Posts

Showing posts from May, 2023

அழகிய தமிழ் மகள் 17

அழகி 17 யுக்தாவும், நிஷாவும் அடுத்தடுத்து எடுத்த நடவடிக்கையில் கேஸ் அடுத்தக் கட்டத்துக்குச் சென்றது. லாப்டாப்பில் குறிப்பிடப்பட்டிருந்த அனைவரும் தற்கொலை செய்து கொண்டதாகக் கேஸ்கள் பதிவாகியது. அதைக் கொலையென்று நிரூபிக்க ஒரு சின்ன ஆதாரம் கூடப் போலிஸ்க்கு கிடைக்கவில்லை என்று அந்தந்த ஏரியா இன்ஸ்பெக்டர்கள் கமிஷனர் பரதன் மற்றும் ராமிடம் சொல்ல, "எப்படிக் கிடைக்கும்.இத செஞ்சவ லேசுபட்ட ஆளா என்ன? இன்னும் ஒரு வருஷம் உக்காந்து பூதக்கண்ணாடி வச்சு தேடினாலும் ஒரு எவிடன்ஸ்சும் கிடைக்காது…" என்று தனக்குள்லேயே சொன்னவர், "நீங்க இந்த எல்லாக் கேஸையும் சூசைட்ன்னு போட்டு க்ளோஸ் பண்ணுங்க. ஒரு எவிடன்சும் இல்ல, அதோட செத்துப் போனவங்க ஃபேமிலியும் கம்ப்ளைன்ட் தர விருப்பம் இல்லன்னு சொல்லீட்டாங்க. நம்ம வேற என்ன பண்ண முடியும்?" என்று அந்தப் பிரச்சனைக்கு அன்றோடு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் பரதன். யுக்தா அந்த லாப்டாப்பில் லாக் செய்யப்பட்டிருந்த போல்டரின் பாஸ்வோர்டை கிராக் செய்ய முயன்று கொண்டிருந்தாள். ராஷ்மி அனைவருக்கும் கேக் செய்து எடுத்து வந்தவள் யுக்தாவிடம் ஒரு கேக்கை கொடுக்கப் போக, "ஏய் ரா

அழகிய தமிழ் மகள் 16

அழகி 16 யுக்தா, உதய் கல்யாணம் முடிந்து இரண்டு மாதங்கள் காற்று போல் வேகமாகக் கடந்து விட்டது. யுக்தா முகத்தில் தெரிந்த வெட்கமும், சிரிப்புமே அவளின் திருமண வாழ்க்கையின் நிறைவை சொல்லாமல் சொல்ல, குடும்பம் முழுவதும் நிம்மதி கொண்டது. யுக்தா என்ன தான் வேலை வேலையென்று அலைந்தாலும், ஒரு நல்ல மனைவியாக உதய்க்கு செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் குறையில்லாமல் செய்தாள். உதய்யும் அவளின் குணம் அறிந்து அன்பாக நடந்தான். இரண்டே மாதத்தில் உதய், யுக்தா வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டான். அவள் வேலையின் சூழல் புரிந்து அவளுக்குக் கணவனாக மட்டும்மில்லாது, நல்ல நண்பனாகவும் இருந்தவன், யுக்தா மனதை முழுதாக ஆட்கொண்டான். அவனின் ஒவ்வொரு செயலும் யுக்தா மேல் அவனுக்கு இருக்கும் காதலை அப்பட்டமாக வெளிப்பட்டது. அவள் கேஸ்களைப் பற்றி உதய்யிடம் பகிர்ந்து கொள்ளும் அளவு உதய், யுக்தா மனதில் இடம் பிடித்திருந்தான். ஆனாலும் யுக்தா உதய்க்காகச் செய்யும் செயல்கள் அனைத்திலும் ஒரு நல்ல மனைவிக்குக் கணவன் மேல் இருக்கும் அன்பும், இயல்பான உரிமையும் தான் வெளிப்பட்டதே தவிரக் காதல் இருந்ததா என்றால் அது கேள்விக்குறி தான். ஒருமுறை தோழிகள் இது ப

