Posts

Showing posts from August, 2022

ஆழியின் ஆதவன் 24

  ஆழி 24 ஒரு மரத்தின் அருகில் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி சைத்ரா விசும்பிக் கொண்டிருக்க, "இங்க நின்னுட்டு என்னடி பண்ற?" என்ற முகிலின் குரல் பின்னால் கேட்க, கோவமாக திரும்பியவள், "நான் என்னமோ பண்றேன், உனக்கென்ன வந்தது‌ அதை ஏன் நீ கேக்குற?" "நீ என் வருங்காலப் பொண்டாட்டி, உன்னை நான் கேக்காம வேற எவன்டி கேட்பான்." "அதான் என்னை கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டீயே… அப்புறம் என்னவாம்" என்று அவள் திருப்பி நின்று கொள்ள, அவள் குழந்தைத்தனத்தை உள்ளுக்குள் வெகுவாக ரசித்த முகில், "சரி.. நான் தான் அப்ப கட்டிக்க மாட்டேன்னு சொன்னேன். இப்ப நானே சொல்றேன் உன்னை தான் கட்டிக்குவேன்" என்றவன் திரும்பி பார்த்த சைத்ராவை முகிலை இழுத்து அணைத்துக் கொண்டான். சைத்ரா அவன் தோளில் முகம் புதைக்க, அவளின் ஆனந்தக் கண்ணீர் அவன் சட்டையை நனைத்தது. "என்னை கட்டிப்பீங்களா?" என்று அவள் கேட்க, "ஓய் வாயாடி இப்ப உன்னை கட்டிட்டு தானடி இருக்கேன்.?" என்று அவள் காதை உரசியபடி அவன் சொல்ல, லேசாக உடலை நெளித்த சைத்ரா, "நான் இந்த கட்டிக்கிறதை சொல்லல" என்று சினுங

ஆழியின் ஆதவன் 23

Image
  ஆழி 23 மீரா சொன்னதை கேட்டு ஆழி கண்கலங்க அமர்ந்திருந்தாள். "ஏன் ஆழி கொஞ்ச நாள் பழகுன சைத்துவையே இவ்ளோ புரிஞ்சு வச்சிருக்க ஆதவ்க்கு, இவ்ளோ நாளா கூடவே இருக்க உன் மனசு‌ புரியாம‌ இருக்கும்னு நீ நினைக்குறீயா, ஐ மீன் உன் மனசுல அவர் தான் இருக்காருன்னு‌ அவருக்கு தெரியாமயா இருக்கும்?" "மீரா ப்ளீஸ் இத பத்தி நம்ம ஏற்கனவே பேசிட்டோம். என் மனசுல அவர் இல்ல, அவர் மட்டும் இல்ல அங்க யாரும் இல்ல… இன் ஃபேக்ட் எனக்கு மனசுன்னு ஒன்னு இல்லவே இல்ல. அது எப்பவோ செத்துப் போச்சு." "ம்ம்ம் அப்படியா ஆழி… உன்‌ மனசு செத்துப் போச்சு சரி… ஆனா, செத்த அந்த மனசுக்கு நிலாவையும் ஆதவ் சாரையும் பாக்கும்போது மட்டும் உயிர் வந்து வந்து போகுது போலயே…" "ப்ளீஸ் மீரா… இந்த டாப்பிக் வேணாம். நான் என் முடிவை ஏற்கனவே சொல்லிட்டேன். இனிமே அதைப் பத்தி பேச ஒன்னும்‌ இல்ல" "அஃப்கோர்ஸ் அழி‌… நீ உன் முடிவை ஏற்கனவே சொல்லிட்ட தான். பட், அது ஆதவ்வும் நிலாவும் உன் வாழ்க்கையில வர்றதுக்கு முன்னாடி…" "சோ வாட்… அவங்க வந்ததுனால மட்டும் என் முடிவு‌ மாறிடாது" "அது எனக்கும் தெரியும் ஆழி. ஆனா,

