ஆழியின் ஆதவன் 19

 


ஆழி 19


சுற்றி எங்கும் இருள் சூழ்ந்திருந்த அந்த இடத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட  நிலையில், குப்புற கிடந்தவனைப் பார்த்த ஆதவ், "உயிர் இருக்கா… இல்ல எடுத்துட்டீங்களா" என்று கிண்டலாகக் கேட்க,


"அதெப்படி ஆதவ் சார்… நீங்க இல்லாமயா?, நீங்க வர கொஞ்சம் லேட் ஆச்சு... அதான் சும்மா கொஞ்சம் டச்சப் பண்ணிட்டு இருந்தோம். உயிர் இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கு சார்..." என்று சைத்ரா பவ்யமாக சொல்ல,


"சைதன்யா வாய் பேசினது போதும்" என்று அதட்டியவள், "மீரா எல்லாம் ரெடியா?" என்ற ஆழி ஆதவை பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொள்ள, மீரா ஆழியை பார்த்து தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள்.


"ஆழி, விமலோட அப்பா பெரிய ஆள் ஆச்சே… அவனை எப்படி இவ்ளோ ஈசியா கடத்துனீங்க?"


"நாங்க பெருசா ஒன்னும் பண்ணல முகில், ஜஸ்ட் சைலேஷ் நம்பர்ல இருந்து, அழகா ஒரு பொண்ணு இருக்கு, அது வேணும்னா தனியா வான்னு சும்மா ஒரு மெசேஜ் போட்டு, கூட ஆழியோட பிக் அனுப்பி வச்சேன். கெழட்டு ராஸ்கல், அடுத்த பத்து நிமிஷத்துல, எங்களுக்கு பெருசா வேலை எதுவும் வைக்காம

அதுவே வந்து சிக்கிடுச்சு"


"ஏன் மீரா, வேற‌ எதாவது பொண்ணு ஃபோட்டோ அனுப்ப வேண்டியது தான… எதுக்கு ஆழி பிக் அனுப்பின…" என்ற ஆதவ் யாருக்கும் கேட்காத குரலில், "இவ ஃபோட்டோ பாத்தா யாருக்கு தான் ஆச வராது. எதுக்கு கண்ட கண்ட நாய்ங்க எல்லாம் இவ ஃபோட்டோவ பாக்கணும்" என்று‌ பல்லைக் கடித்தான்.


"அவ தான் ஆதவ் சார் அனுப்ப‌ சொன்னா" என்று மீரா சொல்ல, ஆழி ஆவியாகும் அளவுக்கு தீயாக அவளை முறைத்தான் ஆதவ் .


"சரி அந்த சைலேஷ் எங்க? அவனையும் இவனோட‌ சேர்த்து தான் வச்சிருக்கேன்னு சொன்னீங்க, எங்க அவன்?" என்றதும் ஆழி, மீரா முகம் சட்டென ரௌத்திரமாக மாறியது.


"அவனுக்கு உள்ள ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருக்கு விஷ்ணு, முடிஞ்சதும் இங்க வருவான்" என்ற ஆழி குரலில் சொல்ல முடியாத ஒருவித வலி அது மூவருக்கும் புரிந்தது.


"ஆமா சைத்ரா எங்க?"


"ட்ரீட்மென்ட் குடுத்திட்டு இருக்கறது அவதான் முகில்" என்னும் போதே எதோ சத்தம் கேட்க, அனைவரும் திரும்பிப் பார்க்க, அங்கு இறுகிய முகத்துடன் சைத்ரா, கிழிந்த நாராக இருந்த சைலேஷின் சட்டை காலரைப் பிடித்து கஷ்டப்பட்டு அவனை இழுத்துக்கொண்டு வந்து விமலின் அப்பாவின் அருகில் போட்டவள், மெதுவாகச் சென்று அங்கிருந்த சேரில் அமர்ந்து விட்டாள்.


அந்த நேரம் சைத்ரா முகத்தைப் பார்த்த அனைவருக்குமே ‌மனதில் இனம்புரியாத ஒரு பயம் பரவியது. இது உண்மையில் இத்தனை நாள் அவர்கள் பார்த்து பழகிய அவர்கள் தோழி சைத்ரா தானா என்று சந்தேகம் கூட வந்தது.


சைத்ரா அருகில் வந்த ஆழியும், மீராவும் அவள் தலையை மெதுவாக வருட, நிமிர்ந்து இருவர் முகத்தையும் பார்த்தவள், கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, அடிநெஞ்சில் இருந்து கதறியபடி இருவரையும் அணைத்துக் கொண்டாள்.