அழகிய தமிழ் மகள் 15

அழகி 15 ‌அந்த கல்யாண மண்டபம் முழுவதும் சொந்தங்களால் நிறைந்து வழிந்தது. திரும்பும் திசையெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்த முகங்கள் தான் தெரிந்தது. நான்கு குடும்பத்திற்கும் செல்லப் பெண்ணான சம்யுக்தாவின் திருமணம். ஒரு நாட்டின் இளவரசியின் திருமணம் போல் அனைத்து ஏற்பாடுகளையும் அவ்வளவு விமர்சையாகச் செய்திருந்தனர் யுக்தாவின் அன்பு அண்ணன்கள். உதய் மணமேடையில் கம்பீரமாக அமர்ந்திருக்க, இங்கு மணமகள் அறையில் ஒரு கலவரமே நடந்து கொண்டிருந்தது. ராம் ஒரு பக்கம் அவன் வாங்கி வந்த நகையைப் போட சொல்ல, வினய் ஒரு புறம் அவன் வாங்கி வந்த நகைகளைக் கடை பரப்பிவைக்க, வெற்றி, ஜீவா, விஷ்ணு தன் பங்கிற்குச் சில நகைகளை வைத்துக் கொண்டு அதை யுக்தா போட்டே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்க, நான்கு அப்பாக்களும் அவரவர் வாங்கி வந்ததையும் எடுத்து வைக்க இதில் பரதனும் கூட்டு சேர்ந்து கொண்டார். இவர்கள் செய்த அழும்பில் அயர்ந்து போன கோதையும், சாருமதியும் இவர்களுடன் சண்டை போட்டு முடியாமல், "அய்யோஓஓஓஓ…" என்று உட்கார்ந்து விட, மது, கயல்விழி, நிஷா, ஜானவி, ராஷ்மியும் கூடப் "போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்…" என்று தலையில் கை

அழகிய தமிழ் மகள் 14

  அழகி 14 இரண்டு வருடங்களுக்கு முன்… வீட்டில் மொத்த பேரும் ஹாலில் கூடி இருக்க, யுக்தா, நிஷா, ஜானவி, ராஷ்மி என்று நால்வரும் நடு ஹாலில் கைகட்டி நல்ல பிள்ளை போல் நின்றிருந்தனர். "ஏன்டி ராஷ்மி எள்ளு தான் எண்ணெய்க்குக் காயுது? நாம எதுக்குடி காயனும்… அதுங்க இரண்டு தான் உண்மைய மறைச்சி வச்சு இப்ப அது தெரிஞ்சு, பொறில மாட்டின எலி மாதிரி முழிக்குதுங்க... அதுக்கு ஏன் நம்மையும் குற்றவாளி கூண்டுல நிக்க வச்சிருக்காங்க?" என்ற ஜானுவை முறைத்த ராஷ்மி, "ம்ம்ம்… அப்படிக்கா திரும்பி அப்படியே ஒரு யூ டர்ன் போட்டு, உன் ஆளு முகரகட்டய கொஞ்சம் பாரு... அப்புறம் பேசு…” என்றாள். ஜானவி மெதுவாகத் திரும்பி ஓரக்கண்ணால் ஜீவாவை பார்த்தாள், அவன் முறைத்த முறைப்பில் பொத்தெனத் தலையைத் தொங்க போட்டவள், "ஏய் என்னடி இது?? இந்த மனுஷன் இப்படி முறைக்கிறாரு... இவரு பாக்குற பார்வையில ஒரு முட்டையை வச்சா தன்னால பொரிஞ்சு கோழிகுஞ்சு வெளிய வந்துடும் போல..." என்று ராஷ்மி காதை கடித்தவள், ஜீவா அருகில் இருந்த விஷ்ணுவை பார்க்க, அவன் கண்களும் வாட்டர்ஹீட்டர் போல் கொதித்துக் கொண்டிருந்தது. "ஏய் ராஷ்மி… ஜீவா முறைக்கிறா

அழகிய தமிழ் மகள் 13

  அழகி 13 மறுநாள் காலை, ஜீவா, யுக்தா இருந்த அறையில் இருந்து வெளியே வந்தவன், "ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாரும் வெப்பன்ஸ்சோட கிளம்புங்க… அந்த எருமை கண்ணு முழிச்சிடுச்சு… அட்டாக் பண்ண ரெடி ஆகுங்க…" என்று சொன்னது தான் தாமதம் மொத்த குடும்பமும் யுக்தா இருந்த அறைக்கு விரைந்தது. யுக்தா கலைந்த ஒவியமாய்க் கட்டிலில் சாய்ந்தபடி உட்கார்ந்திருக்க, அவள் அடிபட்ட தோள்பட்டையின் கையைத் தொட்டில் கட்டி தொங்க விட்டிருந்தான் ஜீவா. யுக்தாவின் அம்மா, அப்பாவிற்கு இரண்டு வருடம் கழித்து மகளைத் திரும்பப் பார்த்ததில் சந்தோஷப்படுவதா, இல்லை குண்டடிப்பட்டு ஹாஸ்பிடலில் இருப்பதை நினைத்துக் கண்ணீர் விடுவதா என்று புரியவில்லை. ராமின் அப்பா சுந்தரம் யுக்தா தலையைத் தடவிய படி அவள் அடிபட்ட தோளையே வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தார். இவர்கள் இப்படி என்றால் ஜீவா அம்மா கோதையும், வினய் அம்மா சாருமதியும் அழுவதை நிறுத்தவே இல்லை.  "எந்தப் பாவிபய, என் புள்ளையைச் சுட்டானோ அவன் கையில கட்ட முளைக்க…" என்று ஊரில் உள்ள சாமிகள் பேரை சொல்லி சொல்லி சாபமிட்டார். "அதுக்கு இவளை சுட்டவங்க உயிரோட இருந்தா தானே மாம்மீஸ்... அவங்க எ

