ஆழியின் ஆதவன் 21

 


ஆழி 21


ஆதவ் நிமிர்த்து ஆழி முகத்தை பார்த்து, "யார் அவங்க? அப்ப இதெல்லாம் நீங்க தனிய செய்யல? உங்களுக்கு யாரோ உதவி செஞ்சிருக்காங்க இல்ல?" என்று கேட்க,


ஆழி  ஆதவ்வை ஒரு நிமிடம் உற்று பார்த்தவள் தலையை குனிந்து கொள்ள, ஆதவனுக்கு உள்ளுக்குள்ள என்னவோ உறுத்தியது.


"ஏன் ஆழி… நீங்க மூணு பேரும் தான் இவ்ளோ படிச்சிருக்கீங்களே, வேற ஏதாவது வேலை செஞ்சு கௌரவமா வாழ்ந்திருக்கலாமே?!"  என்ற விஷ்ணுவை பார்த்து விரக்தியாக சிரித்த மீரா,


"படிப்பை கொடுத்த கடவுள், கூடவே கொஞ்சம் அழகையும் எங்களுக்கு சேர்த்து குடுத்து தப்பு பண்ணிட்டானே விஷ்ணு..‌. நாங்க என்ன பண்றது? ஏன் நீங்களே முதல் தடவை ஆழிய பாத்தப்போ அவளை பாத்து சொன்னீங்களே… நீ செம்ம அழகா, ஹாட்டா இருக்கன்னு… அந்த அழகு தான் எங்களை எங்கயும் நிம்மதியா வாழ விடல… வேலைக்குப் போற இடத்துல எல்லாம் எங்க உடம்புக்கு தான் விலை வச்சானுங்க… ஏற்கனவே சைத்ரா படக்கூடாதது எல்லாத்தையும் பட்டுட்டா, அதுல இருந்து அவளை வெளிய கொண்டு வரவே நாங்க ரொம்ப கஷ்டப் பட்டோம். மறுபடியும் ஏதாவது தப்பா நடந்தா அதை தாங்கும் சக்தி எங்களுக்கு இல்ல… சோ பேக் டு தி பெவிலியன் மாதிரி… அந்த ரவுடிக்காக செஞ்ச வேலையை,  நாங்க படிச்ச படிப்பை வச்சு இன்னும் ஹைடெக்கா எங்களுக்காக செய்ய ஆரம்பிச்சோம். அதுக்கு அப்புறம் கொலையே எங்க தொழில போய்டுச்சு…" 


"அப்படியே வாழ்க்கை போகும்போது தான், மறுபடியும் ஒரு வெளிச்சம் மாதிரி அந்த வாழ்க்கையில இருந்து எங்களை மாத்தி வெளிய கொண்டு வர எங்களை அந்த ரவுடி கேஸ்ல இருந்து காப்பாத்தி விட்டவங்க எங்களை பாத்தாங்க, எங்களுக்கு நிறைய ஹெல்ப் கூட செஞ்சாங்க, கரெக்டா அந்த நேரம் தான் ஆஷாவும் எங்க வாழ்க்கையில் வந்தா… அவளால நாங்க மாறினோம். இப்ப அவளுக்காகவே மறுபடியும் இதுக்குள்ள வந்துட்டோம். ஆனா, பல வருஷமா நாங்க தேடித் திரிந்த சைலேஷ்… இங்க இப்படி எங்க கையில சிக்குவான்னு நாங்க எதிர்பாக்கல..‌.  இன்னும் அந்த யுவ்ராஜ் மட்டும் தான் பாக்கி, அவனையும் முடிச்சிட்டா… ஒன்ஸ் பார் ஆல் எல்லாம் முடிஞ்சிடும்" என்ற ஆழியும் மீராவும் எழுந்து செல்ல, "உங்களுக்கு உதவி பண்ண அந்த பெர்சன் யாருன்னு சொல்லலயே?" என்ற ஆதவனுக்கு இடவலமாக தலையாட்டிவிட்டு அங்கேயிருந்து சென்றாள்.


வெகு நாட்களுக்குப் பிறகு அமைதியாக உறங்கும் சைத்ராவை கண்களில் நிறைத்துக்கொண்டு ஆதவுடன்‌ ஆழி கிளம்பினாள்.


