ஆழியின் ஆதவன் 6

 









ஆழி 6


விஷ்ணு ரூம் கதவை தட்டி விட்டு காத்திருக்க, உள்ளிருந்து,‌ "வா" என்று‌ அழுத்தமாகக் கேட்ட குரலில் இருந்தே விஷ்ணுவுக்கு உள்ளே இருப்பவனின் கோவத்தின் அளவு தெரிவாகப் புரிந்தது.



விஷ்ணு மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே செல்ல, அவன் கால் அருகில் வந்து விழுந்து நொறுங்கியது ஒரு பூ ஜாடி.



"டேய் என்னடா இது?" என்று தொடங்கும் போது விஷ்ணு சட்டையை கொத்தாக பிடித்து இழுத்தான் அவன்.



"எப்டிடா அவளுக்குத் தெரிஞ்சுது? எப்டி தெரிஞ்சுது? ஒரு சின்ன வேலை, அதை ஒழுங்கா முடிக்க முடியல உன்னால… எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன், நான் பாத்துக்குறேன்னு சொல்லிட்டு, தேவையில்லாம அந்த ரவுடிய இதுக்குள்ள இழுத்து விட்டு அவளை மிரட்ட வச்சியே… இப்ப என்னாச்சு பாத்தியா, அவ அவனையே போட்டு தள்ளிட்டா. அது பரவாயில்ல, அவன் எப்ப இருந்தாலும் சாக வேண்டிய ஆள் தான். அவ இல்லாட்டியும், நம்ம அவனைப் போட்டிருப்போம். ஆனா, நீ அவனை இதுக்குள்ள இழுத்து விட்டதுனால இப்ப அவளுக்கு எல்லாம் ஓரளவு புரிஞ்சிருக்கும். எல்லாத்தையும் அவ கண்டுபுடிக்கிற அளவுக்கு நீ கேர்லெஸ்சா இருந்திருக்க… நீ எல்லாம் என்னடா டெப்டி கமிஷனர்" என்று அவன் கொதிக்க,



"நான் என்னடா பண்றது‌. நீதான் சொன்ன அவ தனி ஆள்னு. ஆனா, அவ கூட இன்னும் ரெண்டு பேர் இருப்பாங்கன்னு எனக்கு எப்டி தெரியும் சொல்லு? நான் என்ன வெத்தலைல மை போட்டா பாக்க முடியும்?. அதுங்க எல்லாம் சரியான எமகாதகீங்களா இல்ல இருக்கு, மூணு பேரும் சேர்ந்து ஜஸ்ட் லைக் தட், எல்லாத்தையும் ஈஸியா கண்டு புடிச்சிட்டாங்க, அதுவும் அந்த ரவுடி உடம்புல நம்ம பக் (bug)வச்சு அங்க நடந்ததை நம்ம ஒட்டுக் கேட்டது வரை எல்லாத்தையும் கரெக்ட்டா கெஸ் பண்ணிட்டாங்க‌, அதோட அவன் ஃபோனை வேற தூக்கிட்டு போய்ட்டாளுங்க கேடிங்க. நான் என்ன பண்றது. நீயும் தானா அங்க நடந்த எல்லாத்தையும் கேட்டுட்டு இருந்த" என்ற விஷ்ணுவை அவன்‌ முறைக்க, 



"சரி விடுடா இப்ப எதுக்கு இப்டி டென்ஷன் ஆகுற, ப்ரீயா விடு. அவளுக்கு என் பின்னாடி ஒருத்தன் இருக்கான்னு ஒரு டவுட் இருக்கு, பட் அது நீன்னு அவளுக்குத் தெரிய வாய்ப்பு இல்ல. சோ யூ டோன்ட் வொரி நீ உன்னோட கேம்மை கண்டினியூ பண்ணு" என்றதும் அவனும் அதற்கு ஆமோதித்து தலையாட்டினான்.