ஆழி சைலேஷ் அருகில் வந்து, "உன்னை தூக்கின இத்தனை நாள்ல நாங்க கிரிமினல்னு உனக்கு தெரிஞ்சிருக்கும். இப்ப உனக்கு தெரியாத ஒரு உண்மை நான் சொல்லவா… எங்களை கிரிமினல் ஆக்குனதே நீதான்டா‌ பொறுக்கி" என்று கத்திய ஆழி அவன்‌ கை நரம்பை வெட்டிவிட, சைலேஷ் வலியில் கதறி துடிப்பதை பார்த்த சைத்ரா முகத்தில் லேசான புன்னகை மலர்ந்தது.


"எங்கள யாருனு தெரியுதா? என்று கேட்ட ஆழியை, நிமிர்ந்து பார்க்க கூட பலம் இல்லாமல், கையை பிடித்துக் கொண்டு வலியில் இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினான் சைலேஷ்.


"ம்ம்ம் எப்படி ஞாபகம் இருக்கும். நீ நாசம் பண்ண பொண்ணுங்க லிஸ்ட் தான் சீனப் பெருஞ்சுவர் மாதிரி நீளமாச்சே, அதுல நாங்க யாருன்னு எப்படி உனக்கு தெரியும். சரி என்னை தான் தெரியல, அவளையாது தெரியுதா பாரு," என்று கல்லாக அமர்ந்திருந்த சைத்ராவை கை காட்ட, சைலேஷ் நிமிர்ந்து அவளைப் பார்த்துவிட்டு, "தெரியல" என்றான்.


"பாத்து பல வருஷம் ஆகிடுச்சு இல்ல, முகம் மறந்திருக்கும்… ம்ம்ம் சரி… அவ பேர சொல்றேன், அப்பவாது தெரியுதான்னு பாரு… அவ பேரு சைத்ரா" என்க, சைலேஷ் சட்டென நிமிர்ந்து சைத்ரா முகம் பார்க்க, அவள் கண்களில் கொலைவெறியோடு சைலேஷை பார்த்துக் கொண்டிருந்தாள்.


எச்சிலை விழுங்கியபடி, "அப்… அப்ப… நீங்க… நீ?" என்று மரணபயத்துடன் ஆழியை பார்த்து கேட்க,


"கரெக்ட் நீ நினைக்குறது சரிதான். நான் தான்… நானே தான். ஆழினி… உன்னோட எமன். அன்னைக்கு நீ என் கையில இருந்து தப்பிச்சிட்ட, அன்னைக்கே உன்னையும் கொன்னிருந்தா, உன்னால இன்னைக்கு இத்தனை பொண்ணுங்க உயிர் போயிருக்காது. தப்பு பண்ணிட்டேன்… அந்த தப்ப இன்னைக்கு சரி பண்ணப்போறேன். நல்லா இருந்த எங்க வாழ்க்கை பாதைய மாத்துனது நீதான்டா. இன்னைக்கு இந்த இடத்துல நாங்க இருக்க முழுக் காரணமும் நீதான்... அதுக்கு நாங்க உனக்கு பரிசு தரவேணாம்" என்றவள் பார்வையே சைலேஷுக்கு உணர்த்தியது அவள் அவனுக்கு நரகத்தை காட்டப்போகிறாள் என்று.



ஆழி முகில், விஷ்ணுவை பார்த்து, "இதுங்க ரெண்டையும் பில்டிங் பேஸ்மென்ட்க்கு தூக்கிட்டு வாங்க" என்றவள் சைத்ராவை பார்க்க, அவள் கீழே உட்கார்ந்து எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.


ஆழியும், மீராவும் சைத்ரா அருகில் சென்று அவள் தோளில் கைவைக்க, அவள் நிமிர்ந்து இருவரின் முகத்தையும் பார்க்க, "எழுந்துவா சைத்து… உன்னோட கணக்கை தீர்க்கும் நேரம் வந்துடுச்சு… வா" என்றதும் சைத்ரா கீ கொடுத்த பொம்மை போல் எழுந்து, ஆழி தோளில் சாய்ந்தபடியே செல்ல, எப்போதும் துறுதுறுவென வாய் பேசிக்கொண்டு, பட்டாம்பூச்சி போல் திரியும் சைத்ராவை இப்படி மழையில் நனைந்து, கலைந்த வண்ணக் கோலம் போல் இருப்பதைக் கண்ட ஆண்கள் மூவருக்கும் மனதுக்கு என்னவோ போல் இருந்தது.


ஆறு பேரும்  பேஸ்மென்ட் சென்றனர்.


அங்கு ஒரு பெரிய கண்ணாடி தொட்டி இருக்க, அதனுடன் ஒரு பெரிய பைப் இணைக்கப்பட்டு அதன் முனையில் ஒரு வால்வ்வும் இருந்தது.