நிலா தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு ஆழியை தேடி அழுவதாக வெண்மதி ஃபோன் செய்ய, ஆழி அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.


சைத்ரா அருகில் அமர்ந்திருந்த மீராவிடம், முகில் ஒரு நிமிடம் பேச வேண்டும் என்று அழைத்தான்.


"சொல்லுங்க முகில், என்ன விஷயம்?"


"எனக்கு சைத்துவை புடிச்சிருக்கு மீரா, எனக்கு அவளை கல்யாணம் கட்டி தாங்க" என்று கேட்க, மீரா திகைத்து நின்றாள்.


"முகில்…"


"நீ… நீங்க என்ன கேக்குறீங்கன்னு நல்லா புரிஞ்சு தான் கேக்குறீங்களா?" என்றாள்‌ அவன் சொன்னதை நம்ப முடியாமல்.


"நான் நல்லா புரிஞ்சு தான் கேக்குறேன். சைத்து சம்பந்தப்பட்ட எதையும் உன்கிட்ட இல்ல ஆழி கிட்ட தான் கேக்கணும். அதுதான் முறை. அதான் உன்கிட்ட பொண்ணு கேக்குறேன். நீ ஓகே சொன்னா, அடுத்து ஆழி கிட்ட பேசிட்டு, ஒரு நல்ல நாள் பாத்து கல்யாணத்த வச்சிக்கலாம். இப்ப நீ சொல்லு... எனக்கு அவளை கட்டித் தரியா?" என்றவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தாள் மீரா.


"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல முகில். இது… இதுல எங்க முடிவு முக்கியம் இல்ல. அதோ தூங்கிட்டு இருக்காளே அவ ஒத்துக்கணும். அவ சம்மதிச்சா எங்களுக்கு அதைவிட சந்தோஷம் வேற இல்ல"


"அதெல்லாம் அவ சம்மதிப்பா, அத நான் பாத்துக்குறேன். உனக்கு ஓகேவான்னு மட்டும் சொல்லு, அது போதும். அவ என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்காட்டி, ஆதவ் ஆழிக்கு சொன்னது தான். அவ என்னை கட்டிக்க வேணாம்… நான் அவளை கட்டிக்குறேன்" என்றவனை புரியாமல் பார்த்தாள் மீரா.


"என்ன சொல்றீங்க நீங்க? எனக்கு ஒன்னும் புரியல… ஆதவ் ஆழி பத்தி என்ன சொன்னாரு?"


"ம்ம்ம் நான் இப்ப சொன்னதை தான் சொன்னான். அது இப்ப முக்கியம் இல்ல, அது லவ்வர்ஸ் ப்ராப்ளம்,‌ அத அவங்க பாத்துப்பாங்க,‌ இப்ப நீ இங்கிருந்து கிளம்பு… எனக்கு அவ கிட்ட நிறைய பேசணும். நீ இருந்தா எங்களால ஃப்ரீயா பேச முடியாது. நீ கெளம்பு" என்று அவளை விரட்ட,


"என்ன பேசுற முகில் நீ? இந்த நிலையில நான் எப்படி அவளை தனியா விட்டுட்டு போறது… அதெல்லாம் முடியாது." என்றவளை‌ முறைத்தான் முகில்.


"ஹலோ அவ எங்க தனியா இருக்கா... அதான் அவ வருங்கால புருஷன் நான் குத்துக்கல்லாட்டம் இருக்கேனே… அப்புறம் என்ன? இனி வாழ்க்கை பூராவும் அவள நானும், என்னை அவளும் தான் பாத்துக்கணும். அதுக்கு இது ரிகர்சல்னு வச்சிக்க… நீ முதல்ல இங்கிருந்து கெளம்பு… டைம் வேஸ்ட் பண்ணாத…" என்று அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு விஷ்ணு அருகில் வந்து,


"டேய் நீ மீராவை கூட்டிட்டுப் போ… நான் சொல்ற வரை இந்தப் பக்கம் வரக்கூடாது" என்றவனை புரியாமல் பார்த்த விஷ்ணு,


"டேய்... என்னடா? என்னை எங்க போக சொல்ற நீ… அதுவும் மீராவை கூட்டிட்டு?"