ஆழியின் ஆதவன் 22

Image
  ஆழி 22 இங்கு வீட்டில் உறக்கத்திலிருந்து எழுந்த சைத்ரா, "ஆழி… ஆழி" என்றழைக்க, "அவ இங்க இல்ல, அவ ஆதவ் கூட அப்பவே போய்ட்டா" என்ற குரலில் கட்டிலில் இருந்து சட்டென இறங்கியவள், வெளியே வந்தாள். அங்கு ஃபோனை பார்த்தபடி அமர்ந்திருந்த முகிலை பாத்தவள், "நீங்க இங்க என்ன பண்றீங்க? மீரா எங்க?" என்றவள்‌, "மீரா… மீரா" என்று கத்த, "மீராவும் வீட்ல இல்ல. வெளிய போய் இருக்கா" என்றதும் சைத்ரா பட்டென திரும்பி முகிலை பார்க்க, அவன் கவனம் முழுவதும் ஃபோனிலேயே இருந்தது. சைத்ராவுக்கு ஏதோ வித்தியாசமாக தெரிய, முகில் எதிரில் அமர்ந்து அவனையே உற்றுப் பார்க்க, அவனும் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். "ஓய் என்ன வேணும் உனக்கு? எதுக்கு இப்டி குறுகுறுன்னு என்னையே பாத்துட்டு இருக்க நீ? எதாவது வேணுமா? என்றவன், "ஓஓஓ உனக்குப் பசிக்குமில்ல..‌. அதுக்காக என்னை ஏன் இப்படி வச்ச கண்ணு வாங்காம பாத்தா எப்படி சைத்து? என்னை எல்லாம் திங்க முடியாதும்மா. இரு நான் போய் உனக்கு எதாவது எடுத்துட்டு வரேன்" என்றவனை முறைத்த சைத்ரா, "இங்க என்ன நடக்குது?" என்று சற்று கோபமாக கேட்க

ஆழியின் ஆதவன் 21

Image
  ஆழி 21 ஆதவ் நிமிர்த்து ஆழி முகத்தை பார்த்து, "யார் அவங்க? அப்ப இதெல்லாம் நீங்க தனிய செய்யல? உங்களுக்கு யாரோ உதவி செஞ்சிருக்காங்க இல்ல?" என்று கேட்க, ஆழி  ஆதவ்வை ஒரு நிமிடம் உற்று பார்த்தவள் தலையை குனிந்து கொள்ள, ஆதவனுக்கு உள்ளுக்குள்ள என்னவோ உறுத்தியது. "ஏன் ஆழி… நீங்க மூணு பேரும் தான் இவ்ளோ படிச்சிருக்கீங்களே, வேற ஏதாவது வேலை செஞ்சு கௌரவமா வாழ்ந்திருக்கலாமே?!"  என்ற விஷ்ணுவை பார்த்து விரக்தியாக சிரித்த மீரா, "படிப்பை கொடுத்த கடவுள், கூடவே கொஞ்சம் அழகையும் எங்களுக்கு சேர்த்து குடுத்து தப்பு பண்ணிட்டானே விஷ்ணு..‌. நாங்க என்ன பண்றது? ஏன் நீங்களே முதல் தடவை ஆழிய பாத்தப்போ அவளை பாத்து சொன்னீங்களே… நீ செம்ம அழகா, ஹாட்டா இருக்கன்னு… அந்த அழகு தான் எங்களை எங்கயும் நிம்மதியா வாழ விடல… வேலைக்குப் போற இடத்துல எல்லாம் எங்க உடம்புக்கு தான் விலை வச்சானுங்க… ஏற்கனவே சைத்ரா படக்கூடாதது எல்லாத்தையும் பட்டுட்டா, அதுல இருந்து அவளை வெளிய கொண்டு வரவே நாங்க ரொம்ப கஷ்டப் பட்டோம். மறுபடியும் ஏதாவது தப்பா நடந்தா அதை தாங்கும் சக்தி எங்களுக்கு இல்ல… சோ பேக் டு தி பெவிலியன் மாதிரி… அந்

ஆழியின் ஆதவன் 20

Image
  ஆழி 20 "ஏய் என்ன சொல்ற நீ!!? இவ்ளோ படிச்சிட்டு எதுக்கு நீங்க இந்த மாதிரி?" என்று அதிர்ந்த ஆதவுக்கு அடுத்து என்ன கேட்பது என்று தெரியவில்லை. "ம்ம்ம் படிச்சோம்… படிச்சிருக்கோம். அந்த படிப்பு எப்படி வந்ததுன்னு உங்களுக்குத் தெரியுமா? அத விடுங்க, நான் கொலைகாரின்னு உங்களுக்கு தெரியும். ஆனா, எந்த வயசுல, எந்த சூழ்நிலையில  நான் என்னோட முதல் கொலையை  செஞ்சேன்னு உங்களுக்கு தெரியுமா?" என்ற ஆழியின் நினைவுகள் பின்னோக்கி சென்றது. "எனக்கு பதிமூணு வயசு இருக்கும் போது, என்னோட அம்மா, அப்பா ரெண்டு பேரும் ஒரு அக்சிடென்ட்ல இறந்துட்டாங்க, சொந்த பந்தம்னு யாரும் இல்லாம இருந்த என்னை அக்கம் பக்கம் இருந்தவங்க, மும்பைல இருக்க ஒரு சின்ன அநாதை இல்லத்துல சேர்த்து விட்டாங்க, நான் அங்க சேர்ந்த ஆறு மாசம் கழிச்சு மீராவும் அங்க வந்து சேர்ந்தா. குடிக்க காசு குடுக்கலன்னு இவ அப்பன், இவ அம்மாவை குத்திக் கொன்னுட்டு ஜெயிலுக்கு போய்ட்டான். இவ இல்லத்துக்கு வந்துட்டா, அடுத்து கொஞ்ச நாள்  கழிச்சு சைத்ரா வந்தா, அவ அம்மா, அப்பா இறந்துட்டாங்க, அவ அம்மாவோட தம்பியால இவளை பாத்துக்க முடியலன்னு சொல்லி அங்க கொண்டு வ

