ஆழியின் ஆதவன் 13

 


ஆழியின் ஆதவன் 13


முழுதாக ஒரு மணி நேரம் கழித்து,


"இதுதான் நாங்க… நாங்க நல்லவங்கனு சொல்ல மாட்டோம். பட், இதுவரை எந்த நல்ல மனுஷனுக்கும் நாங்க கெட்டது செஞ்சது கிடையாது. அதுதான் உன் விஷயத்திலும் செஞ்சோம். நீ பாக்க அப்பாவியா தெரிஞ்ச… உன்னை எப்படியோ போன்னு எங்களால விட முடியல. அதான் உன்னை நாங்க காப்பதினோம். உன்னை இங்க நிறைய பேர் கொல்ல தேடிட்டு இருக்காங்க, அசைன்மென்ட் எங்களுக்கு வந்திருக்குன்னா கண்டிப்பா இதுக்கு பின்னாடி இருக்குறது பெரிய பிக் ஷாட்டா தான் இருக்கணும். சோ உன் உயிருக்கு இப்பவும் ஆபத்து இருக்கு" என்ற ஆழி ஆஷா முகம் பார்க்க, ஆஷாவின் முகம் பயத்தில் வெளிறிப் போனது.


"இங்க பாரு, நீ பயந்து இங்க ஒன்னும் ஆக போறது இல்ல. நீ உன்னை பத்தி எதாவது சொன்னா தான் எங்களால உனக்கு ஏதாவது செய்ய முடியுமான்னு பாக்க முடியும். இந்த சூழ்நிலையில உனக்கு எங்களை விட்டா இங்க யாரும் இல்ல, சோ ப்ளீஸ் ஏதாவது சொல்லு" என்று மீரா அக்கறையாக கேட்க, அவளை நிமிர்ந்து பார்த்த ஆஷா,


"என் பேரு ஆஷா, ஊரு சென்னை" என்று தன்னை பற்றி தேவையான தகவல்களை மட்டும் சொன்னாள்.


"சரி... நீ இங்க டெல்லிக்கு எதுக்கு வந்த? யார் உன்னை கொல்ல ட்ரை பண்றான்னு உனக்கு தெரியுமா?" என்று சைத்ரா கேட்க, ஆஷா ஒரு நிமிடம் கையை பிசைந்தபடி தயங்கி நின்றவள், பின் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "நான் இங்க வந்து பத்து நாள் ஆகுது. எனக்கு போட்டோகிராபி ரொம்ப பிடிக்கும். இங்க டெல்லில இருக்க இடங்களை ஃபோட்டோ எடுக்க தான் இங்க வந்தேன். என்னோட ஃப்ரண்ட் பிரியா வீட்ல தான் தங்கி இருந்தேன்." 


"ம்ம்ம் சரி இப்ப அந்த பிரியா எங்க?" என்ற சைத்ரா, "இரு‌ இரு… உன்னோட பேர் தான பிரியா? எங்களுக்கு உன் பேரு பிரியான்னு போட்டு, கூடவே உன் போட்டோவும் வந்துதே?"


"ம்ம்ம் ஆமா. என்னோட முழுப்பேர் ஆஷா பிரியதர்ஷினி, என்னோட ஃப்ரண்ட் பேரு பிரியங்கா" என்றாள்.


"ஒரு வேலை இவங்க ரெண்டு பேர் பேரும்  ஒன்னா இருக்கனால, குழப்பத்துல, அந்தப் பொண்ணுன்னு நெனச்சு இவளை எல்லாரும் டார்கெட் பண்றாங்களோன்னு எனக்கு தோணுது ஆழி" என்ற மீரா, "சரி இப்ப உன் ஃப்ரண்ட் எங்க?" என்று கேட்க, 


ஆஷா இடவலமாக தலையை ஆட்டி, "அவ இல்ல… அவளை கொன்னுட்டாங்க" என்று அழுதபடியே சொல்ல, பெண்கள் மூவரும் குழம்பிப் போயினர்.


ஆழி, "என்ன சொல்ற நீ? கொன்னுட்டாங்களா? யாரு? எதுக்கு?, அது சரி உன் ஃப்ரண்ட் யாரு? அவ என்ன பண்ணிட்டு இருந்தா?" 


