமில்ல மோசமான இடமும் கூடத்தான். சோ, எப்ப இருந்தால

ஆழியின் ஆதவன் 6

Image
  ஆழி 6 விஷ்ணு ரூம் கதவை தட்டி விட்டு காத்திருக்க, உள்ளிருந்து,‌ "வா" என்று‌ அழுத்தமாகக் கேட்ட குரலில் இருந்தே விஷ்ணுவுக்கு உள்ளே இருப்பவனின் கோவத்தின் அளவு தெரிவாகப் புரிந்தது. விஷ்ணு மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே செல்ல, அவன் கால் அருகில் வந்து விழுந்து நொறுங்கியது ஒரு பூ ஜாடி. "டேய் என்னடா இது?" என்று தொடங்கும் போது விஷ்ணு சட்டையை கொத்தாக பிடித்து இழுத்தான் அவன். "எப்டிடா அவளுக்குத் தெரிஞ்சுது? எப்டி தெரிஞ்சுது? ஒரு சின்ன வேலை, அதை ஒழுங்கா முடிக்க முடியல உன்னால… எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன், நான் பாத்துக்குறேன்னு சொல்லிட்டு, தேவையில்லாம அந்த ரவுடிய இதுக்குள்ள இழுத்து விட்டு அவளை மிரட்ட வச்சியே… இப்ப என்னாச்சு பாத்தியா, அவ அவனையே போட்டு தள்ளிட்டா. அது பரவாயில்ல, அவன் எப்ப இருந்தாலும் சாக வேண்டிய ஆள் தான். அவ இல்லாட்டியும், நம்ம அவனைப் போட்டிருப்போம். ஆனா, நீ அவனை இதுக்குள்ள இழுத்து விட்டதுனால இப்ப அவளுக்கு எல்லாம் ஓரளவு புரிஞ்சிருக்கும். எல்லாத்தையும் அவ கண்டுபுடிக்கிற அளவுக்கு நீ கேர்லெஸ்சா இருந்திருக்க… நீ எல்லாம் என்னடா டெப்டி கமிஷனர்" என்று அவன்

ஆழியின் ஆதவன் 5

Image
ஆழி 5 மாலை ஐந்து மணி போல் ஆழினி வீடு திரும்பி இருந்தாள். அன்று ஆபிஸில் இருந்து சீக்கிரமே வீட்டுக்கு வந்திருந்த ஆதவ் குழந்தை நிலாவை கையில் வைத்து கொஞ்சிக் கொண்டு இருக்க, அப்போது ஆழி உள்ளே வருவதைப் பார்த்தான். "என்ன ஆழி மேடம். மதியம் கோயில் போனவங்க ஈவ்னிங் திரும்பி வர்றீங்க, என்ன புதுசா கோயிலே கட்டி முடிச்சு, கும்பாபிஷேகம் பண்ணிட்டு, அப்புறம் சாமிய கும்பிட்டுட்டு வரீங்க போல" என்று கிண்டலாகக் கேட்க, அந்த நேரம் அங்கு வந்தார் வெண்மதி. "டேய் என்னடா கேள்வி இது? கோயில்னு போனா கொஞ்சம் முன்ன பின்ன தான் இருக்கும். இதுல இவ்ளோ நேரமா வெளிய நல்ல மழை வேற பேஞ்சிட்டு இருந்துச்சு, எங்கயாது ஒதுங்கி நின்னுட்டு, மழை நின்னதும் வந்திருப்பா" என்று வெண்மதி ஆழிக்கு துணைக்கு வர, ஆழியும் லேசாக நனைந்திருந்தாள். ஆதவ் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. "சரி சரி முதல்ல போய் தலைய துவட்டிட்டு, டிரஸ் மாத்திட்டு வா, கோல்ட் எதாவது வந்திடப் போகுது." என்று அக்கறையாகச் சொன்னவனை ஆழினி முறைத்துப் பார்த்தாள். "ஹலோ மேடம், நான் ஒன்னும் உனக்காக சொல்லல, உனக்கு கோல்ட் வந்து, அது அப்புறம் ஃபீவர்ரா மாறி,