"என்ன சொன்னா அவ? ஒத்துக்கிட்டாளா இல்லையா?"



"ம்ம்ம் இப்ப அவ பிடி நம்மகிட்ட இருக்கு, நிலாவுக்காக கண்டிப்பா அவ ‌இத செய்வா, அந்த மூணு பேரோட கதைய முடிக்க டைம் குறிக்க, ஒரு நாள் டைம் கேட்டிருக்கா… பாப்போம், என்ன நடக்குதுன்னு"



"ம்ம்ம் ஓகே. இவ்ளோ நாள் வெய்ட் பண்ணிட்டோம். இன்னும் ஒரு நாள் தான லெட்ஸ் வெய்ட்" என்றவன் விஷ்ணு முகத்தைப் பார்த்தான்.



"என்னடா ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு? எனி ப்ராப்ளம்?"



"ம்ஹூம்.. அதெல்லாம் ஒன்னும் இல்லடா, அந்தப் பொண்ணு பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன். என்ன திமிர்டா‌ அவளுக்கு… முன்னாடி உக்காந்திருக்குறது போலீஸ்னு கொஞ்சம் கூட ஒரு சொட்டு பயம் இல்லாம எவ்ளோ தெனாவெட்டா பேசிச்சு தெரியுமாடா…" என்று ஆழியை வாயில் போட்டு நன்கு வறுத்து எடுத்தவன், "ஆனா சும்மா சொல்லக்கூடாதுடா… செம்ம அழகு அவ, சும்மா சுண்டுன ரத்தம் வர மாதிரி கலர்" என்றவனை அவன் முறைக, விஷ்ணு சுதரித்தவன், 



"சரிடா நம்ம வேலை முடிஞ்ச பிறகு அந்த மூணு பேரையும் என்ன பண்றத பிளான்? எதுவும் யோசிச்சு வச்சிருக்கியா?" என்ற விஷ்ணுவை நக்கலாக பார்த்துச் சிரித்தான் அவன்.



"ம்ம்ம் பேக்ரவுண்ட்ல சிங்கப்பெண்ணே பிஜிஎம் போட்டு, அவங்க கழுத்துல மாலை போட்டு ஊர்வலம் கூட்டிட்டுப் போகப் போறேன்" என்றவனை விஷ்ணு முறைக்க,



"என்னடா முறைப்பு வேண்டி இருக்கு உனக்கு?, அவங்க பெரிய தியாகிங்க உக்காந்து யோசிக்க, வேலை முடிஞ்சதும் அவங்க கதைக்கு சுபம் போட்டு போக வேண்டியது தான்"



"என்னடா சொல்ற? ஆர் யு ஷூர்?" என்ற விஷ்ணுவை எரிச்சலாகப் பார்த்த அவன்‌,



"பின்ன வேற‌ என்ன பண்ணமுடியும்?. நம்மளும் ஆறு மாசம் மேல ட்ரை பண்ணிட்டோம். அவங்களுக்கு எதிரா ஒரு சின்ன எவிடண்ஸ் கூட கிடைக்கல, பதினெட்டு கொலை பண்ணிருக்காங்க, பட் நோ எவிடன்ஸ். எல்லாம் கிளீன் ஸ்வைப். இந்தியா முழுக்க, ஒன்பது ஸ்டேட் போலீஸ்சும் அலைஞ்சு திரிஞ்சு பாத்து, ஒன்னும் பண்ண முடியல, இதுல இவங்க மூணு பேர் பேரும் எங்கயும் வரவே இல்ல..‌. அவ்ளோ ஸ்மார்ட். சோ, இவங்களை நம்ம அரெஸ்ட் பண்ண முடியாது. அரெஸ்ட் பண்ணாலும் கேஸ் நிக்காது. பிகாஸ் அவங்க மூணு பேரும் சொசைட்டில ஒரு சாதாரணப் பொண்ணுன்ற ஐடென்டிட்டி கிரியேட் பண்ணி அதுக்கு பின்னாடி மறஞ்சு இருக்காங்க, அது ஒன்னு போதும், அவங்க தப்பிக்க, சோ வீ ஹேவ் நோ ஆப்ஷன் விஷ்ணு."