ஆழி, "விஷ்ணு, முகில் அங்க இருக்க இரும்பு சங்கிலில இவனுங்க ரெண்டு பேரையும் கட்டுங்க" என்றதும், 


"ம்ம்ம் ஓகே ஆழி" என்று இருவரையும் ஆழி சொன்னது போல் அந்த இரும்பு சங்கிலியில் இணைத்துக் கட்டினர் முகிலும் விஷ்ணுவும்.


மீரா, ஆழி தோளில் சாய்ந்திருந்த சைத்ரா கையில் ஒரு ரிமோட்டைக் கொடுத்து, "இன்னையோட எல்லாம் முடியட்டும் சைத்து. இந்தா புடி…" என்றாள்.


சைத்ரா ஆழி முகத்தைப் பார்க்க, அவள் கண்களை மூடித்திறக்க, சைத்ரா அந்த ரிமோட்டில் இருந்த‌ ஒரு பட்டனை அழுத்த… அந்த இருவரையும் கட்டி இருந்த சங்கிலி இழுக்கத்தொடங்க, அவர்கள் அந்த கண்ணாடி தொட்டிக்குள் மெல்ல மெல்ல இறங்கி நின்றனர். பின் அவர்கள் மேல் தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.


"என்ன ஆழி… இவங்களை மூச்சு முட்டவச்சு கொல்லப்போறீயா?" என்று விஷ்ணு கேட்க, 


"அதுக்கு வாய்ப்பில்ல விஷ்ணு… விமலுக்கே அப்படி ஒரு சாவை குடுத்தவ இவ… இவனுங்களை இவ்ளோ ஈசியா சாகவிட மாட்டா… அதோட சைத்ரா முகத்தை பாக்கும்போதே தெரியுது. இதுல வேற ஏதோ இருக்குன்னு. சோ கண்டிப்பா இவனுங்க சாவு, விமலை விடக் கொடுமையா தான் இருக்கும்" என்ற ஆதவ்வை ஒரு நிமிடம் ஆழமாகப் பார்த்தாள் ஆழினி.


"ஏய் ஆழி... சைத்ரா ஏன் இப்படி இருக்கா? எனக்கு அவள இப்படி பாக்க ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு… என்னாச்சு இவளுக்கு?" என்ற முகில் குரலில் சைத்ராவுக்கான உண்மையான வருத்தம் தெரிய, சைத்ரா திரும்பி முகிலை வெறுமையாக பார்த்தாள்.


"இப்ப ஒன்னும் கேக்காத முகில்… இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாம் முடிஞ்சிடும். அதுக்கு அப்புறம் எங்களுக்கு எங்க பழைய‌ சைத்ரா நிரந்தரமா கெடச்சிடுவா" என்ற ஆழி, "சைத்து ம்ம்ம், உன் கணக்கை முடி" எனும் போதே, அந்த தொட்டியில் இருந்த தண்ணீர், சைலேஷ் மற்றும் விமல் தந்தையின் கழுத்து வரை வந்திருந்தது.


சைத்ரா ரிமோட்டில் இன்னொரு பட்டனை அழுத்த, தண்ணீர் நின்றது. சைத்ரா அந்த தொட்டி அருகில் சென்று சைலேஷை குரோதத்தோடு பார்த்தவள், 


"அன்னைக்கு நான் அனு அனுவா துடிச்சதை நீ பாத்து ரசிச்சிட்டு இருந்த மாதிரி, இன்னைக்கு நீ அனு அனுவா சாகுறதை நான் ரசிச்சுப் பாக்கப்போறேன்டா." என்றவள் இன்னொரு பட்டனை அழுத்த, அந்த தொட்டிக்கு மேல் இருந்த பெரிய பைப் திறந்துக்கொள்ள, அதில் இருந்து எண்ணற்ற குட்டி குட்டி மீன்கள் அந்த தொட்டியில் கொட்டியது.


அதைப் பார்த்து அதிர்ந்த ஆதவ், "ஆழி இது?! இந்த மீன் எல்லாம்…!" என்று அதிர்ச்சியில் ஆழி முகம் பார்க்க, அவள்‌ அந்த தொட்டியில் இருந்த தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பு நிறமாக மாறுவதை ஒரு நிறைவோடு பார்த்துக்கொண்டிருந்தாள். 


"எஸ் ஆதவ். நீங்க நினைக்குறது சரிதான். இது பிரானா ஃபிஷ் தான். கொஞ்சம் கொஞ்சமா இவனுங்க உடம்பை அது கடிச்சு முழுசா தின்னு முடிக்க, இன்னும் எப்படியும் கொஞ்ச நேரம் ஆகும். அதுக்காக தான் சின்ன சின்ன மீனா பாத்து பாத்து வர வச்சேன். இன்னும் கொஞ்ச நேரத்துல இவனுங்க எலும்பு மட்டும் இந்த தொட்டில மிதக்கும்." என்றவள் குரலில் இருந்த வன்மம் ஆதவுக்கு புதிது.