"ம்ம்ம் அன்னைக்கு நீ சொன்னியே, அதை தான் செய்யப் போறேன், அதுக்கு நீங்க இங்க இருக்க கூடாது. அதுக்கு தான் சொல்றேன் எங்கயாவது போய் தொலைங்கன்னு… அப்புறம் நான் சொல்ற வரை இங்க வராதீங்க. கெட்- அவுட்" என்று இருவரையும் வெளியே விரட்டி விட்டு விட்டு கதவை சாற்றி விட்டு, வீட்டுக்குள் வந்தவன் உறங்கும் சைத்ரா முகத்தை பார்த்தபடி ஹாலில் அமர்ந்து கொண்டான்.


இங்கு விஷ்ணுவுக்கு முகில் சொன்னது புரியாவிட்டாலும் மீராவை தன்னோடு தனியாக வெளியே அனுப்பி வைப்பதற்காக மனதுக்குள்,' முகில் நீ வாழ்க!' என்று சொல்லிக்கொண்டான்.


விஷ்ணு மீராவை ஒரு ரெஸ்டாரண்டுக்கு அழைத்து வந்திருந்தான்.


அழகாய் தென்னை ஓலையில் சின்ன சின்ன குடில் போட்டு, அதில் மண்பாண்டங்களில் உணவு பரிமாறப்படுவதை வியந்து அவள் பார்த்துக் கொண்டிருக்க, மீராவின் கண்களில் விழுந்து இவன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.


"இந்த இடம் உனக்கு புடிச்சிருக்கா மீரா?" என்றவனை சிறு புன்னகையோடு பார்த்த மீரா, 


"ம்ம்ம் ஆமாங்க, இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு, நான் இதுமாதிரி குடில் எல்லாம் பாத்தது இல்ல. ஒரு மாதிரி மனசுக்கு இதமா இருக்கு இந்த இடம்"


"ஏன் மீரா நீ கிராமத்துக்கு எல்லாம் போனது இல்லயா?"


"இல்ல விஷ்ணு… நெறைய‌ கன்ட்ரிக்குப் போயிருக்கேன். பட், கிராமத்துல இருந்தது இல்ல… எங்களுது நாடோடி வாழ்க்கை. ஒரு இடத்தில் நிலைய இருக்க முடியாது. ஓடிட்டே இருக்க லைஃப். கிராமம் எல்லாம் அமைதியான அழகான வாழ்க்கை வாழத்தான். எங்களை மாதிரி ஆளுங்களுக்கு இல்ல."


"யூ டோன்ட் வொரி மீரா, என்னோட சொந்த ஊர் ஒரு அழகான கிராமம் தான். அங்க ஒரு வீடும் கொஞ்ச நிலமும் இருக்கு, கொஞ்சம் வயசானதுக்கு அப்புறம் நம்ம அங்கயே போய் செட்டில் ஆகிடலாம்" என்க, அந்த இடத்தை சுற்றி  வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மீரா, அவன் சொன்னதின் அர்த்தம் உணராமல், "ம்ம்ம் சரி" என்று தலையாட்டியவள் கண்கள் ஒரு நொடி  இப்படியும் அப்படியும் ஓட, திரும்பி விஷ்ணுவை பார்த்து,


"இப்ப நீங்க என்ன சொன்னீங்க?" என்று கேட்க, விஷ்ணு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு,


"அது வருங்கால திட்டம் தான் மீரா, இப்ப எதுக்கு அது... விடு. நீ முதல்ல எனக்கு இதை சொல்லு. ஏன் அந்த முகில் பையன் நம்ம ரெண்டு பேரையும் வீட்டுல இருந்து கழுத்தைப் புடிச்சு தள்ளாத குறையா வெளிய விரட்டி விட்டான். அப்படி அவனுக்கு தனியா அங்க என்ன வேலை?" என்று கேட்டதும் மீரா முகம் மலர்ந்தது.