"எனக்கு என்னமோ அவங்க பின்னாடி யாரோ இருப்பாங்கன்னு தோணுது" 



"மே பி விஷ்ணு, எனக்கும் அப்டி ஒரு டவுட் இருக்கு, எங்கயும் சிக்கமா எப்டி இவங்க இவ்ளோ நாள் எஸ்கேப் ஆனாங்கணு புரியல" 



"அப்ப மூணு பேரையும் முடிக்கணுமாடா?"



"இல்ல விஷ்ணு, ஆழிய மட்டும் இல்லாம இருந்த போதும், மீதி ரெண்டும் கரண்ட் போன UPS மாதிரி பீப் பீப்னு கொஞ்ச நேரம் சத்தம் போட்டுட்டு, அப்புறம் அப்படியே ஆஃப் ஆகிடும். சோ நம்ம வேலை முடிஞ்சதும் மிஸ். ஆழினி மிஸ்சாகிடுவா" என்று அவன் சொன்ன நேரம் யாரோ கைதட்டும் ஓசை கேட்க, இருவரும் திரும்பி பார்த்தனர்.



"சூப்பர் ப்ளான்டா, செம்ம சூப்பர். உன்னால இப்படிக் கூட யோசிக்க முடியும்னு இத்தனை வருஷம் உன் கூட இருந்தும் எனக்குத் தெரியல பாரேன்! அவ்ளோ பர்ஃபெக்ட்டா நீ என்கிட்ட நல்லவன் மாதிரி நடிச்சிருக்க இல்ல… சூப்பர்டா. அதெப்படி உன் வேலை முடிஞ்சதும் ஆழிய கொன்னுடுவ, அப்படித் தானே… உனக்குக் கொஞ்சம் கூட நன்றியே இல்லல்ல… அவ உனக்கு எவ்ளோ செஞ்சிருக்கா, அவளைப் போய் கொல்லுவேன்னு வாய் கூசாம சொல்ற... ச்சீ என்ன மனுஷன்டா நீ? " என்று சொல்லி முடிக்கும் முன்,



"இனாஃப் முகில் ஜஸ்ட் ஸ்டாப் இட்" என்று கத்தியவனைப் பார்த்து இகழ்ச்சியாகச் சிரித்த முகில்,



"ஏன்? உண்மை உள்ள மனசாட்சிய குத்துதா?, ம்ம்ம் இருக்காதே, ஏன்னா உனக்குத் தான் மனசாட்சியே இல்லயே?" என்ற முகில் கன்னத்தில் அறைத்திருந்தான் ஆதவன்.



"யார்கிட்ட பேசுறன்னு, என்ன பேசுறன்னு தெரிஞ்சுப் பேசு முகில்" என்ற ஆதவன் கண்களில் கோபம்‌ அக்னியாக ஜொலித்தது.



"ஏன் தெரியாம, பொறந்த குழந்தைய கைல வச்சிட்டு அடுத்து என்ன பண்றதுன்னு முழிச்சிட்டு இருந்த உன்கிட்ட இருந்து, இனி இந்தக் குழந்தைக்கு நான் பொறுப்புன்னு கையில வாங்கிகிட்ட பொண்ணை ஈவு, இரக்கம் இல்லாம கொல்ல நெனைக்குற ஒரு சிபிஐ ஆபிசர்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்னு நல்லா தெரியுது மிஸ்டர். ஆதவன் ஐபிஎஸ்" என்ற முகில் கண்களில் ஆதவ் மேல் இருந்த கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது.