அழகிய தமிழ் மகள் 12

  அழகி 12 ராஜீயிடம் இருந்து ஃபோன் வந்த அடுத்த நொடி யுக்தாவும், நிஷாவும் ராஜீ வீட்டிற்கு விரைந்தனர். புல்லட்டில் இருந்து இறங்கிய யுக்தாவை தாவி வந்து அணைத்துக் கொண்ட ராஜீ, "யுகி… யுகி... அப்பா… அப்பா…" என்று கதறி அழுக, யுக்தா ராஜீயை தோளோடு சேர்த்து அணைக்க, நிஷா ராஜீ முதுகை ஆதரவாகத் தடவிக் கொண்டிருந்தாள். "அப்பாக்கு தீடிர்னு என்ன ஆச்சு ராஜீ??" என்ற யுக்தாவை இன்னும் இறுக்கி அணைத்தவள், "அப்பா சூசைட் பண்ணிக்கிட்டாரு யுகி… என்னைவிட்டு போய்டாரு யுகி… எனக்கு இனி யார் இருக்கா?" என்று மீண்டும் கதறி அழ, தந்தையை இழந்து தவிக்கும் மகளுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று புரியாமல் தோழிகள் இருவரும் தவித்து நின்றனர். யுக்தா மெதுவாக ராஜீயை வீட்டிற்குள் அழைத்துச் செல்ல, அங்கிருந்த போலிஸ் கான்ஸ்டேபிளுக்கு யுக்தா, ராமின் தங்கை என்று தெரிந்ததால் அவளும், நிஷாவும் ராஜீயுடன் உள்ளே செல்வதைத் அவர் தடுக்கவில்லை. வீட்டிற்கு உள்ளே சென்ற நிஷாவும், யுக்தாவும் ஹாலின் ஒரு ஓரம் தரையில், வாயில் ரத்தம் வடிய, உடல் முழுவதும் நீலம் பாய்ந்து, கண்கள் வெளியே வந்து கொடூரமாக இறந்து கிடந்த டாக்டர்.வினோத்தின்

அழகிய தமிழ் மகள் 11

  அழகி 11 யுக்தா அந்தப் பெண்களின் கேஸில் செய்ததை ராம் சொல்லக் கேட்ட ஆதித், ஒரு மிரட்சியோடு யுக்தா இருந்த அறையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஐபிஎஸ் முடித்துப் பதவியேற்ற இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூடக் குற்றவாளியை உயிரோடு பிடித்ததே இல்லை. ‘தப்பு செஞ்ச நாய்களுக்கு ஜெயில் தண்டனை பத்தாது... அவனுங்களைப் புடிச்ச உடனே சுட்டு தள்ளணும்…’ என்ற கொள்கை கொண்டவன் ஆதித். அவன் துப்பாக்கியால் எமலோக பதவி அடைந்தவர்கள் பல பேர். அவனின் இந்தப் பழக்கத்தை ராமே பல முறை கண்டித்திருக்கிறான். ஆனால் ஆதித் மாறவே இல்லை.  கூர்க் அனுப்பும் போது கூட அநாவசியமாக யார் மீதும் கை வைக்கக் கூடாது, முக்கியமாக யாரையும் கொல்லக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லி தான் ராம் ஆதித்தை கூர்க்கிற்கு அனுப்பி வைத்தான். ஆதித்திற்குத் தப்புச் செய்தவர்களைக் கொல்வதென்பது பெரிய விஷயம் இல்லை தான். ஆனால் இந்தக் கேஸ்சில் யுக்தாவின் செயல் முறை ஆதித்தையே சற்று வியக்க வைத்தது உண்மை தான். இதுவரை ராம், யுக்தா பற்றிச் சொல்ல சொல்ல ஆசையோடும், ஆர்வத்தோடும் கேட்டுக் கொண்டிருந்த ஆதித்திற்கு, ஏனோ யுக்தாவின் கல்யாணம் செய்தி மட்டும் அவ்வளவு தித்திப்பாக இல்