கன்னத்தில் காதல் முத்தம் 3
காதல் 3 ஷிவானி வந்ததை கூட உணராமல் 'கார் பார்க்கிங்' தூணில் சாய்ந்தபடி பயத்தில் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவள் தோளைத் தொட்ட ஷிவானி, "ஆரா… ஏய் ஆரா, ஏன் இங்க உக்காந்துட்டு இருக்க?" என்று அவளை உலுக்கிய பின்பு நிகழ்வுக்கு வந்த ஆராத்யா, "ஷிவி" என்ற விசும்பியபடி பாய்ந்து சென்று தோழியைக் கட்டிக்கொண்டாள். தன் தோளில் முகம் புதைந்திருக்கும் தோழியின் தலையை பொதுவாக தடவிக்கொண்டே ஷிவானி மெல்ல திரும்பிப் பார்க்க, அங்கு அக்னி நின்றிருந்தான். ஷிவானி மெல்ல தலையை தூக்கி என்ன? என்பது போல் கேட்க, அக்னி கண்களை மூடித்திறந்தவன் அவளை சமாதானம் செய்யவும், பின் வேறு எதுவோ செய்யச் சொல்லி சமிக்ஞை செய்ய அதை புரிந்துகொண்டவள், "ஆரா… என்னாச்சு டா? இங்க பாரு நிமுந்து என்னை பாரு…" என்று அவள் கன்னத்தைப் பிடித்து அவள் முகத்தை உயர்த்தி பார்க்க, ஆராத்யாவின் கண்கள் இரண்டும் கலங்கி இருந்தது. "ஏய் ஆரா… என்னாச்சு? எதுக்கு அழற?" என்றவளை ஆராத்யா எதுவும் பேசாமல் மீண்டும் கட்டிக்கொள்ள, ஷிவானி மெல்ல அவளை அழைத்து வந்து காரில் அமரவைத்து, காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மெதுவாக, ...