Posts

Showing posts from March, 2024

இதயம் 5

  இதயம் 5 ஆதர்ஷ் ஆஃபிஸ் கிளம்பிய உடனேயே தர்ஷினிக்கு ஃபோன் செய்திருந்தான் அதீஷன். “ஹலோ தர்ஷினி… தர்ஷன் கிளம்பிட்டான். கேர்ஃபுல்லா இருங்க… அங்க அவனைப் பார்த்ததும் உடனே முகத்தில் சந்தோஷத்தைக் காட்டிடாதீங்க… அவனை இப்ப தான் அங்க பார்க்குற போல காட்டிங்கோங்க… எக்காரணம் கொண்டும் உங்க முகத்துல நீங்க அவனை எதிர்பார்த்துட்டு இருந்தீங்கன்னு அவனுக்குத் தெரியவே கூடாது. அப்படி மட்டும் அவனுக்கு எதுவும் டவுட் வந்துச்சு… நம்ம மொத்த ப்ளானும் ஊத்திக்கும்… சோ ரொம்ப கவனமா இருங்க” என்று சொல்லி விட்டான். ’ம்க்கும்… அவருக்கு என்ன எதுவும் ரியாக்ட் பண்ணாதேன்னு சொல்லிட்டாரு…’ என்றவள், நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, ‘நான் சும்மா இருந்தாலும் இது சும்மா இருக்காதே… அவரைப் பார்த்ததும் கண்டமேனிக்கு குதிக்க ஆரம்பிச்சிடுமே… அதுவும் எட்டு வருஷம் கழிச்சு அவரைப் பார்க்கப் போறேன்…’ என்று சிணுங்கியவள், ‘கடவுளே, நீதான் எனக்குத் துணையா இருக்கணும். என் மனசைக் கொஞ்ச நேரம் என்னோட கன்ட்ரோல்ல வைக்க ஹெல்ப் பண்ணு’ என்று அனைத்து தெய்வங்களுக்கும் வேண்டுதல் வைத்துக் கொண்டிருக்க, அப்போது அங்கு ஓடிவந்த அந்தக் கம்பெனி மேனேஜர் ஜான்,  “மிஸ் தர்ஷி

இதயம் 4

 இதயம் 4 மதிய வெயில் சுகமாகக் காய்ந்து கொண்டிருந்த வேளையில் தன்வி தலை கோதிவிட, அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு அவள் வயிற்றில் முகம் புதைத்துத் தன் மகவின் இருப்பை உணர்ந்து சிலிர்த்துக் கொண்டிருந்தவனை, “அதீஈஈஈஈ” என்ற ஆதர்ஷின் கோபம் நிறைந்த குரல் நிகழ்காலத்தில் இழுத்து விட்டது. தீடிரெனக் கேட்ட ஆதர்ஷின் குரலில் பதறி எழுந்தனர் அதீஷனும், தன்வியும். “என்ன தஷ்… இப்பதான் ஆபிஸ் போனாரு… அதுக்குள்ள வந்துட்டாரு… ஒருவேளை, தர்ஷினி அக்கா முகத்தைப் பார்த்தவுடன் தெறிச்சு ஓடி வந்துட்டாரு போல” என்று சொல்லிச் சிரிக்க அவனும், “இருக்கும்டி… அவங்களைப் பார்த்துட்டு அந்தக் கோவத்துலயே அப்படியே இங்க ஓடி வந்திருப்பான்… குரலே சொல்லுதே அவன் கோவத்தை” என்றான் அதீஷன். “ம்ம்ம்… நிச்சயம் செம்ம காண்டுலதான் இருப்பாரு, பார்த்துங்க… மேல விழுந்து பிராண்டிடப் போறாரு” என்ற தன்வியை முறைத்தான் அதீஷன். “கொழுப்பு கூடிப் போச்சுடி உனக்கு… நைட் சிக்குவ இல்ல, அப்ப கவனிச்சிக்குறேன்.” என்றவன், “கீழ வந்து ஐயா ஆக்டிங்கைப் பாருடி” என்றவன் வெளியே செல்லப் போக, பின்புறமாக அவன் சட்டைக் கையைப் பிடித்து இழுத்தாள் தன்வி. “என்னடி? கிஸ்ஆஆ