"அவ ஒரு பிரைவேட் டிடெக்டிவ், ஒரு கேஸ்ல அவ அக்யூஸ்ட் யாருன்னு கண்டு புடிச்சிட்டா, அதுக்கான எல்லா எவிடென்ஸையும் ஒரு பென்டிரைவ்லயும், ஒரு மெமரி கார்டுலையும் போட்டு, பென்டிரைவ்வை அவ வச்சிட்டு, மெமரி கார்டை என்கிட்ட கொடுத்து வச்சா. அந்த அக்யூஸ்ட் பெரிய ஆளுன்னும், அவனால் அவ உயிருக்கு ஆபத்து வரும்னும் சொன்ன, அப்படி அவளுக்கு ஏதாவது நடந்தா என்கிட்ட இருக்க எவிடென்ஸ் வச்சு அவனுக்கு தண்டனை வாங்கி தரணும்னும், அதனால் என் உயிருக்கு கூட ஆபத்து வரலாம்னும் என்கிட்ட சொல்லிட்டு போனவ, செத்துட்டான்ற நியூஸ் தான் எனக்கு வந்தது. பிரியா செத்த அப்புறம் என்னையும் சிலபேர் வாட்ச் பண்ணிட்டு இருக்க மாதிரி எனக்கு தோணுச்சு ,உடனே அந்த வீட்டை விட்டுட்டு  பிரியாக்கு தெரிஞ்சவங்க வீட்டிக்கு போய் தங்கிட்டேன். இங்க இருக்குறது எனக்கு சேஃப் இல்லைனு, சென்னைக்கே போய்டலாம்னு  முடிவு பண்ணி கிளம்பும்போது தான் என்னை யாரோ கிட்நாப் பண்ணாங்க" என்று நடந்ததை அவள் சொல்லி முடிக்க, 


"அந்த மெமரி கார்டு இப்ப எங்க? உன்கிட்ட தான் இருக்கா? இல்ல?" என்று கேட்டாள் மீரா.


"இல்ல இல்ல. என்கிட்ட தான் இருக்கு" என்றவள் தன் செயின் லாக்கெட்டில் இருந்து அந்த சின்ன மெமரி கார்டை வெளியே எடுத்தாள்"


ஆழி ஏதோ யோசனையில் இருந்தாள்.


"இப்ப என்ன பண்றது ஆழி?" என்ற மீராவுக்கு,


"இதுல நம்மால ஒன்னும் பண்ண முடியாது மீரா. அந்த ஆள் யார்னு தெரிஞ்சு நமக்கு ஆகப்போறது ஒன்னும் இல்ல, அதுக்காக நம்ம போலீசுக்கும் போக முடியாது. இவளை தேடிட்டு இருக்கவன் பெரிய ஆள். சோ இதுல போஸீஸ் ஒன்னும் செய்ய மாட்டாங்க, அதோட எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்ற மாதிரி நம்மளே இவ இருக்க இடத்தை வெளிய சொன்ன மாதிரி ஆகிடும். நமக்கு இவ உயிர் தான் முக்கியம். அதோட போலீஸ் நாம யார்னு கேட்டா, நம்ம‌ என்ன சொல்றது?. வேற வினையே வேணாம்." 


"ம்ம்ம் நீ சொல்றதும் சரி தான். அப்ப இப்ப என்ன தான் பண்றது" என்ற சைத்ரா ஆஷாவை திரும்பிப் பார்த்து, "ஒன்னு செய்யலாம் ஆழி, இவ சொல்றதைப் பாத்தா, இவளை இங்க யாருக்கும் அதிகமா தெரிஞ்சிருக்க வாய்பில்ல, சோ இவளை பத்தி விசாரித்தாலும், செத்துப்போன பிரியா வீடு வரை தான் வர முடியும். சோ இந்தப் பொண்ணு ஒரு பத்து நாள் இங்கயே இருக்கட்டும். இவளை தேடுற மேட்டர் கொஞ்சம் அடங்கியதும், நம்ம இவளை சென்னை அனுப்பி வைப்போம்‌." என்றாள்.