"ஏய் மீரா உன் முக மாற்றத்தை பார்க்கும்போது ஏதோ நல்ல விஷயம்னு தோனுது, நான் சொல்றது சரியா?" என்றவனைப் பார்த்து வேக வேகமாக ஆமாம் என்று தலையாட்டிய‌ மீரா, முகில் அவளிடம் சொன்னதை எல்லாம் ஒரே மூச்சில் விஷ்ணுவிடம் சொல்லி முடிக்க, விஷ்ணு திகைத்து விட்டான்.


"அடப்பாவி... நான் சைத்து பத்தி சொல்லும்போது அவளை கட்டுனா, என் காதுக்கு காரியம் பண்ண வேண்டி வரும், ஆள விடுடா சாமின்னு டயலாக் எல்லாம் பேசிட்டு, இப்ப அஞ்சு நிமிஷத்துல பொண்ணு கேட்டு, நிச்சயம் பண்ணி, ரிகர்சல் பாக்குற அளவுக்கு போய்ட்டானா… அப்ப நான்தான் அவுட்டா? டேய் விஷ்ணு போற போக்கை பாத்தா, சீக்கிரமே ஆதவ் ஆழி, முகில் சைத்துக்கு பொறக்கப் போற பிள்ளைகளுக்கு, கிழக்குச் சீமையிலே படத்துல வர்ற விஜயகுமார் மாதிரி சீர்வரிசை தட்டு தூக்கிட்டு போகும் நாள் வெகு தொலைவில் இல்ல போலையே…" என்று சற்று சத்தமாகவே புலம்பியவன், "கடைசில கமிட் ஆக மாட்டேன்னு திரிஞ்சதுங்க எல்லாம் மிங்கிள் ஆயிடுச்சு, புடிச்ச பொண்ண எதிர்லையே வச்சிட்டு நான் மட்டும் சிங்கிளா இருக்கேன். என்ன கொடுமை மீரா இது" என்று புலம்பிக் கொண்டிருந்தவனை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா.


"விஷ்ணு உங்களுக்கு என்ன ஆச்சு?? என்னென்னவோ புலம்பிட்டு இருக்கீங்க. ஆதவ் ஆழி பத்தி வேற என்னமோ சொல்றீங்க, முகில் கூட அவங்களைப் பத்தி ஏதோ சொன்னாரு… என்ன அது?" என்றவளை முறைத்துப் பார்த்த விஷ்ணு,


"நான் ஆதவ், ஆழி பத்தி பொலம்புறது மட்டும் உன் காதுல விழுந்துச்சு, அதை சொல்லும் போது இடையில உன்னையும் என்னையும் பத்தி ஒன்னு சொன்னேனே அது உன் காதுல விழல அப்படித்தானே?" என்றதும் மீரா தலையை குனிந்து கொள்ள, விஷ்ணுக்கு அய்யோ என்றிருந்தது.


"நம்ம கொடைக்கானலில் இருக்கும் போது ஆதவ் ஆழிய அடிச்சிட்டு, வெறி நாய் மாதிரி கொலச்சிட்டு போனானே உனக்கு நினைவு இருக்கா?" என்று கேட்க,


"ம்ம்ம் ஆமா… ஞாபகம் இருக்கு. அன்னைக்கு அவர் விட்ட அறையில ஆழி கன்னத்துல இருந்த வீக்கம் குறைய ரெண்டு நாள் ஆச்சே… அதை எப்படி மறக்க முடியும்."


"ம்ம்ம் ஆமா… அவன் அப்படி பொண்ணுங்களை கை நீட்ற டைப் இல்ல. அப்படிப்பட்டவன் ஆழிய அடிச்சதும் எனக்குப் பெரிய ஷாக். அதான் சென்னை வந்தவுடனே, ஆதவ்வை தனியா கூப்டு பேசினோம். அப்ப தான் அவன் ஆழிய விரும்புறதா சொன்னான்" என்றவன் மீராவின் முகம் பார்க்க அவன் முகத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை.


"என்ன மீரா நான் விஷயத்தை சொன்னதும் நீ ஆச்சரியப்படுவன்னு பாத்தா… நீ ரொம்ப கேஷுவலா இருக்க? மொத்தத்தில் இந்த மேட்டர்ல உன்னோட ரியாக்ஷன் இவ்ளோ தானாம்மா...?!"