பிரானா மீன்களின் தாக்குதலில் வலி தாங்கமுடியாமல் சைலேஷ் கத்திய சத்தம், சைத்ராவுக்கு மனநிறைவை தர, அவள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மலர ஆரம்பித்தது. அடுத்த சில நிமிடங்களில் அந்த தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதும் ரத்தமாக மாறி இருக்க, சைலேஷ், மற்றும் விமல் அப்பனின் எலும்புகள் மட்டுமே மிச்சம் இருந்தது. 


மீரா அங்கிருந்த ஒரு லிவர்ரை பிடித்து இழுக்க, அடுத்த நிமிடம் அந்த தொட்டியில் இருந்த நீரோடு, மீன்களும் மீதி இருந்த எலும்புகளும் இருந்த இடம் தெரியாமல் எங்கோ ஓடி மறைந்தது.


வெகு நாட்களுக்குப் பிறகு, தெளிந்த முகமாக நிம்மதியாக உறங்கும் சைத்ராவை பார்த்த ஆழி, மீரா இருவரின் மனதிலும் அப்படி ஒரு நிறைவு.


"இப்பவாது சொல்லு ஆழி… சைத்ராக்கு என்ன ஆச்சு? எப்பவும் சுட்டித்தனமா சுத்திட்டு இருக்க பொண்ணை இப்படி பாக்கவே மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு…"


"ம்ம்ம்… உங்க மூணு பேருக்கும் அவளை கொஞ்ச நாளா தான் பழக்கம், உங்களுக்கே அவளை இப்படிப் பாக்க கஷ்டமா இருக்குன்னா, இதுதான் அவளோட நிஜம்னு தெரிஞ்ச எங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும் விஷ்ணு" என்றவளை புரியாமல் பார்த்தான் விஷ்ணு.


"நீ சொல்றது எனக்குப் புரியல ஆழி" என்ற விஷ்ணுவை பார்த்து இழுத்து மூச்சு விட்ட ஆழி,


"புரியாது விஷ்ணு… எங்களை பத்தி எங்களுக்கே இன்னும் புரியாம‌ இருக்கும் போது உங்களுக்கு என்ன சொல்லி புரிய வைக்குறது?"


"ஏன் ஆழி ஒரு மாதிரி பேசுற? நாங்க உன்னை இப்படி உடஞ்சு போய் பாத்ததே இல்லயே. எப்பவும் தைரியமா கெத்தா இருக்க ஆழியா இப்படிப் பேசுறது… என்னதான் ஆச்சு ஆழி உங்களுக்கு?" 


"ம்ஹூம் தைரியம்..." என்று அசட்டையாக சிரித்த ஆழி, நாங்க மூணு பேரும் தைரியசாலி எல்லாம் இல்ல முகில். ரொம்ப… ரொம்ப ரொம்ப சாதாரணமான உலகம் தெரியாத சின்னப் பொண்ணுங்களா, அடுத்த வேளை சாப்பிட்டு, எங்க எதிர்காலத்துக்கு, படிப்புக்காக போராடிட்டு இருந்தவங்க நாங்க. ஒரு நாள்… ஒரே ஒரு நாள், எங்க மூணு பேர் வாழ்க்கையையும் அப்படியே புரட்டிப் போட்டுச்சு முகில். நாங்க கடைசியா சிரிச்சதும் அன்னைக்கு தான். அதுக்குப் பிறகு, எங்களுக்கு சிரிக்கிறது எப்படினே மறந்து போச்சு" என்றவள் குரலில் அப்படி ஒரு வெறுமை.


"ப்ளீஸ் ஆழி தேவையில்லாம எதையும் நெனச்சு இப்படி ஃபீல் பண்ணாத… நடந்ததை நினைச்சு இப்ப வருத்தப்பட்டு ஒன்னும் ஆகப்போறது இல்ல… நீங்க மூணு பேர் மட்டும் நல்லா படிச்சிருந்தா, ஒரு நல்ல வேலையில இருந்து, நல்லபடியா வாழ்ந்திருக்கலாம்" என்ற விஷ்ணுவை நிமிர்ந்து பார்த்து இதழோரமாகச் சிரித்தவள்,


"சைத்ரா பி.டெக். மீரா  கெமிக்கல் இன்ஜினியர். ஆழினி  மெக்கானிக்கல் இன்ஜீனியர்" என்றதும்  ஆண்கள் மூவருக்கும் பேச்சோடு மூச்சும் ஒரு நிமிடம் நின்றுவிட்டது.