ஆழியின் ஆதவன் 19

Image
  ஆழி 19 சுற்றி எங்கும் இருள் சூழ்ந்திருந்த அந்த இடத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட  நிலையில், குப்புற கிடந்தவனைப் பார்த்த ஆதவ், "உயிர் இருக்கா… இல்ல எடுத்துட்டீங்களா" என்று கிண்டலாகக் கேட்க, "அதெப்படி ஆதவ் சார்… நீங்க இல்லாமயா?, நீங்க வர கொஞ்சம் லேட் ஆச்சு... அதான் சும்மா கொஞ்சம் டச்சப் பண்ணிட்டு இருந்தோம். உயிர் இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கு சார்..." என்று சைத்ரா பவ்யமாக சொல்ல, "சைதன்யா வாய் பேசினது போதும்" என்று அதட்டியவள், "மீரா எல்லாம் ரெடியா?" என்ற ஆழி ஆதவை பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொள்ள, மீரா ஆழியை பார்த்து தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள். "ஆழி, விமலோட அப்பா பெரிய ஆள் ஆச்சே… அவனை எப்படி இவ்ளோ ஈசியா கடத்துனீங்க?" "நாங்க பெருசா ஒன்னும் பண்ணல முகில், ஜஸ்ட் சைலேஷ் நம்பர்ல இருந்து, அழகா ஒரு பொண்ணு இருக்கு, அது வேணும்னா தனியா வான்னு சும்மா ஒரு மெசேஜ் போட்டு, கூட ஆழியோட பிக் அனுப்பி வச்சேன். கெழட்டு ராஸ்கல், அடுத்த பத்து நிமிஷத்துல, எங்களுக்கு பெருசா வேலை எதுவும் வைக்காம அதுவே வந்து சிக்கிடுச்சு" "ஏன் மீரா, வேற

ஆழியின் ஆதவன் 18

Image
  ஆழி 18 ஆதவ் கோபமாக ஆழி அருகில் வந்தவன், யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் அவள் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட, அந்த அடியில் அனைவரும் அதிர்ந்து நிற்க, ஆழி மட்டும் கன்னத்தில் கைவைத்தபடி ஆதவ்வையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். "அறிவிருக்காடி உனக்கு… மனசுல என்ன உனக்குப் பெரிய வீரமங்கை வேலுநாச்சியார்னு நெனப்பா? யாரைக் கேட்டுடி அந்த நேரத்துல நீ அந்த இடத்துக்குப் போன? எதுக்குடி போன? இவ்ளோ வாய்கிழிய பேச தெரியுது, கொலைக்கு எல்லாம் பிளான் போட தெரியுது இல்ல? அந்த இடத்துல எவ்ளோ ஆபத்து இருக்குன்னு உனக்கு தெரியாது? நீ பாட்டுக்கு தனியா அந்த நேரத்துக்கு அந்த போயிருக்கீயே உனக்கு எவ்ளோ நெஞ்சு தைரியம்டி உனக்கு. அங்க உனக்கு ஏதாவது ஆகி இருந்தா நான் என்னடி பண்றது? சொல்லுடி என்ன பண்றது? ஏற்கனவே ஒருத்திய பறிகொடுத்துட்டு நாங்க தவிக்கிறது போதாதா? உனக்கும் ஏதாவது ஆச்சுன்னா என்னடி பண்றது... நீ போய்ட்டா நா…" என்றவனை ஆழி விழி உயர்த்திப் பார்க்க, "உனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நிலா என்னடி செய்யவா? அவள பத்தி ஒரு நிமிஷமாச்சு யோசிச்சியா நீ?" என்றவன் அவள் தலை முடியை கொத்தாகப் பிடித்துக்கொண