"என்னடா ரொம்பத் தான் அவளுக்கு சப்போர்ட் பண்ற, நீ கொடி புடிக்கிற‌ அளவுக்கு அவ அப்டி ஒன்னும் ஒழுங்கு இல்ல… பணத்துக்காகக் கொலை செய்ற ஆளுடா அவ. ஷீ இஸ் ஏ ப்ரோஃபஷனல் கில்லர் மேன். டோண்ட் யூ நோ தட்?"



"எஸ்... ஒத்துக்குறேன் அவ ப்ரோஃபஷனல் கில்லர் தான். ஐ அக்ரீ… அப்ப நீ நேரா போய் அவளை அரெஸ்ட் பண்ண வேண்டியது தான, அதை விட்டுட்டு உன்னோட பகைய தீர்க்க, அவளை ஏன்டா மறுபடியும் கொலைகாரியா ஆக்கப் பாக்குற?, அவ முன்ன எப்டியோ எனக்குத் தெரியாது. பட், என்னைக்கு அவ நிலாவ அவ பொறுப்புல எடுத்துக்கிட்டாளோ, அன்னைக்கு இருந்து, இந்த நிமிஷம் வரை அவ நல்ல பொண்ணா மட்டும் இல்ல, நிலாவுக்கு நல்லா அம்மாவாவும் இருக்கா, அது உனக்கும் தெரியும். திருந்தி நல்லபடியா வாழ நெனைக்குற பொண்ணை, நீ மறுபடியும் உன் சுயநலத்துக்கு மிஸ்யூஸ் பண்றீயே, இது நீ ஆழிக்கு மட்டும் இல்ல, உன் கடமைக்கும் செய்ற துரோகம். இதுக்கு என்ன சொல்ற நீ?" என்று முகில் கத்தினான்.



"ஸ்டாப் இட் முகில், ரொம்பப் பேசுற நீ… நீயும் ஒரு அண்டர் கவர் காப்ன்றதை மறந்துட்டு பேசிட்டிருக்க… திஸ் இஸ் பார்ட் ஆஃப் அவர் ஜாப், அவ்ளோ தான். சோ ப்ளீஸ் இதுல உன் செண்டிமெண்ட்டை கொண்டு வராத‌.‌.. அவ ஒரு அக்யூஸ்ட் அது மட்டும் உன் மனசுல இருக்கட்டும்." என்ற ஆதவனை பார்த்து கசப்பாகச் சிரித்த முகில், ஆதவன் மற்றும் விஷ்ணுவை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு,



"நிலாவுக்கு அவதான் உயிர், அன்ட் அவளுக்குள்ள துடிச்சிட்டு இருக்குறது, நாம மூணு பேரோட உயிருன்றதை நீங்களும் மறந்துடாதீங்க… அவ செத்த அடுத்த நிமிஷம், அந்த உயிரும் இந்த உலகத்தில இருக்காது. ஒரே அடியா நம்ம விட்டுப் போய்டும்" என்றவன் அங்கிருந்து செல்ல, முகில் வார்த்தையில் ஆதவன், விஷ்ணு இருவரும் உள்ளம் கலங்கி நின்றனர்.



இங்கு ஆழி அமைதியாக அமர்ந்திருக்க, சைத்ராவும் மீராவும் அடுத்து என்ன என்று ஆழி முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.