இதயம் 3

 இதயம் 3  அதீஷன் சொன்ன அனைத்தையும் கேட்ட தர்ஷினிக்கு கண்களில் கண்ணீர் வழிவது நிற்கவே இல்லை. "ஏன்? ஏன் அந்தச் சித்ரா இப்படிப் பண்ணா? அவ ஏன் ஆதர்ஷ் சார் லைஃப்ல வந்தா… என்னைப் பார்க்கும் முன்ன கடவுள் ஏன் அவளை அவர் கண்ணுல காட்டினாரு? ஏன் அந்த ஆலனுக்கு தர்ஷனைப் புடிக்கணும்? ஏன் இப்படியெல்லாம் நடக்கணும்? ஏன்…" என்று சொல்லிச் சொல்லி அவள் கதற, அங்கிருந்தவர்கள் இவர்களை ஒரு மாதிரிப் பார்த்தனர். அதைக் கவனித்த அதீஷன், "ப்ளீஸ் தர்ஷினி… எல்லாரும் பார்க்குறாங்க… கண்ட்ரோல் யுவர் செல்ப்" என்றபடி டிஸ்யூவை எடுத்து நீட்ட இருக்கும் இடம் உணர்ந்து அமைதியானாள். அந்த நேரம் "ஆனாலும், அந்தப் பைத்தியம் சித்ரா ஒருத்தி தப்பு பண்ணதை வச்சு இந்த ஆது, இப்படிப் பொண்ணுங்களே புடிக்காதுன்னு சொன்னா எப்படி?" என்றாள் தன்வி ஆதங்கத்தில். "இல்ல தன்வி, நீ சொல்றது தப்பு… அவர் சித்ராவை நினைச்சோ, பொண்ணுங்களைப் பிடிக்காமயோ அவங்களை விட்டு விலகிப் போகல… உண்மையைச் சொல்லணும்னா, அப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகும் அவர் இன்னும் பொண்ணுங்களை மதிக்கிறாரு… அதுக்கு நானே பெரிய உதரணம். நம்ம ஆஃபிஸ்ல எத்தனை லேடிஸ் வே

இதயம் 2

  இதயம் 2 தர்ஷினியின் முகம் வாடி இருந்ததைப் பார்த்த அமிர்தா எழுந்து அருகில் சென்று அமர்ந்தவர், அவள் வலக்கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்து அழுத்திக் கொண்டு, "என்னம்மா ஆச்சு? ஏன் முகம் வாடிப் போச்சு?" என்று அன்பாகக் கேட்க, அவர் அரவணைப்பில் தர்ஷினிக்கு உள்ளம் நெகிழ்ந்து போனது. "நீங்க நினைக்கிறது நடக்காதுமா" என்றாள் தொண்டை அடைக்க. அதைத் கேட்டுப் பதறிய அமிர்தா, "ஏம்மா, நீ தர்ஷனைப்பத்தி தப்பா எதுவும் நினைக்குறயா? அவன் உனக்குப் பொருத்தம் இல்லைன்னு நினைக்குறயா?" என்று தர்ஷினி சொன்ன வார்த்தையின் தாக்கத்தில் அவர் தாய்‌ மனம் துடிக்க, அடுத்த நொடி அவரும் தானும் ஒரு பெண்ணென்று நினைவு வர தர்ஷினிக்காக யோசித்தவர், அவளுக்கும் அவளின் திருமணத்தைப் பற்றி கனவும், எதிர்பார்ப்பும் இருக்கும் என்று நினைத்து, "பரவாயில்லமா… இது உன்னோட வாழ்க்கை, உன்னோட முடிவு. இதைப்பத்திப் பேசவோ கேள்வி கேக்கவோ எங்களுக்கு எந்த உரிமையும் இல்ல… உன்னோட சந்தோஷம் தான் முக்கியம். தர்ஷன் பத்தி தெரிஞ்சும் அவனுக்கு உன்னைப் பொண்ணு கேட்டது தப்புதான். என் பையனுக்கு கொடுத்து வைக்கலன்னு நினைச்சுக்குறேன்.&qu

இணை சேருமோ இதயம் 1

Image
இணை சேருமோ இதயம் இந்தக் கதை என்னுடைய 'விழி வழி காதல் நுழைந்ததடி' கதையில் வரும் ஆதர்ஷன் மற்றும் அவனை ஒருதலையாகக் காதலிக்கும் தர்ஷினியின் கதை‌.  இந்தக் கதைக்குள் போவதற்கு முன் எனது, 'விழி வழி காதல் நுழைந்ததடி' கதையின் ஒரு சின்னச் சுருக்கம். அந்தக் கதை படிக்காமல் இந்தக் கதை படித்தாலும் உங்களுக்கு கதை புரியும். முன் கதைச் சுருக்கம்…  இந்தியாவின் ஒரு பெரிய தொழில் நிறுவனத்தின் வாரிசு ஆதர்ஷன். இப்போது குடும்பத்தின் தொழிலை எடுத்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறான். அவனுடைய சின்ன வயதில் இருந்து அவன் வீட்டில் வளரும் தன்வி. ஆதர்ஷன், தன்வி இடையே ஒரு அழகான நட்பு இருக்க, ஆதர்ஷனின் தாத்தா வீரராகவன், இவர்களின் நட்பை உறவாக்க விரும்புகிறார். ஆதர்ஷ், தன்வியிடம் இதைப்பற்றிச் சொல்ல‌.‌.. இருவருமே திருமணத்தை மறுக்கின்றனர். வீரராகவன் உறுதியாக, இருவரும் யாரையும் காதலிப்பதாக இருந்தால் அவர்களைத் திருமணம் செய்து கொள்ளலாம்… இல்லையென்றால் அவர்கள் இருவருக்கும் திருமணம், என்றும் அதற்கு மூன்று மாதங்கள் தான் அவகாசம் என்றும் குண்டைத் தூக்கிப் போட, ஆதர்ஷ் வேறு வழியின்றி, தன்வியிடம் தன்னைப் பற்றிய உண்ம