"ஆமாங்க… சென்னை போய்ட்டா போதும், எனக்கு ஒன்னும் ஆகாது. பிகாஸ் என்னோட அண்ணா சென்னைல டெபுடி கமிஷனரா இருக்காரு" என்று சொல்ல, மூவரும் திகைத்துப் போயினர்.


"என்ன சொல்ற நீ? அப்ப உங்கண்ணாக்கு ஃபோன் பண்ணி நடந்ததை சொல்லிருக்க வேண்டியது தான?"


"அண்ணா இப்ப சென்னையில் இல்ல, ஒரு கேஸ் விஷயமா எங்கயோ போனது. இன்னைக்கு வரை ஒரு ஃபோன் கூட பண்ணல, நான் ஃபோன் பண்ணாலும் லைன் போகல. அது எங்க இருக்குன்னு கூட எனக்கு தெரியாது. நான் டெல்லி வந்தது அண்ணாக்கு தெரியாது" என்று சொல்லி அழ…


"சரி சரி அழாத, சைத்து சொன்ன மாதிரி நீ இங்கேயே இரு, அதான் உனக்கு சேஃப். டைம் பாத்து உன்னை சென்னை பத்திரமா அனுப்ப வேண்டியது எங்க பொறுப்பு" என்று ஆழி வாக்களித்தாள்.

ஆழி பழைய நினைவில் இருந்து மீண்டவள், "ஆஷா கூட இருந்த பத்து நாளும் எங்க வாழ்க்கையில நாங்க மறக்க முடியாத நாட்கள்.


எங்களுக்கும் உணர்வு, உணர்ச்சி எல்லாம் இருக்குன்னு நாங்க உணர்ந்ததே ஆஷா வந்த பிறகு தான். எங்க மூணு பேர் தாண்டி எங்களைப் பத்தி தெரிஞ்ச ரெண்டாவது ஆள் அவங்க மட்டும் தான். நாங்க யார்னு தெரிஞ்சப் பிறகு கூட ஆஷா‌ எங்களை ஒரு நிமிஷம் கூட கொலைகாரங்கன்ற கண்ணோட்டத்தோடு பாத்ததே இல்ல. அதுவே எங்களை அவங்க கிட்ட நெருங்க வைத்தது."


"ஆழி சொல்றது உண்மைதான். ரொம்ப வருஷம் கழிச்சு எங்க லைஃப்ல வந்த, நாங்க மீட் பண்ண ஒரு நல்ல மனுஷின்னா அது ஆஷா தான். இன்பாக்ட் நாங்க இப்ப இந்த இடத்துல இருக்க அவங்களும் ஒரு முக்கியமான காரணம். ஐ மீன் எங்க பழைய வாழ்க்கையை விட்டு நாங்க இப்ப இந்த இடத்தில இருக்க, அவங்களும் ஒரு காரணம். ஆஷா சொன்ன சில விஷயங்கள் எங்களை எங்களைப் பத்தியே யோசிக்க வச்சிச்சு" என்று கலங்கிய மீராவின் கையை ஆதரவாக அழுத்தினர் ஆழியும் சைத்துவும்.


***


ஆஷா ஆழி வீட்டிற்கு வந்து பத்து நாட்கள் ஓடி இருந்தது.


அன்று மாலை விமானத்தில் மாறுவேடத்தில் ஆஷாவை, ஒரு டான்ஸ் குரூப்புடன் சென்னை அனுப்ப எல்லாம் ஏற்பாடுகளையும் செய்திருந்தனர் மூவரும்.


ஆஷா கிளம்பி தயாராகி வந்து, "நான் உங்ககிட்ட ஒன்னு சொன்னா… இல்ல கேட்டா என்னைக் கோச்சிக்க மாட்டீங்களே?" என்று தயங்கி தயங்கி கேட்க, மூவரும் சிரித்த முகத்துடன்,


"அதெல்லாம் கோச்சிக்க மாட்டோம், நீங்க தாராளமா என்ன கேக்கணுமோ கேளுங்க" என்றாள் மீரா.