"ம்ஹூம்… அப்டி இல்ல விஷ்ணு, எனக்கு தெரியாத புது விஷயம் எதாவது சொன்னா ரியாக்ட் பண்ணலாம். பட், எனக்கு தான் ஆதவ் ஆழிய விரும்பும் விஷயம் ஏற்கனவே தெரியுமே, அன்னைக்கு அவர் விட்ட அறையே அவர் மனசை தெளிவா சொல்லிடுச்சு… அதான் அமைதியா இருந்தேன்."


"ம்ம்ம் கரெக்ட் தான். ஆதவ் ஆழிய விரும்புறேன்னு சொல்லும் போது எனக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு. என் தங்கச்சி இருந்த இடத்தில் இன்னொரு பொண்ணான்னு. பட், அதுக்காக காலம் முழுக்க ஆதவ்வும் நிலாவும் தனியாவே வாழ முடியாது இல்ல... அதான் என்னை நானே தேத்திக்கிட்டேன். அப்புறம் நீ அன்னைக்கு ஆழிய பத்தி சொன்னதையும் அவன்ட்ட சொன்னேன், அப்ப தான் அவன் அவ என்னை கட்டிக்காட்டி பரவாயில்ல, நான் அவளை கட்டிக்கிறேன்னு சொன்னான். அதை தான் முகிலும் உன்கிட்ட சொல்லி இருக்கான்" என்று சொல்லி சிரிக்க, அவனோடு சேர்ந்து மீராவும் சிரித்தாள்.


"எப்படியோ விஷ்ணு அவங்க ரெண்டு பேருக்கும் நல்லது நடந்தா எனக்கு சந்தோஷம் தான்" என்றவளை நிமிர்ந்து உற்றுப் பார்த்தவன், "அப்ப நீ?" என்று கேட்க, மீரா மீண்டும் தலையை குனிந்து கொண்டாள்.


"பதில் சொல்லு மீரா… அவங்க ரெண்டு பேரும் செட்டில் ஆகிடுவாங்க ஒகே. அப்ப நீ?" என்றவனை பார்த்து இதழ்களை பிதுக்கியவள், "தெரியல" என்றாள்.


"ம்ம்ம்ம் நல்ல பதில் தான். சரி சரி அந்த இல்லையை அப்படியே இல்லைனே வை. அவங்க நாலு பேரோட மேட்டர் முடிஞ்சதும் நான் அதை ஆமாம்னு ஆக்கிடுறேன்." என்றவனை புரியாமல் பார்த்த மீரா,


"இப்ப நீங்க என்ன சொன்னீங்க? எனக்கு ஒன்னுமே புரியல…" என்று முழிக்க,


"ம்க்கும் சொன்ன எனக்கே புரியல… அப்புறம் உனக்கு எங்க இருந்து வெளக்கி சொல்றது. அதெல்லாம் ஒரு ஃப்ளோல பேசுறது... அதுக்கெல்லாம் விளக்கம் சொல்ல முடியாது. வேணும்னா ஷார்ட்டா சொல்லட்டா?" என்றவனை பார்த்து மீரா தலையாட்ட,


"அதாவது ஆதவ் ஆழிய, முகில் சைத்துவை பிக்கப் பண்ற மாதிரி விஷ்ணுவுக்கு மீரான்னு பிக்கப் பண்ணப்போறேன். அதுவரை வேற‌ யார் பொண்ணு கேட்டாலும் இல்லைனு பதில் சொல்லு, எனக்கு மட்டும் ஆமா சொல்லுன்னு சொன்னேன். இப்ப வா இங்கிருந்து போலாம்" என்று எழுந்து கொள்ள, மீரா ஸ்லோமோஷனில் கண்களை சிமிட்டியபடி விஷ்ணுவை பார்த்துக்கொண்டிருந்தாள்.


"ஹலோ இனிமே காலம் முழுக்க நீ இந்த முகத்தை தான் பாக்க போற… இப்ப எழுந்து வா வேற எங்கயாவது போலாம்" என்றவன் அவள் கையை உரிமையாகப் பிடிக்க, அந்த அழுத்தம் அவள் மனதில் அவனை அழுத்தி பதித்தது.