"இப்ப என்ன ஆழி பண்றது? பேசாம நீ இதெல்லாம் என்னால முடியாது. உன்னால என்ன கிழிக்க முடியுமோ கிழிச்சுக்கோன்னு அந்த டெப்டிகாரன்கிட்ட, அவன் பேர் என்ன…? என்று யோசித்தவள், "ஹான்… விஷ்ணு அவன் கிட்ட தெளிவா சொல்லிடு, அவனால நம்மள ஒன்னும் புடுங்க முடியாது. அது அவனுக்கும் தெரியும். சும்மா நம்மள மிரட்டிப் பாக்குறான். பேசாம நம்ம இந்த ஊரை விட்டுப் போய்டலாம். ஒருவேளை உன்னால அந்தப் பாப்பா நிலாவை விட்டு இருக்க முடியாதுன்னா சொல்லு, பேசாம நம்ம அவளையும் தூக்கிட்டுப் போய்டலாம். அந்த ஆதவ்வ விட நம்மால அவளை சூப்பரா வளர்க்க முடியும். என்ன சொல்ற, ஏதாவது சூப்பர் கன்ட்ரிக்கு டிக்கெட் போடவா?" என்ற சைத்ராவை பார்த்து ஆழிக்கு சிரிப்பதா, அழுவதா என்று புரியாமல் மீராவைப் பார்க்க, அவள் தலையில் அடித்துக் கொண்டாள்.



"ஏன்டி லூசு, மிஷின்ஸ் கூடப் பழகி பழகி உனக்கு மூளை மழுங்கிப்போச்சாடி… அந்தப் புள்ளைய தூக்கிட்டு போலாம்னு சொல்ற… எதாவது பேசணும்னு, எதை வேணும்னாலும் பேசுவீயா நீயி‌?. மூடிட்டு கம்னு இருடி" என்ற மீராவை பார்த்து சைத்ரா உதட்தை சுழித்துவிட்டு முகத்தை திருப்பிக் கொள்ள, மீரா ஆழியிடம் திரும்பி, "ஓகே ஆழி வாட் நெக்ஸ்ட்? நீ என்ன சொல்றியோ அதை நாங்க செய்றோம்."



"என்ன மீரா வாட் நெக்ஸ்ட். நம்மளே எதுவும் வேணாம்னு முடிவு பண்ணி, நார்மலா வாழத் தான இங்க வந்தோம். இப்ப மறுபடியும் எதுக்கு வந்த வழியே திரும்பிப் போகணும்? அதுவும் ஆஃப்டர் ஆல் ஒரு சின்ன பொடிப் பையனுக்குப் பயந்து" என்று சைத்ரா குதிக்க,



"யாருடி பொடிப் பையன்?"



"வேற யாரு? எல்லாம் அந்த டெப்டி தான் மீரா" என்றது தான் தாமதம், இருக்கும் நிலையை மறந்து ஆழி வாய்விட்டு சிரித்துவிட, மீராவுக்கும் சிரிப்பு வந்து விட்டது.



"ஏண்டி ஆறடில மலை மாதிரி இருக்க போலிஸ்காரன் உனக்கு பொடி பையனாடி? ஆனாலும் உனக்கு கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி சைத்து" என்று மீரா சிரிக்க,



"அப்பாடி ரெண்டு பேரும் சிரிச்சிட்டீங்க, இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு," என்ற சைத்ரா, "ம்ம்ம், இப்ப சொல்லு ஆழி என்ன ப்ளான்னு, நீ பிரெட்னு சொல்லும் முன்ன பட்டர், ஜாம்மோட வந்து நிப்பா இந்த சைத்ரா" என்றதும் மீண்டும் அங்கு சிரிப்பொலி.



"லிசன் கைய்‌ஸ், நம்ம இதுவரை பல தப்பு பண்ணி இருக்கோம் தான். அஃப்கோர்ஸ் பணத்துக்காக, அண்ட் நம்ம சூழ்நிலைனால அதையெல்லாம் செஞ்சோம். பட், இதுவரை எந்த ஒரு நல்ல மனுஷனையும் நம்ம கொன்னதில்ல. இப்பவும் அதே தான் செய்யப்போறோம். லாஸ்ட் அன்ட் ஃபைனல்லா இந்த மூணு மனுஷ மிருகங்கள் கணக்கை முடிச்சி, மூணு புண்ணியம் செஞ்சு, நம்ம பாவக்கணக்குல ஒரு மூணு பாவத்தை ஈக்வல் பண்ணிடுவோம்."