"இல்ல நீங்களே உங்களை கில்லர்னு சொல்றீங்க… பட், நான் உங்க கூட இருந்த இந்த பத்து நாள்ல, எனக்கு அப்படி எதுவும் தோணவே இல்ல. முதல்ல கொஞ்சம் பயம் இருந்தது தான். பட், அது கிட்நாப் நடந்ததால வந்த பயம் தான், உங்களை பாத்து இல்ல. அப்புறம் நீங்க உங்களை பத்தி சொன்னது கேட்ட பிறகு மனசுக்கு கஷ்டமா தான் இருந்ததே தவிர, உங்களை பத்தி தப்பா நினைக்க தோணல… நான் பாத்த வரை உங்க மூணு பேருக்கும் நல்ல குணம், நல்ல மனசு… ஆனா, உங்க தொழில் தான்" என்று இழுத்த ஆஷாவை கூர்மையாகப் பார்த்த ஆழி,


"ஆரம்பிச்சிட்ட இல்ல, சொல்ல வந்ததை முழுசா சொல்லி முடிச்சிடு"


"இல்ல… எனக்கு உங்களை புரிஞ்ச வரை, நீங்க காசுக்காகக் கொலை பண்றீங்க தான். பட், நீங்க மூணு பேருமே காசை ஒரு பெரிய மேட்டராவே நினைக்கல. பணத்துக்கு உங்க லைஃப்ல பெரிய ரோல் எல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க ரொம்ப நார்மலான லைஃப் தான் லீட் பண்றீங்க. பெரிய வீடு, ஆடம்பரமான லைஃப்ஸ்டைல், வண்டி, டிரஸ் அது இதுன்னனு இப்படி எதுக்குமே நீங்க செலவு பண்றது இல்ல. ரொம்ப சிம்பிளான, நார்மலான லைஃப் தான் உங்களுது. இதுக்கு நீங்க நியாயமா சம்பாதிக்குறதே போதுமே, அப்புறம் எதுக்கு இந்த தொழில்?

ஆழி... பெஸ்ட் இன்டீரியர் டிசைனர், சைத்ரா சூப்பரான போட்டோகிராஃபர், மீரா சூப்பர் செஃப். இது இந்த உலகத்தில உங்க மூணு பேரோட ஐடென்டிட்டி தான். பட், அதோட இது உங்க பேஷனும் கூடனு எனக்குத் தோணுது. நீங்க உங்களுக்குப் புடிச்சி தான் இந்த வேலையை செய்றீங்க, அன்ட் இதுலயே நீங்க நல்லா சம்பாதிக்குறீங்க. அப்புறம் எதுக்காக நீங்க இன்னும் இந்த மாதிரி வேலை எல்லாம் பாக்கணும்… வேணாமே" என்ற ஆஷா மூவரையும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பார்த்தாள்.


"எனக்கு உங்க மூணு பேரையும் ரொம்பப் புடிக்குது. அதான் உரிமையா இதெல்லாம் கேட்டேன். தப்பா இருந்தா சாரி." என்ற ஆஷா தன் ஹேண்ட் பேக்கை கையில் எடுத்தாள்.


"ஆழி… நீங்க அப்ப சொன்னீங்க இல்ல, இனிமே நீ எங்களை எங்க பாத்தாலும், எங்களை தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத, அது உனக்கு நல்லதில்லைனு. நா இப்ப சொல்றேன். நா உங்களை நெக்ஸ்ட் டைம்‌ பாக்கும் போது, நீங்க மூணு பேரும் என்னை தெரியாத மாதிரி போகாத இடத்தில நீங்க இருக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கறேன். நீங்களே என்னை தேடி வந்து, ஹாய் ஆஷா எங்களை ஞாபகம் இருக்கான்னு என்கிட்ட கேக்கணும். அதுக்கு நீங்க இது எல்லாத்தையும் விட்டுட்டு புது வாழ்க்கையை ஆரம்பிக்கணும்" என்ற அழுதபடியே சொல்லிவிட்டு காரில் ஏறி, 


"நான் போய்ட்டு வரேன், என்னை மறந்துடாதீங்க. போற வழி சரியா இருந்தா போய் சேர்ற இடமும் கண்டிப்பா சரியா தான் இருக்கும். யோசிச்சுப் பாருங்க" என்று கையை அசைத்து ஆஷா விடை பெற, அது நிழல் படமாக மூவர் மனதிலும் பதிந்தது.


"ஆஷா சொன்னது உண்மை தான், பணத்துக்காகத் தான் நாங்க இந்த வேலைய பாத்தோம்ன்றது பாதி உண்மை தான். பட், அந்தப் பணம் பெருசா எங்களுக்கு எந்த சந்தோஷத்தையும்  தந்தது இல்ல. ஆஷா சொன்ன அப்புறம் தான் ஒரு விஷயம் எங்களுக்குப் புரிஞ்சுது. எங்களோட தேவை ரொம்பக் கம்மி. அதுக்கு நாங்க வெளி உலகத்துக்காகப் பாக்கற எங்க வேலையில வர வருமானமே எங்களுக்குப் போதும். அப்புறம் எதுக்கு இனியும் இந்த மாதிரி வேலைய செய்யணும்னு தோணுச்சு… ஏன் நாங்களும் ஆஷா மாதிரி ஒரு சாதாரணமான பொண்ணா இந்த உலகத்தில வாழக்கூடாதுன்ற எண்ணம் வந்தது.  நாங்க மூணு பேரும் ஒரு மனசா முடிவு பண்ணி, அந்தத் தொழிலை விட்டு வெளிய வர தேவையான எல்லா ஏற்பாடுகளையும் எங்களுக்கு ரொம்ப நெருக்கமா, எங்களை நேசிக்கும் ஒரே நம்பிக்கையான  ஆள வச்சு செஞ்சோம். கொஞ்ச கொஞ்சமா எங்க நெட்வொர்க்கை குறைச்சி, அப்புறம் அதை இல்லாமயே செஞ்சோம். எங்கள பத்தின எல்லா தகவல்களையும் ஆழிச்சோம். ஒரு வருஷம் எங்களை யாருன்னே தெரியாத கன்ட்ரிக்கெல்லாம் போனோம். கடைசியா யூரோப்ல கொஞ்ச நாள் இருந்தோம். அங்க இருந்தபடியே எங்களுக்கான புது வாழ்க்கைக்கு தேவையான எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிட்டு இந்தியா வந்தோம். நான் சென்னைக்கு வரும்போது எனக்குள்ள ஒரு சின்ன ஆசை, பை சான்ஸ் எங்கயாவது ஒரு தடவை ஆஷாவ பாக்க மாட்டோமான்னு. பட்" என்றவள் ஒரு நிமிடம் கண்களை இறுக்கி மூடித் திறந்து,


"ஆனா, நான் ஆஷாவை பாக்குற நாள், அவங்க கடைசி நாளா இருக்கும்னு நான் கனவில் கூட எதிர்பாக்கல… நேத்து சைத்து ஆஷா ஃபோட்டோவை காட்டுற வரை, இறந்தது எங்களுக்கு தெரிஞ்ச ஆஷானு எனக்கு தெரியாது" என்றவள் குரல் உடைந்து விட முகில், மெதுவாக ஆழி கையை அழுத்தினான்.


"ஆஷாவை யார் ஆழி கொன்னது? எதுக்காக? அப்படி அந்த மெமரி கார்டுல என்ன தான் இருந்தது?" என்ற முகிலை பார்த்து ஆழி வறண்டுச் சிரிக்க,


"எந்தக் கேஸ்காக நீங்க, மிஸ்டர். ஆதவ், டெப்டி கமிஷனரும் எவிடன்ஸ் தேடி ஊர் ஊரா அலைஞ்சிட்டு இருந்தாங்களே, அந்தக் கேஸோட ஆணிவேரா இருந்தவனோட, உச்சி குடுமியையே ஆட்டி, அப்படியே புடிங்கி வீசுற எல்லாம் ஆதாரமும் அந்த மெமரி கார்டுல இருந்தது" என்று சைத்ரா சொல்ல, ஆண்கள் மூவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.