"ஓகே ஆழி… சிறப்பா செஞ்சு விட்றலாம். அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. நீ ப்ளான் என்னன்னு சொல்லு, அப்படியே அந்த மூணு டாக்ஸ் யாருன்னு சொல்லு"



"அந்த மூணு பேர் பத்தி, ப்ளான் பத்தி சொல்றதுக்கு முன்ன முக்கியமான ஒரு விஷயத்தை சொல்லிடுறேன்‌. இந்த வேலை முடிஞ்ச அடுத்த நிமிஷம், நீங்க ரெண்டு பேரும் இந்தியால இருக்கக் கூடாது. என்னோட அக்கவுண்ட்ல இருந்த எல்லா பணத்தை உங்க பேருக்கு டிரான்ஸ்பர் பண்ணி இருக்கேன். அத வச்சு எங்கயாது போய் நிம்மதியா இருங்க" என்றவளை இருவரும் தீயாக முறைத்தனர்.



"உன்னை விட்டு நாங்க எங்கயும் போகமுடியாது. வேலை முடிஞ்சதும் மூணு பேரும் சேர்ந்தே எங்கயாது போய்டலாம்" என்று சைத்ரா பிடிவாதமாக சொல்லிவிட.



"புரியாம பேசாத சைத்து. இந்த வேலை முடிஞ்சதும் கண்டிப்பா என்னைக் கொல்லத் தான் அவங்க நினைப்பாங்க, அது உங்களுக்கும் தெரியும். அப்புறம் எதுக்கு இந்த தேவையில்லாத பிடிவாதம்?"



"இது பிடிவாதம் இல்ல ஆழி. எப்ப நம்ம அடுத்த உயிரை எடுக்க ஆரம்பிச்சோமோ, அப்பவே நம்ம முடிவு இப்படி தான் இருக்கும்னு நம்ம மூணு பேருக்கும் நல்லாவே தெரியும். கத்தி எடுத்தவனுக்கு சாவு அதால தான். உன்ன மட்டும் சாக குடுத்துட்டு நாங்க நல்லா இருந்துடுவோம்னு நீ நினைக்கிறாயா?" என்ற மீராவை கவலையாகப் பார்த்தாள் ஆழினி‌.



"நான் அப்படி சொல்லல மீரா. இதுல அவங்க டார்கெட் நான் ஒருத்தி மட்டும் தான். நான் நெனைக்குறது கரெக்ட்னா, அவங்க உங்க ரெண்டு பேரையும் ஒன்னும் செய்ய மாட்டாங்கனு தான் எனக்கு தோணுது, அதுக்காகத்தான் சொல்றேன். நீங்க ரெண்டு பேரும் சேஃப் ஆகிட்டா, நான் எப்படியும் தப்பிச்சிடுவேன்‌. இதுல யார் முதல்ல முந்துறாங்கன்றது தான் மேட்டரே, வேலை முடிஞ்சதும் அவங்க என்னை முடிக்கறாங்களா, இல்ல நான் அவங்களை முடிக்கறேனான்னு காலம் தான் டிசைட் பண்ணணும், லெட்ஸ் வெய்ட் அண்ட் வாட்ச்." என்ற ஆழியைப் பார்த்து பெருமூச்சு விட்ட சைத்ரா,



"ஒரு வருஷம் முன்ன உனக்கு அந்த அக்சிடென்ட் மட்டும் நடக்காம இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும் ஆழி. நிலா பாப்பா அம்மா ஆஷா மட்டும் உன் லைஃப்ல வராம போயிருந்தா, இப்ப இவ்ளோ பிரச்சனை இல்லல்ல, நம்ம மூணு பேரும் எங்கயாவது நிம்மதியா இருந்திருப்போம் இல்ல ஆழி" என்றவளைப் பார்த்து ஆமாம் என்று தலையாட்டிய ஆழியின் நினைவுகள் ஒரு வருடத்திற்கு முன்னால் சென்றது.